வெண்பனி மீது பொன்மலர் சூடும்செங்கதிரோனை வாழ்த்திகண்பனி சூடி எம் நினைவோடுஏங்கும் எம் தேசத்தின்கமக்காரனை கை கூப்பிவாழ்த்தி வணங்குவோம் !
திங்கள், 16 ஜனவரி, 2023
உழவே தலை
ஞாயிறு, 15 ஜனவரி, 2023
திருநங்கை நர்த்தகி நடராஜ்
திருநங்கை நர்த்தகி நடராஜ் பல உயரங்களை எட்டினா பரதநாட்டியக் கலைஞர்.
இவர் நோர்வே வாழ் தமிழ்கலைஞர்களின் அனுசரணையில் வந்த இவரை சந்திக்கவும் இவரின் கலையை பார்த்து ரசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததுஅவர் உரையாடும்போது தன் பால் அடையாளம், தான் காதல் கொண்ட தமிழ் மொழி இலக்கியத்தின் ஊடன் கலை மற்றும் இலக்கண , இலக்கியத்தின் மேல் அவர் கொண்ட நேசம் ,தன்னை தங்கி பயணிக்கும் அவரின் தோழி ஷக்தி இவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என வாழ்வியல் கூறினார்
திருநங்கையாக இருப்பதால் மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவியிடையே இருக்கவேண்டிய ஒப்புமைகள் உணர்வுகளை தன்னுள் இயல்புடையதக வெளிப்படுகின்றது என்றும்
அவருடய நாட்டிய உடல் மொழி ,கண் அபிநய பாஷை உள்ளத்து உணர்ச்சிகளை மிக்க அற்புதமாக வெளிப்படுத்தி காட்டினார்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம் -
என பாரதி கூறியது போல
பாரதியின் கனவுக்குள் நர்த்தகி நடராஜ் சென்றார் அவரின் கனவுக்குள் நாமும் சென்றோம்
பல காலங்களுக்கு பின் அன்புத்தமான நடனக்கலையை பார்த்த மனநிறைவு
திங்கள், 9 ஜனவரி, 2023
தமிழராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்-1974
இந்தத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த இலங்கை அரசாங்கம் அப்போது விரும்பவில்லை. கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மேயர் மூலம் யாழ்ப்பாணத்தி லுள்ள விழா அமைப்பாளர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தியது. மாநாட்டிற்கான திறந்தவெளி அரங்குகளை நிர்மாணிப் பதற்கான அனுமதியும் கடைசி நிமிடம் வரை வழங்கப்படவில்லை.
ஆயினும் 1974ஆம் ஆண்டு 4வது உலகத் தமிழராய்ச்சி மகாநாட்டை யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தீர்மானம் எடுத்தது. அப்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கை யின் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் நெருங்கிய ஆதரவாளராகவும் அந்தக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் இருந்த யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா அதனை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாது தடுப்பதற்குப் பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்தார். இதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென்பதில் அரசாங்கம் முனைப்பாக இருந்ததால், யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இந்த மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக, யாழ்ப்பாணத் திற்குச் செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த அந்நிய மொழியியலாளர்களான தமிழ் ஆராய்ச்சி யாளர்கள் ப
அதேவேளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியின் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்க அஞ்சியோ என்னவோ தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தம்பையா, யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்துவதை விரும்பவில்லை. ஆயினும் எனைய அனைவரும் யாழ்ப்பாணத்திலேயே நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததால்,அவர் வேறு வழியின்றித் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். ஆனால் தமிழ்மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த அனுமதிக்கமுடியாது என்று கருதிய பேராசிரியர்.சு.வித்தியானந்தன் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பைத் து
அரசின் இந்த நெருக்கடியான கட்டுப்பாடுகளின் மத்தியிலும் பேராசிரியர். சு.வித்தியானந்தன் அவர்களின் தலைமையின்கீழ் உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட்டன. அதற்கமைய திட்டமிட்டபடிஇ 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஜனவரி 3 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்இ வடமாகாணத்திற்கு வெளியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள்; யாழ்ப்பாண நகருக்கு வந்து சேர்ந்தனர்.ணிச்சலுடன் ஏற்றுக்கொண்டார்.
ஜனவரி மாதம் 10ஆம் திகதியே மாநாட்டின் இறுதி நாளாக இருந்ததால். அன்றைய நாள் மிகவும் சிறப்பாக ஆய்வரங்க நிகழ்ச்சிகள் மற்றும் பண்பாட்டு ஊர்வலங்கள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆய்வரங்கத்தின் இறுதி நிகழ்ச்சியாக “மொழியின் மகத்துவம் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு;” என்னும் தலைப்பில் தமிழ்மொழி ஆய்வாளர்களினால் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நைனா முகமது அவர்கள் இறுதியாக சிறப்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அலங்கார ஊர்திகளின் பண்பாட்டுப்பவனி இடம்பெற்ற பொழுது, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலத்தின் பொழுது, புகைக்கூண்டுகள், பொம்மலாட்டம், நடன நிகழ்ச்சிகள், சிலம்படி மற்றும் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள் என்பனவும் இடம்பெற்றன. உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி, உணர்வு பூர்வமாகக் கொண்டாடிய அந்த வெற்றி விழாவைக் கண்டு சகிக்காத சிங்களப் பொலிசார், 10 ஆம் திகதி இறுதிநாள் கலை, பண்பாட்டு ஊர்வலம் நடைபெற்றபொழுது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடிஇ உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்ரர்; சந்திரசேகராவின் தலைமையில் 40 பொலிசாரைக் கொண்டுவந்து தமிழ் மக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர். அதேவேளை மின்கம்பியை நோக்கிப் பொலிசார் துப்பாக்கியால் சுட்டதும். மின்கம்பி அறுந்து விழுந்ததில் பலருக்குக் காயங்களையும் ஏற்படுத்தியது. அதேவேளை மாநாட்டு ஆய்வரங்க மேடைகளும், அலங்காரப் பந்தல்களும் பொலிசாரினால் உடைத்தெறியப்பட்டன. இந்த மிலேச்சத் தனமான தாக்குதலில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது தமிழ் இளைஞர்கள்; கொல்லப்பட்டு, 50க்கு மேற்பட்டோர் படுகாயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அதுவரை நிலவிய மகிழ்ச்சியும், உற்சாகமும் இருந்த இடம் தெரியாமல்போய் சிறிது நேரத்திலேயே அந்த இடம்; மயான பூமியாகக் காட்சி அளித்தது.
அன்று இந்தப் படுகொலைகளை மேற்கொண்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்; சந்திரசேகராவுக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா “பொலிஸ் அத்தியட்சகராகப்” பதவி உயர்வு வழங்கிக் கௌரவித்தார்.
01 வேலுப்பிள்ளை கேசவராஜன் -மாணவன் 15 வயது
02 பரம்சோதி சரவணபவன் 26
03 வைத்தியநாதன் யோகநாதன் 32
04 ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் ஆசிரியர் 53
05 புலேந்திரன் அருளப்பு தொழிலாளி 53
06. இராசதுரை சிவானந்தம ; மாணவன் 21
07 இராஜன் தேவரட்ணம் 26
08 சின்னத்துரை பொன்னுத்துரை- ஆயுள்வேத வைத்தியர் 56
;09. சின்னத்தம்பி நந்தகுமார் மாணவன் 14
01 வேலுப்பிள்ளை கேசவராஜன் -மாணவன் 15 வயது
02 பரம்சோதி சரவணபவன் 26
03 வைத்தியநாதன் யோகநாதன் 32
04 ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் ஆசிரியர் 53
05 புலேந்திரன் அருளப்பு தொழிலாளி 53
06. இராசதுரை சிவானந்தம ; மாணவன் 21
07 இராஜன் தேவரட்ணம் 26
08 சின்னத்துரை பொன்னுத்துரை- ஆயுள்வேத வைத்தியர் 56
;09. சின்னத்தம்பி நந்தகுமார் மாணவன் 14
சனி, 7 ஜனவரி, 2023
பனியின் துன்பம்
வானத்தின் குளிர்ந்த
நீர்குவளை வற்றும் வரை
கொட்டித்தீர்க்கின்றது பனி
எல்லா நிலையிலும் நிலைகுலைந்த!
அவசர ஊர்தி
அமரர் ஆருடம்
பொதுமக்கள் பேருந்து
எது எப்படியும்
வந்தாலும், சென்றாலும்
வெண் கம்பளத்துக்குள்
புகுந்து முடங்கி இருக்கிறது சாலை !
நீடிக்கும் பனிப் பொழிவால்
மரங்களும் செடிகளும்
உறைந்த நீரை போர்த்து
அழகு பேசுகின்ற்து !
குளிர்ந்த கற்று
உள்புகுந்த உடம்பில்
வெண்கலம் செங்கலத்துடன் மோதுண்டு
உஷ்ணமடையச் செய்கின்றது !
பயணம் செல்லும் பாதசாரிகள்
பாதகமாக இழித்து உயிரற்றவாங்கும்
சாலையின் அனுபவங்களை
பரிமாறி கொள்கின்றனர்!
சதுக்கங்கள், சறுக்கலை -ச்சோ
என பரிதாபப்பட்டாலும்
ஓடும் வாகனங்கள்
யாரும் யாருக்காகவும்
ஒருபோதும் நிறுத்தமாட்டார்கள்
பாதிவழியில் பயணத்தை !
நானும் என் பயணத்தை
நிறுத்தியது இல்லை
சாலை ஓரத்தில் யாருக்காகவும்
நீங்கள் ஏற்காவிட்டாலும்
நானும் நாளாந்த பயணிதான்,
நீண்ட நெடுஞ்சாலை தனிலே !
அதிகம்
ஆனால்
யாரும்
யார்மேலும்
அனுதாபப் படாதீர்கள்
நானும் இந்த அண்டத்தில் ஒருவன் !
-பங்கிரையான்-
வெள்ளி, 30 டிசம்பர், 2022
கட்டுவன்
குட்டுவன் கடலைத்தாண்டி
புதன், 28 டிசம்பர், 2022
மதப் புராணம்
அரசியல்சாரா அறிவுஜீவி: ஓட்டோ ரெனே காஸ்டில்லோவின் ஒரு கவிதை
வள்ளுவனும் /கிராமத்தானும்
புதன், 7 டிசம்பர், 2022
தல்ஸ்தோயின் ஆதித்தேடல்

ஓருயர்ந்த ஒப்பற்ற படைப்பாளிக்கும்கூட வாழ்க்கை அர்த்தப்படாதது வியப்புதான். தல்ஸ்தோயின் ‘வாக்குமூலம்’ அவரது சொந்த மெய்ஞானத் தேடலின் தடங்கள் நமக்கு உரைப்பதென்ன என்ற ஆர்வம் மேலிட டேவிட் பாட்டர்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது. மரபுவழி கிறிஸ்துவத்தில் திரித்துவ நம்பிக்கையைக் கொண்டிருந்தார் தல்ஸ்தோய். 1879ல் கீவ் நகரிலிருந்த குகை மடங்களில் தங்கியிருந்த ஆதிகிறிஸ்துவ வழியில் வசித்துவந்த துறவிகளின் எளிய வாழ்முறையோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
ஆகமங்களின்படி தேவாலயங்கள் நடத்தப்படவில்லை என்பதை அறிந்து மதம்சார்ந்த பற்றுகளைக் கைவிட்டார். அதன் சட்டதிட்டங்களைச் சாடினார். எல்லையற்றதை அனுபூதியாய் உணர இயலும் என்றும் ஒன்றுமற்றதில் அடங்கியிருக்கிறது இப்பிரபஞ்சம் என்றும் இறுதியில் ஒரு கனவின் வழி உரைத்துப்போகிறார். கிட்டத்தட்ட பைபிளின் கடைசி நூலான ‘வெளிப்படுத்தின சுவிசேஷத்திற்கு இணையானதொரு படிமக்கனவு.
ஆதியோடு ஒன்றும் அறிவைப் பெறுவதுதான் நீதியார் செய்த தவம் என்கிறது ஒளவைக்குறள். தனது 51வது வயதில் போரும் அமைதியும் (1869), ஆன்னா காரனீனா (1877) எனும் இரு நாவல்களை எழுதிய தல்ஸ்தோய், தான் எதையும் சாதிக்கவில்லை, வாழ்க்கை அர்த்தமற்றதென எண்ணலானார். அப்போது ‘நான் யார்’ எனும் சுயசரிதையின் மூலம் தன் தேடலைப்பற்றியும், தான் கண்டறிந்தவற்றையும் எழுதினார். 1882ல் ரஷிய சஞ்சிகையில் வெளியானாலும் பிறகு ‘வாக்குமூலம்’ என 1884ல் ஜெனீவாவில் பிரசுரமானது. அந்நூல் தனக்குள்ளான விசுவாசம் சார்ந்த மனப்போராட்டங்களை, ஆதியிலிருந்து பல மகான்களால் தேடப்பட்ட அல்லது அத்தேடல்களின்வழி மகான்களான, வாழ்வின் அர்த்தம் பற்றிய கேள்விகளினூடே தன்னறிதலைப் பகிர்ந்துகொண்டார். அவரது மெய்ஞானத் தேடலின் சுருக்கம்.
தன் மெய்வழிப்பாதையில் ஆர்தர் ஷோப்பனவர், சாக்கியமுனி புத்தர், சாக்ரடீஸ், பழைய ஏற்பாட்டின் சாலமன் ஆகியோரை எதிர்கொண்டார். பழைய ஏற்பாட்டின் நீதிமொழிகளில் சாலமனின் ‘எல்லாம் விருதா’ எனும் கூற்றையே ஆரம்பத்தில் அவரால் உணர முடிந்தது. அவ்வறிதல் கசப்பானதாகவே இருந்தது. உண்மையிலிருந்து விலகி அதலபாதாளத்திற்குள் செல்வதாய் உணர்ந்தார்.
அதன் சாரத்தைப் பேசுகிறார். ‘ஒன்றுமின்மை பற்றிய நமது அச்சமே வாழவேண்டுமெனும் அவாவாகப் பரிணமிக்கிறது. ஒருவிதத்தில் நிஜமென உணரப்படும் இப்பிரபஞ்சமேகூட ஒன்றுமின்மையாகத்தான் திகழ்கிறது என்று உற்றறிந்தார் தல்ஸ்தோய். சாலமன் கூறுகிறான், ‘சூரியனுக்கீழே மனிதனின் அத்தனை உழல்வுக்குமான லாபம்தான் என்ன? ஒரு சந்ததி கழிய அடுத்தது தழைக்கிறது. எனினும் பூமி என்றைக்குமாய் நீள்கிறது. இங்கு எதுவுமே புதிதல்ல.’ இம்மாமனிதர்களைப் போன்றே நானும் எண்ணுகிறேன். கால தேச வர்த்தமானங்களுக்கும் காரண காரியங்களுக்கும் உட்பட்டும் அப்பாற்பட்டும் இங்கு எதுவுமில்லை என்பதே என் பதில்.
பகுத்தறிவால் கண்டதென்னவோ எல்லைக்குட்பட்டதை எல்லைக்குட்பட்டதுடனும் அதற்கு அப்பாற்பட்டதை அதனுடனும் ஒப்பிட்டு பொருண்மை பொருண்மையாகவும், ஆற்றல் ஆற்றலாகவும் அவா அவாவாகவும் எல்லைக்குட்பட்டது எல்லைக்குட்பட்டதாகவும், ஒன்றுமின்மை ஒன்றுமின்மையாகவுமே தொடர்கின்றன. அதுதாண்டிப் போக இயலவில்லை. வாழ்க்கை அர்த்தமற்றதாயினும் அவ்வாழ்வுக்கான நம்பிக்கை அதற்கான அர்த்தத்தையும் வாழ்வதற்கான சாத்தியத்தையும் பெற்றுத்தருவதாக அறிந்தேன் என்கிறார்.
‘செறிந்து அறிந்து நாடிச் செவ்விதாயுள்ள அறிந்தரனை ஆய்ந்து கொளல்’ என ஒளவைக்குறள் உரைப்பதுபோல் ஆரம்பம் முதலே எல்லைக்குட்பட்டதற்கும் அதற்கு அப்பாற்பட்டதற்கும் இடையிலான உறவை வார்த்தைக்குட்படுத்த முயல்வதே மானுடத்தின் தேடலாக இருந்துவருகிறது’ என்றறிகிறார்.
‘அனைத்தின் தோற்றம் போல, அனைத்தைப் பற்றிய விளக்கமும் மறைபொருளாய் எல்லையற்றதில் பொதிந்திருக்க வேண்டுமென்பதை நானறிவேன். எனினும் தவிர்க்கவியலாமல் உய்த்ததுணர முடியாத நிலைக்கு ஆளாவேன் என்பதால் அதைப்பற்றி அறிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. உய்த்ததுணர முடியாதவை அப்படியே இருக்கட்டுமென்றே விரும்புகிறேன். நுண்ணறிவு அத்தனை திடமானதல்ல என்பதால் அல்ல (அது திடமானதுதான் ஆனால் அதற்கு அப்பால் அதுபற்றி என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை). ஆனால் நுண்ணறிவு எல்லைக்குட்பட்டது என்பதால்தான். உய்த்ததுணர இயலா தருணங்கள் வாய்க்கையில் அது காரணகாரியங்களின் தேவையைக் கொண்டதாக இருக்கவேண்டுமே தவிர நம்பிக்கையின் எதிர்பார்ப்பாக இருத்தல் கூடாது என்பதாலேயே நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.’
வெறும் அறிவின் வழியன்றி உணர்வின் வாயிலாகவும் மெய்ஞானப் பயணம் தொடர்தல் சித்தர்வழி. திருமந்திரம் பாடலொன்று ‘வெளியில் வெளிபோய் விரவிய வாறும், அளியில் அளிபோய் அடங்கிய வாறும், ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறுந்தெளியும் அவரே சிவசித்தர் தாமே’ என்கிறது. பிரபஞ்ச உணர்வு வெளியில் வியாபித்து அன்பில் நெகிழ்ந்தடங்கி ஞானப் பேரொளியில் அமிழ்ந்து தெளிந்துணரும் சித்தரே அவராகிறார்.
ரூமி பாடுகிறார்:
ஒரு நிலவெளியுள்ளது
அங்கு உனைச் சந்திப்பேன்
அப்புல்வெளியில் ஆன்மா
படுத்திருக்கையில்
எதுபற்றியும் பேசுவதற்கு அன்றி
உலகம் வெகுவாய் நிரம்பிக்கிடக்கிறது
கருத்துகள், மொழி
அவற்றின் வழியான சொற்றொடர்
எவ்வொன்றும்
புலப்படுவதாய் இல்லை.
அவ்வகண்ட பரப்பின் வெளியில்தான் தல்ஸ்தோய் எனும் மகானும் உலவுகிறார்.
சனி, 24 செப்டம்பர், 2022
சின்னப்பெடியங்களின் சங்கமம்
நிகழ்வொன்றுக்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்று நான்கு நாட்கள் தங்கியிருந்தேன்
புதன், 14 செப்டம்பர், 2022
"அழகம்மாவின் தேடல் புத்தக வெளியீடு " 06.08.22 அன்று ஒஸ்லோ
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே