திங்கள், 16 ஜனவரி, 2023

காலம் கடந்த காதல் கவிதைகள

 





எப்போதாகிலும்
உன் நினைவுகளில்
வந்து போகலாம்
நான்

எப்பவுமே
என்னோடு இருக்கிறாய்
நேசத்துக்குரியவளாக
நீ

கிழித்து
கூறுபோட்டு போனது
நீ சொன்னதான
வார்த்தை
உன்னோடு தொலைந்து
போயிற்று
உனக்கும் எனக்குமெயான
என் காதல்

உன்னை நேசிப்பதாக
சொன்ன
அந்த
ஒத்தை வார்த்தையோடு
தொலைந்து
போனவனாகிறேன்
நான்

நாற்பதை
தொட்டுவிட்டது வயசு
இன்னமும்
நிற்கிறது
செல் பட்ட
அந்த
பூ நாறும் மரம்


-பங்கிரையன்-

விடை

 


இழந்த காலம்
இழந்த வெளிச்சம்
ஒலிகளின் மறைவு
நிலங்களின் மாற்றம்
நான் பேசுவது மறைவு !
ஏன் ?
மறைந்தவர்களை
மறைய போபவர்கள்
பேசவேண்டும்
காலம் காத்திருக்கும்
மனிதர்கள் !
நான் இன்மைபற்றியே
பேசுகின்றேன் !

-பங்கிரையான்-
30.01.22

 மகன்

என்னிடம் எதோ பேசினான்
பறவையை கண்டவனுக்கு
வானம் தெரிவதில்லை என்றேன்
சிரித்தான் போனான்
வந்தான் மீண்டும் சிரித்தான்
விட்டு விலக்குவதுபோல்
சென்றுவிடடான் !








உழவே தலை




வெண்பனி மீது பொன்மலர் சூடும்
செங்கதிரோனை வாழ்த்தி
கண்பனி சூடி எம் நினைவோடு
ஏங்கும் எம் தேசத்தின்
கமக்காரனை கை கூப்பி
வாழ்த்தி வணங்குவோம் !

தீது மனம் படைத்தோரும்
தீய குணம் உடையோரும்
இல்லறம், நல்லறம்.
குற்றம் குறையையும் ஏற்று
புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் நேசமுடன்
சுற்றமுடன் நிறைவாய்க்
வாழ்த்தி வணங்குவோம் !

புலம்பெயர் உலகமெங்கும்
மொழியால் ஒன்றுபட்டு
தலைமுறை கண்ட பண்பை
தலைமுறைக்கு கூறி
உழவே தலை என
வாழ்த்தி வணங்குவோம்!

பொங்கல் மகிழ்வுகண்டு
பொங்கலோ பொங்கல்
கூவிய பல குரல்கள்
சொற்களை தாண்டி
தேசத்தின் ஏழையின்
வாசலில் பொங்கி
வாழ்த்தி வணங்குவோம்!

-பங்கிரையான்-