திங்கள், 26 அக்டோபர், 2015

நினைவுக்கு பிறந்த நாள்

என் கைபிடிக்க நின்ற நிலவொன்று 
மிளிர்ந்த நாள் இன்று 
என் கைசேர மலரொன்று 
மலர்ந்த நாள் இன்று 
என் கரை தொட அலையொன்று 
ஆர்பரித்தது நாள் இன்று 
என் கனவு தொட்ட வானவில் 
வளைந்த நாள் இன்று 
என் மன சிற்பிக்குள் 
நுளைந்த முத்து 
பிறந்தது நாள் இன்று.
எனது நினைவலைகளில் மிதக்கும் 

மனம் காணும் இன்பங்களை 

அவள் காண இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்" .
என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் 

நழுவிய தேசம் !



கடந்து தான் போயிற்று,காலம்
கைகளில் பிடிபடாமல்,
நழுவி விழுந்து
நெடு தூரம் போகிறது...!
நேற்றுப்போல் இருக்கிறது
நினைவுகளின் ஈரம்
நெருடல் நிறைந்த
நெஞ்ச வெளிகளில்
வேர் எறிந்து,
நினைவுகள் மட்டும்
முளைத்துக்கொண்டே
இருக்கின்றன....!
செத்துக்கொண்டேயிருக்கிறது
நிஜம்...!!

பழைய கஷ்டங்கள் மறைக்கப்படுகின்றது
புதிய கஷ்டங்கள் புதுமையாக்கம் பெறுகின்றது !