சனி, 14 ஜனவரி, 2012

மனிதன் மனம்!...-ஒரு விசித்திரம்!

மனம் சில நேரம் சந்தோசமாய் இருக்கும்!
மனம் சில நேரம் துக்கமாய் இருக்கும்!
மனம் நல்லவரை தீயவராக மாற்றும்!
மனம் தீயவரை நல்லவராக மாற்றும்!
மனம் ஒரு தீய சக்தியைப் போல நம்மை அழித்துவிடும்!
'மனம்' என்னும் மாய சக்தியை அடக்க
'அறிவு' என்னும் தூய சக்தியை உபயோகிக்க வேண்டும்!
என்றும் எதிலும் எப்போதும் 'அறிவை ' பயன்படுத்தி செயல்களைச் செய்ய வேண்டும்!
மனது சொல்வதை அறிவால் சிந்தித்து செயல்பட்டால் வாழ்கையில் என்றும் நிம்மதி நிலைக்கும்!
மன வியாதி -புற்று நோயை விட கொடியது!
மன வியாதி -இதய நோயை விட கொடியது!
மன வியாதியை அடியோடு தொலைப்போம்!
மன நிம்மதியை அன்போடு பெறுவோம்!
அனைவரும் வாழ்க மன நிம்மதியுடன்!

தாயும் மகளும்


பத்து மாதங்கள் சுமந்திருந்து,

உயிரைக் கொடுத்து பெற்றெடுத்து,

பகலிரவாய் கண்விழித்துக் காத்து,

தன்னுதிரத்தை பாலாக்கி கொடுத்து,

வித‌வித‌மாய் உண‌வு செய்து ஊட்டி,

எட்டி உதைத்தாலும் க‌ட்டி அணைத்து,

அழ‌கிய‌ துணிம‌டணிக‌ள் வாங்கித் த‌ந்து,

உய‌ரிய‌ ந‌கைக‌ள் பூட்டி அழ‌கு பார்த்து,

ப‌ள்ளிக்கு அனுப்பி ப‌டிக்க‌ வைத்து,

துன்ப‌ம் என்ப‌தே அறியாம‌ல்,

வ‌ள‌ர்த்து பெரிய‌வ‌ளாக்கினாள் தாய்.


யாரோ ஒருவ‌னை எங்கோ பார்த்து,

க‌ண்ணால் பேசி ம‌ன‌தை ப‌றிகொடுத்து,

தாயென்ன..அவ‌ன்தான் த‌ன்னுயிரென‌,

த‌ய‌ங்காம‌ல் ஓடிப்போனாள் ம‌க‌ள்