உயிர் தோழியின் திருமண மேடையது , வாய் நிறைய வாழ்த்துக்களுடனும் கை நிறைய பூக்களுடனும் மேடையை நோக்கிச் சென்றேன் கண்டவுடன் கட்டியணைத்தாள் புகைப்படம் எடுக்கும் தருணம் அது
வழமை போல் கையை பிடித்துக்கொண்டாள்
மெதுவாக அவளது கையை மணமகன்
எடுத்து தன் கையுடன் இணைத்துக் கொண்டார்
எனக்கு அப்போது கவலை தெரிய வில்லை
வெளியே வந்தவுடன் தான் புரிந்துக்கொண்டேன் நட்பின் விரிசல் பாதை திறக்கப்பட்டு விட்டது என்று
இதுவும் ஓர் அனுபவமே.
வேதனை மிகுந்த அனுபவ
நினைவில்
நகர்ந்து கொண்டே இருக்கிறேன்
நகராமல்
விழித்துக்கொண்டே இருக்கிறேன்
விழிக்காமல்
சிரித்துக்கொண்டே இருக்கிறேன்
சிரிக்காமல்
கனவுகண்டே இருக்கிறேன்
கனவில்
மனம் குளிர்ந்து போகிறேன்
மனதில்
தினம் நனைந்தே போகிறேன்
தினமும்
கவிதை சாலை போகிறேன்
கவிதையால்
மனம் நிறைந்தே வாழ்கிறேன்
வாழ்க்கையெனும் பாதையிலேவிரைந்த பல பயணங்கள்மலர் தூவிய பாதைகள் சிலமுள்தைத்த அனுபவங்கள் பலகடந்து விட்ட காலங்கள் பலவே
கசந்து விட்ட நினைவுகள் பல
மலர்ந்து நின்ற கனவுகள் சில
மயங்க வைத்த கணங்களும் சில
நானென்னும் பள்ளியிலே படித்தேன்
நான் பல பாடங்கள் வாழ்வில்
சித்தியெய்தும் காலம் வரும் போது
சித்தத்தில் உறைந்த உண்மை ஒன்று
என்னை நானே அறியாமல் சென்ற
எண்ணற்ற வருடங்கள் தந்த
எண்ணிக்கையற்ற அனுபவங்கள்
என்னுள் இருந்த "என்னை" ஆழித்தன.
உணர்வுகளை புரிந்துகொள்ளும் உள்ளம் இருந்தால்தான் ...,
நேசிக்க மனிதர்கள் கிடைகின்றன ... வலிகளை கற்று கொண்டவனுக்கு..., மொழிகள் நட்பாகிறது ..., மொழிகளை கற்று கொண்டவனுக்கு ...,
வார்த்தைகள் அழகாகிறது ...
தேடலுக்கு முடிவு யில்லை...,
தேடிக்கொண்டே இருந்தால் நீ யார்ரென்று உன்னகே தெரிவதில்லை ...
உடல் மண்ணுக்குத்தான் ...,
அதற்காக நீ நடமாடும் பிணம்மாக எண்ணிக்கொள்ளாதே ...
தனக்கு வீரம் உண்டு ...,
அதற்காக மற்றவர்களை கோழையென்று நினைத்துவிடதே ...
தான் கெட்டவன் ஆனாலும் ...,
மற்றவர்கள் தன்னால் கெட்டவனாக மாற்றாத வரை நீ நல்லவன்தான்...!