திங்கள், 20 செப்டம்பர், 2021

தொன்மக் குறியீடு


தொன்மம் என்பது பழமையைக் குறிக்கும். புராண இதிகாச நிகழ்வுகளை ஏற்றும், மாற்றியும் புதுக்கியும் கவிஞன் தன் கருத்தைப் புலப்படுத்தும் முறை இது.

சமத்துவம் குறித்த சிந்தனையை மாபலிச்சக்கரவர்த்தியிடம் மூவடி மண்கேட்டு அளந்த வாமன அவதாரக் கருத்தை அமைத்து உரைக்கின்றார் கவிஞர்.

ஓர் அடியை
முதலாளித்துவ
முடிமேல் வைத்து
ஓர் அடியை
நிலப்பிரபுத்துவ
நெஞ்சில் ஊன்றி
ஓர் அடியை
அதிகார வர்க்கத்தின்
முகத்தில் இட்டு
மூவடியால்
முறைமை செய்ய

எழுகிறது                          

வாமனன் முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும், அளந்து மூன்றாம் அடியை மாபலி தலைமேல் வைத்தான் என்பது புராணம்.


காலத்தின் முகம்

 ஆரோக்கியத்துக்கு
நடைப்பயணம்
ஆனந்தம் தருவதில்லை
இலை உதிர்வு !

பூலோக மேடையிலே
வந்து போகும் காலத்தின்
இடைநிலை
ஒரு மரணத்தை
நினைவூட்டுகிறது....!!

காலத்துக்கு காலம்
மரணத்தை பதிவிட
காற்று அள்ளி செல்கிறது
இறந்துகிடக்கும் சருகுகளை !

மலையில் இருந்து
தனக்கான தேர்வில் வழிந்தோடும்
நீரின் மேல் பயணிக்கின்ற
குமிழி ஒன்று நம்பிக்கையுடன் !

இறப்பு இல்லை தளிர்ப்பேன் என்ற
தன்னம்பிக்கையில்
வரப்போகும் வசந்தகாலத்தை
காத்திருக்கின்றது உதிர்ந்த
மரம் ஒன்று !

-பங்கிரையான்-