யுத்தம் முடிவடைந்ததை
கொண்டாட வேண்டுமா அல்லது இரங்கல் தெரிவிக்க வேண்டுமா என்கிற கருத்துக்கான
பதில்
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
நான் எழுப்பிய
முதல் கேள்வி இன்னமும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது – மற்றும் நாட்டின்
வடக்குக்கும் மற்றும் தெற்குக்கும் இடையே உள்ள முனைவாக்கத்தை அது தெளிவாகவும்
நிரூபிக்கிறது. யுத்தம் முடிவடைந்ததை கொண்டாட வேண்டுமா அல்லது இரங்கல் தெரிவிக்க
வேண்டுமா? அப்படியாயின் எந்த வழியில்? கடந்த காலத்தில், ஒரே குடும்பம் என அழைத்துக்
கொண்டு, ஒரு வீட்டில் வாழும் ஒரே குழுவினரான அவர்களின் அந்த வீட்டில் ஒரே சமயத்தில்
நடைபெறும்;; ஒரு மரணச் சடங்கையும் மற்றும் ஒரு விருந்துக் கொண்டாட்டத்தையும்
உதாரணமாகப் பயன் படுத்தியிருந்தேன். இந்த உதாரணம் இப்போதும் செல்லுபடியாகும் என
நான் நம்புகிறேன்.
ஒருவேளை இந்த விவாதம்
நடைபெற்றுக் கொண்டிருக்கையில், குறுகிய காலத்தில், அந்த மக்கள் அந்த இரண்டில்
ஒன்றை அல்லது இரண்டையுமே அச்சமும் மற்றும் பயமுறுத்தலும் இன்றி நடத்துவதற்கு
சுதந்திரம் உள்ளவர்கள் என்பதை ஆகக் குறைந்தது நாங்கள் ஏற்றுக்
கொள்ளலாமா?
அது எனது மூலக்
கட்டுரையின் இரண்டாவது கவனயீர்ப்பினை கொண்டு வருகிறது – எந்தக் குடும்பத்தினதும்
அழுவதற்கும், துக்கம் அனுட்டிப்பதற்கும், மற்றும் அவர்கள் தெரிவு செய்யும் ஒரு
நாளில் சமயச்சடங்கினை நடத்துவதற்கும் அவர்களுக்குள்ள உரிமையை நான்
வலியுறுத்தியிருந்தேன் - பலியானவர் யார் அல்லது குற்றம் இழைத்தவர் யார் என்கிற
பேதம் இல்லாமல். இராணுவமும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யும் கொன்று குவித்தவர்களில்
குடிமக்கள் படை வீரர்கள், மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் என பலதரப்பட்டவர்கள்
இடம்பெற்றிருந்தார்கள், கொலைகளுக்கும் ஏனைய துஷ்பிரயோகங்களுக்கும் இராணுவம் மற்றும்
எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இரு பகுதியினருமே பொறுப்பு.
துக்கப் படுவதையும்
இரங்கல் தெரிவிப்பதையும் இராணுவமே தடுக்க முயற்சிக்கிறது.
இதைப்பற்றி மேலும் சில
கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:
- .போர் முடிவடைந்ததை சிலர்
கொண்டாட விரும்பும் விடயத்தை பொறுத்தவரை, அதைக் கொண்டாட விரும்புபவர்களின் உரிமையை
நான் மதித்து ஏற்றுக் கொள்கிறேன். இதை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, போர்
முடிவடைந்ததில் எனக்கு மகிழ்ச்சியே, ஆனால் இதுவரை அது கொண்டாடப்பட்டு வரும்
விதத்தில் நான் அதை கொண்டாட நினைக்கவில்லை, சமரச முயற்சிகளை முன்னோக்கி நகர்த்துவதே
சிறந்த வழி. யுத்தமானது ஜெனிவா மாநாட்டு விதிமுறைகளின்படி நடைபெற்றிருந்தால்,
ஒருவேளை இந்த விவாதம் வித்தியாசமான ஒன்றாக இருந்திருக்கும். போர் நடைபெற்ற காலம்
முழுவதும் அதனோடு வாழ்ந்த மக்களுடன் நான் மேற்கொண்ட தொடர்புகள் மூலம், எல்.ரீ.ரீ.ஈ
மற்றும் அரசாங்க படையினர் ஆகியோர், ஜெனிவா மாநாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை
என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த நாளை மக்கள் தாங்கள் விரும்பிய எந்த
வழியின்படியும் அனுட்டிப்பதையும் அத்தோடு அது சட்டபூர்வமாகவும் சமாதானமான வழியில்
நடப்பதையும், பயமுறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை பிரயோகித்து இராணுவத்தினர்
தடுத்து நிறுத்துவதை நாம் அனைவரும் எந்தவித கருத்து பேதமுமின்றி கண்டிக்க வேண்டும்,
என நான் நினைக்கிறேன். இந்த விதமான அச்சுறுத்தல்களுக்கு அரசாங்க அதிகாரங்களையும்
வளங்களையும் பயன்படுத்துவது, மிக மோசமான செய்கையாகும். எனக்கு தெரிந்தவரையில்
பெரும்பாலான நிகழ்வுகள் மதச் சடங்குகளாகும், இது எமது அரசியலமைப்பில் போற்றத்தக்க
வகையில் வழங்கப்பட்டிருந்த உரிமையான மதச் சுதந்திரத்தை தடுப்பதாக அமைந்துள்ளது.
எனவே கேள்வி என்னவெனில், யுத்தம் முடிவடைந்ததை கொண்டாட விரும்புபவர்கள், துக்கம்
அனுட்டித்து இரங்கல் தெரிவிக்க விரும்பும், விருப்பத்தையும் மற்றும் உரிமையையும்
மதித்து பாதுகாப்பதுடன், அதில் தலையிடும் முயற்சிகளை கண்டிக்கவும் வேண்டுமா? அல்லது
அரசாங்க துருப்புகளை பயன்படுத்தி மக்கள் அழுவதற்கும், துக்கப்படவும், இரங்கல்
தெரிவிக்கவும், பிரார்த்தனை செய்வதற்கும், மெழுகுதிரி ஏற்றி, மலர்களை அர்ச்சிப்பது
போன்ற வாய்ப்புகளை தடுப்பதுதான், யுத்தம் நிறைவடைந்ததின் சாதகமான விளைவாக
வடக்கிலுள்ள தமிழர்களுக்கு கிடைத்துள்ள யுத்தத்தின் பின்னான சுதந்திரமா?
- 2.தேதிகளை பொறுத்தமட்டில்,
எந்த திகதியில் துக்கம் அனுட்டிக்கப்படவே
ண்டும், எந்த
திகதியில் அனுட்டிக்க கூடாது என்பதில் எங்களிடையே வித்தியாசமான கருத்து உள்ளது
என்பதை நான் உணர்கிறேன். நான் அவர்கள் தெரிவு செய்துள்ள தேதிகளை ஏற்றுக்
கொள்ளாவிட்டாலும்கூட, தாங்கள் விரும்பிய ஒரு தினத்தில் கொண்டாடுவதற்கு அவர்களுக்கு
உள்ள உரிமையை நான் மதிக்கிறேன், கொல்லப்பட்டவர்களின் மற்றும் காணாமற்போனவர்களின்
குடும்பத்தவர்கள், தாங்கள் துக்கம் அனுட்டிக்க வேண்டிய நாளையும், நேரத்தையும்
தேர்ந்தெடுப்பதற்குள்ள சுதந்திரத்தை தடுக்க வேண்டுமா? அந்த திகதியை தெரிவு
செய்ததில் ஒருவருக்கு மகிழ்ச்சி இல்லாவிட்டால் அதன் கருத்து இராணுவம் அதில் தலையிட
வேண்டும் என்பதா? இந்தக் குடும்பங்களில் சிலவற்றுக்கு, தங்கள் பிரியப்பட்டவர்கள்
இறந்த அல்லது காணாமற்போன சரியான தேதி தெரியாது. மற்றும் அது ஒரு கூட்டு இரங்கலாக
உள்ளதால், ஒரு பொதுவான தேதியை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உண்டு – அதை
அவர்கள் முக்கியமானதாகவும் அடையாளத்துக்குரியதாகவும் கருதுகிறார்கள். நான் எனது
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல, அங்கு நடைபெற்ற சம்பவங்கள் ஒன்றில், ஒரு
கத்தோலிக்க மதகுரு மே மாதம் 18ந்திகதி காலமானார், அந்த சமூகத்தால் அவர் ஒரு சமூகத்
தலைவராக கருதப்பட்டார். ஆகவே அதே நாளில் பிரபாகரன் கொல்லப்பட்டதால் கொழும்பிலுள்ள
சிலபேர் அந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்பதால் அந்த மதகுருவின் குடும்பத்தினரும்
அந்த ஊர் மக்களும் அவரின் நினைவு தின நிகழ்வை மற்றொரு நாளில்தான் அனுட்டிக்க
வேண்டுமா? மற்றும் அந்த மதகுரு மட்டும்தான் நினைவு கூரப்பட வேண்டுமா – அதில்
பங்குகொண்டவர்களில் பலருடைய குடும்ப உறவினர்கள் அதே நாளில்
கொல்லப்பட்டிருக்கும்போது? அந்த நிகழ்வு கொல்லப்பட்ட மற்றவர்களுக்கும் இரங்கல்
தெரிவிப்பதற்காக பயன்படுத்தப் படக்கூடாதா? இதேமாதிரியான பிரச்சினை நவம்பர்
27ந்திகதியும் இடம்பெற்றது. எல்.ரீ.ரீ.ஈ இதே நாளில் தங்களுடைய மாவீரர் நாளை
கொண்டாடியது என்பதால் நவம்பர் 27ல் நடைபெறும் மதச் சடங்குகளையும் மற்றும் பாரம்பரிய
வழக்கங்களையும் இராணுவம் தடைசெய்து வருவது சட்டரீதியானதும், நியாயமானதும் ஆகுமா?
அல்லது வன்னியில் உள்ள நடுத்தரவயது மனிதர் ஒருவரது பிறந்தநாள் விழாக்
கொண்டாட்டங்களை அவரது பிறந்தநாள் பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 26ல் வருகிறது
என்பதற்காக இராணுவத்தினர் இரத்து செய்தது சரியா? (இந்த சம்பவம் முல்லைத்தீவு
மாவட்டத்தில் 2011, நவம்பர், 26ல் உண்மையில் நடந்தது)
- நான் கலந்துகொண்ட மூன்று
நிகழ்வுகளில் எந்த வழியிலும் எல்.ரீ.ரீ.ஈயின் போட்டி மனப்பான்மையையோ அல்லது
தனிநாட்டுக் கோரிக்கையையோ புகழ்ந்து போற்றும் நடவடிக்ககைகள் இடம்பெறவில்லை என்பதை
நான் இங்கு தெளிவு படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன். தனிப்பட்டமுறையில் அத்தகைய
எந்த ஒரு நிகழ்விலும் ஒரு பகுதியாக வேண்டும் என நான் விரும்பவில்லை. எப்படியாயினும்
சாத்தியமான சர்ச்சைக்குரிய கேள்வியான, போரில் வீழ்ந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள்
நினைவு கூரப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
குடும்பங்களில் மரணமடைந்த பிரியப்பட்டவர் ஒரு திருடனாக, கொலைகாரனாக கற்பழிப்பு
செய்தவனாக, குற்றவாளியாக, சித்திரவதை புரிபவராக அல்லது ஆட்கடத்தல்காரராக இருந்தார்
என்கிற அடிப்படையில், அந்தக் குடும்பங்கள் அவருக்காக துக்கம் அனுட்டிப்பதற்கோ
அல்லது சமயச் சடங்குகள் நடத்துவதற்கோ உள்ள உரிமையை நாங்கள் பறித்துவிட முடியுமா?
- கிளிநொச்சி மாவட்டத்தில்
உள்ள முழங்காவில் பகுதியை சேர்ந்த ஒரு தாய் என்னிடம் சொன்னது எனக்கு நினைவுக்கு
வருகிறது, எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் மயானம் இருந்த பிரதான வீதி வழியாக நடப்பதையே
தான் விரும்பவில்லை ஏனெனில் ஒரு காலத்தில் தனது மகனின் பிறப்பினையும், இறப்பினையும்
நினைவுகூர்ந்து, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி பிரார்த்தனை செய்த கல்லறை பாரிய
இயந்திரங்களால் பெயர்த்து எறியப்பட்டிருப்பதை காணும் போது தனது இதயம் அனுபவிக்கும்
வலியினை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று. எனவே நான் நினைக்கிறேன், கொலைகளுக்கு,
காணாமற் போதல்களுக்கு, பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு, சித்திரவதை, காணி அபகரிப்பு
போன்றவற்றுக்கு பொறுப்பான ஒரு இராணுவ வீரனின் குடும்பத்துக்கு உள்ள அதே
உரிமையைப்போல, மரணமடைந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்;கும ;(பிரபாகரன் மற்றும்
எல்.ரீ.ரீ.ஈ யினால் கட்டாயமாக படையில் இணைக்கப்பட்டவர்கள் உட்பட) இரங்கல்
தெரிவித்து, துக்கம் அனுட்டித்து, சமயச் சடங்குகளை தனிப்பட்ட முறையிலோ அல்லது
கூட்டாகவோ அவர்கள் தெரிவு செய்யும் ஒரு நாளில் நடத்துவதற்கு அவர்களுக்கு
உரிமையுள்ளது,
- துக்கம் அனுட்டிப்பதற்கும்
சமயச்சடங்கு நடத்துவதற்கும்
உள்ள
உரிமையை மறுக்க முடியாது. இது அனுதாபம் தெரிவிப்பது, மற்றும் மரணமடைந்தவரின் அல்லது
அவர் அங்கம் வகித்த குழுவின் குற்றவியல் அல்லது சட்டத்துக்கு புறம்பான
நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பது என இரண்டையும் கலந்துவிடக்கூடாது. அல்லது அந்தக்
குழுவுக்கு உயிரூட்டும் முயற்சி என நினைத்து குழப்பமடையக் கூடாது. இவை ஒரு மெல்லிய
கோட்டினைப் போல இருந்த போதிலும் அவற்றிலுள்ள வித்தியாசத்தை நம்மால் உணரமுடியும்.
பொதுமக்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் ஆகியோருக்காக இரங்கல் தெரிவிப்பதை
நிறுத்துவதில் இராணுவம் தலையிடுவது மற்றும் இறந்த எல்.ரீ.ரீ.ஈ யினரின் கல்லறைகளைத்
தகர்ப்பது, போன்ற செயல்கள்; இராணுவம், அரசாங்கம்,மற்றும் பொதுவாக சிங்களவர்கள்
மீதுகூட, தமிழர்களின் கோபத்தையும், வெறுப்பையும் மேலும் தூண்டிவிடும். அத்தோடு
எல்.ரீ.ரீ.ஈ போன்ற குழுக்களுக்கு ஆதரவு வழங்கும் சாத்தியத்தையும் அதிகரிக்கச்
செய்வதுடன் நிலையான சமரசத்துக்கான வாய்ப்புகளும் குறைகின்றன.
- புலிகளைத் தோற்கடித்ததில்
குறிப்பாக எனக்கு மிகவும் மகிழ்ச்சி. யாராவது கொல்லப்பட்டால் நான் மகிழ்ச்சி
அடையமாட்டேன் - எனவே பிரபாகரன் கொல்லப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அரசாங்க
பதவியில் உள்ளவர்கள் மனித உரிமைகளை மீறி கொலைகள் புரிந்துள்ள வேளையில் நான் அதை
கொண்டாடவும் மாட்டேன். மரண தண்டனையிலும் எனக்கு நம்பிக்கையில்லை. “பிரபாகரனைத் தவிர
அனைத்து உயிரினங்களும் நலமாக இருக்கவேண்டும்” என்கிற கோட்பாட்டிலும் எனக்கு
உடன்பாடில்லை. எப்படியாயினும் நான் நம்புவது, சட்ட விதிகளின் நடவடிக்கையூடாக யார்
செய்த தவறாயினும் (எல்.ரீ.ரீ.ஈ அல்லது இராணுவம்) அதற்கு நியாயமும்,
பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதையே. செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வது, உண்மை
பேசுதல்,மன்னிப்பு வழங்குதல், அவ்வாறான தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு
ஏற்ற அடையாளங்களையும் மற்றும்; கணிசமானளவு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதையுமே நான்
மேலும் நம்புகிறேன், மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் செயல்படுவது சமரசத்தை
நோக்கிய பங்களிப்பினை வழங்கும்.
- அதேவேளை நான் விபரித்துள்ள
நிகழ்வுகளும் மற்றும் நான் எழுதியுள்ள கட்டுரையும், எல்.ரீ.ரீ.ஈ யினாலோ அல்லது
இராணுவத்தினாலோ கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போக்கடிக்கப்பட்டவர்கள் இடையே
எந்த ஒரு வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை, யார் யார் எதற்கு பொறுப்பானவர்கள் என்பதை
நாங்கள் கண்டறிய வேண்டியது அவசியம் என நானும் நம்புகிறேன். அதனால்தான் நான்
பொறுப்புக்கூறும் கடப்பாட்டில் நம்பிக்கை உள்ளவனாக இருக்கிறேன் மற்றும் ஒரு சுயாதீன
பொறிமுறை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும். நிச்சயமாக வன்னியில் உள்ள மக்கள்
தங்கள் பிள்ளைகள் எப்போது எல்.ரீ.ரீ.ஈ யினால் கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆளானார்கள்,
மற்றும் எப்போது அவர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமற் போக்கடித்தலுக்கு ஆளானார்கள்,
மற்றும் எப்பொழுது தங்கள் குடும்ப உறவினர் சரணடைந்து பின் காணாமற்
போக்கடிக்கப்பட்டார்கள் என்கிற விபரங்களை நன்கறிவார்கள். தங்கள் பிரியப்பட்டவர்களை
கொன்ற எறிகணைகள் எல்.ரீ.ரீ.ஈ யின் பக்கமிருந்தா அல்லது இராணுவத்தின் பக்கமிருந்தா
வந்தது என்பதையும் அவர்கள் அறிவார்கள்.பல தசாப்தங்களாக அரசாங்கத்தையும் மற்றும்
எல்.ரீ.ரீ.ஈ யையும் கடுமையாக விமர்சித்து வரும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக
ஆசிரியர் சங்கத்தினருடைய (யாழ்ப்பாணம்) அறிக்கைகள் போன்றவை,அப்படியான கதைகளையும்
மற்றும் ஆதாரங்களையும் விபரமாக வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல்
விடயம் சம்பந்தமாக ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழாமும், மற்றும் பல
அமைப்புகளும்கூட, யார் யார் எதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்கிற தகவலை விபரமாக
வழங்கியுள்ளன.