
தெருவோரம் கிடந்த சுள்ளிதடி எடுத்து
பல பின்னல்கள் சில ஜன்னல்கள்
வியர்வையிலும் முயற்சியிலும்
கூடுகட்டி வாழ்ந் சுதந்திர பறவைகள்
இந்த கூடு சொல்லும் கதைகள் ஏராளம்
கோஷங்கள் உற்சாகங்கள்
இந்த கூடு எங்களுக்கென்று
அறிவுக்கு விரிவுசெய்து பறந்தன
ஓரங்க காற்று சுழன்று வீசியது
சற்றே திசைமாறியது வரலாறு
கடல் தள்ளிய கடைசி அலை
கரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.
நாம்