ஒழுங்கு, சகிப்புத் தன்மை ஒத்துப்போவது - இவைதான் ஜனநாயகத்தின் அடிப்படை தேவைகளாகும். ஜனநாயகத்தில், மாறுதல்கள் கூடிப் பேசுவதாலும், கோரிக்கைகள் மூலமாகவுந்தான் நிறைவேற்றப் படுகின்றனவே தவிர, வன்முறைச் செயல்கள் மூலமாக அல்ல!
ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத் தன்மை! நம்மோடு ஒத்துப் போகிறவர்களிடம் நாம் காட்டுகிற சகிப்புத் தன்மை அல்ல! நம்மோடு மாறுபடுகிற - அபிப்பிராய பேதம் கொள்கிறவர்களுடன், நாம் காட்டுகிற சகிப்பபுத் தன்மை: - அதற்குப் பெயர்தான் ஜனநாயகம் என்பது.
ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால், அதற்குப் பின்னணியாக மக்களின் நல்லெண்ணமும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும்.
பாராளுமன்ற ஜனநாயக த்த்துவத்தின் மீது இயங்கி வரும் ஒரு அரசு நிச்சயம் ஒரு எதிர்க் கட்சி தேவை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தட்டிக் கேட்க ஆளில்லாத தனிமனிதன் எதேச்சாதிகாரி ஆகிவிடவதைப் போல - கண்டிக்க பலமான எதிர்க் கட்சி இல்லாத சர்க்க்காரும் சர்வாதிகாரித்தனம் பெற்று விடுகிறது.
சாதாரண மனிதனின் தேவையை எந்த அரசாங்கமும் புறக்கணிக்க முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படைத் த்ததுவமே இந்தத் தேவையின் மீதுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சுதந்திரமும் ஜனநாயகமும் இன்று மரணப் படுக்கையில் கிடக்கின்றன. அவற்றின் பாதுகாவலர்கள் என்று சொல்லப் படுபவர்களாலேயே அவை மேலும பயங்கரமாகப பழி வாங்கப்படுகின்றன.
இல்லாமையும், ஏழ்மையும், உயர்வும் தாழ்வும் இருக்கும் நாட்டில் எந்த விதமான ஜனநாயகம்ம் நீண்ட நாள் பிழைத்திருக்க முடியாது.
ஜனநாயகத்தைப் பற்றி ஆயிரம் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் சமுதாயத்தின் ஒழுங்கு - அதன் முக்கிய நோக்கம் என்பது நிச்சயம். எந்த அளவுக்கு ஒருசமுதாயத்தில் நிர்ப்பந்தமின்றி ஒழுங்கு முறை தானாக உருவாகிறதோ, அந்த அளவுக்கு அங்கே ஜனநாயகம் வளர்ச்சி பெறுகிறது.
மற்ற எல்லா வழிகளையும்விட ஜனநாயகம் ஒன்றுதான் மனித குலத்தை ஆளக்கூடிய மிக உயர்ந்த மார்க்கம் ஆகும்.
வன்முறைச் செயல்களின் வாழ்வு முடிந்து விட்டதென்றோ, அடியோடு அழிந்து விடுமென்றோ சொல்வதற்கில்லை. என்றுமில்லா வேகத்தோடும், வலிவோடும் அது இன்று தலைவிரித்தாடுகிறது அது அழிக்கப்படவில்லை என்றால், உலகை அது அழித்துவிடும் என்பது நிச்சயம்.
ஜனநாயகம் என்ற சொல், இன்னும் வேறு எதையாவது குறிக்கிறது என்றால், அது குறிப்பது சமத்துவம் என்பதேயாகும். சமத்துவம் - எல்லாரும் வாக்குரிமை பெற்றிருப்பதிலே அல்ல - சமூக பொருளாதார அமைப்பில் எல்லாரும் பெற்றிருக்க ஏற்றத் தாழ்வற்ற நிலை - அதுதான் ஜனநாயகம் குறிக்கும் சமத்துவம் ஆகும்.
வெறுப்பும் - பகையும், வன்முறைச் செயல்களுமே இன்றை நம் பலக்குறைவுக்குக் காரணமாகிவிட்டன. வன்முறைச் செயல்களைப் பின்பற்றுவகிறவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க முடியாது.
சுதந்திர ஜனநாயக நாடுகளால்தான் உலகில் சுதந்திரமும் ஜனநாயகமும் தழைக்கக உதவ முடியும்.
சமத்துவம் இன்றேல் சுதந்திரமும், ஜனநாயகமும் அர்த்தமற்றவை ஆகிவிடும், சமத்துவமும், மூப் பொருள்களின் உற்பத்ததி ஸ்தானமும் தனியுடமையாய் இருக்கும் வரை நிலைபெறச் செய்ய முடியாத்தாகி விடும்.
படை வலிமையும், சமாதானத்தையும்தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டிருப்பர்களை, பணிவோடும் நட்புரிமையோடும் அணுகி, சண்டையை அடியோடு தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப் போடச் செய்யவாவது நமது வலிமையை நாம் பூரணமாக உபயோகித்தோமானால், இந்த இடைக்காலத்திலாவது ஒருவருக்கொருவர் கூட்டுறவோடு நெருங்கி வாழ்வதை உலகம் அறிந்து கொள்ள அது உதவி செய்யக்கூடும்.
வியாழன், 27 மே, 2010
அஞ்சலி

ஊர் கூடி தேர் இழுக்க முயன்றோம்.....
அவர் எவரோ தலமைச் சாரதி என்றோம்...
தலைவன் என்றோம், தெசியத் தலைவன் என்றோம்...
அப்பாலும் போய் தொழுதோம்... சூரியத்தேவன் என்றோம்...
துதி பாடினோம்... அன்று!
இன்று
முள்ளிவாய்க்கால் கரையோரம் முடிந்து போயிற்று
எமது போராட்டம்!
களமாடி மரித்துப்போன போராளிகளும், மக்களும்
கூடவே தலைமைச் சாரதியும் தான்!
தலைவனின் மரணம்பற்றி
அறியாதவர்கள் கேட்கிறார்கள்...
அறிந்தவர்கள் மறுக்கிறார்கள்...
எவரது மரணத்தையும் ஒருபோதும் மறைக்க முடியாது!
தொண்டர்களையும், தோளனையும் அளவிடு.
மனச்சாட்சியின்
குறைந்த பட்ச நேசிப்பு என்பது
அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வதுதான்.
வழி விடு!
போராட்டம் என்பது இன்னமும் நீண்டதுதான்!
தலைவர்கள் வருவார்கள் ,போவார்கள்
மக்களின் நலன்கள் நிரந்தரமானவை
பயப்படுகிறோம்…..!!!!!!!!!!!!!!!!!!!!

நாங்கள் என்ன
உங்களைப்போல்
மா… மரமனிதர்களா என்ன?
எங்கள் மனவலியின்
கடுகு விதைகள் ஒவ்வொன்றும்
உங்களுக்கு வதைசெயும் ஒருநாள்
தம்பட்டம் அடிக்காதீர்கள்!
பயப்படுகிறோம்…..
எங்கள் வேதனை
எங்கள் மனவலி
உங்களுக்கு தெரியப் போவதில்லை
ஒன்று மட்டும் உண்மை!
எங்களுக்கு உங்களுக்குள்ள
பாரிய நோய்கள் இல்லை..
பயப்படுகிறோம்………
மாமனிதன் என்ற
மாபெரும் பட்டங்கள் எல்லாம்
பரீட்சை எழுதாமலே
உங்களை அடைகின்றனவே!
கொஞ்சம் மனம் வையுங்கள்
நறுமணம் வீசலாம்
உங்கள் அழுக்குகளை
உங்கள் அசிங்க அறைகளுக்குள்
கைவிலங்கிட்டு வையுங்கள்!
பயப்படுகிறோம்……
ஓரிரு நாட்களேனும்
எங்களையும் வாழ விடுங்கள்
எங்கள் உழைப்பில்
உப்புச் சாப்பிட
உயிர்கள் காத்துக் கிடக்கின்றன.
உயிரோடு ஒட்டிப் பிறக்காததை
பயப்படுகிறோம்…………
மேடையிட்டு மேவும் பல ஏமாற்றங்கள்
மேலாடையிடுகிறது மேன்மைக் குணங்களிற்கு.
மேன்மாடம் அமைக்கிறது அவநம்பிக்கை உணர்விற்கு.
மேற் பார்வையை அறிவு மயக்குகிறது.
பயப்படுகிறோம்………
பல்வேறு தருணங்களில்
கடந்து வந்த பாதைகளில்
கடந்து போன பாடங்களை
மீண்டும் படிக்க நேர்கையில்
தோன்றுகிறது, நம் வாழ்க்கை
நாம் விழுந்த இடத்தில் எழுந்து நடப்போம்
எம்மை விழுத்துபவர்களை
தலைவர்களாக விடமாட்டோம்”
எங்கள் வலி புரியும்!
உங்கள் வழி தெரியும் ???????????????
நாம் வாழ்வதற்காக -நீ வீழ்ந்தாய்..!!

பதினேழாவது வயதில் மக்களின்
புரட்சியாளன்..
ஐம்பதாவது வயதில் கிட்லரின் விரிவாளன்..
நீ பிரிந்து போனது
எனக்கெந்த மகிழவையும் தரவில்லை..
சுதந்திரம் கிடைத்த உணர்வைவிட..
துவண்டு போன மனதில்
நம்பிக்கை கொன்டு
கை தூக்கி நின்றது..
முகங்களின் சலனமற்ற சந்தோசம்..
கண்கழில் மலர்ந்த கண்ணீர் பளிங்குகளாய்
விழிகளெல்லாம் நனைந்தன..
வார்த்தைகள் கொதிப்பற்ற மகிழ்வாய்
எல்லாம் கிடைத்த உணர்வு..
எத்தனையே நாள் நெஞ்சுக் குழிக்குள்ளே..
நிஜங்களைத் தொலைத்துவிட்ட
நினைவுப் போராட்டம்..
எத்தனைநாள்கள் விடை தெரியாமல்
கலைந்து போன கனவுகள்..
விடியலை நோக்கி
நின்ற ஏக்கம்..
இருண்ட என் இனத்தால்
உருவான கனவுகள்..
உணர்வறிய கதிர்களாய்
உடைந்து எறிந்த நினைவுள்..
பயம் என்ற வார்த்தையை
வீரத்திற்குள் புதைத்து விட்டு..
மண் மீது காதலால் தாகம்
என்ற வேகத்தால் வந்த
எத்தனை பூக்கள் விரியமுன்
விதைக்கப்பட்டது உன் கரங்களால்..
கண்ணியமிக்க தோழர்களை
கண்ணி வைத்து பிடித்திழுத்து
கதற கதற தீயில் எரித்த வரலாறு..
தரம்கெட்ட உன்செயல்கல் தலைசுமந்த – நீ
தள்ளாடி நடந்து தட்டேந்த வைத்த
உன் சிந்தனை- உனை
தள்ளாடியில் தான்டவம் ஆடவைத்தது
உனக்கு இரங்கல் உரைவைக்க
எவன் வருவான் என்றெண்ணி
நிலவுகாத்த கிளிபோல்
அன்று இன்று நாளை என்று
இரவ பகலாய் காத்து கிடக்கின்ற
–உன் விழுதுகள்..
கண்ணீரில் நனைந்து
உன் கல்லறைக்கு கோட்டைக்கட்ட
நான் கோமாளியும் இல்லை
அங்கு மௌனவிப்பவர்கள்
புரட்சிகர சிந்தனையாளர்கள்..
எங்களுக்குள் இடைவெளிகள் அதிகம்
என்றாலும்
உன் கல்லறையில்
நாம் பூ வைக்க வேண்டும்
நீ வீரன் என்பதற்காக அல்ல
நாம் வாழ்வதற்காக -நீ
வீழ்ந்தாய்..!!
மழை முடிந்த மாலைகளில்
இப்போதும் காண்கிறேன்,
தனியாய் சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சியை..!!!!!
-சன்
அந்நாள்!!!!!!!!!!!!!!!!

அதிகாலை நாளிதழ்களை
பார்க்கும் போது
உணர்ச்சிவசப்பட கூடாது
என்பதே என்
நெடுநாளைய பிரார்த்தனையாக
உள்ளது...
ஒவ்வெரு நாள்
காலையிலும் என்
பிரார்த்தனை அரசனால்
மீறப்படுகிறது ...
எமக்கான உரிமை
எல்லா திசைகளிலும்
மறுக்கப்படுகிறது...
எமக்கான கருணை
எல்லா வடிவங்களிலும்
நிராகரிக்கப்படுகிறது...
குடியாட்சியின் பதுமைகள்
எமது இருப்பை
கேலி செய்கிறது...
பின் பொழுதுகளில்
பேயாட்சியால்
நாங்கள் உயிரோடு
உண்ணப்படுகிறோம்...
மீண்டு வருமினும்
விருப்பமில்லா தற்கொலைக்கான
ஒத்திகையிலேயே
அந்நாள் முடிவடைகிறது.......
இழப்பு!!!!!!!

உறவினை இழக்கையில்,
உள்ளம் உறங்கிப் போகும்……
உணர்வுகளின் கொந்தளிப்பில்,
உதடுகள் கூட ஊமையாகிடும்……
நெஞ்சுக் குழிக்குள்ளே,
நிஜங்களைத் தொலைத்துவிட்ட
நினைவுப் போராட்டம்….
நிழலாய் தொடரும்…..
கனவுகளும் கூட,
கற்பனைகள் இல்லாமல்,
கலங்கிப்போய்,
கண் மூடி கிடக்கும்….
கண்களில் கண்ணீரும்,
காய்ந்து போய் விடும்……
இரவுகளுக்கும், பகல்களுக்கும்,
இடைவெளியே இல்லை,
இரவிலும் உறக்கமில்லை,
இருளே பகலிலுமாய்,
மனம் விரும்பாவிட்டாலும்,
மௌனம் நம்மை,
தனதாக்கிக் கொள்ளும்….
மண்டியிட்டு மௌனம்
மனதுக்குள் உட்கார்ந்து
மங்காத நிகழ்வுகளை
மலை போல காட்டும்….
பரிச்சயமற்ற மௌனத்தால்,
பாறாங்கல்லாய்,
பாரம் ஏறும்…
உடலிலும், உணர்விலும்,
விழுதலில் இருந்து,
எழுவதற்காய்,
மௌனத்தை கேட்க வேண்டும்….
ஏ… மௌனமே பேசி விடு!!!!!
சிறையில் சிக்கி

சிறையில் சிக்கி
தனிமையில் தவிக்கின்றேன் நான் !!!
நான் நேசிக்கும்
அனைவரும்-என்னை
நேசிக்க வேண்டும்
என்று-எதிர்பார்ப்பவ.ன் நான்.!!!!
அந்த எதிர்பார்ப்பின் பலம்.குறையும் போது. என் மனதின். பாரம் அதிகரிக்கிறது
என்ன செய்வேன் நான்.!!!!
நட்புக்குள்
உன்னுடை
பொய் இல்லை...
பொய் இருந்தால்...
அது நட்பே...இல்லை....
விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
நட்பையே....
நட்புக்காக...
என்னை சிறை மீட்டிடு...
ய. உண்மையான...நட்பால்......
கற்பனையில் ஓர் கனவு்...........

எப்போதும் போல்
நேற்றிரவு உன்
கனவுக்காகத்
தூங்கியபடி
காத்திருந்தேன்
ஆனால்
நீ வருவதற்கு முன்
எப்படியோ என்
கனவுக்குள்
நுழைந்து விட்ட கடவுள்
என்னைப் பார்த்து
மகனே உனக்கு
என்ன வரம் வேண்டும்
என்றார்
எனக்கோ
கோபம் தலைக்கேறி
யார் நீ
உன்னை யார்
என் கனவுக்குள்
அனுமதித்தது
உன்னிடம் இருந்து
எனக்கு எதுவும்
வேண்டாம்
எனக்கு என்ன வேண்டும்
என்பதை
என்னைக் கேட்காமல்
எனக்கு வாரி
வழங்குகிற தேவதை
ஒருத்தி இருக்கிறாள்
நீ வெளியே போ
என்னவள் வருகிற
நேரமிது
எனச் சொல்லி விட்டேன்
உடனே
கடவுளுக்கு கோபம் வந்து
என்னை எரிக்கப் பார்த்தார்
உன் அரவணைப்பில்
இருக்கும் என்னை
எரித்து விட முடியுமா
அவரால்?
தன் வரலாற்றில்
ஏற்பட்ட முதல்
தோல்வியை
மறக்க முடியாமல்
முகம் வியர்க்க
மறைந்து விட்டார்
கடவுள்.
ஆனாலும்
இந்தக் கடவுளுக்கு
கர்வம் அதிகம்
எல்லோருக்கும் எல்லாமும்
நாம் தான் என்கிற
நினைப்போடு
சுற்றிக்கொண்டு இருக்கிறார்
அவர் பிறருக்கு வேண்டுமானால்
எல்லாமுமாக இருந்து விட்டு
போகட்டும்
ஆனால் எனக்கு
எல்லாமே நீதானே!
இந்த கடவுள் உன்னிடம்
வந்தால் அவரைக்
கொஞ்சம் கண்டித்து வை
என்னவருக்கு என்ன வேண்டும்
என்பதை நான்
பார்த்துக்கொள்கிறேன்
இனி அவரை
தொந்தரவு செய்யாதே என்று.
தெய்வமே
உன்னை
என் இதயத்திலிருந்து
வெளியேற்றி விட்டு
ஒரு பெண்ணைக்
குடி வைத்ததற்காக
கோபித்துக் கொள்ளாதே
உன்னால்
தூணிலோ துரும்பிலோ கூட
வாசம் செய்ய முடியும்
ஆனால் இவளால்?
மீண்டும் ......

வெளிறிப் பரவிய
வெளிச்சப்பொட்டு
களைத்து நிமிர்ந்த
கறுத்தப் பனை
ஓரத்தில்
சரிந்த தென்னை
வேலி இழந்த
வரிசைப் பூவரசு
மடக்கிப் போட்ட
கதவு
மக்கிப்போன
காவோலை
குமிந்துபோன
குப்பை வீடு
தலை
துவட்டிப்போகும்
புழுதிக்காத்து
கண்
கெளவிக்கொள்ளும்
ஒற்றையடிப்பாதை
கையசைக்கும்
மரங்கள்
காலிடைக்
குறுகுறுக்கும்
மண்துகள்கள்
பார்த்துக்
கொள்கின்றேன்
மீண்டும்
வந்ததற்காக அல்ல
மீளமுடியாக்
கணங்களை
நினைத்துக்கொள்ள
வாழ்ந்து விடு

மேகத்தின் மேல்
பறக்கிறது பறவை
மலையின் மேல்
பிறக்கிறது நதி
வானின் மேல்
துளிர்க்கிறது மழை
மனதின் மேல்
எழுகிறது எண்ணம்
இவையனைத்தும்
தரையின் மேல்
வருவது நியதி
மண்ணின் கீழ்
மறைகிறது வேர்
இதயத்தின் கீழ்
இருக்கிறது காதல்
துன்பத்தின்கீழ்
துளிர்க்கிறது இன்பம்
இவையனைத்தும்
வாழ்வின் கீழ்
வருவதும் நியதி
மேலும் கீழும்
இருக்கிறது வாழ்க்கை
அதனால்
வாழ்ந்து விடு.
நினைவு

நீ மறைய
நினைவுகள் மட்டும் வளரும்.
வெட்டிய மூங்கில் மூட்டில்
வெடித்தெழும் முளைகள் போல.
நினைவுகளின்
மெழுகு வெளிச்சத்தில்
குளித்துக் கரையேறுகின்றன
இரவுப் பொழுதுகளின் இனிப்புத் தட்டுகள்
இப்போதென்
இதயத்தின் இயங்கு தசைகளுக்குள்
இளைப்பாறிக் கிடக்கிறாய் நீ
இன்னுமொரு காலை விடியும்,
நீ
இல்லை என்பதைச் சொல்ல.
இன்னுமொரு இரவு வரும்
உண்மையை செரித்து உறங்கிட.
வா பெண்ணே

பெண்ணே !
ஒளிரும்
நிலவைப் பார்
வண்டுகளின்
இசையைக் கேள்
தோட்டத்தின்
மலர்களைப் பார்
கடலின்
தாலாட்டைக் கேள்
இவையெல்லாம்
யாருக்காக
பயன் கருதா
கருமம் போல
முடிவறியா
இயற்கை நிரப்ப
பிரபஞ்சத்தின்
பசியைப் போக்க
மண்ணில்
விதையைத் தூவ
வா
என்னுடன்
கலந்து விடு
காற்றின்
திசையை அறிவோம்
திக்கின்
எல்லை உணர்வோம்
மனதின்
தொடர்பு அறிவோம்
இதுவே,
வாழ்வின்
முழுமை என்போம்.
தொலைந்து போன நேசம்
தொலைந்து போன தோழி

சில வருடங்களுக்கு முன்னால
தோழி ஒருவள் எனக்கு இருந்தால்
நான் துவண்ட போது எல்லாம்
என்னை தூண்டி விட ...
தொலைந்த என் கனவுகலை எல்லாம்
தோண்டி கொடுத்தாள் எனக்குள் இருந்தே
அவள் பெயர் சாந்தி.
சாந்தமான அவள் எனக்கு
தமக்கை இல்லை ,தங்கை இல்லை ..
காதலியும் இல்லை ...
காற்றின் வேகத்தில் போகும் போது
தொட்டு விட்டு சென்றாள்
சுடர்கிறது என் சிந்தை ...
மணம் ஆனதாலோ என்னை
மறந்து போனளோ தெரியாது
என் மனம் மறக்காது
மரணம் வரும் வரை
உனக்கு எத்தகைய நிர்ப்பந்தமோ
எனக்குத்தெரியவில்லை..
உனது நீண்ட மௌனத்தில்
உன்னை கோபிக்கவோ
உனனை மறந்து விடவோ முடியாது..
என் மீதான
உனது அக்கறைகளில்
அடிக்கடி நெகிழச்செய்வாய்
மறக்கவே சாத்தியமற்ற ஒரே ஒருத்தி
என் வாழ்வில் நீ மட்டும்தான்...!
அந்நிய மண்ணில் இருந்து விட்டால்
நீ எனக்கு அன்னியம் இல்லை தோழி
வாழ்வின் கடைசி நுனி வரைக்கும் ........
நண்பர்களாய் இருப்போம் என்று
நமக்குள் நாமே எடுத்துக்கொண்ட சபதமும்
கேள்விக்குறுதிதான் இல்லையா..???
யாரோ எதிர்பாராமல் வருவதும்
யாரோ எதிர்பாராமல் பிரிவதும்
இயல்பாகிப்போன வாழ்க்கை இது......
எத்தனையோ பிரிவுகள் நிகழ்ந்தாலும்
அத்தனையும் போல உன்னை
அத்தனை சுலபத்தில் மறந்து விட முடியவில்லை.. ..
தோழி நீ தொலைந்த திசை நோக்கி..............
அன்புடன் சன்
________________________________________
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

