வியாழன், 27 மே, 2010

தொலைந்து போன நேசம்




நேசம் கொண்ட நெஞ்சம் ஏங்கும்
நின்மதி இன்றி நினைவலை தாவும்
பாசம் கொண்ட உறவை நினைந்து
பேசும் நிலையை நாவும் மறக்கும்

ஏக்கம் மனதில் தாக்கத்தை வளர்க்க
தூக்கம் மறந்து கண்கள் வீங்க
சோகமே வாழ்வை துரத்துதல் போலவும்
பாசத்தை தேடி மனம் அலைவது போலவும்
பிரிவின் துன்பம் வாட்டி வதைக்கும்
உண்மை அன்பின் நிலை

கருத்துகள் இல்லை: