திங்கள், 14 மார்ச், 2022

பிறந்தநாள்



அரும்புதல் எப்போதும் அழகானது
பூக்களின் மென்மையில்
பூரிக்காதவர்கள் இருப்பது கடினம்...
மனிதனின் பிறப்பும்
மலரின் அரும்புதல் போல்தான்...
ஆனால்
மழலையாய் இருக்கும்போது மட்டுமே
மென்மையாய் இருக்கின்றோம்.
வளர்ச்சியின் வேகத்தில்
மென்மையை இழக்கின்றோமா?!...
மறக்கின்றோமா?!...
எதுவோ ஒன்று...
ஆனால்
நாம் இறுகிப்போகின்றோம்..
காலவெள்ளத்தில் சிக்கிய
கல்லாக இறுகிப்போகின்றோம்...
காற்றின்
வேகத்தில் சிக்கி தவிக்கும்
இலைகளாக கிழிபடுகின்றோம்...
சில வேளைகளில்
திசைமாறும் சிறு இலையாய்
வாழ வழிதெரியாது தவிக்கின்றோம்...
கிழிந்துபோன, இறுகிப்போன
இதயங்களும்
மீண்டும் புதுமலராய்
பூரிக்கத்தான் செய்கின்றது...
பூக்களின் இதழ்களின் மென்மையை
உணரத்தான் செய்கின்றது...
நம்பிக்கையின் ஆணிவேர் கூட
புதிதாய் நெஞ்சில்
துளிர்க்கத்தான் செய்கின்றது...
வருடம் ஒருநாள் வரும்
பிறந்த நாளில்!...

திங்கள், 7 மார்ச், 2022

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க துடிப்பது ஏன்? - ஒரு பின்புலப் பார்வை


1990கள் வரை யுக்ரேன் சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின் சோவியத் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது.
மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது
இப்போதும் யுக்ரேன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன்.
இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் வளரும் நாடு உக்ரைன். மனித ஆற்றல் வளர்ச்சியில் உலகத்தில் 74-வது இடத்தில் இருக்கிறது. வறுமையும் ஊழலும் அதிகம். வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது. ராணுவ பலத்தில் ரஷ்யா, பிரான்சுக்கு அடுத்து வருகிறது. குடியரசு நாடு, அதிபர் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறை நிலவுகிறது.
ஆனால் உக்ரைனை மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர். தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவப் பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வுக் கலாச்சாரம், பொழுதுபோக்குகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர்கள் பழைய சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பெட்டியான வாழ்க்கை முறையிலிருந்து சுதந்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றனர். ஒன்றியம் என்ற வார்த்தையே அர்த்தமற்றுப் போன பிறகு மீண்டும், ரஷ்யாவின் பிடிக்குள் வாழ அவர்கள் அஞ்சுகின்றனர்.
2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், யுக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா. மேலும் கிழக்கு யுக்ரேனில் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது ரஷ்யா. இது தான் ரசோ - யுக்ரேனியன் (Russo-Ukrainian) போராக உருவெடுத்தது.
பிரிவினைவாதப் போராளிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இதுவரை 14,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்போதும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனால், அமெரிக்கா இதை வேறு விதமாக அணுகியது.
அதிபர் விக்டர் யானுகோவிச், ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார்’ என்று பிரச்சாரம் செய்தது. கடந்த காலங்களில் பல நாடுகளில் அமெரிக்கா உருவாக்கிய ‘மக்கள் புரட்சி’ உக்ரைனிலும் வெடித்தது. அதிபர் விக்டர் யானு கோவிச் பதவியை விட்டு அகலவேண்டியதாகி விட்டது. அமெரிக்காவின் கைப்பாவையாக விளாதிமிர் ஜெலனஸ்கீ அதிபராக்கப்பட்டார்.
இங்கே ஒரு சோறு பதமாக ஒரு வரலாற்றுச் சம்பவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
‘ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் அந்நாட்டின் அதிபர் சதாம்உசேன்’ என்று குற்றம் சாட்டின அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள். அவற்றின் நேட்டோ படை, ஈராக் மீது போர் தொடுத்தது. ஈராக் அழிந்தது. எல்லாம் முடிந்தபிறகு, அந்நாட்டில் ரசாயன ஆயுதங்கள் இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதை அமெரிக்காவும் அந்த சில ஐரோப்பிய நாடுகளுமே ஒப்புக்கொண்டன.
உக்ரைனில் என்ன நடக்கிறது?
இப்போது உக்ரைன் விவகாரத்துக்கு மீண்டும் வருவோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்தது உக்ரைன் நாட்டின் புதிய அரசு. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உற்சாகத்துடன் ஆதரவு தெரிவித்தன.
சோவியத் யூனியன் இருந்தபோது தனது ஆதரவு நாடுகளுடன் இணைந்து வார்சா( வார்சா உடன்பாடு (Warsaw pact) கம்யுனிச கொள்கையினை பின்பற்றிய எட்டு நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் செய்து கொண்ட ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இது சோவியத் ஒன்றியத்தின் ஒரு முனைப்பாகும். இது நேச நாடுகளின் நேட்டோ என்னும் ஒப்பந்தத்திற்கு எதிராக செய்துகொள்ளப்பட்டதாகும். இதன் உறுப்பு நாடுகளாக அல்பேனிய மக்கள் குடியரசு, பல்கேரிய மக்கள் குடியரசு, செகஸ்லோவாக்கிய குடியரசு, ஜெர்மானிய சனநாயக குடியரசு, ஹங்கேரிய மக்கள் குடியரசு, போலான்ட் மக்கள் குடியரசு, ரோமானிய மக்கள் குடியரசு, சோவியத் ஒன்றியம் ஆகியவை இருந்தன.)என்ற அமைப்பை ஏற்படுத்தியது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்த அமைப்பு சிதறியது.
அந்த காலகட்டத்தில், 1990களில் சோவியத் அதிபராக இருந்த மிஷைல் கோர்பச்சேவிடம் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன், “எங்களது நேட்டோ ராணுவக் கூட்டமைப்பை விரிவாக்க மாட்டோம்” என்று உறுதிமொழியை அளித்தார்.
அதாவது, சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளை நேட்டோ ராணுவ அமைப்பில் சேர்ப்பதில்லை என்பதுதான் அந்த உறுதி மொழி. இது, 1994ஆம் ஆண்டு புடா பெஸ்ட் குறிப்பாணை மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதற்குக் காரணம் ராணுவ சமநிலை இருந்தால்தான் உலகில் அமைதி நிலவும் என்பதுதான். ஆனால். தாங்கள் அளித்த உத்திரவாதத்தை அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் மதிக்கவே இல்லை. சோவியத் அமைப்பைச் சார்ந்த பல நாடுகளை – ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி - நேட்டோவில் இணைத்தது அமெரிக்கா. இதனால் நேட்டோ படைகளும், ராணுவ தளங்களும் ரஷ்யாவைச் சுற்றி அமைக்கப்பட்டன. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏவுகணைகளை, பொத்தானை அழுத்தி மிகச் சில நிமிடங்களில் ரஷ்யாவைத் தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட முடியும்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்ன?
ஆனால், அமெரிக்கா இதை வேறு விதமாக அணுகியது. ‘அதிபர் விக்டர் யானுகோவிச், ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார்’ என்று பிரச்சாரம் செய்தது. கடந்த காலங்களில் பல நாடுகளில் அமெரிக்கா உருவாக்கிய ‘மக்கள் புரட்சி’ உக்ரைனிலும் வெடித்தது. அதிபர் விக்டர் யானு கோவிச் பதவியை விட்டு அகலவேண்டியதாகி விட்டது. அமெரிக்காவின் கைப்பாவையாக விளாதிமிர் ஜெலனஸ்கீ அதிபராக்கப்பட்டார்.
இங்கே ஒரு சோறு பதமாக ஒரு வரலாற்றுச் சம்பவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்
‘ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் அந்நாட்டின் அதிபர் சதாம்உசேன்’ என்று குற்றம் சாட்டின அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள். அவற்றின் நேட்டோ படை, ஈராக் மீது போர் தொடுத்தது. ஈராக் அழிந்தது. எல்லாம் முடிந்தபிறகு, அந்நாட்டில் ரசாயன ஆயுதங்கள் இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதை அமெரிக்காவும் அந்த சில ஐரோப்பிய நாடுகளுமே ஒப்புக்கொண்டன.
உக்ரைனில் என்ன நடக்கிறது?
இப்போது உக்ரைன் விவகாரத்துக்கு மீண்டும் வருவோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்தது உக்ரைன் நாட்டின் புதிய அரசு. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உற்சாகத்துடன் ஆதரவு தெரிவித்தன.
சோவியத் யூனியன் இருந்தபோது தனது ஆதரவு நாடுகளுடன் இணைந்து வார்சா என்ற அமைப்பை ஏற்படுத்தியது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்த அமைப்பு சிதறியது. அந்த காலகட்டத்தில், 1990களில் சோவியத் அதிபராக இருந்த மிஷைல் கோர்பச்சேவிடம் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன், “எங்களது நேட்டோ ராணுவக் கூட்டமைப்பை விரிவாக்க மாட்டோம்” என்று உறுதிமொழியை அளித்தார்.
அதாவது, சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளை நேட்டோ ராணுவ அமைப்பில் சேர்ப்பதில்லை என்பதுதான் அந்த உறுதி மொழி. இது, 1994ஆம் ஆண்டு புடா பெஸ்ட் குறிப்பாணை மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதற்குக் காரணம் ராணுவ சமநிலை இருந்தால்தான் உலகில் அமைதி நிலவும் என்பதுதான். ஆனால். தாங்கள் அளித்த உத்திரவாதத்தை அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் மதிக்கவே இல்லை. சோவியத் அமைப்பைச் சார்ந்த பல நாடுகளை – ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி - நேட்டோவில் இணைத்தது அமெரிக்கா. இதனால் நேட்டோ படைகளும், ராணுவ தளங்களும் ரஷ்யாவைச் சுற்றி அமைக்கப்பட்டன. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏவுகணைகளை, பொத்தானை அழுத்தி மிகச் சில நிமிடங்களில் ரஷ்யாவைத் தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட முடியும்.
அமெரிக்கா –சோவியத் யூனியன் இரண்டும் சம பலம் பொருந்திய நாடுகளாக இருந்தன. சோவியத் வீழ்ந்தவுடன், உலகின் ஒரே ஆளுமையாக அமெரிக்கா தன்னைக் கருதிக்கொள்கிறது. அதை உறுதிப்படுத்த - சோவியத் யூனியன் சிதறிய பிறகும் பெரிய நாடாக இருக்கும் - ரஷ்யாவை வீழ்த்த தொடர்ந்து திட்டமிட்டுவருகிறது.
அதன் ஒரு பெரும் திட்டமாகவே, தனது வாக்குறுதியை – உறுதி அளிப்பை மீறி, முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோ ராணுவ அமைப்பில் இணைத்துவருகிறது. இப்படிப் பல நாடுகளை இணைத்த பிறகு தற்போது உக்ரைனையும் இணைக்க ஏற்பாடு செய்து வருகிறது.
அமெரிக்கா கால்வைத்த நாடு அழியும் என்பது வரலாறு. குறிப்பாக சோவியத் வீழ்ந்த பிறகு, அமெரிக்கா தடி எடுத்து பாய்ந்த ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகியவை உதாரணங்கள். சோவியத் யூனியிலிருந்த பிரிந்த நாடுகளையும் அமெரிக்கா விட்டு வைக்கவில்லை. 2003இல் ஜார்ஜியாவில் ரோஸ் புரட்சி, 2004இல் உக்ரைனில் ஆரஞ்சு புரட்சி, 2005இல் கிரிகிஸ்தானில் டுலிப் புரட்சி.. இப்படி பல நாடுகளில் மறைமுகமாக ஆதிக்கத்தை செலுத்த சதி செய்தது.
தாங்கள் அளித்த உறுதிமொழி, ஒப்பந்தத்தை மீறி முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் சேர்க்கிறது அமெரிக்கா. அந்த வரிசையில் உக்ரைன் நாட்டையும் குறிவைத்து விட்டது. ஆக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சதியே இன்றைய உக்ரைன் பதற்றத்துக்கு காரணம் என்று கருத இடமிருக்கிறது!
தொடர்ந்து இந்த விடியோவை பாருங்கள்
https://youtu.be/If61baWF4GE