இளவேனி சீதளக்காற்று
குயில் தரும் இசை
மதிமயக்கும் உணர்வு
இதெல்லாம் தரும்
இயற்கை வனம்
மூடுபனியில் மூச்சுவிட்டு
ஓடைகளாக ஓடும் நதியின் ஓசை
நங்கை போல் நாணம் கொள்ளும்
தளிர்க்கும் நாற்று
சாரலின் ஈரத்தில் மொட்டு விடும்
பூக்களில் சுவாசக் காற்று
நகரம் போல் காட்சி படுத்தும்
நடைபயணம் செல்லும் மனிதர்கள்
எனது நாட் குறிப்பின் வெற்றிடத்தில்
வண்ணாத்தி பூச்சிகள் சிறகடிப்பு
யார் கண்ணும் படாமல்
என் கண்ணும் எதையோ தேடின
இயற்கை காற்று சுவாசங்களுடன்
உணர்வுடன் உறவுகொண்டன
பசுமையின் பிடியில் மனிதன் !
-பங்கிரையான்-