திங்கள், 18 டிசம்பர், 2023

ஒற்றை -பங்கிரையன்-



தனிமையில்
தர்க்கத்தின்
தனித்துவமான
தன்னல காதல் !
வறண்டு
ஓடைக்கரையில் ...
நாணல், பூக்களின்
உவமை ஒத்தி
அறிய காதல் !
ஒரு கணத்தில்
ஒருவன் தெரிந்த ஒருத்தி
தெரிந்தும் ,தெரியாமல்
தொட்ட காதல்!
ஒற்றை கதிரையில்
உட்காந்திருக்கும்
உணர்வு உள
எண்ணத்தில்
ஒருதலை காதல் !
முதிர்ந்த மனம்
முணு முனுக்கும்
முடங்களின்
உள்ளத்தின் உலா
ஏக்கத்தின் காதல் !
காதலின் தனித்துவம்
காதலிப்பவனுக்கே
புரியும் காதலென்று !
-பங்கிரையான்-
2020