ஞாயிறு, 23 மே, 2021

 



வாழ்வே பயணம்
நடந்தேன் சுவைத்தேன்
காணும் பொழுதில்
மறைந்தேன் திரிந்தேன்

இடறி விழுந்து முட்டி உடைந்த பிறகு
மீண்டெழுந்து தவழ்தேன் நகர்ந்தேன்
இதயம் மருந்து போட்ட பிறகு துணிந்து
நிமிர்ந்து பறந்தேன் திகைத்தேன்

மீன்கள் மூழ்கும் கடலில் விழுந்தே
நீச்சல் தன்னை பயின்றேன் கை
முள்ளில் தைத்த பின்பே
பூவின் தேனை ருசித்தேன்

மரங்கள் தாண்டி மலைகள் தாவி
பூமியோடு சுழற்ன்றேன் ஓடி
காற்று கண்ணம் கிள்ள இந்த
உலகைக் காண விரைந்தேன்

அளமியம் பறவை பறந்து செல்ல
அதில் உள்ள அனைவரும் என்னைப்
பார்ப்பதுபோல் வானம் பார்த்துக்
கையசைத்து நகைத்தேன்

என்னைப் போல நிழல் ஓடி
ஆடுவதைக் கண்டு துணையின்
அருமை உணர்ந்து நாளும்
நட்பைத் தேடி அணைத்தேன்

என் கால்களை நானே இடறிக் கொண்டு
அதில் இருந்து மீண்டு வருவதையும்
கேளி செய்து கை தட்டிச் சிரித்து
என் தவறுகளை ரசித்தேன்

பிறர் மனதில் என்னைக் காண
அதை யூகித்துக் கணித்து சலித்து
என் உள்ளத்தில் என்னைக் கண்டு
என்னை மீட்டு எடுத்தேன்

என் உலகின் தோளில் கைபோட்டு
மனக் கண்ணாடியின் கறை துடைத்து
எங்கும் மகிழ்வை மட்டும் நிறைத்து
இந்தப் பயணம் கடக்கின்றேன்

வாழ்வே பயணம்
நடந்தேன் சுவைத்தேன்
காணும் பொழுதில்
மறைந்தேன் திரிந்தேன்

இடறி விழுந்து முட்டி உடைந்த பிறகு
மீண்டெழுந்து தவழ்தேன் நகர்ந்தேன்
இதயம் மருந்து போட்ட பிறகு துணிந்து
நிமிர்ந்து பறந்தேன் திகைத்தேன்

மீன்கள் மூழ்கும் கடலில் விழுந்தே
நீச்சல் தன்னை பயின்றேன் கை
முள்ளில் தைத்த பின்பே
பூவின் தேனை ருசித்தேன்

மரங்கள் தாண்டி மலைகள் தாவி
பூமியோடு சுழற்ன்றேன் ஓடி
காற்று கண்ணம் கிள்ள இந்த
உலகைக் காண விரைந்தேன்

அளமியம் பறவை பறந்து செல்ல
அதில் உள்ள அனைவரும் என்னைப்
பார்ப்பதுபோல் வானம் பார்த்துக்
கையசைத்து நகைத்தேன்

என்னைப் போல நிழல் ஓடி
ஆடுவதைக் கண்டு துணையின்
அருமை உணர்ந்து நாளும்
நட்பைத் தேடி அணைத்தேன்

என் கால்களை நானே இடறிக் கொண்டு
அதில் இருந்து மீண்டு வருவதையும்
கேளி செய்து கை தட்டிச் சிரித்து
என் தவறுகளை ரசித்தேன்

பிறர் மனதில் என்னைக் காண
அதை யூகித்துக் கணித்து சலித்து
என் உள்ளத்தில் என்னைக் கண்டு
என்னை மீட்டு எடுத்தேன்

என் உலகின் தோளில் கைபோட்டு
மனக் கண்ணாடியின் கறை துடைத்து
எங்கும் மகிழ்வை மட்டும் நிறைத்து
இந்தப் பயணம் கடக்கின்றேன்

காதல் என்ற சொல்லே

                 காதல் என்ற சொல்லே



ஒரு அழகு எனலாம்.
மெல்லிய வார்த்தையில்

அத்தனை அர்த்தங்கள் !
அது புனிதமாகவும் கொள்ளப்படும்

கொச்சையாகவும் கருதப்படும்.
ஆணும் பெண்ணும் காதல்

வயப்படுவதில் தவறில்லை !
தப்பு எங்கு வருகிறது

மாற்றான் மனைவியை
நோக்கும் போது !

 

மேகத்தில் இருந்து
சீறிக் கொண்டு வரும்
மழைத்துளி போல !!
சில நேரங்களில் என்
என் சிந்தனையை
சீறிக் கொண்டு எழுகிறது
என் கவிதைகள் !!

விண்ணில் தொடங்கும் மழைத்துளி
எங்கு விழுகிறோம் என்றுத் தெரியாமல்
அலைந்துக்கொண்டிருக்கிறது அங்கும் இங்குமாய் !
அது போலத்தான்
என் கவிதைகளும் எங்கு விழுவது,யாரிடம் விழுவது
என்று தெரியாமல்
அலைந்துக்கொண்டிருக்கிறது அங்கும் இங்குமாய் !