983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி
திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் இந்த கறுப்பு ஜுலை வன்முறைகள் அமைந்துள்ளது
தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் (இரத்த காயம்)
.
சம காலப்பகுதியில் சிங்கள பேரினவாதத்தின் உந்துதலில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீதும் சிங்கள காடையர்களாலும் கைதிகளாழும் கொடூரமான தாக்குதல்கள் இடம் பெற்றன.
சிறைச்சாலையில் நிகழ்தேறிய கலவரச் சம்பவத்தில் காந்தியம் பிதா மருத்துவர் சோ. இராஜசுந்தரம்,குட்டிமணி ,தங்கதுரை ,ஜெகன் , தமிழ் அரசியல் கைதிகள் உற்பட 53 பேர் வரையான அநாகரியமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
”சுதந்திரத்தமிழீழத்தை என் கண்கள் காணவேண்டும் அதனால் இறந்தபின் என் கண்களை தானம் செய்துவிடுங்கள்“ என்று தன் இறுதி ஆசையை நீதிமன்றத்தில் சொன்னதற்காய் ஜூலை-25 அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து ”குட்டிமணியின்“ கண்கள் உயிருடனிருக்கும்போதே சிங்களக்காடையர்களால் பிடிங்கி புத்தனின் காலடியில் போடப்பட்டது
குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்
1983 ஜூலை 23 தமிழரின் வாழ்வில் ஆறாத வடுவாக நிலைத்து விட்டது.





