வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

மழை நீர்

பணக்காரன் வீட்டு மொட்டை மாடி 
ஒட்டுத் திண்ணையில் விழும்
ஓட்டு மழை நீரை கையில்
பிடித்தாடும் சிறுமி!


முற்றதில்  நிறைத்தோடும்
வெள்ளத்தில்காகிதப் படகு
விடும் சிறுவன்!


ஏழை குடிசையில் வீட்டுக்குள்
விழுகின்ற மழைதுளி
அழகில்லை என்று
கண்ணீர் மழை பொழியும்
அவ் வீட்டு சிறார்கள் !

கார்த்திகை



கார்த்திகை ஒளிர்  மிளிர்கின்றன
நினைவுகளும்  மலர்கிறது
கல்லறையில் துயில் கொள்ளும்  காவியநாயகர்களின்
உறங்க கனவுகளாக பெருமை படுகின்றது  ……..!

வீரத்தோடும் தன்மானத்தோடும்
மண்ணை காக்க வீரம் கொண்டுவந்தவன்
காலத்தின் சூழ்ச்சியால் அங்கமிழந்து
எம்மை காக்கவந்தவன்  இன்று
 தன்னைகாக இயலாத கனவுகள் பெருகிட ……..!



 காலங்கள் உருண்டோடி போகிறது
எமது எழுச்சியும் மங்கிதான் போகிறது!
அங்கே சாட்சிகளும் அழிக்கபடுகிறது
எழுச்சிகளும் நொறுக்கபடு  பெருகிட ……..!


வாழ நினைப்பவன்  ஈழ தமிழன்
இங்கே பகுத்தறிவோடும் சுய மதிப்போடும்
வாழ மறுப்பவன் புலன்பேர் தமிழினம் பெருகிட……..!


தோள்கொடுத்து ஒரு பாதையில் வந்தவன்
விழ்ந்தவன்  மாவீரன் இழந்தவன் அன்னியன்!
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

முறிந்த மரகொப்பு!


நேற்றைய போரின் 

கதாநாயகர்கள் 

`புனர்வாழ்வு` எனும்

சித்திரவதைக்குப்
பின்

வாழ
வழியின்றி

வாழ்வை
முடித்துக்கொள்கிறார்கள்

மனக்குழப்பத்தோடு
....!


தங்கத்தலைவன்
வழிகாட்டுதலில்

சாதனைகள்
பலபடைத்த

சரித்திர
நாயகிகள்

ஒதுக்கப்பட்டும்

துன்புறுத்தப்பட்டும்

`யார் காப்பார் எம்மை இனி `

என்று
பெருமூச்சுவிடுகிறார்கள்

வாழ்க்கையைத்
தொலைத்துவிட்டு ...!


`யாரும் இருக்குமிடத்தில்

இருந்துகொண்டால்

எல்லாம்
சௌக்கியமே ...`

சரித்திர
நாயகரின்

இன்றைய
நிலை பார்த்தபின்

ஞாபகத்திற்கு
வருகிறது

கண்ணதாசனின்
வரிகள் ...! 

அப்பாவின் நினைவில்...25 ஆண்டுகள் கழிந்தன



கடவுள் முகம் கண்டதில்லை ! 
படைக்கும் கடவுளின் முகமாக- நீ
என்னைப்படைத்த உந்தன் அன்புமுகம் கண்டேன் !


மென்மையாய் பேசுபவனேபணிவினைக் கற்பித்தவனே...........

அன்பு ஒன்றை வாடகையாய்க் கொடுத்து-என்
நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று !
உண்மையான நண்பனாக இருப்பவர்...

நேரம் தவறாமை கடுஞ்சொல் கூறாமை
மறு மனம் நோகமை
நன்றி மறவாமை
பகைமையைத் தொடராமை..
சேயான எனக்கு அனைத்தையும் கற்பித்தாய்!


உதவி புரிவதற்கு நீ என்றும் சிந்தித்தவனில்லை
உனக்கு உபத்திரம் செய்ததை நினைப்பதுமில்லை

பள்ளிக்கு பின்பே பல்கலை கழகம் செல்வார்கள்-நான்
 பல்கலை கழகமே உன்னிடம் பயின்றபின் தான் பள்ளிக்குச் சென்றேன்!


நீ நம்பின ஆண்டவன் உன்னை அதிகம் நேசித்து விட்டானோ?
விரைந்து உன்னை அவனிடம் அழைத்துக்கொண்டானே???
சுயநலம் பிடித்த கடவுள் அவன் .


என்னை உலகிற்களித்தவனே -இன்று
உன் பிரிவால் நான்சிந்தும் கண்ணீருடன்
உன்னிடம் வரம் ஒன்று யாசிக்கிறேன்?

என் பிள்ளை உன்னைப்போல் இருக்கவேண்டும்
பிற்காலத்திலும் என்னை காத்திட நீ வேண்டும்!!
உள்ளத்தில் உதயமாக இருப்பவர்..!

குடும்ப கஷ்டத்திற்கு உழைப்பாளியாக இருப்பவர்...
குணத்தில் நல்ல மனிதராக இருப்பவர்..!
அவர் தான் அப்பா ! என் கடவுள் !


அன்புக்குரிய தோழன்

சன் நரேன்

ஆத்திசூடி மூன்று மொழியில் (தமிழ் ஆங்கிலம் நோர்வே )


அறம் செய்ய விரும்பு (Aram Seiya Virumbu) -> Have desire to do good -> Har ønske om å gjøre godt
ஆறுவது சினம் (Aaruvadhu Sinam) -> The one that reduces should be anger -> Den som reduserer bør være sinne
இயல்வது கரவேல் (Iyalvadhu Karavel) -> Give what you don’t need.-> Gi det du ikke trenger
ஈவது விலக்கேல் (Eevadhu Vilagel) -> Do not stop giving.-> Ikke slutte å gi.
உடையது விளம்பேல் (Udaiyadhu Velambel) -> No Publicity.-> Ingen publisitet.
ஊக்கமது கைவிடேல் (Ookamadhu Kaividale) -> Do not lose hope -> Ikke miste håpet
எண், எழுத்து இகழேல் (Enn, Ezhuthu Igalel) -> Do not underestimate the power of Mathematics and literature -> Ikke undervurder kraften av matematikk og litteratur
ஏற்பது இகழ்ச்சி (Yerpadhu Igazhchi) -> Receiving is meaner.-> Motta er slemmere.
ஐயமிட்டு உண் (Iyamittu Unn) -> Eat after sharing.-> Spise etter deling
ஒப்புரவு ஒழுகு (Oppuravu Ozhugu) -> Get used to what you have. Get along with the world.- >Bli vant til det du har. Komme sammen med resten av verden
ஓதுவ தொழியேல் (Odhuvadhu Ozhiyel) -> Never stop learning or preaching.-> Aldri slutte å lære eller forkynnelse.
ஒளவியம் பேசேல் (Oviyam Pesale) -> Do not talk ill about others.-> Ikke snakk syk om andre.
ஃகஞ் சுருக்கேல் (Akanjurukale) -> Do not be stingy.-> Ikke vær gjerrig

மீண்டும் வருமா வசந்தம்?


முடிந்த அத்தியாயத்திற்கு முகவுரை தேடுகிறேன்...
விடிந்த இரவுக்கு விளக்கேற்ற விழைகிறேன்..!
பட்டமரத்தில் பசுந்தளிர் தேடுகிறேன்..!
அணைந்த நெருப்பில் குளிர்காய முயல்கிறேன்..!
விரிசல் கண்ணாடியில் ஒற்றை உருவம் தேடுகிறேன்..!
ஓட்டைப் பானையில் நீர் நிரப்ப முயல்கிறேன்..!
வாடிய மலரில் வர்ணம் தேடுகிறேன்..!
சிந்திய கண்ணீரை சேகரிக்க நினைக்கிறேன்..

தமிழ் கவி இயற்றினேன் !


சிந்தையில் சுரந்த தமிழால் 
கற்பனை ஊறியது என்னுள்
முத்தமிழ் என்னுள் மூண்டதுமே
ஒளிர் விட்ட்து  தமிழ்
வாழிய தமிழ் வாழிய
தமிழ் வாழிய வாழியவே ! 

பகலும் இரவும் சேரும் அந்த மயக்கம் தரும் மாலை நேரம்

இருளின் ஆக்கிரமிப்பு 
ஒதுக்கப்படும்  பகலவன்.
வெண் பனி மூடிய சாலை 
வழுக்கும் பனியில் 
சறுக்கி செல்லும் 
சிதறிய  மக்கள்
கரையும் நாட்கள்
 உறைந்து கொண்டிருக்கும் -மனம் !

முத்தமிழ் அறிவாலயமும் தமிழர் திருநாளும் ...!


இவர்கள் 'சேற்றில் ' கை வைத்தால்தான் நாம்
'சோற்றில் ' கை வைக்க முடியும்.
யார் இவர்கள்  என்ற வினாக்களுக்கு
முத்தமிழ் அறிவாலய மாணவர்களின்  ஆராய்ச்சியும்ஆதரபுர்வம்மான சேகரிப்பும் கொண்ட கண்காட்சி மனதை கவரும்வண்ணம் அமைந்தது 
   

உழவர் பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள்;
அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான்... பொங்கல் திருநாள்.
பொங்கல் விழா என்று பெயர் வந்தது ஏன் ? இது ஒரு சமுதாயத்தினர் கொண்டாடும்விழாவா ? அல்லதுமதம் சார்ந்த பண்டிகையா ? சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாதான் இந்தப் பொங்கல் விழாவா? என்றெல்லாம்வினாக்கள் வினாக்களும் விடைகளும்  கண் முன்விரித்து காட்டினார்கள் முத்தமிழ் அறிவாலய மாணவ செல்வங்கள்
 

மாணவர்களுக்கான கோலம் போடும் முறைகளும்   பெற்றோர் களினால் பயிற்சியளிக்கப்பட்டது


மனத்தை அதிரவைக்கும்  மாணவர் செல்வங்களின்உரைகள்


உழவர் தினம் எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும். இந்த வேளாண்மை அனைத்து தரப்புமக்களுக்கும் பொதுவானது என்ற ஆதாரங்களை முன் வைத்து உரையாடினார்கள் எத்தனைப் பொங்கல்காலத்தை  நாம் இந்தத் தமிழ்க்குடிகள் பார்த்திருக்கும்? இந்த புலன்பெயர் மாணவர்களை எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது.
 'மொழிச் செல்வம் கோழைபடாது '
என்ற கொள்கையே இத் புலன் பெயர் தமிழ்ச் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது.

இல்லங்கள் இணைந்து, உள்ளங்கள் இணைந்து, ஊர்கள்இணைந்து,ஒரு சமுதாயமாக ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன

இந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று  என்ற அடையாளம் காட்டும் வர்ணத்தில்  காட்சி வழங்கள்  அமைந்தது 
பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும்போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்த சமுதாயத்தைக் கட்டிக் காக்கும்அரணாக ஆகிவிடுகிறது.
இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா!
இதனை வடிவான முறையில்  அமைத்தார்கள் பாடசாலை  ஆசிரியர்களும் நிர்வாக குழுக்களும்

இந்தப் பொங்கல் விழாக்காலம் தமிழ்ச்சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தைஒருங்கிணைக்கும் நல்விழாவாக, வேளாண்திருக்காலமாக இருப்பது எவ்வளவு பொருத்தமான ஒன்று;எவ்வளவு அறிவார்ந்தசெயல் அது!

அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப் பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாகமுற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது எத்தனை அறிவார்ந்த பொருத்தமானசெயல்!.

ஒளவைப்பிராட்டியார் 'இளவரசே வாழ்க பல்லாண்டு! 'என்று வாழ்த்தவில்லை!

அரசே உன் 'வரப்பு உயர்க '! என்று வாழ்த்தினார். ஏன் ?

வரப்புயர நீருயரும்!

நீருயர நெல்லுயரும்!

நெல்லுயுர குடியுயரும்!

குடியுயர கோனுயர்வான்!.
என்ற கருத்துக்கு அமைய இந்த விழா அமைந்தது !


நண்பர்கள் ஒன்று சேரும் நல்லதோர் பேருந்து பயணம்....!

பாதி வாழ்க்கை கடந்த பின்னும்
 கலையாத பள்ளிகுடா  நடப்பு கனவு 
பலநேரம் தோள் கொடுத்தத பரிவாய் உறவு !

இன்பம் வந்து இருந்த போதும்
 துன்பம் வந்து தொலைத்த போதும் 
இரண்டிலுமே பங்கு கொண்டு 
இதமளித்த பாடசாலை  நினைவுகள்........ !

காலம் பல கடந்த பின்னும்
காட்சிகளை தொலைக்கவில்லை 
இனிய பல நட்புக்காலம்
 இன்னமும் நாம் மறக்கவில்லை ..........!

நாளை நம் தலைமுறை பாடும் ... 
பாடசாலை தோழமை என்பது இதுதான் 
நண்பா நாங்கள் தான் 
நடப்பு என்பதும் இதுதான் அதுவும் நாமே  !