ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

காலம் நிற்பதில்லை

எப்பவும் போலவே 

மழை மழையாகவே 

இருக்கிறது...!


நிகழ்வு வெவ்வேறு 
வாழ்வையும் வீழ்வையும்
விகாரப்படுத்துகிறது !

ஒற்றை மனம் ஒன்று 
இருமைக் கொள்கைகுள் 
முக்கு முடங்கி
முகவரி  முடிந்து போன 
உறவுகளின் நினைவு !

ஒற்றை குடைக்குள் 
நடப்பவனிடம் 
உள்ளேயும் வெளியேயும் 
தனக்கான நம்பிக்கைகள் 
காலம் தொடர்கின்றது அவன் பின் !

 -பங்கிரையன்-