வெள்ளி, 24 நவம்பர், 2023

 விடுபட்ட சமூகம் வாழும் நாட்டில்
துளிர்க்கும் கலாச்சார சாரலில்
தனக்கான ஒரு நவீன கலச்சார
சமூகத்தை உருவாக்குகின்றது !


காணும் யாவும் -பங்கிரையன்-







இயற்கை இயல்பு
இழப்பு என்பது நியதி
வாழ்வென்பது தொடர்ச்சி

உயிர்கோளத்தில்
மனிதம் சிறிது
பூமி மேற்பரப்பில்
பிரிந்து கிடக்கின்ற
பெருங்கடல்

யுத்தம் என்பது முறைமை
உயர்ந்தவனும் தாழ்த்தவனும்
எதோ ஒன்று நிர்ப்பந்தம்

சமூகம் என்பது பொதுமை
மனநிலை மையப்புள்ளி
விண்ணும் மண்ணும்
⁠யாரும் யாவும்
இன்நெறியில் இயங்கலாம்

- பங்கிரையான்

 இந்தப் பார்வைக்க

மட்டும்
பரிணாம் நிறைய உண்டு


ஞாபக மணப்பு



ஒவொருமுறையும்
ஊர் போகும் போது
வழி மறந்துபோகும்
புதிதாய் தளிர்த்திருக்கும்
வீடுகளும் ,மண்டபங்களும்

குறிப்பு வைத்துக்கொண்டு
ஏதும் கண்டுபிடிக்க முடியாது இங்கே
பழைய அடையாளங்களை
ஏமாத்துக்காரர் அழிப்பார்கள்

பருத்த வேப்பமரத்தை தேடுகிறேன்
இடிக்கப்பட்ட என் வீட்டைத் தேடுகிறேன்
காலியான என் நிலத்திலிருந்து
மீண்டும் திரும்பவேண்டும் நான்

வலக்கை இடக்கை பார்க்கும் போது
வர்ணம் பூசுசிய தகரத்தால்
சுற்றி அடைக்கப்பட்டுருக்கின்றது
இவர்கள் தான் ஊரின் சொல்லிகள்

ஏதேனும் புதிதாக பேசுவார்கள்
ஏதேனும் ஒன்று இல்லாமலும் ஆகிறது
இப்போது இதுவொன்றுதான் வழி
அகம் பக்கம் நிலத்தை பார்த்து
கேட்கவேண்டும் இது என் நிலம் என்று

என்னிடம் நேரமில்லை
மத்தியான வெயிலில்
யாரும் பார்த்து அடையாளம்கண்டு
உள்ளே அழைக்கலாம் என்னை.
என் முகத்தில் தண்ணீர் தெளித்து
ஞாபக மணப்புடன் திரும்பினேன்

-பங்கிரையான்-

"உறைந்த பனி"

 ஒரு தனித்த குளிர்காலக் காட்சியில்

நான் அசையாமல் நிற்கிறேன்
மக்கள் செல்கின்றனர்



காலம்

 

நானும் நீயும்

ஒன்றையே பேசிக் கொண்டிருக்கின்றோம்
இலையுதிர்காலம் இன்னும் ஆழமாகிறது




















பிச்சை

 

மரணமில்லா இறப்புகள். -பங்கிரையான்





 மரணித்த எம் தோழர்களின்

துக்கங்கள் விழுங்கிய எழுத்துக்களில்
உயிர் வாழ்கிறதென் கவிதை 

காலத்தை மற்றவந்த காவியத்தின்
புதையலை தாங்கி நிட்க்கும்
கல்லறைகளுக்கு உயிர் ஊட்டி
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்

பொருள் இல்லாவிடினும்,
சுவை இல்லாவிடினும்
வரலாறுகளாய் அவர்களை பற்றிய

இனி இறக்கப்போகும் தன்னிகரில்லா
எவனாவது வாசிக்கக்கூடும், அவன்
இறந்தபின்னும் கவிதை உயிரோடிருக்கும்

என்னையும் சேர்த்து
இறந்தவர்களின் சுவடுகளோடு.

- பங்கிரையான்-