வெள்ளி, 24 நவம்பர், 2023

ஞாபக மணப்பு



ஒவொருமுறையும்
ஊர் போகும் போது
வழி மறந்துபோகும்
புதிதாய் தளிர்த்திருக்கும்
வீடுகளும் ,மண்டபங்களும்

குறிப்பு வைத்துக்கொண்டு
ஏதும் கண்டுபிடிக்க முடியாது இங்கே
பழைய அடையாளங்களை
ஏமாத்துக்காரர் அழிப்பார்கள்

பருத்த வேப்பமரத்தை தேடுகிறேன்
இடிக்கப்பட்ட என் வீட்டைத் தேடுகிறேன்
காலியான என் நிலத்திலிருந்து
மீண்டும் திரும்பவேண்டும் நான்

வலக்கை இடக்கை பார்க்கும் போது
வர்ணம் பூசுசிய தகரத்தால்
சுற்றி அடைக்கப்பட்டுருக்கின்றது
இவர்கள் தான் ஊரின் சொல்லிகள்

ஏதேனும் புதிதாக பேசுவார்கள்
ஏதேனும் ஒன்று இல்லாமலும் ஆகிறது
இப்போது இதுவொன்றுதான் வழி
அகம் பக்கம் நிலத்தை பார்த்து
கேட்கவேண்டும் இது என் நிலம் என்று

என்னிடம் நேரமில்லை
மத்தியான வெயிலில்
யாரும் பார்த்து அடையாளம்கண்டு
உள்ளே அழைக்கலாம் என்னை.
என் முகத்தில் தண்ணீர் தெளித்து
ஞாபக மணப்புடன் திரும்பினேன்

-பங்கிரையான்-

கருத்துகள் இல்லை: