மரணித்த எம் தோழர்களின்
துக்கங்கள் விழுங்கிய எழுத்துக்களில்உயிர் வாழ்கிறதென் கவிதை
காலத்தை மற்றவந்த காவியத்தின்
புதையலை தாங்கி நிட்க்கும்
கல்லறைகளுக்கு உயிர் ஊட்டி
நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்
பொருள் இல்லாவிடினும்,
சுவை இல்லாவிடினும்
வரலாறுகளாய் அவர்களை பற்றிய
இனி இறக்கப்போகும் தன்னிகரில்லா
எவனாவது வாசிக்கக்கூடும், அவன்
இறந்தபின்னும் கவிதை உயிரோடிருக்கும்
என்னையும் சேர்த்து
இறந்தவர்களின் சுவடுகளோடு.
- பங்கிரையான்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக