வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

திங்கள், 6 பிப்ரவரி, 2012

மீண்டும் வருமா வசந்தம்




முடிந்த அத்தியாயத்திற்கு
முகவுரை தேடுகிறேன்...
விடிந்த இரவுக்கு
விளக்கேற்ற விழைகிறேன்..!
பட்டமரத்தில்
பசுந்தளிர் தேடுகிறேன்..!
அணைந்த நெருப்பில்
குளிர்காய முயல்கிறேன்..!
விரிசல் கண்ணாடியில்
ஒற்றை உருவம் தேடுகிறேன்..!
ஓட்டைப் பானையில்
நீர் நிரப்ப முயல்கிறேன்..!
வாடிய மலரில்
வர்ணம் தேடுகிறேன்..!
சிந்திய கண்ணீரை
சேகரிக்க நினைக்கிறேன்..!

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

இறகுகள்




எங்கள் சிறகிலிருந்து பிரிந்த இறகுகள்

எங்கள் காலடிகளில் சிதறிக்கிடக்கின்றன

இயன்றவரை சேகரிப்போம் வாருங்கள்

மீண்டும் ஒருமுறை முயசிபோம்

இறகுகள்கூட்டி சிறகுசெய்து பறப்பதற்கு..!!

அப்பாவின் பெண்ணே


உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!

என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...

உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...

உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...


நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...

உன் கண்ணீருக்கெல்லாம்
கண்ணீர் சொல்ல முடியா
வலியில் நான் துடிக்கின்றேன்...

என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...

சொல்லத் தேவையில்லை
காலம் முழுதும் உன்னை
மனதில் சுமப்பேன் என்பதை