
மாவீரர் திருவிழாவில்
வெளியில் நின்று குளிர்காயும்
முன்னாள் போராளி நானுமொருவள் ..
மனம் விரும்பவில்லை
புலன்பெயர் பாஷை
எனக்குப் புரியவில்லை
நான் விரும்பிய விடுதலையின்
பகிரங்க பிராத்தனையின்
சாட்சியாக நின்றேன்
மாவீர தோழ தோழிகளுக்கு
என்னுடைய அவனுடைய
ரகசியங்கள் எல்லாம்
கல்லறையில் புதைத்து விட்டு
அர்ப்பணித்துக் கொண்ட வீரத்தின்
சித்தாந்தத்தை என்னிடமிருந்து
விரட்டியடிகின்றேன்
போலி புரட்சிகளில் என்னை
ஐக்கியப்படுத்திக் கொண்டதை
நினைத்து !