சுதந்திர வான் நோக்கி
தனிப் பறவையாய் நான்
இணைச்சிறகடித்து பறக்கின்றேன் !
நண்பனே உன்னை ?( என் கனவு )
தோழனாய் சிறகாக்கி
என்றோ என்
கனவுச் சிலையில்
செதுக்கி வைத்துளேன் ..!
நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுதி........
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் தோழமை மட்டும்
எனைத் தாங்கும் தோல் கண்டால்
மீண்டும் எழுவேன்...!
வேற்றுமையில்லா தோழமை நட்ப்பு ..!
போதுமட என் சிறகுகள் இயங்க....!
இன்று போதும் ........
உன் நன்பிக்கையான சத்தியம்
என்னோடு வா....- எம்
இனத்தின் போரொளி காட்டுறேன்!
அதுவரை உற்சாகமாய்
என் சிறகுகள் அடித்தபடி
உனக்காயே நான்...!


