ஞாயிறு, 16 செப்டம்பர், 2018




No automatic alt text available.

1956 ஆம் ஆண்டில் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால்(த்) தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது.
குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால்(த்) தலை அமைந்திருந்தது.
தபால்(த்) தலையைப் பார்த்த சிங்களத் தலைவர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்தத் தபால்(த்) தலையை மீளப் பெறவேண்டும்'' என்று கூறினார்கள்.
பலரின் எதிர்ப்புக்களை அடுத்து இலங்கை அரசானது, விஜயனின் வருகை பற்றிய தபால்(த்) தலையை மீளப் பெற்றுக் கொண்டது.

பொன் நாள் வாழ்த்து



Image may contain: 1 person, flower and plant
//////////////////////////////////////////////////////
வாழ்வில் அழகான தருணம்
புதிதாய் பூத்த மலர்களின் மேல்
பனித்துளியாய் சிலிர் என்ற புன்சிரிப்பில் 
புன்னகைக்கும் நீர்த்துளியாய்
விடிந்த இன் நாள் நீ பிறந்த நாள் !
நாட்கள் நகருவதும்
வருடங்கள் வருவதும்
அவை நம்மை கடப்பதும்
விந்தையில்லையே
இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது!
அன்பின்வழிநின்று..
அறிவுவலம்வந்து..
#அன்பு#ஆதரவு#பகிர்தல்
இது மூன்றுக்கும் அர்த்தமாய்
பண்பின்விளக்கேற்றி பாசச்சுடராக..
நன்மைபல புரிந்து நாளும் வாழுகின்ற
தோழி எனிலும் துளியும் மிகையில்லை..!
புரிந்தோ புரியாமல் வேதாந்தத்தில்
மூழ்கியவாள் நீ -ஆனாலும்
உன் சித்தர்ந்தம் எனக்கு பிடிக்கும்
பெருமையை பிறருக்கு கொடுத்து
தான் மட்டும் சிறுமை பெறுகின்றவள் -நீ
துணி மணி வாங்கினாலும்
புருஷன் தகைமைக்கு
பெருமை சேர்கின்றவள் -நீ
உனக்குள் இருக்கும்
சுயநலமே உனக்கான யுத்தி
புதிய அகவையில்
புயலாய் புகுந்து
வளங்களையும் நலன்களையும்
அகமகிழ பெற்று
அகத்திலும் புறத்திலும்
சந்தோசத்துடன்
நலமாய் வாழ வாழ்த்துகின்றோம்
அன்பு தோழமை
சன்