திங்கள், 8 ஜூலை, 2024

"சாய்வு காலம்"

 இரவு சூரியன்

என்பதும்
பூரண சூரியகதிர்கள் தான்

 

இராவெலாம்
பொழிந்து கொண்டிருக்கும்
மழை துளிகள்
ஒரு துளி பகல் கதிர்கள்
உள்ளே நுழைய முடிவதில்லை

 

இரவு
தனக்கான நிறங்களை
மட்டுமே பேசுகிறது
காலம் சாய்ந்து போகிறது
எனக்கும் அவளுக்கும் ஆனா
காதல் உக்கிரம் அடைகின்றது

                                                                        -பங்கிரையன்-