வெள்ளி, 27 ஏப்ரல், 2012

மாலை மழைக்கு நனைந்துவிட வேண்டாம் என
நீ ஓடினாய்மழையும் விடாமல் துரத்தி
அணைத்தது உன்னை முதல் துளி உன் மீதும்
 மறு துளி மண் மீதும் விழுந்தது
உன் மீது விழுந்த மழைத்துளி சிலிர்த்தது
மண் மீது விழுந்த மழைத்துளி மறித்தது
பனி பிரதேசத்தில் கூட பார்க்கும் வரம் கிடைக்குமா
 தெரியாதுஉன் போன்ற
 பனிப்பாறை மழையில் நனைவதை
உன்னைவிட உன்
ஆடைக்கு தான் குளிர் அதிகம் போல
உன்னை இறுக்கி அணைத்தது