புதன், 30 டிசம்பர், 2020

வரலாறு ராகம்






ஒரு வரலாறு 

அடைக்கப்பட்ட குரலுக்குள் 

அலைமோதும் வடுக்களின் 

 நினைவுகூரல் 

மௌனமாக பிராத்திக்கின்றது !

பிளவுபட்ட இனம் 

ஆய்வுகள் இல்லாமல் 

வாய்களை மூடி 

ஒப்பாரி படிகின்றன 

காணாதவனை காண்பதற்கு !

தாழ்ப்பாள் இட்ட  கதவுக்கு பின் 

இதுயெல்லாம் அரசியல் என்று 

மௌனமாக தொலைந்து விடுகின்றான் 

மனிதம்  !

-பங்கிரையான்- 



எதிர்பார்ப்பு (ஏ) மாற்றம்



ஜன்னல்களைவிட்டு

வெளியேஅசைகின்றது 

பாதுகாப்பற்ற  

வெண்பனிக் காற்று!

உள்ளே   உறைகின்ற 

கால இடைவெளி

தனிமையை  

தக்கவைக்கின்றன  

ஏகாந்த  உணர்வு !

நிகழ்கால  வருடத்தை

எதிர்கால வருடம் 

அலசி  பார்க்கிறது 

புதிய கனவொன்று!

  - பங்கிரையான்-


காதல்




தனிமையில் 

தனிமையான காதல் !

ஒருவரும் ஒருவரை 

அறிய காதல் !

ஒற்றை கதிரையில் 

உட்காந்திருக்கும் 

ஒருதலை காதல் !

அவன் தெரிந்த  அவள் 

தெரிந்தும் ,தெரியாமல் 

இவன்  காதல்!

 காலத்தின் பிரளயத்தில் 

உளவியலுக்கான 

ஏக்கத்தின் காதல் !

காதலின் தனித்துவம் 

காதலிப்பவனுக்கே 

புரியும் காதலென்று !

-பங்கிரையான்-

-

ஒரு மடல்


Old_books

பரணில் இருக்கும் ஒரு புத்தகம் நான்.
நான் ஒருவேளை
ஒப்பந்தமாகவோ, பக்திப்பாடலாகவோ
அல்லது காமசூத்திரத்தின் ஒரு அத்தியாயமாகவோ
அல்லது அந்தரங்க துன்பத்தின் உச்சரிப்பாகவோ இருக்கலாம்
ஆனால் இவை எவையும் நான் அல்ல எனத் தெரிகிறது
(அப்படி இருந்தால் எவரேனும் என்னைப் படித்திருக்கலாம்)
புரட்சிக்காரர்களின் கூட்டத்தில் வெளிப்படையாக
அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர்
நான் அதனுடைய கைப்பட எழுதப்பட்ட நகல்
அதில் காப்புறுதிக்கான முத்திரை இருக்கிறது
ஆனால் எப்போதும் அது வெற்றிகரமாக அமுல்படுத்தப்படவில்லை
அது செயல்முறைப்படுத்துவதற்காக பாதுகாப்பாக உள்ளது
இப்போதுதான் சில சிட்டுக்குருவிகள் வந்தன
வாயில் வைக்கோலை சுமந்துகொண்டு
என் மேனியில் அமர்ந்து
அடுத்த தலைமுறை குறித்து கவலைகொண்டன
(அடுத்த தலைமுறைக்கான கவலை என்பது எத்தனை வியப்புக்குரியது)
சிட்டுக்குருவிகளிடம் சிறகுகள் இருக்கின்றன
ஆனால் தீர்மானங்களுக்கு சிறகுகள் இல்லை
(தீர்மானங்களுக்கு இரண்டாம் தலைமுறை இல்லை)
சிலசமயங்களில்
பிரச்சினை என் கட்டுகளை கழற்றிவிடுகிறது
என் எதிர்காலத்தில் என்ன இருக்கிறது
என்பதை மோப்பம் பிடிக்க நினைக்கிறேன்
நான் மோப்பம் பிடிக்க முனைகையில்
பறவை எச்சத்தின் புகைநாற்றம் மட்டுமே உள்ளது.
ஓ! எனது உலகமே, உன்னுடைய எதிர்காலம் என்ன !
உன்னுடைய இன்றைய நிலையில் நான்.