திங்கள், 4 நவம்பர், 2013

ஞாயிறு, 3 நவம்பர், 2013

நம்பிக்கை !!!

திரும்பி வருவோம் என்ற அதீத நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறையும் காற்று மண்டலம் நுரையீரல் தொடுகின்றது….
முட்டி மோதி முளைத்து தளைப்போம் என்ற நம்பிக்கையில்தான் விதைகள் மண்ணுள் மூழ்கி தற்கொலையுறுகின்றன…
ஒவ்வொரு மாலையிலும் தொலைத்த சூரியனை, எப்படியும் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் தான் – தினமும் பூமி அந்தரத்தில் சுழன்று தேடுகின்றது…
இன்றில்லாவிடிலும் என்றாவது ஒருநாள் எனை நீ உணர்வாய் எனும் அதீத நம்பிக்கையில் தான் உன் நினைவுகள் தாங்கி இன்னும் வாழ்கிறேன்
நம்பிக்கை !

முகம் அறிய முகப்புத்தகத்தில் நட்பு தோழமை

                                                         
இன அறியோம் !

மத அறியோம் !
மொழி அறியோம் !
ஊர் அறியோம் !
பிறப்பிடம் அறியோம் !
நட்பெனும் மொழியால் !
அனைவரும் இங்கே ஓர் தளம் !
  சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை தோழமை நட்பால் !
புரிந்து கொண்டோம்!
எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
ஏமாற்றங்கள் சிறிதுமில்லை!
அவரவர் கருத்துக்களை இடம் (பரி) மாற்றிக்க கொள்வோம்!பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் !சின்ன‌ சின்ன‌ ச‌ண்டைக‌ள் இடுவோம்!சீக்கிர‌த்திலேயே ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!ஆண்டுகள் புரண்டன நட்புகள் பல சேர்ந்தனர்!சிந்தனை பரிமாற்றம் பெற்றன.

புலன் உறவுமுறை !


இது வரை,  நாம் வாழ்ந்த வாழ்க்கையில் பலர்  நம்முடன் நேரடியாகவோ பழகி இருக்கலாம், சிலர்  மறைமுகமாகவோ நம்முடன்  பழகி இருக்கலாம்!

பழகியவர்கள் எல்லாம் நண்பர்களும் அல்ல

பழகாதவர்கள் எல்லாம் எதிரியும் அல்ல!

நம்முடன்  பழகியதில் நமக்கு பலர் பிடிக்காமலும் இருக்கலாம், சிலர் பிடித்தும் இருக்கலாம்!

பிடித்தவர்  நம்மை விட்டு பிரிந்தும் இருக்கலாம், பிடிக்காத ஒருத்தரிடம் நாம் பழகிக்கொண்டும் இருக்கலாம்!

நம்மை பிடித்த ஒருத்தர் தனக்கு, பிடிக்காத ஒருத்தர்  இடம் கட்டாயம் பழக  வேண்டிய சூழலும் இருக்கலாம்,

நம்ம மனசுக்குப் பிடிச்ச ஒருத்தர்,  நம்ம கிட்ட பழகாமலும் இருக்கலாம்!

சில உறவுகள்  நம்மிடம் தேவைக்காக  பழகலாம், தேவை முடிந்ததும் நகரலாம்!

அதுபோல  நாமும் சில  தேவைக்காக பிறர் இடம் பழகியும் இருக்கலாம் தேவை முடிந்ததும்  அவர்களை  மறந்தும் இருக்கலாம்!

எது எப்படியோ இன்னார்தான் வந்து நம்மிடம் வந்து பழக வெண்டும் என்பது எழுதி வைக்காத ஒரு உண்மை:-)

அதனால்,   நம்மை, தேடிவரும் உறவுக்கு ஆதரவு கொடுப்போம், ஆரோக்கியமான ஒரு  நட்பு  வட்டத்தை உருவாக்க்குவோம்!

மனித உறவுகள் இடையே மனஸ்தாபங்கள் இருந்தாலும், மறந்து விட்டு பழகுவோம்!

சண்டைகள் தவிர்ப்போம், சந்தோஷமாய் இருப்போம்!

எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொல்வோம் ஏமாற்றங்களைத் துரத்திடுவோம்!

அன்பை  அதிகரிப்போம், ஆசைகளை  ஒலித்திடுவோம்!

அப்படியே   இறுதி வரை. ஒற்றுமையாய்  இருந்துவிடுவோ

நவராத்திரி ஆரத்தி தட்டை அழகாக அலங்கரிக்க சில டிப்ஸ்...

பூக்கள்

ஆரத்தி தட்டை அலங்கரிக்க சிறந்த பொருள் என்றால் அது பூக்கள் தான். ஆகவே தட்டில் அழகான பூக்களை வைத்து அலங்கரிக்கலாம். குறிப்பாக சாமந்திப் பூ சிறந்ததாக இருக்கும்.




வெற்றிலை

 ஆரத்தி தட்டைச் சுற்றி வெற்றிலையை வட்டமாக அடுக்கி, அதில் பூக்கள் மற்றும் இதர பூஜை சாமான்களை வைத்து அலங்கரிக்கலாம். இதனால் ஆரத்தி தட்டு அழகாக இருப்பதோடு, நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.


முத்து

மற்றும் மணிகள் பெரும்பாலானோர் காப்பர் தட்டில் ஆரத்தி செய்வார்கள். ஏனெனில் அதனை பராமரிப்பு மிகவும் எளிமையானது மற்றும் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கக்கூடியது என்பதால் தான். ஆகவே அந்த காப்பர் தட்டில், முத்து அல்லது மணிகளைக் கோர்த்து கற்பனைக்கேற்ப அலங்கரிக்கலாம். இதுவும் ஒரு வித்தியாசமான தோற்றத்
பெயிண்ட்

ஆரத்தி தட்டில் விருப்பமான பெயிண்ட் அடித்து, அதில் முத்துக்களை பதித்து, விளக்குகள் மற்றும் வேண்டிய பொருட்களுக்கும் அதே நிற பெயிண்ட் அடித்து அலங்கரிக்கலாம். இதனால் விளக்கு ஏற்றும் போது, இது மிகவும் க்யூட்டாக இருக்கும்.

திங்கள், 16 செப்டம்பர், 2013

சமரன்: சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - நூல் முன்னு...

சமரன்: சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - நூல் முன்னு...: சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - முன்னுரை சமரன் வெளியீட்டகத்தின் இந்நூல் - சமரன் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான முற்போக்கு இளைஞர...

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வெகு விமரிசையாக நடைபெற்ற அரங்கேற்றம்

நோர்வே லிலேஸ்ரோம் (Liilestørm)  இசையரங்கில் நிறைந்த மக்களுடன் நடந்த எனது நண்பன் குகநேசன்னின் மகள் நீராவின்  அரங்கேற்றம்
வெகு விமரிசையாக நடைபெற்றது.
 அவர்கள் சலங்கை பூஜையை நடாத்த அரங்கேற்ற நாயகி குருவிடமிருந்து சலங்கையை பக்திபூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.
நாட்டிய கலைமாமணி திருமதி மாலதி யோகேந்திரன் நடன அமைப்பு  எழுச்சிக்கு ஈடாக இசைக்கலைமணி  Dr .  கரிகரன் சுயம்பு அவர்கள்  பாடல்களை இசைத்தார்.
நீரா  சிறு வயது முதலே சுமார் 8 வருடங்கள் பரதக்கலையை முறைப்படி கற்றுவந்த காரணத்தால் அவருடைய நடனங்கள் மிகவும் காத்திரமாகவும், சிறப்பாகவும் அமைந்திருந்தன.

பாடல்களுக்கு ஏற்றவாறு அவருடைய உடல் அசைவும், பாவனைகளும், உடல் மொழியும், கருத்துணர்ந்து முத்திரைகளும், தாளம் தப்பாத அசைவுகளும் அவையோருக்கு தொடர் மகிழ்வினை உண்டாக்கி அவை நிறைந்த கரகோஷத்தை தொடர்ந்து எழுப்பியவண்ணமிருந்தன.


நிகழ்ச்சிக்கு வந்த மக்களை வரவேற்பது, விருந்தளித்து, நல்ல அரங்கில் நிகழ்ச்சி வழங்கி கலையையும், கலைஞரையும் பெருமைப்படுத்துவதில் அரங்கேற்றத்திற்கு பக்கபலமாக நின்றஅணைத்து நண்பர்களும்  சிறந்த பணியாற்றினார்கள்.

புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் பல்வேறு நாடுகளில் இருந்தும் உறவினர்கள் வந்து அரங்கேற்ற நாயகியை இதயபூர்வமாக வாழ்த்தியது நெஞ்சை உருக்கும் நிகழ்வு.

நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து வருகைதந்த விதுவங்களின் மிருதங்கம் ,வயலின் , புல்லாங்குழல் போன்ற பாடலுக்கு பக்கபலமான இசைகருவிகளை  இசைத்தனர்.

பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கே உரிய புஸ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம்,சப்தம்  ,வர்ணம் பதம் , கீர்த்தனம்,கவடிசிந்து , தில்லானா, மங்களம் என்ற ஒழுங்கில் அனைத்து நடங்களும் சிறப்புடன் நடைபெற்றன.
நடன அரங்கேற்றம் கண்ட பல  நடன கலைகர்கள் வெளிப்பாட்டை மிகச் சிறப்பாக அரங்கப்படுத்தி இன்றைய நாளை வெற்றிநாளாக மலரச் செய்துள்ளார் என்று பிரதமவிருந்துனர் காரைக்குடி  R .கிருஷ்ணமூர்த்தி  பாராட்டினார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது மனதிற்கு பெரு மகிழ்வு தந்த நடன நிகழ்வு என்றும் கூறி, அனைத்திற்கும் காரணமான தாயார் சித்திரவை  நீண்ட நேரம் புகழ்ந்துரைத்தார்.
மேலும் ஆற்றும் இசைப்பணிகளை பெரிதும் மெச்சி, அத்தோடு அனைத்து வாத்தியக் கலைஞர்களையும் பாராட்டினா

நிகழ்ச்சியில் வரவேற்ப்புரை வழங்கிய  பிரித்தானியாவில்   இருந்து வந்திருந்த செல்வி அழகா தமிழிலும் ,ஆங்கிலமொழியிலும் வழங்கினார்

இனிய குரல்லால் செல்வி கவிதாவும் கவிப்புயல் இளவலை விஜெந்திரனும் நிகழ்வை தொகுத்து வழங்கினர். 

நிகழ்ச்சியில் உரையாற்றிய முத்தமிழ் அறிவாலய முதல்மைஅசிரியர் திரு .சிவநாதன் அவர்கள்  புலன்பெயர்நாட்டில் முத்தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் நீரா என்று புகழ்த்து வாழ்த்துமடல் ஒன்றை வாசித்து, உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீராவின் பாடசாலை ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் நாயகி நீர அழகான தமிழில் நன்றி கூறி  மங்களா நிகழ்வுடன்
விழா இனிது நிறைவடைந்தது.

மனதிற்கு மகிழ்வு தந்த அரங்கேற்றம்







சனி, 13 ஏப்ரல், 2013

உரிமை குரல் இலக்கை நோக்கி





 

 

சுதந்திர வான் நோக்கி
தனிப் பறவையாய் நான்
இணைச்சிறகடித்து பறக்கின்றேன் !

நண்பனே உன்னை  ?( என் கனவு  )

தோழனாய் சிறகாக்கி
என்றோ என்
கனவுச் சிலையில்
செதுக்கி வைத்துளேன் ..!

நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்....
உடல் வீழ்வது உறுதி........
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் தோழமை மட்டும்
எனைத் தாங்கும் தோல் கண்டால்
மீண்டும் எழுவேன்...!
வேற்றுமையில்லா  தோழமை நட்ப்பு
..!
போதுமட என் சிறகுகள் இயங்க....!

இன்று போதும் ........

உன் நன்பிக்கையான சத்தியம்
என்னோடு வா....- எம்


இனத்தின் போரொளி காட்டுறேன்!
அதுவரை உற்சாகமாய்
என் சிறகுகள் அடித்தபடி
உனக்காயே நான்...!

 

முகம் அறிய முகப்புத்தகத்தில் நட்பு தோழமை


 
இன அறியோம் !

மத அறியோம் !

மொழி அறியோம் !

ஊர் அறியோம் !

பிறப்பிடம் அறியோம் !

நட்பெனும் மொழியால் !

அனைவரும் இங்கே ஓர் தளம் !
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை தோழமை நட்பால் !
புரிந்து கொண்டோம்!

எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!

அவரவர் கருத்துக்களை
இடம் (பரி) மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !

சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்!
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

ஆண்டுகள் புரண்டன நட்புகள் பல சேர்ந்தனர்

சிந்தனை பரிமாற்றம் பெற்றன

 

சித்திரை புத்தாண்டு


 


 

நல் இரவு நேரத்தில்

மெல்ல மெல்ல அடியெடுத்து
மெல்லியலாள் சித்திரையும்


மயக்குமொரு புன்னகையுடன்
மீண்டுமிங்கே வந்திட்டாள் விஜய வருடம் !


சாதி மத மோதலில்லா
சமத்துவத்தை அரவணைக்க !

நோய்நொடி இல்லாத
வாழ்க்கையை தந்துவர !

தரணியெல்லாம் ஏழ்மையில்லாத
எம் இனத்தின் விடுதலை பெரிகிவர !

நித்தம் நித்தம் யுத்தமில்லா
நித்திரையை கொண்டுவர !

சித்திரை தமிழ்தாயே வருக -மக்களுக்கு
செழுமையான வாழ்வை தருக!


நிதமும் திடமிருப்பின்,
புன்முறுவல் நிலையாயிருப்பின்,
தினமும் எனக்கு புத்தாண்டு

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

கலை வணக்கம்









அழகான கலை விடியல்

மிதமான குளிர் காற்று

வெண்பனி மூடிய பூமி

சில்லென்று வீசும் பனிக்குளிர்

மேக திரை மறைவில் நின்று

முத்தம் கொடுக்க துடிக்கும் சூரியன்

நடை பயிற்ச்சி எடுக்கும் மக்கள்

யன்னல் ஓரமாய் தேனீர் கோப்பையுடன் .நான்

இவைகளை இரசிக்கும் என் உள்ளதமான என் மனது

உங்களுக்கு எல்லாம் எனது மனம் நிறைந்த காலை வணக்கம்

 

திங்கள், 21 ஜனவரி, 2013

http://musicmazaa.com/MMaPlayer/embedded/player.swf"> name="flashvars" value="id=bae34f14d3fb4accf9de51b05a8c1ba5&p=1">http://musicmazaa.com/MMaPlayer/embedded/player.swf
" flashvars="id=bae34f14d3fb4accf9de51b05a8c1ba5&p=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="400" height="90" name="MMaPlayer"><p> <a href="&lt;a href=" http:="">Listen">http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Neethaane+En+Ponvasantham.html?e">Listen</a> to Neethaane En Ponvasantham Audio Songs at MusicMazaa.com</a></p>