புதன், 8 ஜனவரி, 2020

உதிரும் நேசம்


/////////////////
சில பிரியங்கள்
ஏற்கப்படுவதில்லை
சில பிரியங்களை
ஏற்கமுடிவதில்லை...
அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்
ஏற்கப்படாத பிரியங்களும்
எங்கோ கைவிடப்பட்டு
காற்றில் கிடந்தலையும் நேசங்களும்
பின் என்னாகுமென்று...
ஒவ்வொரு காலையிலும்
தன் வாசலில்
பூக்களைப் பரப்பிக் கொள்ளும்
இந்த மரங்களைப் பார்க்கையில்
தோன்றுகிறது
உடைந்து போன நேசங்கள்
உதிர்ந்த பூக்களாகின்றன..
சில நேரங்களில்
கவிதைகளாகவும்படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

என்ன இருக்கிறது

புரியாத உணர்வு விடிந்தது காலை
என்னுடைய கைகளைத் தான்
வேறு யாருடைய கைகளையோப்போல
பார்க்கிறேன்.
என்னுடையதை என்னுடையதாகப் பார்ப்பதில்
என்ன இருக்கிறது

நண்பனும் நட்பும்


உறவு என்று சொல்லி உறவாட
வருபவரெல்லாம் உறவினர் ஆவதில்லை
நண்பன் என்று கூறி உள்ளொன்று வைத்து
வெளியொன்று கூறி அலைபவனும்
அவ்வண்ணம் நல்ல நண்பனுமாவதில்லை

புதன், 1 ஜனவரி, 2020

ஒரு வீட்டு கூட்டு பறவைகள்



தெருவோரம் கிடந்த சுள்ளிதடி எடுத்து
பல பின்னல்கள் சில ஜன்னல்கள்
வியர்வையிலும் முயற்சியிலும்
கூடுகட்டி வாழ்ந் சுதந்திர பறவைகள்
இந்த கூடு சொல்லும் கதைகள்  ஏராளம்

கோஷங்கள் உற்சாகங்கள்
 இந்த கூடு  எங்களுக்கென்று
அறிவுக்கு விரிவுசெய்து பறந்தன

ஓரங்க காற்று  சுழன்று வீசியது
சற்றே திசைமாறியது வரலாறு
கடல் தள்ளிய கடைசி அலை
கரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.
நாம்