திங்கள், 18 அக்டோபர், 2021

மண் சுவை





அதிகாலைப் பொழுதொன்றில்
குளிர்போர்வை உடையணிந்து
சாலையோரக் கடையொன்றில்
தேநீர் குடித்து,ருசித்த அனுபவத்தை
மீளாய்வு !

யாருமற்ற அடர்ந்த கானகத்தில்
இலையுதிர்த்த மரக்கிளையில்
மீண்டும் மீண்டும் அமர்கின்றது
பறவை

நேற்றைய சாயல்கள் மாறாத
இன்றுகளின் அரங்கில்
அதோ பார்வையாளர்
வரிசையில்
நானும் இருக்கிறேன் !

-பங்கிரையன்-