வெள்ளி, 29 மே, 2026

அக்கினிக் குஞ்சு சிறகு விரிக்கும்! -பங்கிரையான்-

 




பாயும் நினைவுகளாய்

மறைந்து கிடக்கின்றன.


வலி சுமந்த சமூகம்,
விடியலைத் தேடி ஓடும் மனிதரில்
விழுந்த காயங்கள் ஆயிரம்—
ஒவ்வொரு அடியிலும்
மௌனத்தின் சிதறல்கள்.,
மனிதன் தேடும் விடியல்
தூரத்தில் மங்கலாய் தெரிகிறது.

குரல் எழுப்பாத நெஞ்சங்கள்
காற்றில் கலந்துவிடும் போது,
நீதியின் நிழல் கூட
தன் பாதையை மறந்துவிடுகிறது.

ஆனால்—

அந்த கரும்புகையின் பின்னால்
ஒளிந்து கொண்டிருக்கும் தீப்பொறி,
ஒரு நாள் வெடித்து எழும்;
மௌனத்தின் சங்கிலிகளை உடைத்து
சத்தமாக பேசும்.
அக்கினிக் குஞ்சு 
சிறகு விரிக்கும்!

அப்போது,
யுகத்தின் காவலகம்
அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து
உண்மையின் வெளிச்சத்தை
மீண்டும் காக்கத் தொடங்கும்.
 -பங்கிரையான்-

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

ஓசைகளும் எழுச்சியும் -பங்கிரையான்-

 உளியின் ஓசை

சிலையின் எழுச்சி!


அலைகளின் ஓசை

கடலின் எழுச்சி!


சலங்கை ஓசை

நாட்டிய எழுச்சி!


அருவியின் ஓசை

நீரின் எழுச்சி!


பண்களின் ஓசை

இசையின் எழுச்சி!


சொற்களின் ஓசை

மொழியின் எழுச்சி!


மழலையின் ஓசை

இனிமையின் எழுச்சி!


எழுசீர் ஓசை

இலக்கணத்தின்  எழுச்சி!
 -பங்கிரையான்-

இருளுக்குள் வெளிச்சம்

 ஒளியின் அங்கலாய்ப்புகளில்

போதிய அளவிற்கு 

வெண்மை நிறமாக தோற்றமளிக்கும் 

இரவின் கூர் அந்தகாரம் 

  மனதை ஆற்றுப்படுத்துகிறது....!

 -பங்கிரையான்-

சமூக காட்சி -பங்கிரையான்-

 யுத்தத்தின் முடிவில் 

குழும தலைமை சொல்லாத 

வார்த்தைகள் சொன்னதாக பேச்சு !


தேர்வானவர்கள் என்று 

தேர்வு செய்த சொற்களை 

தேர்ந்தவர்கள் தெரிவு செய்து 

தேய்ந்த  போனவர்களை 

வியபரிக்கும்  தேர்வு பெற்றவர்கள் 

இன்  யுகத்தின் அங்கத்தவர்கள் !


முன்னாள் கவசங்கள் 

முகம் காட்டுவதில்லை 

காலம்  கடந்தது அவர்களுக்கு 

தெரியப்போவதில்லை!

உறையில் உறங்குகின்றது 

கவனமாகவே ஆயுத ஆயுள் 

இரவு பகல் புரியாமல் 

யாருக்கும் புரியப்போவதில்லை !


கூர்மை  குறிப்புடன் 

தன் பறந்தலை செய்கிறது 

எதிர்காலத்து பறவை

இணையே இல்லாத

 சிறப்பாளர் மத்தியில் 

 உலகம் ஒன்றுதான் 

உணர்ந்து கொண்டால் 

அனுபவம் கோடி ...!

 -பங்கிரையான்-

தெரியாத ஒன்று

 இருளின் மொழியில்  …..

ஏதோ உரையாட  செல்கின்றன  

 நுண்கதையாடலை

அறியப்படாத புலத்திலிருந்து

எனக்கு 

தெரியாது என தெரிந்ததால்

                                                                          -பங்கிரையான்-