
நீ மறைய
நினைவுகள் மட்டும் வளரும்.
வெட்டிய மூங்கில் மூட்டில்
வெடித்தெழும் முளைகள் போல.
நினைவுகளின்
மெழுகு வெளிச்சத்தில்
குளித்துக் கரையேறுகின்றன
இரவுப் பொழுதுகளின் இனிப்புத் தட்டுகள்
இப்போதென்
இதயத்தின் இயங்கு தசைகளுக்குள்
இளைப்பாறிக் கிடக்கிறாய் நீ
இன்னுமொரு காலை விடியும்,
நீ
இல்லை என்பதைச் சொல்ல.
இன்னுமொரு இரவு வரும்
உண்மையை செரித்து உறங்கிட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக