வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

மீண்டும் வருமா வசந்தம்?


முடிந்த அத்தியாயத்திற்கு முகவுரை தேடுகிறேன்...
விடிந்த இரவுக்கு விளக்கேற்ற விழைகிறேன்..!
பட்டமரத்தில் பசுந்தளிர் தேடுகிறேன்..!
அணைந்த நெருப்பில் குளிர்காய முயல்கிறேன்..!
விரிசல் கண்ணாடியில் ஒற்றை உருவம் தேடுகிறேன்..!
ஓட்டைப் பானையில் நீர் நிரப்ப முயல்கிறேன்..!
வாடிய மலரில் வர்ணம் தேடுகிறேன்..!
சிந்திய கண்ணீரை சேகரிக்க நினைக்கிறேன்..

தமிழ் கவி இயற்றினேன் !


சிந்தையில் சுரந்த தமிழால் 
கற்பனை ஊறியது என்னுள்
முத்தமிழ் என்னுள் மூண்டதுமே
ஒளிர் விட்ட்து  தமிழ்
வாழிய தமிழ் வாழிய
தமிழ் வாழிய வாழியவே ! 

பகலும் இரவும் சேரும் அந்த மயக்கம் தரும் மாலை நேரம்

இருளின் ஆக்கிரமிப்பு 
ஒதுக்கப்படும்  பகலவன்.
வெண் பனி மூடிய சாலை 
வழுக்கும் பனியில் 
சறுக்கி செல்லும் 
சிதறிய  மக்கள்
கரையும் நாட்கள்
 உறைந்து கொண்டிருக்கும் -மனம் !

முத்தமிழ் அறிவாலயமும் தமிழர் திருநாளும் ...!


இவர்கள் 'சேற்றில் ' கை வைத்தால்தான் நாம்
'சோற்றில் ' கை வைக்க முடியும்.
யார் இவர்கள்  என்ற வினாக்களுக்கு
முத்தமிழ் அறிவாலய மாணவர்களின்  ஆராய்ச்சியும்ஆதரபுர்வம்மான சேகரிப்பும் கொண்ட கண்காட்சி மனதை கவரும்வண்ணம் அமைந்தது 
   

உழவர் பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள்;
அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான்... பொங்கல் திருநாள்.
பொங்கல் விழா என்று பெயர் வந்தது ஏன் ? இது ஒரு சமுதாயத்தினர் கொண்டாடும்விழாவா ? அல்லதுமதம் சார்ந்த பண்டிகையா ? சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாதான் இந்தப் பொங்கல் விழாவா? என்றெல்லாம்வினாக்கள் வினாக்களும் விடைகளும்  கண் முன்விரித்து காட்டினார்கள் முத்தமிழ் அறிவாலய மாணவ செல்வங்கள்
 

மாணவர்களுக்கான கோலம் போடும் முறைகளும்   பெற்றோர் களினால் பயிற்சியளிக்கப்பட்டது


மனத்தை அதிரவைக்கும்  மாணவர் செல்வங்களின்உரைகள்


உழவர் தினம் எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும். இந்த வேளாண்மை அனைத்து தரப்புமக்களுக்கும் பொதுவானது என்ற ஆதாரங்களை முன் வைத்து உரையாடினார்கள் எத்தனைப் பொங்கல்காலத்தை  நாம் இந்தத் தமிழ்க்குடிகள் பார்த்திருக்கும்? இந்த புலன்பெயர் மாணவர்களை எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது.
 'மொழிச் செல்வம் கோழைபடாது '
என்ற கொள்கையே இத் புலன் பெயர் தமிழ்ச் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது.

இல்லங்கள் இணைந்து, உள்ளங்கள் இணைந்து, ஊர்கள்இணைந்து,ஒரு சமுதாயமாக ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன

இந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று  என்ற அடையாளம் காட்டும் வர்ணத்தில்  காட்சி வழங்கள்  அமைந்தது 
பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும்போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்த சமுதாயத்தைக் கட்டிக் காக்கும்அரணாக ஆகிவிடுகிறது.
இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா!
இதனை வடிவான முறையில்  அமைத்தார்கள் பாடசாலை  ஆசிரியர்களும் நிர்வாக குழுக்களும்

இந்தப் பொங்கல் விழாக்காலம் தமிழ்ச்சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தைஒருங்கிணைக்கும் நல்விழாவாக, வேளாண்திருக்காலமாக இருப்பது எவ்வளவு பொருத்தமான ஒன்று;எவ்வளவு அறிவார்ந்தசெயல் அது!

அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப் பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாகமுற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது எத்தனை அறிவார்ந்த பொருத்தமானசெயல்!.

ஒளவைப்பிராட்டியார் 'இளவரசே வாழ்க பல்லாண்டு! 'என்று வாழ்த்தவில்லை!

அரசே உன் 'வரப்பு உயர்க '! என்று வாழ்த்தினார். ஏன் ?

வரப்புயர நீருயரும்!

நீருயர நெல்லுயரும்!

நெல்லுயுர குடியுயரும்!

குடியுயர கோனுயர்வான்!.
என்ற கருத்துக்கு அமைய இந்த விழா அமைந்தது !


நண்பர்கள் ஒன்று சேரும் நல்லதோர் பேருந்து பயணம்....!

பாதி வாழ்க்கை கடந்த பின்னும்
 கலையாத பள்ளிகுடா  நடப்பு கனவு 
பலநேரம் தோள் கொடுத்தத பரிவாய் உறவு !

இன்பம் வந்து இருந்த போதும்
 துன்பம் வந்து தொலைத்த போதும் 
இரண்டிலுமே பங்கு கொண்டு 
இதமளித்த பாடசாலை  நினைவுகள்........ !

காலம் பல கடந்த பின்னும்
காட்சிகளை தொலைக்கவில்லை 
இனிய பல நட்புக்காலம்
 இன்னமும் நாம் மறக்கவில்லை ..........!

நாளை நம் தலைமுறை பாடும் ... 
பாடசாலை தோழமை என்பது இதுதான் 
நண்பா நாங்கள் தான் 
நடப்பு என்பதும் இதுதான் அதுவும் நாமே  !

வெள்ளி, 16 ஜனவரி, 2015

அறைகூவல்


விளம்பரங்கள் என்னை 
துரத்துகின்றன
என்னை பற்றி 
அதில் எதுவும்மில்லை !

உற்றுப் பார்த்தேன்
என்னுள் 
கனவுகளின்
கடைசி  நிஜத்தை
ஏமாற்றம் ...................?

துணிவில்லா கேள்வி !


உனக்கு என்னை பற்றிய
கேள்விகளும்
எனக்கு உன்னை பற்றிய
கேள்விகளும் ஏராளம்
அத்துணை கேள்விகளும்
நம் முன் பரப்பி வைத்திருந்தும்
கேட்க துணிவில்லை
உனக்கு !

பதில் கிடைக்காமல்
எப்போதும் போல் கேள்விகள்
மட்டும் வினா குறி போல்
தொக்கி நிற்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியில் !

எனக்குள் வரும் கேள்விகளுக்கு
எனக்கெல்லாம் தெரியும்டி
என்கிற உன் திமிர் !

உனக்குள் வரும் கேள்விகளுக்கு
மறைப்பது எல்லாம்
மன்னிக்க மாட்டேன் எனும்
ஆணவம் தடுக்கும்

ஆனாலும் எப்போதும்போல்
பேசிகொள்வோம் சர்க்கரையாக
மனத்தினும் மட்டும் அக்கறையாக
கேள்விகள் திரும்ப திரும்ப ஒலிக்கும்
விடை தெரியாமல்....................????????

என்ன நினைத்தோமோ அது நடந்துள்ளது!

பெருஇனவாத  சிங்கள இன மக்கள் மத்தியில் செல்வாக்கு வாக்குகள் இருந்தாலும், வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கின்ற சிறுபான்மை மக்களான தமிழ் , முஸ்லிம்கள்லே 
 ராஜபக்சேவுக்கு தங்களின் முழு எதிர்ப்பையும் காண்பித்து வட ,கிழக்கு மாகாண மக்கள்  ஓட்டளித்துள்ளதால் அவர் தோல்வியை சந்தித்திருப்பதாக அங்கிருந்து அலசும் அரசியல் ஆய்வு தெரிவிக்கிறது. 
கடந்த 2010–ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜபக்சே 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகள் வாங்கி இருந்தார். இந்த தடவை அதில் சுமார் 2½ லட்சம் வாக்குகளை பறி கொடுத்துள்ளார்.

இந்த 2½ லட்சம் வாக்குகளுடன், தமிழர்களும், முஸ்லிம்களும் எதிர்த்து வாக்களித்ததால் அவர் 4½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டுள்ளது.
யாராக இருந்தாலும் சரி, ஒருவர் மனிதநேயத்துக்கு விரோதமாக, ஒரு இனத்தை அல்லது சக தோழர்களை  அடிமைபடுத்தி அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அவர்களை நிச்சயம் மக்கள் தோற்கடிப்பார்கள் என்பதை சரித்திரம் மறுபடியும் மறுபடியும் நமக்கு நினைவூட்டுகிறது என்று தெரிகின்றது

ராஜபக்‌ஷ சகோதரர்களைத் & Co தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது.

                    ஆனால், இதன் அர்த்தம் 
  1)  தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல.

  2) தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். 

3) மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. 

மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை.

 தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரிக்கு ஆதரவாகவே விழும்.
இன்று எமது தமிழ் மக்கள் தங்களுக்கான ஐ னநாயகத்தை கையில் ஏந்தி உள்ளார்கள் தங்கள் உரிமை போராட்டத்துக்கான இன்னும் ஒரு படி முன் வைத்துள்ளார்கள் 

தமிழ் கவி இயற்றினேன் !

சிந்தையில் சுரந்த தமிழால் 
கற்பனை ஊறியது என்னுள் 
முத்தமிழ் என்னுள் மூண்டதுமே 
ஒளிர் விட்ட்து  தமிழ் 
வாழிய தமிழ் வாழிய 
தமிழ் வாழிய வாழியவே !

பகலும் இரவும் சேரும் அந்த மயக்கம் தரும் மாலை நேரம்


இருளின் ஆக்கிரமிப்பு 
ஒதுக்கப்படும்  பகலவன்.
வெண் பனி மூடிய சாலை 
வழுக்கும் பனியில் 
சறுக்கி செல்லும் 
சிதறிய  மக்கள்
கரையும் நாட்கள்
 உறைந்து கொண்டிருக்கும் -மனம் !

வியாழன், 6 நவம்பர், 2014

உதவிக்கு உதவி தேவை "மறைந்து போன மலையக மக்களுக்கு "

இலங்கை வரலாற்றில் மலையாக மக்கள் ஒரு பாரிய சக்தி என்றே சொல்ல வேண்டும்.
தோட்ட வீடமைப்பில் உள்ள குறைபாடுகளே பதுளை மாவட்ட கொஸ்லந்தை நிலச்சரிவின் போது அதிகமான லயன்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த லயன்களில், மோசமான சூழ்நிலையில்  தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்ததை பல மலையக ஆய்வாளர்களும்,  மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கிறார்கள்.
இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, அபாயப் பகுதியாக முன்னரேயே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் மக்கள் வசித்ததற்கு, அவர்களுக்கு வேறு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாமையே காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் இந்திய வம்சாவளிகள் என்பதனால் அரசு இம் மக்களை இது வரைக்கும் சரியான முறையில் கையாளவில்லை என்ற பாரிய மறைமுகமான கேள்வி ஒன்று எழுகின்றது.
இந்த மக்களின் பிரச்சனை இன்று நேற்றல்ல இவர்கள் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது.
இந்த மக்களின் பாரிய மனை பிரச்சனைக்கு ஒரு தீர்வு எடுப்பதற்கு இன்னும் அரசுக்கு நேரம் கிடைக்க வில்லை என்பதே உண்மை.
காரணம் இவர்களை வைத்து அரசாங்கம் புழைப்பு நடத்துவது இந்த மக்களுக்கு தெரியாதான் காரணமே.
இன்று இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் ஏற்றுமதி துறையில் பாரிய பணத்தை சம்பாதிக்கும் ஒரே இடம் மலையகம்.
அரசுக்காக உழைத்து தேய்ந்து போன இம் மக்கள் ஒரு காலமும் தங்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை .
அது போன்று அரசாங்கமும் இவர்களை அடிமை போன்றே பார்த்து வந்துள்ளது .
தற்போது அரசியல்வாதிகள் கூறுகின்றனர் அவர்களுக்கு ஏற்கனவே வேறு இடத்துக்கு செல்லும் படி கூறியதாக கூறுகின்றனர் .
இன்று இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார சக்தியாக இருக்கும் மக்களுக்கு சரியான மனை ஏற்பாட்டை செய்து கொடுக்க வேண்டிய அரசு, அவர்களை கைவிட்டதன் விளைவே இது .
அது போன்று கல்வி வளர்சியிலும் இன்று நல்ல நிலையில் உள்ள மக்கள் ஏன் இதுவரைக்கும் மாயஜால அரசியல்வாதிகளை நம்புகின்றார்கள் என்பது புரியவில்லை .
இன்று மிருகங்களுக்கு இருக்கின்ற மதிப்பு கூட மனிதர்களுக்கு இல்லாமல் போகும் நாடாக இலங்கை மாறி வருகின்றது.
இனி வரும் காலங்களில் இந்த மக்கள் தாங்கள் ஏமாறும் மக்களாக இல்லாமல் சிந்திக்க கூடிய மக்களாக மாற வேண்டும் .
தற்போது அனர்த்தம் வந்ததும் ஓடி வரும் அமைசர்களை சரியான மரியாதை கொடுத்து திருப்பி அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு அரசியல்வாதிகளையும் சிந்திக்க வைக்க வேண்டும் உழைத்து தேய்ந்து போன மக்களுக்கு சொந்த வீடு இல்லை.
உழைக்காமல் அரசியல்வாதி என சொல்லும் சொம்பரிகளுக்கு ஆடம்பர வீடு, அடுக்கு மாடி, வெளிநாட்டு வங்கிகளில் பணம், சொகுசு வாகனம், மனிதர்களை வித்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளே இது உங்களது குடும்பத்துக்கு நடந்தால் எப்படி இருக்கும் .
இவர்கள் உங்களை கடவுளாக மதிக்கின்றறாக்கள் ஆனால் நீங்கள் அவர்களை அவமதிக்கின்றீர்கள்.
இன்று நீங்கள் வெளிநாடுகளில் சென்று எம்மிடமும் பாரிய ஏற்றுமதி உள்ளது என்று பேசுவதற்கு இவர்களே காரணம்.
இது போன்ற சம்பவங்களுக்கு அரசியல்வாதிகளை விட இந்த மக்களின் தவறே காரணம் .
உங்களது கிராமங்களில் உங்களுக்கு உண்மையாக பணியாற்ற மனித நேயம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்தல் உங்களது கஷ்டம் அவர்களுக்கு புரியும்.
இன்று இந்த துன்பகரமான சம்பவம் இனி மேலும் நடக்காமல் இருக்க வேண்டுமாயின் உங்களது கோரிக்கைகள் சரிவரும் வரைக்கும் உங்களது தொழிலை புறக்கணியுங்கள்.
தமிழ் இனம் இன்னும் எதனை நாட்களுக்குத்தான் அடிமை வாழ்க்கை வாழ்வது

கொஸ்லந்த...!

இது மனித உடல்களுக்கான தேடல்
அங்கே தோண்டப்படுவது,

நாம் குடிக்கும் இரத்த நிற சாயல் தேனீரின் 
உர்மையளர்கள் !

திங்கள், 20 அக்டோபர், 2014

மீன் பாடும் தேன் நாடு

போரில் தோற்ற சடலங்கள்
கடலில் தூக்கியெறியப்பட்டன.
சலனமற்ற நீர் எதையும் கழுவுவதில்லை.
கடலடியில் ஆவிகள் இன்னமும் அமைதியின்றி அலைகின்றன.
கடலலைகளின் இடைவெளியில் கேட்க முடிகிறது
எம் போராளிமக்களின்  குரலை !

ஏற்கமறுக்கும்பயணம்

இரத்த கறை படிந்த
நினைவுகளைமறைத்து
கருப்பு கம்பளத்தால் போர்த்த
சாலையில் மேல் ஏக்கத்துடன்
பயணிக்கின்றேன் !

திரும்பிய திசையெல்லாம்
திட்டுதிட்டாய் வலிகளின் ஞாபகக் கறை ... !

நான் செவிக்கும் இசையெல்லாம் கேட்கிறது
தமிழ் இனத்தின் வறுமை குரலாய் ... !

இதயம் துடிக்க மறுத்தும் ..
கண்ணீர்தீர்ந்து இரத்தம் கசிந்தும் !

வாழவேண்டும் என்று ...
யசிக்கின்ரர்கள்இன்னும் சில காலம் .. !
எம் இனம்  எம் மக்கள் எம் மொழி .

இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.


மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்

நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.


திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.


பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.


ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே

நேசிக்கிறேன்.


நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.


என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.



அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.


ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.


என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.


நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.


வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.


நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.


நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.


உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை

நினைத்தேன்.


‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே

புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.


அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.


எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.


ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.


உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.


இது இருதயத்திற்கு ஆகாதே.


நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.


ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.


இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.


நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.


உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.


ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.


உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.


உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.


"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்

சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.


மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.


இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.


நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?


‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ

துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.


மழை வந்தது.

நின்று விட்டேன்.


என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.


ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?


இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?