ஞாயிறு, 8 மே, 2022

தொடர்வண்டி

 



எந்தவொரு புள்ளியிலும்
சந்திக்காத தண்டவாளம் 
இரு உணர்வுகளை 
தங்கி பயணிக்கின்றது 
இந்த தொடர்வண்டி  

பயணங்கள் புதுசு அல்ல 
 நினைவுகள் புதிசானாவை 
புறம் பார்க்கும் காட்சி
அகம் காணும் கனவு 
தினமும் பல நினைவுகளை 
சுமந்து செல்கின்றது 

பல நிற மனிதர்களின் 
எதிரும் புதிரும் இருக்கும் 
மனிதர்களை மறந்து 
 இரயிலை விட வேகமாய்
போகிறது உரையாடல் 
 
கண்பார்த்து 
காத்திருந்தது 
மனம் 
எதற்கு
காத்திருக்கிறேன் என்பது
மறந்துப் போய் விட்டது

நான் அடையவேண்டிய 

தரிப்பிடம் தாண்டிவிட்டது .

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

இயற்கை





இளவேனி சீதளக்காற்று
குயில் தரும் இசை
மதிமயக்கும் உணர்வு
இதெல்லாம் தரும்
இயற்கை வனம்

 

மூடுபனியில் மூச்சுவிட்டு
ஓடைகளாக ஓடும் நதியின் ஓசை
நங்கை போல் நாணம் கொள்ளும்
தளிர்க்கும் நாற்று

 

சாரலின் ஈரத்தில் மொட்டு விடும்
பூக்களில் சுவாசக் காற்று
நகரம் போல் காட்சி படுத்தும்
நடைபயணம் செல்லும் மனிதர்கள்

 

எனது நாட் குறிப்பின் வெற்றிடத்தில்
வண்ணாத்தி பூச்சிகள் சிறகடிப்பு
யார் கண்ணும் படாமல்
என் கண்ணும் எதையோ தேடின
இயற்கை காற்று சுவாசங்களுடன்
உணர்வுடன் உறவுகொண்டன
பசுமையின் பிடியில் மனிதன் !

 

-பங்கிரையான்-

திங்கள், 14 மார்ச், 2022

பிறந்தநாள்



அரும்புதல் எப்போதும் அழகானது
பூக்களின் மென்மையில்
பூரிக்காதவர்கள் இருப்பது கடினம்...
மனிதனின் பிறப்பும்
மலரின் அரும்புதல் போல்தான்...
ஆனால்
மழலையாய் இருக்கும்போது மட்டுமே
மென்மையாய் இருக்கின்றோம்.
வளர்ச்சியின் வேகத்தில்
மென்மையை இழக்கின்றோமா?!...
மறக்கின்றோமா?!...
எதுவோ ஒன்று...
ஆனால்
நாம் இறுகிப்போகின்றோம்..
காலவெள்ளத்தில் சிக்கிய
கல்லாக இறுகிப்போகின்றோம்...
காற்றின்
வேகத்தில் சிக்கி தவிக்கும்
இலைகளாக கிழிபடுகின்றோம்...
சில வேளைகளில்
திசைமாறும் சிறு இலையாய்
வாழ வழிதெரியாது தவிக்கின்றோம்...
கிழிந்துபோன, இறுகிப்போன
இதயங்களும்
மீண்டும் புதுமலராய்
பூரிக்கத்தான் செய்கின்றது...
பூக்களின் இதழ்களின் மென்மையை
உணரத்தான் செய்கின்றது...
நம்பிக்கையின் ஆணிவேர் கூட
புதிதாய் நெஞ்சில்
துளிர்க்கத்தான் செய்கின்றது...
வருடம் ஒருநாள் வரும்
பிறந்த நாளில்!...

திங்கள், 7 மார்ச், 2022

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க துடிப்பது ஏன்? - ஒரு பின்புலப் பார்வை


1990கள் வரை யுக்ரேன் சோவியத் ஒன்றியத்தின் ஓர் உறுப்பு நாடாகத்தான் இருந்தது. அதற்குப் பின் சோவியத் சிதைந்தபோது, சுதந்திரம் பெற்று தனி நாடாக தங்களுக்கென புதிய அரசமைப்புச் சட்டத்தோடு செயல்பட்டு வருகிறது.
மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது
இப்போதும் யுக்ரேன் தன் எல்லைகளை ரஷ்யாவோடும், ஐரோப்பிய ஒன்றியத்தோடும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் கலாசார ரீதியிலும் சமூக ரீதியிலும் ரஷ்யாவோடு பல தொடர்புகளைக் கொண்டுள்ளது உக்ரைன்.
இப்போதும் ரஷ்ய மொழி பேசுவோர் கணிசமாக உக்ரைனில் வாழ்ந்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் வளரும் நாடு உக்ரைன். மனித ஆற்றல் வளர்ச்சியில் உலகத்தில் 74-வது இடத்தில் இருக்கிறது. வறுமையும் ஊழலும் அதிகம். வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது. ராணுவ பலத்தில் ரஷ்யா, பிரான்சுக்கு அடுத்து வருகிறது. குடியரசு நாடு, அதிபர் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறை நிலவுகிறது.
ஆனால் உக்ரைனை மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர். தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவப் பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வுக் கலாச்சாரம், பொழுதுபோக்குகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர்கள் பழைய சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பெட்டியான வாழ்க்கை முறையிலிருந்து சுதந்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றனர். ஒன்றியம் என்ற வார்த்தையே அர்த்தமற்றுப் போன பிறகு மீண்டும், ரஷ்யாவின் பிடிக்குள் வாழ அவர்கள் அஞ்சுகின்றனர்.
2014ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபர் விக்டர் யனுகொவிச் (Viktor Yanukovych) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், யுக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா. மேலும் கிழக்கு யுக்ரேனில் கணிசமான பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது ரஷ்யா. இது தான் ரசோ - யுக்ரேனியன் (Russo-Ukrainian) போராக உருவெடுத்தது.
பிரிவினைவாதப் போராளிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையிலான போரில் இதுவரை 14,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்போதும் போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனால், அமெரிக்கா இதை வேறு விதமாக அணுகியது.
அதிபர் விக்டர் யானுகோவிச், ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார்’ என்று பிரச்சாரம் செய்தது. கடந்த காலங்களில் பல நாடுகளில் அமெரிக்கா உருவாக்கிய ‘மக்கள் புரட்சி’ உக்ரைனிலும் வெடித்தது. அதிபர் விக்டர் யானு கோவிச் பதவியை விட்டு அகலவேண்டியதாகி விட்டது. அமெரிக்காவின் கைப்பாவையாக விளாதிமிர் ஜெலனஸ்கீ அதிபராக்கப்பட்டார்.
இங்கே ஒரு சோறு பதமாக ஒரு வரலாற்றுச் சம்பவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
‘ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் அந்நாட்டின் அதிபர் சதாம்உசேன்’ என்று குற்றம் சாட்டின அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள். அவற்றின் நேட்டோ படை, ஈராக் மீது போர் தொடுத்தது. ஈராக் அழிந்தது. எல்லாம் முடிந்தபிறகு, அந்நாட்டில் ரசாயன ஆயுதங்கள் இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதை அமெரிக்காவும் அந்த சில ஐரோப்பிய நாடுகளுமே ஒப்புக்கொண்டன.
உக்ரைனில் என்ன நடக்கிறது?
இப்போது உக்ரைன் விவகாரத்துக்கு மீண்டும் வருவோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்தது உக்ரைன் நாட்டின் புதிய அரசு. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உற்சாகத்துடன் ஆதரவு தெரிவித்தன.
சோவியத் யூனியன் இருந்தபோது தனது ஆதரவு நாடுகளுடன் இணைந்து வார்சா( வார்சா உடன்பாடு (Warsaw pact) கம்யுனிச கொள்கையினை பின்பற்றிய எட்டு நாடுகள் ஒன்றிணைந்து தங்களுக்குள் செய்து கொண்ட ஒரு பாதுகாப்பு ஒப்பந்தமாகும். இது சோவியத் ஒன்றியத்தின் ஒரு முனைப்பாகும். இது நேச நாடுகளின் நேட்டோ என்னும் ஒப்பந்தத்திற்கு எதிராக செய்துகொள்ளப்பட்டதாகும். இதன் உறுப்பு நாடுகளாக அல்பேனிய மக்கள் குடியரசு, பல்கேரிய மக்கள் குடியரசு, செகஸ்லோவாக்கிய குடியரசு, ஜெர்மானிய சனநாயக குடியரசு, ஹங்கேரிய மக்கள் குடியரசு, போலான்ட் மக்கள் குடியரசு, ரோமானிய மக்கள் குடியரசு, சோவியத் ஒன்றியம் ஆகியவை இருந்தன.)என்ற அமைப்பை ஏற்படுத்தியது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்த அமைப்பு சிதறியது.
அந்த காலகட்டத்தில், 1990களில் சோவியத் அதிபராக இருந்த மிஷைல் கோர்பச்சேவிடம் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன், “எங்களது நேட்டோ ராணுவக் கூட்டமைப்பை விரிவாக்க மாட்டோம்” என்று உறுதிமொழியை அளித்தார்.
அதாவது, சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளை நேட்டோ ராணுவ அமைப்பில் சேர்ப்பதில்லை என்பதுதான் அந்த உறுதி மொழி. இது, 1994ஆம் ஆண்டு புடா பெஸ்ட் குறிப்பாணை மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதற்குக் காரணம் ராணுவ சமநிலை இருந்தால்தான் உலகில் அமைதி நிலவும் என்பதுதான். ஆனால். தாங்கள் அளித்த உத்திரவாதத்தை அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் மதிக்கவே இல்லை. சோவியத் அமைப்பைச் சார்ந்த பல நாடுகளை – ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி - நேட்டோவில் இணைத்தது அமெரிக்கா. இதனால் நேட்டோ படைகளும், ராணுவ தளங்களும் ரஷ்யாவைச் சுற்றி அமைக்கப்பட்டன. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏவுகணைகளை, பொத்தானை அழுத்தி மிகச் சில நிமிடங்களில் ரஷ்யாவைத் தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட முடியும்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்ன?
ஆனால், அமெரிக்கா இதை வேறு விதமாக அணுகியது. ‘அதிபர் விக்டர் யானுகோவிச், ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார்’ என்று பிரச்சாரம் செய்தது. கடந்த காலங்களில் பல நாடுகளில் அமெரிக்கா உருவாக்கிய ‘மக்கள் புரட்சி’ உக்ரைனிலும் வெடித்தது. அதிபர் விக்டர் யானு கோவிச் பதவியை விட்டு அகலவேண்டியதாகி விட்டது. அமெரிக்காவின் கைப்பாவையாக விளாதிமிர் ஜெலனஸ்கீ அதிபராக்கப்பட்டார்.
இங்கே ஒரு சோறு பதமாக ஒரு வரலாற்றுச் சம்பவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்
‘ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் வைத்திருக்கிறார் அந்நாட்டின் அதிபர் சதாம்உசேன்’ என்று குற்றம் சாட்டின அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள். அவற்றின் நேட்டோ படை, ஈராக் மீது போர் தொடுத்தது. ஈராக் அழிந்தது. எல்லாம் முடிந்தபிறகு, அந்நாட்டில் ரசாயன ஆயுதங்கள் இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதை அமெரிக்காவும் அந்த சில ஐரோப்பிய நாடுகளுமே ஒப்புக்கொண்டன.
உக்ரைனில் என்ன நடக்கிறது?
இப்போது உக்ரைன் விவகாரத்துக்கு மீண்டும் வருவோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, நேட்டோ அமைப்பில் சேர முடிவு செய்தது உக்ரைன் நாட்டின் புதிய அரசு. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உற்சாகத்துடன் ஆதரவு தெரிவித்தன.
சோவியத் யூனியன் இருந்தபோது தனது ஆதரவு நாடுகளுடன் இணைந்து வார்சா என்ற அமைப்பை ஏற்படுத்தியது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்த அமைப்பு சிதறியது. அந்த காலகட்டத்தில், 1990களில் சோவியத் அதிபராக இருந்த மிஷைல் கோர்பச்சேவிடம் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன், “எங்களது நேட்டோ ராணுவக் கூட்டமைப்பை விரிவாக்க மாட்டோம்” என்று உறுதிமொழியை அளித்தார்.
அதாவது, சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளை நேட்டோ ராணுவ அமைப்பில் சேர்ப்பதில்லை என்பதுதான் அந்த உறுதி மொழி. இது, 1994ஆம் ஆண்டு புடா பெஸ்ட் குறிப்பாணை மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதற்குக் காரணம் ராணுவ சமநிலை இருந்தால்தான் உலகில் அமைதி நிலவும் என்பதுதான். ஆனால். தாங்கள் அளித்த உத்திரவாதத்தை அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் மதிக்கவே இல்லை. சோவியத் அமைப்பைச் சார்ந்த பல நாடுகளை – ரஷ்யாவின் கடும் எதிர்ப்பை மீறி - நேட்டோவில் இணைத்தது அமெரிக்கா. இதனால் நேட்டோ படைகளும், ராணுவ தளங்களும் ரஷ்யாவைச் சுற்றி அமைக்கப்பட்டன. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏவுகணைகளை, பொத்தானை அழுத்தி மிகச் சில நிமிடங்களில் ரஷ்யாவைத் தாக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட முடியும்.
அமெரிக்கா –சோவியத் யூனியன் இரண்டும் சம பலம் பொருந்திய நாடுகளாக இருந்தன. சோவியத் வீழ்ந்தவுடன், உலகின் ஒரே ஆளுமையாக அமெரிக்கா தன்னைக் கருதிக்கொள்கிறது. அதை உறுதிப்படுத்த - சோவியத் யூனியன் சிதறிய பிறகும் பெரிய நாடாக இருக்கும் - ரஷ்யாவை வீழ்த்த தொடர்ந்து திட்டமிட்டுவருகிறது.
அதன் ஒரு பெரும் திட்டமாகவே, தனது வாக்குறுதியை – உறுதி அளிப்பை மீறி, முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோ ராணுவ அமைப்பில் இணைத்துவருகிறது. இப்படிப் பல நாடுகளை இணைத்த பிறகு தற்போது உக்ரைனையும் இணைக்க ஏற்பாடு செய்து வருகிறது.
அமெரிக்கா கால்வைத்த நாடு அழியும் என்பது வரலாறு. குறிப்பாக சோவியத் வீழ்ந்த பிறகு, அமெரிக்கா தடி எடுத்து பாய்ந்த ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகியவை உதாரணங்கள். சோவியத் யூனியிலிருந்த பிரிந்த நாடுகளையும் அமெரிக்கா விட்டு வைக்கவில்லை. 2003இல் ஜார்ஜியாவில் ரோஸ் புரட்சி, 2004இல் உக்ரைனில் ஆரஞ்சு புரட்சி, 2005இல் கிரிகிஸ்தானில் டுலிப் புரட்சி.. இப்படி பல நாடுகளில் மறைமுகமாக ஆதிக்கத்தை செலுத்த சதி செய்தது.
தாங்கள் அளித்த உறுதிமொழி, ஒப்பந்தத்தை மீறி முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோவில் சேர்க்கிறது அமெரிக்கா. அந்த வரிசையில் உக்ரைன் நாட்டையும் குறிவைத்து விட்டது. ஆக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சதியே இன்றைய உக்ரைன் பதற்றத்துக்கு காரணம் என்று கருத இடமிருக்கிறது!
தொடர்ந்து இந்த விடியோவை பாருங்கள்
https://youtu.be/If61baWF4GE

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

வியட்னாம் கு-ச்சி (cu chi )சுரங்கப்பாதை


நாங்கள் எங்கள் பயணத்தை வியட்னாம் ஹோ சி மின் (HO CHI MINH ) நகரத்தில் தொடங்கினோம். முதல் நாள் போர் நினைவு அருங்காட்சியம் போரின் அவலங்களை எங்கள் கண் முன் கொண்டு வந்தது. அந்த போர் அருங்காட்சியகங்கள் சென்றவுடன் முதலில் பார்த்தது அமெரிக்க இராணுவப் படைகள் விட்டு சென்ற போர்க் கருவிகள், ஆயுதங்கள் போரை நினைவுப்படுத்திய அவற்றைப் பார்த்தபடியே உள்ளே சென்றோம்.
போர் எவ்வளவு கொடூரமானது என்பதை அங்கிருக்கும் புகைப்படங்கள் என் விழிகளில் வெதும்பின . மனதில் பல கேள்விகள் கேட்டவாரே கு-ச்சி சுரங்கபாதை (Cu Chi Tunnel) உள் சென்றோம். அங்கே மனம் நெகிழவைத்த விடயம் ஒற்றுமையும் ஒன்றிணைப்பும் ஒன்றிணைந்த உருவாக்கப்பட இந்த சுரங்கம்தான் இவர்களின் வெற்றிக்கு மிக பெரும் பங்கு வகித்தது.
இந்த சுரங்கமானது தற்போதைய ஹோ சி மின் நகரத்திலுள்ள (சைகான்) நதிக்கரை ஓரத்தில் உள்ள கு-ச்சி (பாலை நில காடு )என்னும் ஊரில் உள்ளது. இந்த கு-ச்சி சுரங்கபாதையானது சுமார் 121 கி.மீ நீளம் கொண்ட மிக நீண்ட போர் சுரங்கம். இங்குதான் தெற்கு மற்றும் வடக்கு வியட்நாமிய கூட்டுப்படை தங்களின் தாக்குதலுக்கான இராணுவ அமைப்பை நிறுவியிருந்தது. வியட்நாமிய போராளிகளின் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunnel). இதுதான் தெற்கு மற்றும் வட வியட்நாமிய படைகள் தங்குவதற்கும், ஒளிந்திருந்து தாக்கவும், ஆயுதம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
நாங்கள் இதில் செல்லும் போது எங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த சுரங்கமானது மெலிந்த மனிதன் தவழ்ந்து செல்லகூடிய மிகவும் சிறிய பாதை, அருகில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாத இருட்டு, பாம்பு ,தேள், பூரன் என பயமுறுத்தும் விஷப்பூச்சிகள்
மறுபுறம் உணவு. தண்ணீர் பற்றாக்குறை என நாள் முழுவதும் சுரங்கப்பாதையில் உள்ளிருந்த வியட்நாமியர்கள் எவ்வளவு மெலிந்த உடலமைப்பைக் கொண்ட வலிமைமிக்கவர்கள் என தெரிந்தது.
போராட்ட காலங்களில் மரவள்ளிக்கிழங்கும் , பாம்பு ,சில ஊர்வன இவர்களின் உணவாக இருந்தது.
இதில் ஒரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் பாம்புகளை தங்கள் காவலர்களாக பயன்படுத்தினார்கள்
பகல் முழுவதும் சுரங்கத்திலிருந்து போர் யுத்திகள் வகுப்பது, இரவில் தாக்குதலை மேற்கொள்வதும் ஆயுதங்கள் தயாரித்தல் போன்றவற்றை மேற்கொண்டனர். அமெரிக்க ராணுவ படையால் இந்த இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் அவர்களின் சுரங்க பாதுகாப்பு வாழ்வு யுத்தி மிக நுண்ணிமாக இருந்தது
*1966 -ம் ஆண்டு ஜனவரி 8-14 Operation Crimp ( US-Australian military operation)
*1967 -ம் ஆண்டு ஜனவரி 8-26 Operation Cedar Falls
என்ற இரண்டு மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டது. இதில் B-52 Bombers மூலம் 30 டன் வெடிகுண்டுகள் கு-ச்சி ஊர் முழுவதும் குண்டு மழையை பொழிந்தது. மொத்தம் 38,000 அமெரிக்க ராணுவ படைகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்காவிற்கு பெரும் தோல்வியை தந்தது. இதில் அந்த பச்சை வனம் பாலை நிலத்தில் வியட்நாமின் போர்ப்படை கையாண்ட கரந்தடிப் போர்முறை யுத்தியும்,உள்ளூர் மக்களின் ஆதரவு MACV (Military Assistance Command Vietnam) கொடுத்த பயிற்சியே அமெரிக்கர்களுக்கு மிகவும் சவாலான இருந்தது
இந்த கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunel). சுரங்கத்திலிருந்து வெளிவந்தபோது வியட்நாமிய படை தன் நாட்டின் விடுதைலைக்கு எப்படி போராடியுள்ளனர் என்பதை கண்டு வியந்தது உணர்வு
இந்த இடம் தற்போது போர் நினைவு அருங்காட்சிய பூங்காவாக அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.




திங்கள், 31 ஜனவரி, 2022

நான் காதலித்த கவிதைகள்.

 


அற்புதமான

காதலை மட்டுமல்ல..

அதை உன்னிடம்

சொல்ல முடியாத

அதி அற்புதமான

மௌனத்தையும்!

நீதான் எனக்கு தந்தாய்..


++++++++++++++++++++++++++++++++++

ஒரே ஒரு முறைதான்
எனினும்
உன் உன்னத நிழல்
என்மீது பட்ட போதுதான்
நான் ஒளியூட்டப்பட்டு கவிஞனானேன்

++++++++++++++++++++++++++++++++++

எத்தனை முறை
அழுதும்
கரையவில்லை
கண்களில்
பதிந்த உன் முகம்

++++++++++++++++++++++++++++++++++

உன் கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில்
தொலைந்த
என்னிதயத்தை!

++++++++++++++++++++++++++++++++++

விழி மொழிகளையே இன்னும் மொழிபெயர்த்து
முடியவில்லை
அதற்க்குள் ஆரம்பித்துவிட்டாய் விரல் மொழி பேச!

++++++++++++++++++++++++++++++++++

உன் நெற்றிமுடி தொட்டு வழியும் அழகிற்காகவே அதிகப்படியான காதல் மழையிடம்...

++++++++++++++++++++++++++++++++++

குளத்தில் குளித்து
மெல்லக்கரையேறி, மரங்களுக்குள் ஒளிந்துகொண்டே உடைமாற்றுகிறது நிலா.

++++++++++++++++++++++++++++++++++

நீ சென்றாலும்
உன் மீதான
என் காதல்
நிகழும்
நொடிக்கு நொடி"

++++++++++++++++++++++++++++++++++

நான் செய்வதையே திரும்ப செய்து என்னை சிரிக்க வைக்கும் அழகிய காதல்
கண்ணாடி
கவிதை நீ

++++++++++++++++++++++++++++++++++

நீ பூக்கடை
கவிழ்த்து போட்டால் கொட்டுவது
பூக்கள் அல்ல
சில தோட்டங்கள்

++++++++++++++++++++++++++++++++++

தனக்குத்தானே முத்தமிட்டுக்
கொள்கின்றன
உன் உதடுகள்...
நீ பேசும்போது.

++++++++++++++++++++++++++++++++++


சின்ன சின்ன கோபமும் சுட்டெரிக்கிறதே என்னை..
நீயென்ன
அக்னி நட்சத்திரத்தில்
பிறந்தவளா..

++++++++++++++++++++++++++++++++++

ஒரு வண்ணத்துப் பூச்சி உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது..
"ஏன் இந்தப் பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று..

++++++++++++++++++++++++++++++++++

இந்த காதல் நீ தந்தது
அதனால் தான்
காதலை பிடிக்கும்
உன்னைப் போலவே!

++++++++++++++++++++++++++++++++++

என் கவிதைகள் ஒவ்வொன்றும்
நாளை காவியம் ஆகலாம்..
ஏனெனில்
உன்னைப்பற்றி எழுதியதினால் !

++++++++++++++++++++++++++++++++++

உன் நிறம் கண்டு வெட்கப்படுகிறது மருதாணிச்செடி

++++++++++++++++++++++++++++++++++

இத்தனை ஆழமாய் என்னுள் நீ இருப்பது நீ இல்லாதபோதுதான் எனக்கு புரிகிறது.

++++++++++++++++++++++++++++++++++

பூக்களைப் பூப்பதைத் தாண்டி வேறென்ன இருக்கிறது பூச்செடிக்கு. அப்படித்தான் உன்னைக் காதலிப்பதைத் தாண்டி வேறெதுவும் இல்லை எனக்கு.

++++++++++++++++++++++++++++++++++

வார்த்தைகள் வலிமையானவை என்று யார் சொன்னது.
எந்த வார்த்தைக்கும் வலிமை இல்லை
உன் கண்களுக்கு முன்னால்.

++++++++++++++++++++++++++++++++++

நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்.
சம்மதம் மட்டும் சொல்....
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்.

++++++++++++++++++++++++++++++++++

ஒரு பூங்காவில் உன்னோடு சேர்ந்து அமர்ந்திருப்பதும்... உன்னை
நினைத்தபடி
தனியே அமர்ந்திருப்பதும் ஒன்றுதான் எனக்கு.

++++++++++++++++++++++++++++++++++

நான் ரசித்த
முதல் கவிதை
நீ...!

++++++++++++++++++++++++++++++++++

என் இதயத்தைக் கேட்காதே.
அதை உன்னிடம் கொடுத்துவிட்டு
வேறு எதைக்
கொண்டு
நான் உன்னைக் காதலிப்பது..

வெள்ளி, 21 ஜனவரி, 2022

வறண்ட மனம் :

தேடிபோய் பேசினால் அவமானம்
என்ற ஒரே காரணத்தால்
தொலைத்து விடுகிறோம்
பல உறவுகளை



கசங்கிய வெற்றுத்தாள்

போராட்டம் என்றவுடன்
பொதியுக்குள் புதைந்தவனுடன்
வேடிக்கையாக தொடங்கிய
கதைகள்
பயங்கர புதிர்களாக முடிவுற்றன !
நாங்கள் எதிர்பார்த்தவர்களை காட்டிலும்
பிரமாண்டமாக வளர்ந்துவிட்டன
கை விடப்பட்ட எதிர்பார்ப்பு.......... ?
யாரோ ஒருவன் நடத்த
பாதசுவடின் மேல் நின்று
வக்காலத்து வாங்குதல்
மக்கள் பாதுகாப்பு அரண் என்று
வாய்மை,
துய்மை ,
நேர்மை ,
சிந்திப்பு
இல்லாத கசங்கின
வெள்ளை வெற்றிதாழ்
மீண்டும் காலம் காத்துக்கிடக்கின்றது
பெரும்கற்றுக்காக .


























காற்றில் மிதக்கும் சிறகு


இன்னமும் ஏதோ ஒரு சிலரின்
நம்பிக்கை சொல்லை வைத்து
கற்பனை செய்து புரோகிதம்
பேசிக்கொண்டிருந்தது நம்பிக்கை !
சமூக ஊடக சுவர்களில்
தொங்கவிடப்பட்டிருக்கும் விளம்பரங்கள்
ஒரு சிலரின் மகிழ்ச்சிகரமான
மனநிலையை அதிகப்படுத்துகின்றன!
மௌனமும் பல நேரம்
தனக்கான முடிவுகளை தேர்வு செய்கின்றது
நிராகரித்த வார்த்தைகளின் தேவைகருதி
ஒரு சிலரின் விருப்பு வெறுப்புகளை தாண்டியிருக்கின்றன !
காலத்தின் சுழச்சிக்குள் இழுத்து சொல்கிறது நினைவு
போர் ஓய்ந்த நிலத்தில் வேலி போட்ட அகிம்சை
ஒரு சிலரின் வாயினை அழித்து மொழியைகாக்க
நிலையான துன்பம் நிழலாக தொடர்கின்றன !
- பங்கிரையான்-






 எப்போதுமே

ஒரு பார்வைக்கும்

ஒரு பக்குவத்துக்கும் இடையே

தொங்குகிறது ஒரு மாயை பூட்டு













சனி, 15 ஜனவரி, 2022

ஆரோக்கிய முதலீடு

 

நம் பாரம்பரிய சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…


சிறுதானியம் என்பது வரகு,சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானிய வகைகள் ஆகும். சிறுதானியங்கள் பழங்கால மக்களின் உணவு பழக்கவழக்கத்தில் மிகப் பெரிய அங்கமாக திகழ்ந்துள்ளது. இந்த தானியங்களில் மனித உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது. இப்பொழுது நாம் உண்ணும் அரிசி மற்றும் கோதுமையை விட பல மடங்கு சத்து அதிகம் உள்ளது.

🔸வரகு

வரகு தானிய வகைகளில் ஒன்றாகும், இதை ஆப்பிரிக்கா கண்டங்களில் முதன்மை உணவாக பயன்படுத்தி வருகின்றனர். இது கோடை வெயிலுக்கு ஏற்ற நல்ல குளிர்ச்சியான உணவாகும். இதை பறவைகள் எளிதில் உண்ணாமல் இருக்க இதன் வெளிப்புறத்தில் அமைப்பு ஏழு அடுக்குகளைக் கொண்டுள்ளது.

மூட்டு வலி மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கல்லீரலின் செயல்பாடுகளை தூண்டி கண் மற்றும் நரம்பு நோய்களை தடுக்கும் குணம் உள்ளது. மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் வரகை சமைத்து சாப்பிடுவது நல்லது.

🔸தினை


தினைகளில் வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துகளை கொண்டுள்ளது . இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. உலகில் அதிகம் உற்பத்தியாகும் தானிய வகைகளில் இதுவும் ஒன்று. இதன் கதை பார்ப்பதற்கு நரி வாழை போன்று பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இது பாக்ஸ் டைல் மில்லட் என அழைக்கப்படுகின்றது மற்றும் இதை இட்டாலியன் மில்லட் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது மாவுச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு. இது உலகிலேயே இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது இதற்கு அடுத்தபடி நைஜீரியா மற்றும் சீனா அதிகப்பங்கு வகிக்கிறது. உலகில் அதிகம் பயிரிடப்படும் தானியத்தில் இது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

நீரிழிவு நோயாளியைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் மாவு சத்து அதிகம் காணப்படுகிறது இது புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள அதிக ஆற்றல் கொண்ட உணவாகும்.

தினை சமையல் – 

நாம் அரிசி தயாரித்து பருப்பு, சாம்பார், ரசம் அல்லது நமக்கு விருப்பமான எந்த கறியுடன் பரிமாறும்போது தினை சமைக்கலாம். பல்வேறு தோசை, இட்லி, உப்மா, பொங்கல், மற்றும் இனிப்புகள் தயாரிக்கலாம், இவை பேக்கிங்கிலும் பயன்படுத்தலாம்.

🔸சாமை


இது புன்செய் நிலப் பயிர். இது இந்தியாவிலும் விளைவிக்கப்படுகிறது. இந்த தானியத்தின் மாவை கோண்டு ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் சமைக்கலாம். இது பயிரிடும் பொழுது அதிக பூச்சி தொற்று ஏற்படுவது இல்லை. இது எலும்புக்கு இடையில் உள்ள தசை வலிமையை அதிகப்படுத்துகிறது. இது கோடை காலத்தில் ஏற்படும் நாக்கு வறட்சியை நீக்கவும் காய்ச்சல் காரணமாக ஏற்படும் வறட்சியை நீக்கவும் உதவுகிறது மற்றும் இது மலச்சிக்கலை சரி படுத்துகிறது. இது வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைக்கும் நல்ல ஒரு நிவாரணியாக செயல்படுகிறது. ஆண்களின் ஆண் இனபெருக்க அணு உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

🔸குதிரைவாலி


இது புற்க்கள் வகையை சார்ந்த புன்செய் பயிராகும். இது உடலை சீராக வைத்து சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இது இந்தியா நேபால் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது மற்றும் பழங்களை உணவில் இது மிகவும் முக்கியமான உணவாக கருதப்பட்டது. இது நெல் விளைச்சல் இல்லாத கால கட்டத்தில் அதிகமாக பயிரிடுவார்கள். இது அரிசி போன்று வேகவைத்தும், தண்ணீரில் ஊறவைத்து ‍உணடு வந்தனர். இது உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்ற அதிகப்பங்கு வகிக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் விதையை ஊறவைத்து பியர் செய்கிறார்கள். இதில் நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. இது இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு மருந்தாகும்.

🔸கம்பு


இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் புன்செய் பயிராகும். இது எல்லாவித மண்ணிலும் விளையக்கூடிய ஒரு தானியம் ஆகும் .இதன் விளைச்சல் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆகும். உலகில் 55% உற்பத்தியில் கம்பு இடம்பிடித்துள்ளது. இது பல நாடுகளில் மனிதனுக்கு உணவாகவும், விலங்குகளுக்கு உணவாகவும், எரி பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. உலகில் அதிகமாக பயிரிடப்படும் தானியங்களில் கம்பும் ஒன்று. இதில் புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இது நம் தோழர் கண்பார்வைக்கும் மிகவும் நல்லது. கம்பு 3-6 மாதங்கள் கெடாமல் இருக்கும், பின்பு மீண்டும் வெயிலில் நன்றாக காய வைத்தால் இன்னும் 6 மாதங்கள் கெடாமல் இருக்கும். இதில் நொச்சி இலைகளை சேர்த்து சேமித்தால் இன்னும் பல மாதங்கள் கெடாமல் பாதுகாக்கலாம்.

இதை உணவாக உட்கொள்வதற்கு கம்பை தண்ணீரில் ஊறவைத்து பின்பு அதை துணியில் காயவைத்து மேல்புறமாக உள்ள ஈரம் போன பிறகு அதை இடித்து அதில் உள்ள உமியை பிரித்தெடுத்து பின்பு அதை மாவாக இடித்து பயன்படுத்தலாம். இது உணவாக எடுத்துக் கொள்ள அதிக வேலைப்பாடு இருப்பதால் மக்கள் இதை அதிகமாக உணவில் எடுத்துக்கொள்வதில்லை,எனவே தமிழக வேளாண்மை உடனடி கம்பஞ்சோறு என்று தயாரித்து காப்புரிமை பெற்றது. இதை பயன்படுத்தி கம்பங்கூழ், இட்டிலி, அடை ,தோசை கம்பஞ்சோறு என்று பல விதமாக சமைத்து உண்ணலாம். இது உடலை நன்கு உற்சாகமாக இருக்க செய்கிறது அது மட்டும் அல்ல மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கிறது. இது உடல் உயிரணுக்களின் கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது.

🔸கேழ்வரகு


ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுகிறது மற்றும் உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது. கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். இதில் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை நோயை வராமல் தடுக்கிறது மற்றும் சரி செய்ய உதவுகிறது. இது கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவாகும் ஏனென்றால் இது நம் உடலில் உள்ள வெப்பத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கிறது அதுமட்டுமின்றி ரத்த அழுத்தம் கல்லீரல் நோய் இதய நோய் ஆஸ்துமா நோய் வராமல் பாதுகாக்கவும் சரிசெய்யும் உதவுகிறது. இது புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும் மிகவும் உதவுகிறது. தென்னிந்தியாவில் இதை தினை, சிவப்பு தினை, ராகி மற்றும் மிகவும் பிரபலமான தினை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் கால்சியம் புரதம் இரும்பு சத்து அடங்கியுள்ளது. இது இந்தியாவில் மிகவும் முக்கியமான தானியமாக கருதப்படுகிறது. இதை பயன்படுத்தி கூழ் களி இட்டலி தோசை என்று பல உணவுகளை சமைக்கின்றனர்.

🔸சோளம்


சோளம் என்பது பழமையான தானியங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் எதற்காக பயன்படுத்தப்படுகிறது. சோளத்தில் அதிக ஊட்டச் சத்து நிறைந்துள்ளது. இது முக்கியமாக புரதம் நார்ச்சத்து பாஸ்பரஸ் பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகமாக உள்ளன. சோளம் பலவகைகளில் காணப்படுகிறது இது ஒரு புல் வகையைச் சேர்ந்த தானியம் ஆகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல கால்நடை விலங்குகளுக்கும் தீவனமாக வழங்கப்படுகிறது. இது உலகில் அனைத்து விதமான வெப்பமுள்ள நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.