நாங்கள் எங்கள் பயணத்தை வியட்னாம் ஹோ சி மின் (HO CHI MINH ) நகரத்தில் தொடங்கினோம். முதல் நாள் போர் நினைவு அருங்காட்சியம் போரின் அவலங்களை எங்கள் கண் முன் கொண்டு வந்தது. அந்த போர் அருங்காட்சியகங்கள் சென்றவுடன் முதலில் பார்த்தது அமெரிக்க இராணுவப் படைகள் விட்டு சென்ற போர்க் கருவிகள், ஆயுதங்கள் போரை நினைவுப்படுத்திய அவற்றைப் பார்த்தபடியே உள்ளே சென்றோம்.
போர் எவ்வளவு கொடூரமானது என்பதை அங்கிருக்கும் புகைப்படங்கள் என் விழிகளில் வெதும்பின . மனதில் பல கேள்விகள் கேட்டவாரே கு-ச்சி சுரங்கபாதை (Cu Chi Tunnel) உள் சென்றோம். அங்கே மனம் நெகிழவைத்த விடயம் ஒற்றுமையும் ஒன்றிணைப்பும் ஒன்றிணைந்த உருவாக்கப்பட இந்த சுரங்கம்தான் இவர்களின் வெற்றிக்கு மிக பெரும் பங்கு வகித்தது.
இந்த சுரங்கமானது தற்போதைய ஹோ சி மின் நகரத்திலுள்ள (சைகான்) நதிக்கரை ஓரத்தில் உள்ள கு-ச்சி (பாலை நில காடு )என்னும் ஊரில் உள்ளது. இந்த கு-ச்சி சுரங்கபாதையானது சுமார் 121 கி.மீ நீளம் கொண்ட மிக நீண்ட போர் சுரங்கம். இங்குதான் தெற்கு மற்றும் வடக்கு வியட்நாமிய கூட்டுப்படை தங்களின் தாக்குதலுக்கான இராணுவ அமைப்பை நிறுவியிருந்தது. வியட்நாமிய போராளிகளின் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunnel). இதுதான் தெற்கு மற்றும் வட வியட்நாமிய படைகள் தங்குவதற்கும், ஒளிந்திருந்து தாக்கவும், ஆயுதம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
நாங்கள் இதில் செல்லும் போது எங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த சுரங்கமானது மெலிந்த மனிதன் தவழ்ந்து செல்லகூடிய மிகவும் சிறிய பாதை, அருகில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாத இருட்டு, பாம்பு ,தேள், பூரன் என பயமுறுத்தும் விஷப்பூச்சிகள்
மறுபுறம் உணவு. தண்ணீர் பற்றாக்குறை என நாள் முழுவதும் சுரங்கப்பாதையில் உள்ளிருந்த வியட்நாமியர்கள் எவ்வளவு மெலிந்த உடலமைப்பைக் கொண்ட வலிமைமிக்கவர்கள் என தெரிந்தது.
போராட்ட காலங்களில் மரவள்ளிக்கிழங்கும் , பாம்பு ,சில ஊர்வன இவர்களின் உணவாக இருந்தது.
இதில் ஒரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் பாம்புகளை தங்கள் காவலர்களாக பயன்படுத்தினார்கள்
பகல் முழுவதும் சுரங்கத்திலிருந்து போர் யுத்திகள் வகுப்பது, இரவில் தாக்குதலை மேற்கொள்வதும் ஆயுதங்கள் தயாரித்தல் போன்றவற்றை மேற்கொண்டனர். அமெரிக்க ராணுவ படையால் இந்த இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் அவர்களின் சுரங்க பாதுகாப்பு வாழ்வு யுத்தி மிக நுண்ணிமாக இருந்தது
*1966 -ம் ஆண்டு ஜனவரி 8-14 Operation Crimp ( US-Australian military operation)
*1967 -ம் ஆண்டு ஜனவரி 8-26 Operation Cedar Falls
என்ற இரண்டு மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டது. இதில் B-52 Bombers மூலம் 30 டன் வெடிகுண்டுகள் கு-ச்சி ஊர் முழுவதும் குண்டு மழையை பொழிந்தது. மொத்தம் 38,000 அமெரிக்க ராணுவ படைகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்காவிற்கு பெரும் தோல்வியை தந்தது. இதில் அந்த பச்சை வனம் பாலை நிலத்தில் வியட்நாமின் போர்ப்படை கையாண்ட கரந்தடிப் போர்முறை யுத்தியும்,உள்ளூர் மக்களின் ஆதரவு MACV (Military Assistance Command Vietnam) கொடுத்த பயிற்சியே அமெரிக்கர்களுக்கு மிகவும் சவாலான இருந்தது
இந்த கு-ச்சி சுரங்கப்பாதை (Cu Chi Tunel). சுரங்கத்திலிருந்து வெளிவந்தபோது வியட்நாமிய படை தன் நாட்டின் விடுதைலைக்கு எப்படி போராடியுள்ளனர் என்பதை கண்டு வியந்தது உணர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக