ஞாயிறு, 8 மே, 2022

தொடர்வண்டி

 



எந்தவொரு புள்ளியிலும்
சந்திக்காத தண்டவாளம் 
இரு உணர்வுகளை 
தங்கி பயணிக்கின்றது 
இந்த தொடர்வண்டி  

பயணங்கள் புதுசு அல்ல 
 நினைவுகள் புதிசானாவை 
புறம் பார்க்கும் காட்சி
அகம் காணும் கனவு 
தினமும் பல நினைவுகளை 
சுமந்து செல்கின்றது 

பல நிற மனிதர்களின் 
எதிரும் புதிரும் இருக்கும் 
மனிதர்களை மறந்து 
 இரயிலை விட வேகமாய்
போகிறது உரையாடல் 
 
கண்பார்த்து 
காத்திருந்தது 
மனம் 
எதற்கு
காத்திருக்கிறேன் என்பது
மறந்துப் போய் விட்டது

நான் அடையவேண்டிய 

தரிப்பிடம் தாண்டிவிட்டது .

கருத்துகள் இல்லை: