செவ்வாய், 12 ஜூலை, 2022

மீண்டும் பள்ளிக்கூடம்

 புதிது புதிதாக பலர் நட்பு வட்டத்துக்குள் இணைந்தாலும் பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது.

சில நாட்களாக பல வருடங்களாக ஒன்றாக பள்ளிக்கூடம் சென்று ஊர் சுற்றிவந்த தோழர்களுடன்
மீண்டும் பள்ளிக்கூட நினைவுகள் .
வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த இளமை வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும் அந்திம காலம் வரை பலருக்கு பாடசாலை நட்பே நீடித்திருக்கின்றது
ஒரு நல்ல நட்பிற்கு வயது என்பது என்றும் தடை இல்லை, காசு பணமும் முக்கியம் இல்லை, கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவு வருவது இல்லை, என்றும் மாறாத குணம், உரிமையுடன் பழகும் மனம் இதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை நண்பன் இல்லையெனில் இந்த உலகில் வாழ்க்கை இல்லை.



கருத்துகள் இல்லை: