வெள்ளி, 25 செப்டம்பர், 2015

இன்று இலங்கை தமிழ் தேசிய அரசியல் ஆனது பிராந்திய ஆளுமை மருசிரமைப்பு புரட்சியை எதிர்கொண்டுள்ளது .....!



சில சமுக சிந்தனையாளர் உடன்  நடத்தப்பட்ட விவாதம், உரையாடல் ஊடக   முன்வைக்கப்படும் கருத்துக்கள், சொல்லாடல்கள், கடந்த காலங்களில் இவை தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரபூர்வமான நிகழ்வுகளுடன் சமகால யதார்த்தங்களும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டு

ஒரு தேசிய இனத்தின் அடையாளங்களை பொது மொழியிலும் உளவியல் உருவாக்கத்திலும், பொது பொருளாதாரத் தொடர்பிலும் பொதுவான வாழ்விடப் பகுதியிலும் காண்கிறபொழுதும் கூட நம்மில் பொது மொழி, உளவியல் உருவாக்கத்தையும் முதன்மை அடையாளங்களாக வைத்துக் காண்கிற பொழுது இத்தகைய பன்முகத் தன்மையின் ஊடாகவும் தமிழர் ,தமிழ் முஸ்லிம்கள் ,மலையாக தமிழர் என அடையாளங்களை நாம் தொகுத்துக் கொள்ள முடியும்.


மொழிச் சிறுபான்மையினரை ஒருபோதும் தமிழர்களாக கருதஇயலாது. அதே சமயம் சிறுபான்மை தேசிய இனத்தவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள உருதுமொழி பேசுகின்ற


ஒரு சாரார் ஒரு தேசிய இனத்தை தமது அரசியல் சமூக குறுகிய நலன்களுக்காக, எதிர் நிலை கொண்டு மறுத்துரைக்கின்ற போது, அத்தேசிய இனம் தனது தேசிய இன, அடையாளத் தனித்துவத்தை இழந்து விடும் என நினைப்பது                                                                                                                " உரலை நினைத்துக்கொண்டு அவலை இடிக்கும் "கதைதான்.
இது இலங்கை மலையாக வாழ் தமிழ்மக்கள் ,தமிழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகின் எந்த தேசிய இனத்திற்கும் பொருந்தக் கூடியதே.

இலங்கை மலையாக தமிழ் மக்கள் ,தமிழ் முஸ்லிம்கள் தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ, அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான், தேசிய இன விடுதலையை, இனங்களின் தனித்துவத்தை, அம் மக்களின் அபிலாசையை மதிப்பவர்களின் கடமையுடன் கூடிய அரசியல் நேர்மையுமாகும்.

வரலாற்றின் தோல்விகளிலிருந்து எமது  பலவீனங்களிலிருந்து, எமது சிந்தனைக் கோளாறுகளில் இருந்து பாடம் கற்காத நாங்கள் , சுயவிமர்சனம் செய்ய முடியாத நாங்கள் , ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமைக்காக அதன் அடையாள இருப்புக்காக போராடுவதாகச் சொல்லிக் கொண்டு ஏனைய தேசிய இனங்களின் தனித்துவங்களையும் அத்தேசிய இன மக்களின் அரசியல் அபிலாசைகளையும் மறுத்துரைப்பது, ஒரு தேசியஇன கருத்தாளர்களின் கபடத்தனத்தை அம்பலமாக்கப் போதுமானதாகும்.

எமது தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் மலையாக தமிழர் ,தமிழ் முஸ்லிம்கள் அப்பேச்சுவார்த்தைகளில் தாம் ஒரு தனித்த தேசிய இனமாகையால் தமக்கான தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்த குரல் எழுப்பப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவர்களின்  இக் கோரிக்கையை இக் குறுந் தமிழ்த் தேசியஇன வாதிகள் நிராகரித்து வந்துள்ளனர்

வைகாசி 18



தமிழ் இனம் காக்க
சிங்கள இனத்தை அழிப்பவர்கள்
சிங்கள  இனம் காக்க
தமிழினம்  அழிப்பவர்கள்
தன் இனத்தினுள்ளே
 தம்  இனம் காக்க
தம் இனம்மழிப்பார்களோ
மனிதன்
மனிதனாய் வாழ
இன்னும் எத்தனை
எத்தனை வைகாசி
18 கேட்டிடுமோ

புதியதோர் வரவு



வீட்டு முத்தத்தில் அமைந்திருந்து பார்க்கும்பொழுதேமுளைத்து வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறதுரகசியத்தின் செந்நிற பூ மரம்.அதன் கிளைகளில் தலைகீழாய் தொங்குகின்றனஅன்பின் மொட்டுக்கள் ஒவ்வொரு மொட்டுகளில் இருந்தும் வெவ்வேறுஉருவத்துடன் வெளிக்குதிக்கிறார்கள் காதலர்கள் .சர்ப்பமென சுருண்டிருக்கும் அவளது உடலின் கதவுகளை தங்களது இரட்டை நாவினால்எட்டித்தள்ளி உள்நுழைந்து தின்னத்துவங்குகிறார்கள்.காதலனின் எச்சில்கள் படும் இடமெங்கும்முளைக்கின்றன புதியதோர் வரவு 

புலன்பெயர் இளையோர் !

புலன்கெட்டுக் கிடக்கும் சில புலன்பெயர் தமிழர்களின் ஆள்மைதனத்தையும
செயல் திட்டம்களையும் வன்முறை உணர்வுகளையும் ஏற்க்க மறுத்த தாயகத்தின் தமிழ் மக்களின் தேர்தல் முடிவுகள் !
இன்றிய இளையோகளே யுத்தத்தினால் சீரழிந்து போன எம் மக்களுக்காக உங்கள் பங்களிப்புக்களை வழங்க முன் வாருங்கள். அவர்களது வாழ்வாதாரம் கல்வி துறைசார் சிந்தனைக் குழாமை மீளக் கட்டியெழுப்ப உங்களாலான கடமைப்பாடுகளை தட்டிக்கழிக்காது முன் வாருங்கள்
அதனை விடுத்து தலைகழன்ற தலைமைகளின் கட்டளைகளுக்;கு சதிராட்டம் போடாதீர்கள்.
போராட்டம் என்று உசுப்பிவிட்டால் புலிக்கொடியை தூக்கவும் பிரபாகரனின் உருவப்படத்தை தாங்கவும் புலிச்சின்னம் பொறித்த ரீ சேர்ட்டுக்களை அணிவதாலும் உங்கள் கைகளில் பச்சை குத்துவதும் எமக்கான எம் மக்களுக்கான தேசிய சுயஉரிமை விடுதலை கிடைத்துவிடும்மல்ல
உங்களின் சிந்தனையில் மாற்றங்களை உருவாக்குங்கள் 

இன்று நல்ல நாள்


வாழ்வில் ஒருநாள் போனதை
உனக்குச் சொல்லி
மறைகிறது
மாலைச் சூரியன்..

உறுதியான நம்பிக்கையை
உனக்குக் காட்டி
உதிக்கிறது
காலைக் கதிரவன்-
புதிய நாளாய்..

நடத்து இந்த நாளை
நம்பிக்கை
நல்லதாய்க் கொண்டு...!

நினைவுக்கு பிறந்த நாள்




என் கைபிடிக்க நின்ற நிலவொன்று
மிளிர்ந்த நாள் இன்று
என் கைசேர மலரொன்று
மலர்ந்த நாள் இன்று
என் கரை தொட அலையொன்று
ஆர்பரித்தது நாள் இன்று
என் கனவு தொட்ட வானவில்
வளைந்த நாள் இன்று
என் மன சிற்பிக்குள்
நுளைந்த முத்து
பிறந்தது நாள் இன்று.
எனது நினைவலைகளில் மிதக்கும்
மனம் காணும் இன்பங்களை
அவள் காண இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்" .
என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிப்படை அரங்க வடிவமைப்பு மூலகங்கள்.
அரங்கானது கட்புல, செவிப்புலத் தொடர்பாடல் மூலகங்களைக் தன்னகத்தே கொண்ட ஒரு கலை வடிவமாகும். இவ் வகையில் அரங்கின் காண்பியங்களும், கேட்பியங்களும் நாடகத்திற்குரிய பல்வேறு வியாக்கியானங்களை மேற்கொள்கின்றன. எனவே அரங்கில் இத்தகைய மூலகங்களுடன் உறவாடும் நெறியாளரும், விதானிப்பாளர்களும் தமது வெற்றிகரமான படைப்பாக்கத்திற்கு அடிப்படை அரங்க வடிவமைப்பு மூலகங்களினைப் பற்றிய அறி;தல் அவசியமானதாகும். ஏனெனில் அரங்க வடிவமைப்பு மூலகங்களினைப் பிரயோகிப்பதில் உள்ள பலம், பலவீனம் என்பவை ஆற்றுகையின் தொடர்பாடல் பெறுமானத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றன.
இவ் வகையில் இக் கட்டுரையானது காண்பியம் சார் அரங்க வடிவமைப்பு மூலகங்களைப் பற்றிச் சுருக்கமாக நோக்குகின்றது.
அரங்கக் காண்பியங்கள் எனும் போது அரங்கில் கட்புலனாகின்ற அனைத்து விடயங்களினையும் உள்ளடக்குவதாக இருக்கும். அரங்கின் முதலாம் பட்ச மூலகமான நடிகனும், அவன் தாங்கி நிற்கும் சாதனங்களான ஒப்பனை, வேட முகம், வேட உடை, கைப்பொருட்கள் என்பனவும் நடிகனுக்கு துணை செய்யும் ஏனைய சாதனங்களான, ஆற்றுகை வெளி, அமைப்பு விதானிப்பு, ஒளி விதானிப்பு, போன்றனவற்றையும் அரங்கக் காண்பியங்களாகக் குறிப்பிடலாம்.
கோடுகள், வடிவங்கள், வர்ணங்கள், இழைமானம், செறிவு, கனவளவு, என்பன காண்பியம் சார் தொடர்பாடலோடு சம்பந்தப்பட்டவை ஆகும். இவற்றையே நாம் அரங்க வடிவமைப்புக் கூறுகளாகக் குறிப்பிடுகின்றோம். அரங்கில் இவை தனித்தும், இணைந்தும் செயலாற்றுகின்றன.
“நாடகக் காப்பியத்துள் மனிதர்கள், நிகழ்வுகள், சொற்கள் என்பவை அதன் கூறுகளாயினும் இவை கோடு, நிறம், இழைத்தன்மை என்பவற்றை உள்ளீடாகக் கொண்டுள்ளன. நிகழ்வுக்கலைகளில் கலைஞனின் தனிநிலையான உடல் நிலைகள், உடலியக்கம், குரல் ஆகியவற்றுள்ளும் புறநிலைப் பொருட்களான காட்சியமைப்பு, ஒப்பனை, ஆடையணி, ஒலி, ஒளி, இசை ஆகியவற்றுள்ளும் இத்தனிமங்கள் உள்ளோட்டமாக இடம் பெற்றுள்ளன. தனிமங்களின் தனித் தன்மைகளை உணர்ந்து அவைகளைக் கலையாக்கத்தற்குப் பயன்படுத்துவது இன்றியமையாததாகும்.” எனப் பேராசிரியர் சே.இராமானுஜம் அவர்கள் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கோடுகள்
அரங்கில் கோடுகளின் பயன்பாடானது முக்கியமாக விளங்குகின்றன. நடிகனாலானாலும் சரி அல்லது அரங்கில் கட்புலனாகின்ற பொருட்களானாலும் சரி கோடுகளினைக் கொண்டே அர்த்தம் பெறுகின்றன. நடிகன் புறவயமாக மேற்கொள்கின்ற அசைவியக்கம் வெளியில் கோடுகளினாலேயே உருவாக்கப்படுகின்றன. ஓர் அசைவில் அவன் எண்ணற்ற கோடுகளினை உருவாக்குகின்றான். இக் கோடுகளின் திசை, வேகம் என்பவற்றின் ஊடாக அவனது உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
கோடுகளினை அதன் போக்குகளினைக் கொண்டு வகைப்படுத்திப் பார்க்கலாம். அவை
1. நேர்கோடு 2. வளைகோடு 3. முறிகோடு
என்பனவாகும். மேலும் நேர்கோட்டினை அதன் போக்கினைக்கொண்டு
1. கிடைக்கோடு 2. நிலைக்குத்துக்கோடு 3. சாய்கோடு
என வகுத்துக் குறிப்பிடலாம். இக் கோடுகள் ஒவ்வொன்றும் அதன் பருமன், மெலிவு, வன்மை, மென்மை என்னும் தன்மையினையும் கொண்டிருக்கும். அரங்கில் இவை தனியாகவும், இணைந்தும் செயலாற்றி பல்வேறு உள்ளார்ந்த கருத்துக்களினை வெளிப்படுத்கின்றன. ஒரு வகையில் இவை குறியீடுகளாகச் கூடச் செயற்படுகின்றன. ஊதாரணமாக கிடைக்கோடு மண்ணையும், உறுதியினையும், நிலைக்குத்துக்கோடு விண்ணையும், எழிற்சியினையும், சாய்கோடு திடமற்ற தன்மையினையும், வளைகோடு நீரையும், குழப்பத்தினையும். முறிகோடுகள் முரனை வெளிப்படுத்துவனவாகவும் இருக்கும்.
ஒன்றுக்குமேற்பட்;ட தன்மைகளினைக் கொண்ட கோடுகளினை அரங்கில் பயன்படுத்துகின்றபோது அவற்றில் எந்த கோட்டின் இயல்புகள் அதிகமாகக் காணப்படுகிறனவோ அதுவே அக் குறிப்பிட்ட காட்சியின்; முதன்மை உணர்வாக இருக்கும். இத்தகைய உத்திகளினைக்கொண்டே அரங்க விதானிப்பாளர்கள் தாம் சொல்லவரும் செய்தியைக் காண்பிய விளைவில் இலகுவாக பார்வையாளர்களுக்கு வழங்கிவிடுகின்றனர். இவ்வகையில் கோடுகள் ஊடாக உணர்;வு, மனநிலை, விளைவு என்பன வெளிப்படுத்தப்படுகின்றன. அரங்கிற் சில சமயம் பெரியளவிலான காட்சிகளினை விட சில கோடுகளே ஆழமான கருத்தினை வெளிப்படுத்தப் போதுமானவையாக இருக்கும்.
வடிவம்
கோடுகளில் இருந்தே வடிவங்கள் உருவாக்குகின்றன. ஒரு வளை கோட்டின் ஒரு முனையானது மையப் புள்ளியில் இருந்து சமமான விட்டத்தில் மறுமுனையுடன் இணைகின்றபோது வட்டம் உருவாகுகின்றது. இது தவிர மூன்று நேர் கோட்டினைக்கொண்டு முக்கோணத்தினை உருவாக்க முடியும். சில சமயம் வேறு வகையான கோடுகள் ஒன்றினைந்தும் வடிவங்களினை உருவாக்குகின்றன.
வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம் என்பவை கோடுகளினால் உருவாக்கப்படுகின்ற அடிப்படை வடிவங்களாகும். இத்தகைய வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கூம்பகம், உருளை, கோளம், ஐங்கோணம், அறுகோணம், எண்கோணம் எனப் பல்வேறு சாயல்களினை (ளாயி) உருவாக்குகின்றன.
அரங்கில் தோன்றுகின்ற நடிகனுடைய முகத்தின் சாயல், உடல்வாகு தொடக்கம் கட்புலனாகின்ற அனைத்து விடயங்களிலும் கோடுகளின் ஆளுகை பிரதிபலிப்பதனைக் காணலாம். அரங்கில் மட்டுமன்றி இயற்கையில் காணக்கிடைக்கின்ற அனைத்து வடிவங்களும்; இதன் பாற்பட்டதே ஆகும். அமைப்பு விதானிப்பு, வேட உடை, ஒப்பனை, கைப்பொருட்கள், வேடமுகம் போன்றவற்றில் இத்தகைய சாயல்களுடைய விஸ்தார நிலையினையும், படைப்பாக்கத் தன்மையினையும் காணமுடியும்.
அடிப்படையில் இவ் வடிவங்கள் இருபரிமான (நீளம், உயரம்),முப்பரிமானத் (நீளம், உயரம், ஆழம்) தன்மையை உடையவையாகும். அதாவது இருபரிமானத் தளத்தில் இருந்து கனவளவு, செறிவு என்பவை முப்பரிமான இயல்பை ஏற்படுத்துகின்றனை. “ஸ்பொசல்”; நாடக மரபில் இருபரிமான காட்சித் திரையில் முப்பரிமான காட்சி வரைபுகளினைக் கொண்டு அமைப்பு விதானிப்பினை மேற்கொண்டிருந்தமையையும் காண முடிகின்றது.
கோடுகளில் இருந்து உருவாகும் வடிவங்களும் கோடுகளினைப்போன்று உணர்வுகளினை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவையாகும். இவை கோடுகளின் நீட்சியாகவே கருத்துப்புலப்பாட்டினைக் கொண்டிருக்கும். ஊதாரணமாக மேடைச் சம தளத்திலிருந்து செங்குத்தாக நீண்டு உயர்ந்திருக்கும் பொருட்கள் அதிகாரத்தினையோ அல்லது எழிற்சியினையோ வெளிப்படுத்தி நிற்க மேடைச் சம தளத்திற்கு சமாந்தரமான பொருட்கள் உறுதியினையோ அல்லது ஆழ்ந்த அமைதியினையோ வெளிப்படுத்தும். சாய்வாக உள்ள பொருட்கள் உறுதியற்ற அல்லது அந்தரத்தன்மையை வெளிப்படுத்த, முறிகோடுகள் சக்தியினையும் (மின்னல்) மோதலினைம், வளைகோடுகள் நெகிழ்வினையோ அல்லது முடிவற்ற தன்மையினையோ (வட்டம்) வெளிப்படுத்துவதாக அமையும்.
இவ் வகையில் அரங்க காண்பிய விதானிப்பு மூலக்கூறுகளில் வடிவங்களினுடான வியாக்கியானிப்பு என்பது நாடக வெளிப்பாட்டில் முக்கிய இடம்பெறுவதனை நடைமுறையிலும் காணலாம்.
வர்ணங்கள்
காண்பியத் தொடர்பாடலில் வர்ணங்களின் பங்கும் முக்கியமானதாகும். கருத்துக்களினை வெளிப்படுத்துவதற்கு வர்ணங்கள் பல்வேறு பங்காற்றுகின்றன. வர்ணங்களுடைய அர்த்தப்பாடானது பண்பாட்டிற்கு பண்பாடு வேறுபட்டதாகும். எனவே குறிப்பிட்ட சூழலில் எத்தகைய வர்ணம் பயன்படுத்தப்படுகின்றதோ அதனைக் கொண்டே அதன் பொருளினைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக மஞ்சள் வர்ணமானது இந்துக்களின் பண்பாட்டில் மங்கலகரத்தையும் சீனப் பண்பாட்டில் பொறாமையினைக் குறிப்பதாகவும் அமையும். கிறிஸ்தவப் பண்பாட்டில் மணப்பெண்னிற்கு வெள்ளை நிற ஆடையினைப் பயன்படுத்துவர் ஆனால் இந்துக்களிற்கோ வெள்ளுடையானது தூய்மைக்கும், விதைவைகளுக்கும் உரியதாகக் காணப்படுகின்றன.
வர்ணங்களினை முதன்மை வர்ணம், துணைவர்ணம்….எனப் பல்வேறு வகையாக வகைப்படுத்துவர். வர்ணக் கலவையில் பொருள்களிற்கான கலவைக்கும், ஒளியமைப்புக்கான வர்ணக் கலைவைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. ஒளியைப் பொறுத்தவரை சிவப்பு, நீலம், பச்சை என்பவை அடிப்படை வர்ணங்களாகக் காணப்பட, பொருள்களினைப்பொறுத்தவரை சிவப்பு, நீலம், மஞ்சல் (pபைஅநவெ உழடழரச) என்பவை அடிப்படை வர்ணங்களாகக் காணப்படுகின்றன.
துணைநிலை வர்ணம் என்பது இரு அடிப்படை வர்ணங்களின் சேர்க்கையினால் உருவாகுபனவாகும். சிவப்பும், மஞ்சலும் இணைந்து செம்மஞ்சலினையும், நீலமும், மஞ்சலும் இணைந்து பச்சையினையும், சிவப்பும், நீலமும் இணைந்து கபிலநிறத்தினையும் உருவாக்குகின்றன.
வர்ணக் கலவையில் கறுப்பு, வெள்ளை ஆகியவற்றினை வர்ணங்களாகக் குறிப்பிடப்படுவதில்லை. இவற்றை நடுநிலை சார்ததாகக் குறிப்பிடுவர். இவை ஏனைய வர்ணங்களுடன் சேர்கின்றபோது அவற்றின் செறிவினைக் கூட்டுவதாகவே அல்லது குறைப்பதாகவோ அமைகின்றன.
பிரகாசம், மங்கல் எனும் கதிர்வீச்சுநிலையும், செறிவு, நீர்மை எனும் பொறுமான (எயடரந ழக ய உழடழரச) நிலையும் வர்ணங்களில் காணப்படுவதால் இவை எண்ணற்ற வர்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக உள்ளன.
வர்ணங்கள் கண்களைத் தாக்கும் தன்மையைக் கொண்டு அவற்றை வெப்பு வர்ணம், குளிர் வர்ணம் என வகைப்படுத்துவர். சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சல் ஆகியவை வெப்பு வர்ணங்களாகவும், பச்சை, நீலம் போன்றவை குளிர் வர்ணங்களாகவும் காணப்படுகின்றன. அரங்கின் ஒரு கோட்டில் (டiநெ) குளிர் வர்ணத்தையும், வெப்புவர்ணத்தையும் பயன்படுத்தி இருப்போமானால் வெப்பு வர்ணத்தையுடைய பொருட்கள் முன்னே இருப்பது போன்ற தோற்றத்தையும் குளிர் வர்ணத்தை உடைய பொருட்கள் பின்னே இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய நிலையினைக் கவனத்திற்;கொண்டே வேடை உடை, ஒப்பனை, அமைப்பு விதானிப்பு, ஒளிவிதானிப்பு என்பவற்றின் ஊடாக அரங்கில் வியாக்கியானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வர்ணங்கள் மனநிலை, உணர்வுகளுடன் தொடர்பு கொண்டவையாகும். முன்னர் குறிப்பிட்டது போன்று அவை பண்பாட்டின் அடியாக நின்று செயலப்;படுகின்றன. எமது கூத்து அரங்கிலும், இந்தியாவின் கதகளி, தெருக்கூத்து, யக்ஷகானம், மற்றும் சீன, யப்பானிய பாரம்பரிய அரங்குகளிலும் பாத்திரங்களுக்கான வர்ணத் தெரிவுக்கும் அவற்றின் குணஇயல்புகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதனைக் காணமுடிகின்றன. இவ் வகையில் வர்ணங்களானது குறியீட்டுத் தன்மை கொண்டு பண்பாட்டின் அடியாக வியாக்கியானங்களினை மேற்கொள்கின்றமையைப் புரிந்து கொள்ளலாம்.
இழைமானம்
அடிப்படை அரங்க வடிவமைப்பு கூறுகளில் இழைமானமும் முக்கியமானதாகும். இழைமானம் என்பது அடிப்படையில் தொடுபரப்புடன் தொடர்புடையதாகும். எனினும் அது ஒளி, ஒலி என்பவற்றுடனும் தொடர்புகொண்டதாகவும் விளங்குகின்றது.
தொடுபரப்புடன் கூடிய இழைமானத்தினை வன்மை, மென்மை என இருவகைப்படுத்துவர். அதே வேளை இவ் இரண்டிற்கும் இடையில் எண்ணற்ற நிலைகளும் காணப்படுகின்றன.
இழைமானம் தொடுபரப்புடன் தொடர்புடையதாக இருப்பினும் அவற்றை பார்வைப்புலனுடாகவும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. பார்வையாளர் அரங்கில் உள்ள பொருட்களினைத் தொட்டுப்பார்ப்பதில்லை ஆனால் தொலைவில் இருந்தே குறிப்பிட்ட பொருள் எத்தகைய தன்மை கொண்டவை எனப் புரிந்து கொண்டுவிடுவர்.
இழைமானத்திற்கும் ஒளி, வர்ணத்திற்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றது. அதாவது மென்மையான இழைமானம் ஒளியினை பட்டுத்தெறிப்படையச் செய்வதில் பெரும் பங்காற்றுகின்ற வேளை வன்மையான இழைமானம் ஒளியினை அதிகம் தெறிப்படையச் செய்யாது. ஆனால் வன்மையான இழைமானத்திற்கு அதிகம் பட்டுத்தெறிக்கக் கூடிய வர்ணத்தை தெரிவு செய்வோமாயின் இழைமானத்தின் இயல்பினை அது மாற்றிவிடும். எனவே அரங்கில் ஒளி, வர்ணம், இழைமானம் என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகக் காணப்படுகின்றன.
அரங்கில் இழைமானமானது நாடகக் கதை இடம்பெறும் காலம், களம், மோடி, பாத்திரத்தன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வேடஉடை, ஒப்பனை, கைப்பொருட்கள், அமைப்பு விதானிப்பு, ஒளிவிதானிப்பு போன்றவற்றின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றன. இவ் வகையில் இழைமானம் என்பதும் மனநிலை, உணர்வு என்பவற்றை வெளிப்படுத்தும் சாதனமாக விளங்குகின்றது.
அரங்க அடிப்படை வடிவமைப்பு கூறுகள் அனைத்தும் தனித்தும், இணைந்தும் அரங்கிற் செயற்பட்டு பார்வையாளருடன் தொடர்பாடலினை மேற்கொள்கின்றன. ஒரு சிறந்த அரங்கவியளாளனின் கற்பனைக்கும், படைப்பாக்க ஆற்றலுக்கும் உட்பட்டு இத்தகைய அரங்க அடிப்படை வடிவமைப்பு மூலகங்கள் பெரும்காட்சிப் பண்பினையும், பல்வேறு வியாக்கியானங்களினையும், அழகியல் உணர்வினையும் பார்வையாளரின் மனங்களில் ஏற்படுத்தி விடுகின்றன.

சனி, 16 மே, 2015

மே பதினேழு நோர்வேயின் தேசிய தினம்!

Foto

Barnetoget i trondheim - Bildet viser barnetoget på 17. mai i Trondheim. Nasjonalsangen blir ofte sunget denne dagen. - Foto: Terje O. Nordvik /


"சித்தாண்ட மாய்" (17வது மே)என்று நோர்வே மக்கள் நோர்வேயின் தேசிய தினத்தைச் சொல்லுவார்கள்.  1814 ம் ஆண்டின் இளவேனில் காலத்திலே எய்ட்சுவொல் (Eidsvoll ) என்னுமிடத்தில் நோர்வே நாடு
முழுவதிலும் இருந்து  தெரிவு செய்யப்பட்ட  குமுகத்தில் மதிப்பானசிலமனிதர்கள் கூடினர்.  அரசியலமைப்பு அவையில் (Grunnslovsforsamlingen/Riksforsamlingen) அங்கம் வகிக்கத்தெரிவு செய்யப் பட்டவர்கள் அவர்கள். 

அரசியலமைப்பு உருவான எயிட்சுவொல்   மாளிகை
                                                                          
அந்த நேரத்தில் நாலு நூற்றாண்டுகளாக நோர்வே, டன்மார்க்கின் ஒரு மாநிலமாக இருந்தது. நெப்போலியனுடன் டன்மார்க் கூட்டுச் சேர்ந்து  இருந்தது. சுவீடன் பிரித்தானியாவுடன் அணி சேர்ந்து இருந்தது.  நெப்போலியனின் தோல்விக்குப் பின் நோர்வேயை சுவீடனிடம்  ஒப்படைக்க  வேண்டிய நிலைமை உருவானது.நோர்வேயர் இந்த நிலைமையை அடியோடு வெறுத்தனர். பழையபடி   நோர்வேயை ஒரு தன்னாட்சி உடைய நாடாக உருவாக்க விரும்பினர். தம்விதியைத் தாமே தீர்மானிப்பதற்கு முடிவெடுத்தனர். அதற்காகவே தெரிவு செய்யப் பட்ட அரசியலமைப்பு அவை கூடியது.  நோர்வேயின் அரசியலமைப்பு உருவானது. 1814ம்ஆண்டு மே மாதம் 17 ந் திகதி நோர்வே அரசியலமைப்பு (Norges Grunnlov) கைச் சாத்தானது.




அரசியலமைப்பு அவை; எய்ட்சுவொல்
ஓவியர்:ஒசுகார்  ஆர்னோல்ட் வெர்கெலான்ட்
Oscar Arnold Wergeland(1814-1910)

அத்துடன் டன்மார்க்கின் இளவரசனான கிறிஸ்ற்றியான் பிறெட்றிக் (Christian Fredrik) நோர்வே   மன்னராகத் தெரிவு செய்யப் பட்டார். ஆனால் நோர்வேயின் தன்னாதிக்கம் நெடுநாள் நீடிக்கவில்லை.
தன் கீழ் வரவேண்டிய  நோர்வேயை ஒரு டன்மார்க் வாரிசிடம் இழக்க சுவீடன் விரும்பவில்லை.  மிகவும் குறுகிய ஒருசண்டையின் பின்னே  செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் படி சுவீடனின் மேலாதிக்கத்தை  நோர்வே ஏற்றுக் கொண்டது. அரச பதவியும், வெளிநாட்டமைச்சும் சுவீடனின் கைவசம் இருந்தது. 
மற்றும்படி  சொந்தப் பாராளுமன்றத்துடன் (Stortinget) மட்டுப்பட்ட தன்னாட்சியுடன் நோர்வே ஒரு நாடாக இருந்தது. சுவீடனின் எதிர்ப்பை அடக்குமுறையை அவ்வப்போது எதிர் கொண்டாலும், ஏதோ ஒரு வகையில் 1815 ம் ஆண்டிலிருந்து "சித்தாண்ட மாய்" கொண்டாடப் பட்டு வந்தது. நோர்வேப்  
பாராளுமன்றம்  1836  ம் ஆண்டு முதல்முறையாகக் "மே 17 " ஐக்கொண்டாடியது. 

நோர்வே  தனிநாடு ஆனதை; 1905  ம் ஆண்டு யூன்  7 ந் திகதி தன்னிட்டவாரம் நோர்வேப் பாராளுமன்றம்   ஒருதலையாக அறிவித்தது. சுவீடனும் எல்லையில் படை குவித்தது. ஆயினும் ஒன்றும் செய்யாது பின் வாங்கியது. பிரித்தானியாவின் ஆதரவை நாடி பிரித்தானியாவின் ஒரு இளவரசியையும், அவரை  மணந்த ஒரு டன்மார்க் இளவரசனையும் தன்னாட்சி பெறும் நோர்வேயின் மன்னராகவும், அரசியாகவும் ஆக்க முடிவானது. ஆனால் இளவரசர் விரும்பியபடி  நாடளாவிய வாக்கெடுப்பின் பின் அந்த முடிவு எடுக்கப் பட்டது. நோர்வே மொழி கதைக்க அறியாத இந்த இளந் தந்தையும், இரண்டே வயதான மகனும், பழைய நோர்வே அரச பெயர்களைப் பெற்றுக் கொண்டனர். தந்தையார் இளவரசர் கிறிஸ்ற்றியான் பிறெட்றிக் கார்ல் (Christian Fredrik Carl) , ஏழாம் கோகோன் மன்னர் (Kong Haakon 7.) ஆனார். மகன் அலெக்சாண்டர் இளவரசன் ஊலாவ் (Prins Olav) எனப் பட்டான்.

                  
அரசி மௌட்,இளவரசன் ஊலாவ்,மன்னர் 7ம் கோகோன் 
Bilderesultat for kongefamilien 17 mai bunad
(வலமிருந்து இடமாக) அரசர் 5ம் காராள்(Harald ),அரசி சோன்யா(Sonja), தற்போதைய முடிக்குரிய இளவரசன் கோகோன் மக்னுசு(Hokon Magnus),மூன்றாந் தலைமுறை இளவரசி இங்கிரி அலெக்சாந்திரா(Ingrid Alexandra), இளவரசி மெத்த மாறித் (Mette  Marit ), மூன்றாந் தலைமுறை இளவரசன் சிவர்ரெ மக்னுசு (Sverre Magnus) அரமனைப் பலகணியில்  

1906  ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மே 17 இல் அரமனைப் பலகணியில் நின்று பள்ளிச் சிறாரின்  அணிவகுப்பை, வாழ்த்துக்களை அரச குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வது வழமை. இந்த ஊர்வலத்தில் உசுலோ மாநகரினது எல்லாப் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளுவர். ஊர்வலம் போய் முடிய   பலமணி நேரம் பிடிக்கும். அவ்வளவு நேரமும் கை அசைத்தபடி அரச குடும்பத்தினர் நிற்பர். 1910 ம் ஆண்டு  அரசி மௌட் இன்  தந்தையும், இங்கிலாந்தின்  மன்னருமான 7 ம் எட்வேர்ட் காலமான போதும்நாசிகளின்  ஆக்கிரமிப்பில் 1940 -1945 ஆண்டுக்காலங்களிலும்   இது நடக்கவில்லை. நோர்வே

சட்டவரைவுகளுக்கு உட்பட்ட முடியாட்சியை (constitutional monarchy) உடையது. 
 "சித்தாண்ட மாய்" தினத்தில்  மற்றைய நாடுகளைப் போல அரசியல் தலைவர்களின் பரப்புரைகளுக்கும் (propaganda),கூத்துக்களுக்கும், அரணத்தின்(military) வீரதீரப் பெருமைக்கும்,
எடுப்புக்கும்,சாய்ப்புக்கும் இடமில்லை. முழுக்க முழுக்க மக்கள் கொண்டாட்டம் மட்டுமே.


ஒசுலோவின் கார்ள் யுஹான் வீதியில் 17 மே ஊர்வலம் 

"சித்தாண்ட மாய்" ப் பெருவிழா உசுலோவுக்கும், மற்றப் பெரு நகரங்களுக்கும் மட்டுமே உரிமையானது இல்லை. நோர்வே நாட்டின் மூலை முடுக்கு, இண்டை இடுக்கு சகல இடங்களிலும் கொண்டாடப்படும். அன்றைய காலநிலையோ, ஊர்களின் இயற்கை அமைப்போ, குறைவான சனத்தொகையோ ஊர்வலத்தையும், கொண்டாடத்தையும் தடை செய்யாது.

                                     



REGN IGJEN?: Barna i klasse 3B på Hallagerbakken skole i Oslo måtte gå i tog i regnvær ifjor. I år risikerer østlandsområdet regn igjen. Foto: Scanpix Bilderesultat for 17mai feiring


                  Bilderesultat for 17mai feiring         

நோர்வேயின் பிறந்தநாள் என்று சிறார் மகிழ்வர். "Gratulerer med dagen!" " கிறாத்துலேறெர் மே டாகென்!"  >> இன்றைய நாளை இட்டு வாழ்த்துக்கள்" என்று ஒருவரையொருவர் எல்லோரும் வாழ்த்திக் கொள்ளுவர்.பள்ளிக்கூட வாத்தியக் குழுக்களும்(school bands ), ஆடல் அணிநடைக் குழுக்களும் (drill team) சித்தாண்ட மாய் ஊர்வலங்களின் முன்னணியில் வண்ணங்கள் சேர்க்கும்.
.                                  



Bilderesultat for 17mai feiring



                               

மேல்நிலைக் கல்வியை முடிக்கவுள்ள  மாணவர்கள் (18 ,19  வயசினர்) தங்கள் மூன்று வருடக் கல்வி எதிர் வரும்  யூன் மாதத்துடன்முடிவதை குறிக்குமுகமாக கொண்டாடுவர். இதை றுசு கொண்டாட்டம்
(russ >>vill (norwegian) -wild(english)- அடங்காத> தளை,கட்டு நீக்கம்  என வருமோ?)
என அழைப்பர். இவர்களது ஆரவாரம் மார்ச்சு மாசத்திலேயே தொடங்கிவிடும். பழைய வாகனங்களை திருத்தி(வாகன கட்டுப்பாட்டு  அதிகாரிகளின் ஆய்வுகளுக்கு உட்படுத்தி சம்மதம் பெற்ற பின்) சிவப்பு சாயம்பூசி அட்டகாசமாக திரிவர். இவர்களது சீருடைகளின் நிறங்களான சிவப்பு, நீலம்,கறுப்பு,வெள்ளை
ஆகிய நிறங்கள் அவரவர் கல்விப் பிரிவுகளைக் காட்டும். இவர்களது ஒன்று கூடலும், பாட்டும் கூத்தும்
குடியும் பிறநாட்டவரால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. கிறித்துவ மதப்பற்றுள்ள மாணவர்களும், வேறும் ஒரு குறிப்பிடத்தக்க தொகையான  மாணவர்களும் மதுவைத் தீண்டாது வரம்பு மீறாது  
கொண்டாட்டத்தில் ஈடுபடுவர் என்பதையும் இங்கு மறவாது குறிப்பிட்டே ஆகவேண்டும்.
   
       




                                          dsc04877


                                                  

                                         
இந்த றுசு (russ)  மாணவர்களும் வலு ஆர்ப்பாட்டமாக சித்தாண்ட மாய் ஊர்வலங்களில் கலந்து ஊர்வலத்தைக் கலகலப்பாக்குவர்.

கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எல்லா இடங்களிலும் சிறாரின் ஊர்வலம், மக்கள் ஊர்வலம் என்று இரண்டு ஊர்வலங்களோ; அல்லது எல்லாரும் சேர்ந்த ஒரு ஊர்வலமோ இருக்கும். ஊர்வலத்தில் அநேகர் தேசிய உடை  அணிந்திருப்பார்கள்.நோர்வேக் கொடிபிடித்தவர்கள் வரிசையாக முன்னே
நடப்பர். இதை "கொடிக் கோட்டை" (flagg borg- flag castle) என்பர். அடுத்து (இருக்குமென்றால்) ஆடல் அணிநடைச் சிறுமியர் ஆடியாடி அணிநடை நடப்பர். பள்ளிக்கூட வாத்தியக் குழுவினர்,
அணிநடை கீதங்களும், தேசியகீதமும் இசைப்பர். பிள்ளைமடுவத்து (nursery)பாலகர்கள்,
பள்ளிக்கூடப் பிள்ளைகள் வகுப்பு வகுப்பாக தத்தம் பதாகைகளுடனும்   கொள்கை வாக்கியங்களை 
பாடிய படியும்   செல்வர்.இறுதியாக றுசு மாணவர்கள் செல்வர். மக்கள் ஊர்வலங்களிலே (Band) வாத்தியக் குழுவினர் இசைக்க, தொண்டர் அமைப்புக்கள், செஞ்சிலுவை சங்கம், விளையாட்டுக்
கழகங்கள் மற்றும்  பொதுமக்கள் கலந்து கொள்வர். ஊர்வல ஆரம்பத்தில் அல்லது முடிவில் தேவாலயங்களில் தேசியதின பூசைகள் நடைபெறும்.  நாட்டுக்காகப் பாடுபட்டவர்களின் நடுகற்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்வர். தேசியதின உரை, கலைநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள், பெரியவர்கள் பங்கு பெற விளையாட்டுப் போட்டிகள் அமைக்கப் படும்.
                         
   Bilderesultat for 17mai feiring                




Bilderesultat for 17mai feiring         Bilderesultat for 17mai feiring

           
                    
              
    

சிறுவருக்கான திரைப்படம் திரையரங்குகளில் கட்டணமின்றி காண்பிக்கப் படும்.இவ்வாறு
கொண்டாட்டங்களை அமைப்பதற்கு விழாக்குழு அமைக்கப்படும். ஆண்டு தோறும் இந்த விழாக்
குழுவினர் சுழற்சி முறையில் தெரிவு செய்யப் படுவர். (உதாரணம்:எட்டாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோரும்) இப்படியாக நாள் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சித்தாண்ட மாயை அடுத்தது எப்போது வரும் என்று சிறுவர் முதல் பெரியவர் வரை காத்திருப்பார்.



[17.05.09+Bunader+26.jpg]
தேசிய உடைகளில் ஒரு குடும்பம்


                                                                                                                     
வடநோர்வேயின் ஆதிக் குடிகளான சாமி இன மக்களும் தங்களின் தேசியக் கொடி, தேசிய உடைகளுடன் சித்தாண்ட மாய் கோலாகலத்தில் கலந்து கொள்வர்





             Bilderesultat for 17mai feiring hos samane




Bilderesultat for samiske barna
   

Bilderesultat for innvandrer feirer 17.maiநோர்வேயில்  வந்தேறுகுடியினரான எம்மைப் போன்ற பிற இன மக்களும் மகிழ்ச்சியுடன்கொண்டாடும் ஒரு திருநாள்தான் "சித்தாண்ட மாய்." நோர்வேயில் வாழும் மக்கள்   அனைவருக்கும் வருகின்ற இந்த "சித்தாண்ட மாய்" நாளில் மனம் நிறைந்து   "இந்த நாளையிட்டு வாழ்த்துக்கள்" சொல்லிக் கொள்ளுகின்றோம் .   நோர்வேயில்  வந்தேறுகுடியினரான எம்மைப் போன்ற பிற இன மக்களும் மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் ஒரு திருநாள்தான் "சித்தாண்ட மாய்." நோர்வேயில் வாழும் மக்கள்   அனைவருக்கும் வருகின்ற இந்த "சித்தாண்ட மாய்" நாளில் மனம் நிறைந்து   "இந்த நாளையிட்டு வாழ்த்துக்கள்" சொல்லிக் கொள்ளுகின்றோம் 
Bilderesultat for innvandrer feirer 17.mai
       

FotoBilderesultat for innvandrer feirer 17.mai

செவ்வாய், 5 மே, 2015

காமம் பேசும் ஓவியங்களும்...! காதல் பேசும் மொழிகளும்...!





ஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும்
மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும்
உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...!

****************************************************


எத்தனை பூக்கள் சூடினாலும்
உன்னால் தான் அழகு
அவைகளுக்கு..!

****************************************************


பூகம்பங்களுக்கிடையே
நீ பூத்தாலும்
என் கவிதைகளில்
உனக்கு இடமுன்டு...! 

****************************************************


கல்லைத்தான் கொண்டுவந்தார்கள்
இவளை அனுப்பியிருந்தால்
நிலவையே அல்லவா கொண்டுவந்திருப்பாள்..!

****************************************************



எனக்கு எப்போதும் பயமில்லை... 
வலிக்கு பயந்திருந்தால் 
நான் காதலிக்க அல்லவா பயந்திருக்க வேண்டும்..!
 
****************************************************



என்ன ‌அதிசயம் 
உன் பெயரை உச்சரிக்கும்போதே 
உதடுகள் இனிக்கிறது..!

****************************************************


மௌனத்தை தாய்மொழியாக கொண்டவளே... 
உன் மௌனங்களையெல்லாம் 
மொழி பெயர்க்கும் அகராதி 
என்னிடம் மட்டுமே உள்ளது...!

***************************************************


காகிதத்தில் 
நிறைந்துக்கொண்டிருக்கிறாய் நீ....
 
மையாக
கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
 
****************************************************


எனக்கே தெரியாமல்
ஏதேதோ நடக்கிறது...
காதல் உள்பட...!

***************************************************


 
இனிமேல் நீ தரும்
தண்டனைகள் எல்லாம் 
முத்தங்களாகவே இருக்கட்டும்....!

**********************************************



எவ்வளவு நேரம் என்றாலும்
உனக்கான காத்திருப்புகள்
எனக்கு சுகமானவையே...!

***********************************************


யாருக்கும் தெரியாமல்
ஒவ்‌வொறு சாயங்காலமும்
என்னை மரணப்படுத்துகிறது
உன்னை நினைவுபடுத்தி....!
 

வெள்ளி, 1 மே, 2015

“மே” தின வரலாறு

தொழிலாளர் போராட்டம்

க‌டந்த‌ 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு நாடுகளில் ஆங்காங் கே எழத் துவங்கியது. இதில் குறிப்பி டத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழி லில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர் கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்ட த்தை நடத்தினர். 1834இல் ஜனநாய கம் அல்லது மரணம்என்ற கோஷத் தை முன் வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவ டைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டி டத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலா ளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரி க்கையை முன் வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்

முதல் மே நாளின் போது உருசியா வில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப் பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்க ள் நடை பெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத் தில், ரஷ்யத்தொழிலாளிகளின் நிலை மை குறித்து விரிவாக அலசிய தோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளா தார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண் டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழி லாளி களின் 8 மணி நேர வேலை க்கான போராட்டங்களே ரஷ்யப் புரட் சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணி யாற்றிய தச்சுத் தொழிலா ளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பில டெல்பியாவிலும், பென்சில் வேனியாவிலும் இதே கோரி க் கையை முன்வைத்து இயக் கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழி லாளர்களும் குறைவான வேலை நேரத் தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறு த்தத்தில் ஈடுபட் டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல் வேறு மாநிலங்களில் உள்ள தொழி லாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்ட மைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப் பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொட ர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத் தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந் தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில் விக்கி, சின்சினாட்டி, பால்டி மோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழி லாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங் கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200 க்கும் மேற் பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர் கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழி லாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத் தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வே லை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கிய து. மிச்சி கனில் மட்டும் 40,000 தொழி லாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிர த்தி ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கா ர்மிக் ஹார் வஸ்டிங் மெஷி ன் நிறுவனத்தின்” வாயி லில் 3000-க்கும் மேற்பட்ட தொ ழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத் தினர். இங்கு இடம் பெற்ற கலவரத்தில் 4 தொ ழிலாள ர்கள் காவல் துறை யினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலி யாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலா ளர்கள். 2500 தொழிலாளர்கள் கல ந்து கொண்ட கண்டனக்கூட்டம் அமைதியான முறையில் நடை பெற்றது. இந் நேரத்தில் காவல் துறையினர் அனை வரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ் வேளையில் திடீரெ ன்று கூட்ட த்தில் வெடிகுண்டு வீசப் பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல் துறையினர் பலியானார். பின் னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப் பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரை த் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவ ர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழ க்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப் பட்டது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 11, 1887 அன்று தொ ழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல் பேர்ட் பார்ச ன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர் ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக் கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெ ரிக்க தேசமே அணி திரண் டது. நாடு முழுவதும் 5 லட் சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத் தில் கலந்து கொண்டதோடு,அமெரிக்கா முழு வதும் கறுப்பு தினமாக அனு ஷ்டிக் கப்பட்டது.
அமெரிக்க தொழிலாள ர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகி களின் தியாகமும்தான் இன் றைக்கு மே தினமாக – உழை ப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வ தேச தொழிலாளர் பாராளு மன் றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட் டத்தில் பங்கே ற்றனர். பிரெட் ரிக் ஏங்கெல்ஸ் உட் படப் பலர் கலந்து கொண்ட இக்கூட் டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன் னெடுத்துச் செல்வது என்றும், சிக்கா கோ சதியை இம்மாநாடு கடுமையாக கண் டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர் கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப் பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது