| அரசியலமைப்பு உருவான எயிட்சுவொல் மாளிகை |
அந்த நேரத்தில் நாலு நூற்றாண்டுகளாக நோர்வே, டன்மார்க்கின் ஒரு மாநிலமாக இருந்தது. நெப்போலியனுடன் டன்மார்க் கூட்டுச் சேர்ந்து இருந்தது. சுவீடன் பிரித்தானியாவுடன் அணி சேர்ந்து இருந்தது. நெப்போலியனின் தோல்விக்குப் பின் நோர்வேயை சுவீடனிடம் ஒப்படைக்க வேண்டிய நிலைமை உருவானது.நோர்வேயர் இந்த நிலைமையை அடியோடு வெறுத்தனர். பழையபடி நோர்வேயை ஒரு தன்னாட்சி உடைய நாடாக உருவாக்க விரும்பினர். தம்விதியைத் தாமே தீர்மானிப்பதற்கு முடிவெடுத்தனர். அதற்காகவே தெரிவு செய்யப் பட்ட அரசியலமைப்பு அவை கூடியது. நோர்வேயின் அரசியலமைப்பு உருவானது. 1814ம்ஆண்டு மே மாதம் 17 ந் திகதி நோர்வே அரசியலமைப்பு (Norges Grunnlov) கைச் சாத்தானது.
| அரசியலமைப்பு அவை; எய்ட்சுவொல் ஓவியர்:ஒசுகார் ஆர்னோல்ட் வெர்கெலான்ட் Oscar Arnold Wergeland(1814-1910) |
அத்துடன் டன்மார்க்கின் இளவரசனான கிறிஸ்ற்றியான் பிறெட்றிக் (Christian Fredrik) நோர்வே மன்னராகத் தெரிவு செய்யப் பட்டார். ஆனால் நோர்வேயின் தன்னாதிக்கம் நெடுநாள் நீடிக்கவில்லை.
தன் கீழ் வரவேண்டிய நோர்வேயை ஒரு டன்மார்க் வாரிசிடம் இழக்க சுவீடன் விரும்பவில்லை. மிகவும் குறுகிய ஒருசண்டையின் பின்னே செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் படி சுவீடனின் மேலாதிக்கத்தை நோர்வே ஏற்றுக் கொண்டது. அரச பதவியும், வெளிநாட்டமைச்சும் சுவீடனின் கைவசம் இருந்தது.
மற்றும்படி சொந்தப் பாராளுமன்றத்துடன் (Stortinget) மட்டுப்பட்ட தன்னாட்சியுடன் நோர்வே ஒரு நாடாக இருந்தது. சுவீடனின் எதிர்ப்பை அடக்குமுறையை அவ்வப்போது எதிர் கொண்டாலும், ஏதோ ஒரு வகையில் 1815 ம் ஆண்டிலிருந்து "சித்தாண்ட மாய்" கொண்டாடப் பட்டு வந்தது. நோர்வேப்
பாராளுமன்றம் 1836 ம் ஆண்டு முதல்முறையாகக் "மே 17 " ஐக்கொண்டாடியது.
நோர்வே தனிநாடு ஆனதை; 1905 ம் ஆண்டு யூன் 7 ந் திகதி தன்னிட்டவாரம் நோர்வேப் பாராளுமன்றம் ஒருதலையாக அறிவித்தது. சுவீடனும் எல்லையில் படை குவித்தது. ஆயினும் ஒன்றும் செய்யாது பின் வாங்கியது. பிரித்தானியாவின் ஆதரவை நாடி பிரித்தானியாவின் ஒரு இளவரசியையும், அவரை மணந்த ஒரு டன்மார்க் இளவரசனையும் தன்னாட்சி பெறும் நோர்வேயின் மன்னராகவும், அரசியாகவும் ஆக்க முடிவானது. ஆனால் இளவரசர் விரும்பியபடி நாடளாவிய வாக்கெடுப்பின் பின் அந்த முடிவு எடுக்கப் பட்டது. நோர்வே மொழி கதைக்க அறியாத இந்த இளந் தந்தையும், இரண்டே வயதான மகனும், பழைய நோர்வே அரச பெயர்களைப் பெற்றுக் கொண்டனர். தந்தையார் இளவரசர் கிறிஸ்ற்றியான் பிறெட்றிக் கார்ல் (Christian Fredrik Carl) , ஏழாம் கோகோன் மன்னர் (Kong Haakon 7.) ஆனார். மகன் அலெக்சாண்டர் இளவரசன் ஊலாவ் (Prins Olav) எனப் பட்டான்.
| |
| அரசி மௌட்,இளவரசன் ஊலாவ்,மன்னர் 7ம் கோகோன் |
1906 ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மே 17 இல் அரமனைப் பலகணியில் நின்று பள்ளிச் சிறாரின் அணிவகுப்பை, வாழ்த்துக்களை அரச குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வது வழமை. இந்த ஊர்வலத்தில் உசுலோ மாநகரினது எல்லாப் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளுவர். ஊர்வலம் போய் முடிய பலமணி நேரம் பிடிக்கும். அவ்வளவு நேரமும் கை அசைத்தபடி அரச குடும்பத்தினர் நிற்பர். 1910 ம் ஆண்டு அரசி மௌட் இன் தந்தையும், இங்கிலாந்தின் மன்னருமான 7 ம் எட்வேர்ட் காலமான போதும்நாசிகளின் ஆக்கிரமிப்பில் 1940 -1945 ஆண்டுக்காலங்களிலும் இது நடக்கவில்லை. நோர்வே
"சித்தாண்ட மாய்" தினத்தில் மற்றைய நாடுகளைப் போல அரசியல் தலைவர்களின் பரப்புரைகளுக்கும் (propaganda),கூத்துக்களுக்கும், அரணத்தின்(military) வீரதீரப் பெருமைக்கும்,
எடுப்புக்கும்,சாய்ப்புக்கும் இடமில்லை. முழுக்க முழுக்க மக்கள் கொண்டாட்டம் மட்டுமே.
எடுப்புக்கும்,சாய்ப்புக்கும் இடமில்லை. முழுக்க முழுக்க மக்கள் கொண்டாட்டம் மட்டுமே.
| ஒசுலோவின் கார்ள் யுஹான் வீதியில் 17 மே ஊர்வலம் |
"சித்தாண்ட மாய்" ப் பெருவிழா உசுலோவுக்கும், மற்றப் பெரு நகரங்களுக்கும் மட்டுமே உரிமையானது இல்லை. நோர்வே நாட்டின் மூலை முடுக்கு, இண்டை இடுக்கு சகல இடங்களிலும் கொண்டாடப்படும். அன்றைய காலநிலையோ, ஊர்களின் இயற்கை அமைப்போ, குறைவான சனத்தொகையோ ஊர்வலத்தையும், கொண்டாடத்தையும் தடை செய்யாது.
நோர்வேயின் பிறந்தநாள் என்று சிறார் மகிழ்வர். "Gratulerer med dagen!" " கிறாத்துலேறெர் மே டாகென்!" >> இன்றைய நாளை இட்டு வாழ்த்துக்கள்" என்று ஒருவரையொருவர் எல்லோரும் வாழ்த்திக் கொள்ளுவர்.பள்ளிக்கூட வாத்தியக் குழுக்களும்(school bands ), ஆடல் அணிநடைக் குழுக்களும் (drill team) சித்தாண்ட மாய் ஊர்வலங்களின் முன்னணியில் வண்ணங்கள் சேர்க்கும்.
. 

மேல்நிலைக் கல்வியை முடிக்கவுள்ள மாணவர்கள் (18 ,19 வயசினர்) தங்கள் மூன்று வருடக் கல்வி எதிர் வரும் யூன் மாதத்துடன்முடிவதை குறிக்குமுகமாக கொண்டாடுவர். இதை றுசு கொண்டாட்டம்
(russ >>vill (norwegian) -wild(english)- அடங்காத> தளை,கட்டு நீக்கம் என வருமோ?)
என அழைப்பர். இவர்களது ஆரவாரம் மார்ச்சு மாசத்திலேயே தொடங்கிவிடும். பழைய வாகனங்களை திருத்தி(வாகன கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஆய்வுகளுக்கு உட்படுத்தி சம்மதம் பெற்ற பின்) சிவப்பு சாயம்பூசி அட்டகாசமாக திரிவர். இவர்களது சீருடைகளின் நிறங்களான சிவப்பு, நீலம்,கறுப்பு,வெள்ளைஆகிய நிறங்கள் அவரவர் கல்விப் பிரிவுகளைக் காட்டும். இவர்களது ஒன்று கூடலும், பாட்டும் கூத்தும்
குடியும் பிறநாட்டவரால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று. கிறித்துவ மதப்பற்றுள்ள மாணவர்களும், வேறும் ஒரு குறிப்பிடத்தக்க தொகையான மாணவர்களும் மதுவைத் தீண்டாது வரம்பு மீறாது
கொண்டாட்டத்தில் ஈடுபடுவர் என்பதையும் இங்கு மறவாது குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இந்த றுசு (russ) மாணவர்களும் வலு ஆர்ப்பாட்டமாக சித்தாண்ட மாய் ஊர்வலங்களில் கலந்து ஊர்வலத்தைக் கலகலப்பாக்குவர்.
கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எல்லா இடங்களிலும் சிறாரின் ஊர்வலம், மக்கள் ஊர்வலம் என்று இரண்டு ஊர்வலங்களோ; அல்லது எல்லாரும் சேர்ந்த ஒரு ஊர்வலமோ இருக்கும். ஊர்வலத்தில் அநேகர் தேசிய உடை அணிந்திருப்பார்கள்.நோர்வேக் கொடிபிடித்தவர்கள் வரிசையாக முன்னே
நடப்பர். இதை "கொடிக் கோட்டை" (flagg borg- flag castle) என்பர். அடுத்து (இருக்குமென்றால்) ஆடல் அணிநடைச் சிறுமியர் ஆடியாடி அணிநடை நடப்பர். பள்ளிக்கூட வாத்தியக் குழுவினர்,
நடப்பர். இதை "கொடிக் கோட்டை" (flagg borg- flag castle) என்பர். அடுத்து (இருக்குமென்றால்) ஆடல் அணிநடைச் சிறுமியர் ஆடியாடி அணிநடை நடப்பர். பள்ளிக்கூட வாத்தியக் குழுவினர்,
அணிநடை கீதங்களும், தேசியகீதமும் இசைப்பர். பிள்ளைமடுவத்து (nursery)பாலகர்கள்,
பள்ளிக்கூடப் பிள்ளைகள் வகுப்பு வகுப்பாக தத்தம் பதாகைகளுடனும் கொள்கை வாக்கியங்களை
பள்ளிக்கூடப் பிள்ளைகள் வகுப்பு வகுப்பாக தத்தம் பதாகைகளுடனும் கொள்கை வாக்கியங்களை
பாடிய படியும் செல்வர்.இறுதியாக றுசு மாணவர்கள் செல்வர். மக்கள் ஊர்வலங்களிலே (Band) வாத்தியக் குழுவினர் இசைக்க, தொண்டர் அமைப்புக்கள், செஞ்சிலுவை சங்கம், விளையாட்டுக்
கழகங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர். ஊர்வல ஆரம்பத்தில் அல்லது முடிவில் தேவாலயங்களில் தேசியதின பூசைகள் நடைபெறும். நாட்டுக்காகப் பாடுபட்டவர்களின் நடுகற்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்வர். தேசியதின உரை, கலைநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள், பெரியவர்கள் பங்கு பெற விளையாட்டுப் போட்டிகள் அமைக்கப் படும்.
கழகங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர். ஊர்வல ஆரம்பத்தில் அல்லது முடிவில் தேவாலயங்களில் தேசியதின பூசைகள் நடைபெறும். நாட்டுக்காகப் பாடுபட்டவர்களின் நடுகற்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்வர். தேசியதின உரை, கலைநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள், பெரியவர்கள் பங்கு பெற விளையாட்டுப் போட்டிகள் அமைக்கப் படும்.
சிறுவருக்கான திரைப்படம் திரையரங்குகளில் கட்டணமின்றி காண்பிக்கப் படும்.இவ்வாறு
கொண்டாட்டங்களை அமைப்பதற்கு விழாக்குழு அமைக்கப்படும். ஆண்டு தோறும் இந்த விழாக்
குழுவினர் சுழற்சி முறையில் தெரிவு செய்யப் படுவர். (உதாரணம்:எட்டாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோரும்) இப்படியாக நாள் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சித்தாண்ட மாயை அடுத்தது எப்போது வரும் என்று சிறுவர் முதல் பெரியவர் வரை காத்திருப்பார்.
கொண்டாட்டங்களை அமைப்பதற்கு விழாக்குழு அமைக்கப்படும். ஆண்டு தோறும் இந்த விழாக்
குழுவினர் சுழற்சி முறையில் தெரிவு செய்யப் படுவர். (உதாரணம்:எட்டாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோரும்) இப்படியாக நாள் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சித்தாண்ட மாயை அடுத்தது எப்போது வரும் என்று சிறுவர் முதல் பெரியவர் வரை காத்திருப்பார்.
![]() |
| தேசிய உடைகளில் ஒரு குடும்பம் |
வடநோர்வேயின் ஆதிக் குடிகளான சாமி இன மக்களும் தங்களின் தேசியக் கொடி, தேசிய உடைகளுடன் சித்தாண்ட மாய் கோலாகலத்தில் கலந்து கொள்வர்

![[17.05.09+Bunader+26.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga6xmsRBdhiIxif-gWybDeulPdGHfydrJd9KSMKvficFzBuQJcKaYuJPZsByDZaesIVHe2L8-0cyIGKwKHfGs8nf5CjHfGZ8xfPFmaXRHIdzdMuym4CkhBiwBTfU0m9Lx_7pbgBeaqUkYP/s1600-rw/17.05.09+Bunader+26.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக