
சில சமுக சிந்தனையாளர் உடன் நடத்தப்பட்ட விவாதம், உரையாடல் ஊடக முன்வைக்கப்படும் கருத்துக்கள், சொல்லாடல்கள், கடந்த காலங்களில் இவை தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆதாரபூர்வமான நிகழ்வுகளுடன் சமகால யதார்த்தங்களும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டு
ஒரு தேசிய இனத்தின் அடையாளங்களை பொது மொழியிலும் உளவியல் உருவாக்கத்திலும், பொது பொருளாதாரத் தொடர்பிலும் பொதுவான வாழ்விடப் பகுதியிலும் காண்கிறபொழுதும் கூட நம்மில் பொது மொழி, உளவியல் உருவாக்கத்தையும் முதன்மை அடையாளங்களாக வைத்துக் காண்கிற பொழுது இத்தகைய பன்முகத் தன்மையின் ஊடாகவும் தமிழர் ,தமிழ் முஸ்லிம்கள் ,மலையாக தமிழர் என அடையாளங்களை நாம் தொகுத்துக் கொள்ள முடியும்.
மொழிச் சிறுபான்மையினரை ஒருபோதும் தமிழர்களாக கருதஇயலாது. அதே சமயம் சிறுபான்மை தேசிய இனத்தவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள உருதுமொழி பேசுகின்ற
ஒரு சாரார் ஒரு தேசிய இனத்தை தமது அரசியல் சமூக குறுகிய நலன்களுக்காக, எதிர் நிலை கொண்டு மறுத்துரைக்கின்ற போது, அத்தேசிய இனம் தனது தேசிய இன, அடையாளத் தனித்துவத்தை இழந்து விடும் என நினைப்பது " உரலை நினைத்துக்கொண்டு அவலை இடிக்கும் "கதைதான்.
இது இலங்கை மலையாக வாழ் தமிழ்மக்கள் ,தமிழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகின் எந்த தேசிய இனத்திற்கும் பொருந்தக் கூடியதே.
இலங்கை மலையாக தமிழ் மக்கள் ,தமிழ் முஸ்லிம்கள் தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ, அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான், தேசிய இன விடுதலையை, இனங்களின் தனித்துவத்தை, அம் மக்களின் அபிலாசையை மதிப்பவர்களின் கடமையுடன் கூடிய அரசியல் நேர்மையுமாகும்.
வரலாற்றின் தோல்விகளிலிருந்து எமது பலவீனங்களிலிருந்து, எமது சிந்தனைக் கோளாறுகளில் இருந்து பாடம் கற்காத நாங்கள் , சுயவிமர்சனம் செய்ய முடியாத நாங்கள் , ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமைக்காக அதன் அடையாள இருப்புக்காக போராடுவதாகச் சொல்லிக் கொண்டு ஏனைய தேசிய இனங்களின் தனித்துவங்களையும் அத்தேசிய இன மக்களின் அரசியல் அபிலாசைகளையும் மறுத்துரைப்பது, ஒரு தேசியஇன கருத்தாளர்களின் கபடத்தனத்தை அம்பலமாக்கப் போதுமானதாகும்.
எமது தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு அரசியல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் மலையாக தமிழர் ,தமிழ் முஸ்லிம்கள் அப்பேச்சுவார்த்தைகளில் தாம் ஒரு தனித்த தேசிய இனமாகையால் தமக்கான தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்த குரல் எழுப்பப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவர்களின் இக் கோரிக்கையை இக் குறுந் தமிழ்த் தேசியஇன வாதிகள் நிராகரித்து வந்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக