புதன், 4 ஜூலை, 2012
சனி, 30 ஜூன், 2012
ஓர் இரவு.. ஒரே இரவு...
முள் ஒடித்த தீர்ப்பின் முடிவில்
என் ஆயுள் முடிவு ஆரம்பித்த இரவு
குற்றமும் பாவமும் கொலைகளும் துரத்த
என் விழிகள் உறக்கம் தொலைத்த இரவு
கண்களின் வழியே திரவம் கசிந்து
அமிலமாய் மாறி சுட்ட இரவு
...
பசியில் அலையும் இரப்பையின் இரைச்சல்
பாவ இறைச்சி புசித்த இரவு
பன்னிய பாவங்கள் பட்டியல் இட்டு
பட்டிணத்தாரை படித்த இரவு
அரக்க புத்தனும் புத்த அரக்கனும்
மாறி மாறி யுத்தம் செய்த இரவு
கம்பிகள் வழியே தப்பித்த அரக்கம்
வெற்றுத்தரையில் தவழ்ந்தது புத்தம்
ஒவ்வொரு இரவும் இருக்க இறுக்க
பாவமுடிச்சுகள் நெகிழ்த்தது கண்டேன்
இக் கடைசி இரவின் இறுக்கத்திலே
இம்மை துறந்து இன்மை உணர்ந்தேன்
பிறப்பால் பெற்ற மனித இடத்தை
இறப்பு நிரப்ப
மரணம் பரிசாய் தந்த
மனிதத்துவத்தில்
கடைசி முடிச்சும் கழுத்தை இறுக்க
பாவங்கள் அவிழ்ந்து புத்தனாய் இறந்தேன்
வெள்ளி, 15 ஜூன், 2012
நான் கவிஞன் அல்ல
நிறைய கவிதைகள் படித்து... நிறைய நிகழ்வுகளை நினைத்து...பாதிக்கப்பட்டு.. .. இப்படி பலவித அனுபவங்களில் எனக்குள் எழுந்த வார்த்தைக் குவியல்களை சேமித்து வைத்திருக்கிறேன்... படித்து முடிக்கும் உங்களுக்கு அது கவிதைதானென தோன்றினால் இந்த வலைப்பூவுக்கு வைத்த தலைப்பில் மகிழ்வேன்...
தொடர்ந்து வாருங்கள்..... இந்தப்பூவை தொட்டுச்செல்லுங்கள்...
சனி, 9 ஜூன், 2012
யுத்தம் முடிவடைந்ததை
கொண்டாட வேண்டுமா அல்லது இரங்கல் தெரிவிக்க வேண்டுமா என்கிற கருத்துக்கான
பதில்
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஒருவேளை இந்த விவாதம்
நடைபெற்றுக் கொண்டிருக்கையில், குறுகிய காலத்தில், அந்த மக்கள் அந்த இரண்டில்
ஒன்றை அல்லது இரண்டையுமே அச்சமும் மற்றும் பயமுறுத்தலும் இன்றி நடத்துவதற்கு
சுதந்திரம் உள்ளவர்கள் என்பதை ஆகக் குறைந்தது நாங்கள் ஏற்றுக்
கொள்ளலாமா?
அது எனது மூலக்
கட்டுரையின் இரண்டாவது கவனயீர்ப்பினை கொண்டு வருகிறது – எந்தக் குடும்பத்தினதும்
அழுவதற்கும், துக்கம் அனுட்டிப்பதற்கும், மற்றும் அவர்கள் தெரிவு செய்யும் ஒரு
நாளில் சமயச்சடங்கினை நடத்துவதற்கும் அவர்களுக்குள்ள உரிமையை நான்
வலியுறுத்தியிருந்தேன் - பலியானவர் யார் அல்லது குற்றம் இழைத்தவர் யார் என்கிற
பேதம் இல்லாமல். இராணுவமும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யும் கொன்று குவித்தவர்களில்
குடிமக்கள் படை வீரர்கள், மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் என பலதரப்பட்டவர்கள்
இடம்பெற்றிருந்தார்கள், கொலைகளுக்கும் ஏனைய துஷ்பிரயோகங்களுக்கும் இராணுவம் மற்றும்
எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இரு பகுதியினருமே பொறுப்பு.
துக்கப் படுவதையும்
இரங்கல் தெரிவிப்பதையும் இராணுவமே தடுக்க முயற்சிக்கிறது.
இதைப்பற்றி மேலும் சில
கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:
- .போர் முடிவடைந்ததை சிலர் கொண்டாட விரும்பும் விடயத்தை பொறுத்தவரை, அதைக் கொண்டாட விரும்புபவர்களின் உரிமையை நான் மதித்து ஏற்றுக் கொள்கிறேன். இதை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, போர் முடிவடைந்ததில் எனக்கு மகிழ்ச்சியே, ஆனால் இதுவரை அது கொண்டாடப்பட்டு வரும் விதத்தில் நான் அதை கொண்டாட நினைக்கவில்லை, சமரச முயற்சிகளை முன்னோக்கி நகர்த்துவதே சிறந்த வழி. யுத்தமானது ஜெனிவா மாநாட்டு விதிமுறைகளின்படி நடைபெற்றிருந்தால், ஒருவேளை இந்த விவாதம் வித்தியாசமான ஒன்றாக இருந்திருக்கும். போர் நடைபெற்ற காலம் முழுவதும் அதனோடு வாழ்ந்த மக்களுடன் நான் மேற்கொண்ட தொடர்புகள் மூலம், எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அரசாங்க படையினர் ஆகியோர், ஜெனிவா மாநாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த நாளை மக்கள் தாங்கள் விரும்பிய எந்த வழியின்படியும் அனுட்டிப்பதையும் அத்தோடு அது சட்டபூர்வமாகவும் சமாதானமான வழியில் நடப்பதையும், பயமுறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை பிரயோகித்து இராணுவத்தினர் தடுத்து நிறுத்துவதை நாம் அனைவரும் எந்தவித கருத்து பேதமுமின்றி கண்டிக்க வேண்டும், என நான் நினைக்கிறேன். இந்த விதமான அச்சுறுத்தல்களுக்கு அரசாங்க அதிகாரங்களையும் வளங்களையும் பயன்படுத்துவது, மிக மோசமான செய்கையாகும். எனக்கு தெரிந்தவரையில் பெரும்பாலான நிகழ்வுகள் மதச் சடங்குகளாகும், இது எமது அரசியலமைப்பில் போற்றத்தக்க வகையில் வழங்கப்பட்டிருந்த உரிமையான மதச் சுதந்திரத்தை தடுப்பதாக அமைந்துள்ளது. எனவே கேள்வி என்னவெனில், யுத்தம் முடிவடைந்ததை கொண்டாட விரும்புபவர்கள், துக்கம் அனுட்டித்து இரங்கல் தெரிவிக்க விரும்பும், விருப்பத்தையும் மற்றும் உரிமையையும் மதித்து பாதுகாப்பதுடன், அதில் தலையிடும் முயற்சிகளை கண்டிக்கவும் வேண்டுமா? அல்லது அரசாங்க துருப்புகளை பயன்படுத்தி மக்கள் அழுவதற்கும், துக்கப்படவும், இரங்கல் தெரிவிக்கவும், பிரார்த்தனை செய்வதற்கும், மெழுகுதிரி ஏற்றி, மலர்களை அர்ச்சிப்பது போன்ற வாய்ப்புகளை தடுப்பதுதான், யுத்தம் நிறைவடைந்ததின் சாதகமான விளைவாக வடக்கிலுள்ள தமிழர்களுக்கு கிடைத்துள்ள யுத்தத்தின் பின்னான சுதந்திரமா?
- 2.தேதிகளை பொறுத்தமட்டில்,
எந்த திகதியில் துக்கம் அனுட்டிக்கப்படவே
ண்டும், எந்த திகதியில் அனுட்டிக்க கூடாது என்பதில் எங்களிடையே வித்தியாசமான கருத்து உள்ளது என்பதை நான் உணர்கிறேன். நான் அவர்கள் தெரிவு செய்துள்ள தேதிகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்கூட, தாங்கள் விரும்பிய ஒரு தினத்தில் கொண்டாடுவதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை நான் மதிக்கிறேன், கொல்லப்பட்டவர்களின் மற்றும் காணாமற்போனவர்களின் குடும்பத்தவர்கள், தாங்கள் துக்கம் அனுட்டிக்க வேண்டிய நாளையும், நேரத்தையும் தேர்ந்தெடுப்பதற்குள்ள சுதந்திரத்தை தடுக்க வேண்டுமா? அந்த திகதியை தெரிவு செய்ததில் ஒருவருக்கு மகிழ்ச்சி இல்லாவிட்டால் அதன் கருத்து இராணுவம் அதில் தலையிட வேண்டும் என்பதா? இந்தக் குடும்பங்களில் சிலவற்றுக்கு, தங்கள் பிரியப்பட்டவர்கள் இறந்த அல்லது காணாமற்போன சரியான தேதி தெரியாது. மற்றும் அது ஒரு கூட்டு இரங்கலாக உள்ளதால், ஒரு பொதுவான தேதியை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உண்டு – அதை அவர்கள் முக்கியமானதாகவும் அடையாளத்துக்குரியதாகவும் கருதுகிறார்கள். நான் எனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல, அங்கு நடைபெற்ற சம்பவங்கள் ஒன்றில், ஒரு கத்தோலிக்க மதகுரு மே மாதம் 18ந்திகதி காலமானார், அந்த சமூகத்தால் அவர் ஒரு சமூகத் தலைவராக கருதப்பட்டார். ஆகவே அதே நாளில் பிரபாகரன் கொல்லப்பட்டதால் கொழும்பிலுள்ள சிலபேர் அந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்பதால் அந்த மதகுருவின் குடும்பத்தினரும் அந்த ஊர் மக்களும் அவரின் நினைவு தின நிகழ்வை மற்றொரு நாளில்தான் அனுட்டிக்க வேண்டுமா? மற்றும் அந்த மதகுரு மட்டும்தான் நினைவு கூரப்பட வேண்டுமா – அதில் பங்குகொண்டவர்களில் பலருடைய குடும்ப உறவினர்கள் அதே நாளில் கொல்லப்பட்டிருக்கும்போது? அந்த நிகழ்வு கொல்லப்பட்ட மற்றவர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதற்காக பயன்படுத்தப் படக்கூடாதா? இதேமாதிரியான பிரச்சினை நவம்பர் 27ந்திகதியும் இடம்பெற்றது. எல்.ரீ.ரீ.ஈ இதே நாளில் தங்களுடைய மாவீரர் நாளை கொண்டாடியது என்பதால் நவம்பர் 27ல் நடைபெறும் மதச் சடங்குகளையும் மற்றும் பாரம்பரிய வழக்கங்களையும் இராணுவம் தடைசெய்து வருவது சட்டரீதியானதும், நியாயமானதும் ஆகுமா? அல்லது வன்னியில் உள்ள நடுத்தரவயது மனிதர் ஒருவரது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டங்களை அவரது பிறந்தநாள் பிரபாகரன் பிறந்த நாளான நவம்பர் 26ல் வருகிறது என்பதற்காக இராணுவத்தினர் இரத்து செய்தது சரியா? (இந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2011, நவம்பர், 26ல் உண்மையில் நடந்தது)
- நான் கலந்துகொண்ட மூன்று நிகழ்வுகளில் எந்த வழியிலும் எல்.ரீ.ரீ.ஈயின் போட்டி மனப்பான்மையையோ அல்லது தனிநாட்டுக் கோரிக்கையையோ புகழ்ந்து போற்றும் நடவடிக்ககைகள் இடம்பெறவில்லை என்பதை நான் இங்கு தெளிவு படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன். தனிப்பட்டமுறையில் அத்தகைய எந்த ஒரு நிகழ்விலும் ஒரு பகுதியாக வேண்டும் என நான் விரும்பவில்லை. எப்படியாயினும் சாத்தியமான சர்ச்சைக்குரிய கேள்வியான, போரில் வீழ்ந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் நினைவு கூரப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். குடும்பங்களில் மரணமடைந்த பிரியப்பட்டவர் ஒரு திருடனாக, கொலைகாரனாக கற்பழிப்பு செய்தவனாக, குற்றவாளியாக, சித்திரவதை புரிபவராக அல்லது ஆட்கடத்தல்காரராக இருந்தார் என்கிற அடிப்படையில், அந்தக் குடும்பங்கள் அவருக்காக துக்கம் அனுட்டிப்பதற்கோ அல்லது சமயச் சடங்குகள் நடத்துவதற்கோ உள்ள உரிமையை நாங்கள் பறித்துவிட முடியுமா?
- கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முழங்காவில் பகுதியை சேர்ந்த ஒரு தாய் என்னிடம் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது, எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் மயானம் இருந்த பிரதான வீதி வழியாக நடப்பதையே தான் விரும்பவில்லை ஏனெனில் ஒரு காலத்தில் தனது மகனின் பிறப்பினையும், இறப்பினையும் நினைவுகூர்ந்து, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி பிரார்த்தனை செய்த கல்லறை பாரிய இயந்திரங்களால் பெயர்த்து எறியப்பட்டிருப்பதை காணும் போது தனது இதயம் அனுபவிக்கும் வலியினை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று. எனவே நான் நினைக்கிறேன், கொலைகளுக்கு, காணாமற் போதல்களுக்கு, பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு, சித்திரவதை, காணி அபகரிப்பு போன்றவற்றுக்கு பொறுப்பான ஒரு இராணுவ வீரனின் குடும்பத்துக்கு உள்ள அதே உரிமையைப்போல, மரணமடைந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்;கும ;(பிரபாகரன் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினால் கட்டாயமாக படையில் இணைக்கப்பட்டவர்கள் உட்பட) இரங்கல் தெரிவித்து, துக்கம் அனுட்டித்து, சமயச் சடங்குகளை தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ அவர்கள் தெரிவு செய்யும் ஒரு நாளில் நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது,
- துக்கம் அனுட்டிப்பதற்கும்
சமயச்சடங்கு நடத்துவதற்கும்
உள்ள உரிமையை மறுக்க முடியாது. இது அனுதாபம் தெரிவிப்பது, மற்றும் மரணமடைந்தவரின் அல்லது அவர் அங்கம் வகித்த குழுவின் குற்றவியல் அல்லது சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பது என இரண்டையும் கலந்துவிடக்கூடாது. அல்லது அந்தக் குழுவுக்கு உயிரூட்டும் முயற்சி என நினைத்து குழப்பமடையக் கூடாது. இவை ஒரு மெல்லிய கோட்டினைப் போல இருந்த போதிலும் அவற்றிலுள்ள வித்தியாசத்தை நம்மால் உணரமுடியும். பொதுமக்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் ஆகியோருக்காக இரங்கல் தெரிவிப்பதை நிறுத்துவதில் இராணுவம் தலையிடுவது மற்றும் இறந்த எல்.ரீ.ரீ.ஈ யினரின் கல்லறைகளைத் தகர்ப்பது, போன்ற செயல்கள்; இராணுவம், அரசாங்கம்,மற்றும் பொதுவாக சிங்களவர்கள் மீதுகூட, தமிழர்களின் கோபத்தையும், வெறுப்பையும் மேலும் தூண்டிவிடும். அத்தோடு எல்.ரீ.ரீ.ஈ போன்ற குழுக்களுக்கு ஆதரவு வழங்கும் சாத்தியத்தையும் அதிகரிக்கச் செய்வதுடன் நிலையான சமரசத்துக்கான வாய்ப்புகளும் குறைகின்றன.
- புலிகளைத் தோற்கடித்ததில் குறிப்பாக எனக்கு மிகவும் மகிழ்ச்சி. யாராவது கொல்லப்பட்டால் நான் மகிழ்ச்சி அடையமாட்டேன் - எனவே பிரபாகரன் கொல்லப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அரசாங்க பதவியில் உள்ளவர்கள் மனித உரிமைகளை மீறி கொலைகள் புரிந்துள்ள வேளையில் நான் அதை கொண்டாடவும் மாட்டேன். மரண தண்டனையிலும் எனக்கு நம்பிக்கையில்லை. “பிரபாகரனைத் தவிர அனைத்து உயிரினங்களும் நலமாக இருக்கவேண்டும்” என்கிற கோட்பாட்டிலும் எனக்கு உடன்பாடில்லை. எப்படியாயினும் நான் நம்புவது, சட்ட விதிகளின் நடவடிக்கையூடாக யார் செய்த தவறாயினும் (எல்.ரீ.ரீ.ஈ அல்லது இராணுவம்) அதற்கு நியாயமும், பொறுப்புக்கூறலும் அவசியம் என்பதையே. செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வது, உண்மை பேசுதல்,மன்னிப்பு வழங்குதல், அவ்வாறான தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு ஏற்ற அடையாளங்களையும் மற்றும்; கணிசமானளவு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதையுமே நான் மேலும் நம்புகிறேன், மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் செயல்படுவது சமரசத்தை நோக்கிய பங்களிப்பினை வழங்கும்.
- அதேவேளை நான் விபரித்துள்ள நிகழ்வுகளும் மற்றும் நான் எழுதியுள்ள கட்டுரையும், எல்.ரீ.ரீ.ஈ யினாலோ அல்லது இராணுவத்தினாலோ கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போக்கடிக்கப்பட்டவர்கள் இடையே எந்த ஒரு வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை, யார் யார் எதற்கு பொறுப்பானவர்கள் என்பதை நாங்கள் கண்டறிய வேண்டியது அவசியம் என நானும் நம்புகிறேன். அதனால்தான் நான் பொறுப்புக்கூறும் கடப்பாட்டில் நம்பிக்கை உள்ளவனாக இருக்கிறேன் மற்றும் ஒரு சுயாதீன பொறிமுறை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும். நிச்சயமாக வன்னியில் உள்ள மக்கள் தங்கள் பிள்ளைகள் எப்போது எல்.ரீ.ரீ.ஈ யினால் கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆளானார்கள், மற்றும் எப்போது அவர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமற் போக்கடித்தலுக்கு ஆளானார்கள், மற்றும் எப்பொழுது தங்கள் குடும்ப உறவினர் சரணடைந்து பின் காணாமற் போக்கடிக்கப்பட்டார்கள் என்கிற விபரங்களை நன்கறிவார்கள். தங்கள் பிரியப்பட்டவர்களை கொன்ற எறிகணைகள் எல்.ரீ.ரீ.ஈ யின் பக்கமிருந்தா அல்லது இராணுவத்தின் பக்கமிருந்தா வந்தது என்பதையும் அவர்கள் அறிவார்கள்.பல தசாப்தங்களாக அரசாங்கத்தையும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யையும் கடுமையாக விமர்சித்து வரும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினருடைய (யாழ்ப்பாணம்) அறிக்கைகள் போன்றவை,அப்படியான கதைகளையும் மற்றும் ஆதாரங்களையும் விபரமாக வெளியிட்டுள்ளன. ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விடயம் சம்பந்தமாக ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழாமும், மற்றும் பல அமைப்புகளும்கூட, யார் யார் எதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்கிற தகவலை விபரமாக வழங்கியுள்ளன.
வியாழன், 31 மே, 2012
பத்ர் களம்: சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்கு...
பத்ர் களம்: சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்கு...: வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல. ...
திங்கள், 28 மே, 2012
வியாழன், 17 மே, 2012
வெள்ளி, 27 ஏப்ரல், 2012
மாலை மழைக்கு நனைந்துவிட வேண்டாம் என
நீ ஓடினாய்மழையும் விடாமல் துரத்தி
அணைத்தது உன்னை முதல் துளி உன் மீதும்
மறு துளி மண் மீதும் விழுந்தது
உன் மீது விழுந்த மழைத்துளி சிலிர்த்தது
மண் மீது விழுந்த மழைத்துளி மறித்தது
பனி பிரதேசத்தில் கூட பார்க்கும் வரம் கிடைக்குமா
தெரியாதுஉன் போன்ற
பனிப்பாறை மழையில் நனைவதை
உன்னைவிட உன்
ஆடைக்கு தான் குளிர் அதிகம் போல
உன்னை இறுக்கி அணைத்தது

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012
ரகசியம் !
இதை சொல்லிவிட்டு - இன்று வரை
தொலைந்து போன நிம்மதியும்
இதை சொல்லாமல் - இன்னும் தொடரும்
சுகமான அனுபவிப்புகளும்
இதை மனதில் வைத்து - காணாமல்
மறைந்து போன சந்தோசமும்
இன்னும் எல்லா நிலைகளிலும்
ரகசியம் பாதுகாக்க பட வேண்டும்
இறுதியாகவும் !
உறுதியாகவும் !!
ரகசியம்
வியாழன், 5 ஏப்ரல், 2012
வெள்ளி, 2 மார்ச், 2012
வியாழன், 1 மார்ச், 2012
செவ்வாய், 28 பிப்ரவரி, 2012
வெள்ளி, 17 பிப்ரவரி, 2012
திங்கள், 6 பிப்ரவரி, 2012
மீண்டும் வருமா வசந்தம்
முடிந்த அத்தியாயத்திற்கு
முகவுரை தேடுகிறேன்...
விடிந்த இரவுக்கு
விளக்கேற்ற விழைகிறேன்..!
பட்டமரத்தில்
பசுந்தளிர் தேடுகிறேன்..!
அணைந்த நெருப்பில்
குளிர்காய முயல்கிறேன்..!
விரிசல் கண்ணாடியில்
ஒற்றை உருவம் தேடுகிறேன்..!
ஓட்டைப் பானையில்
நீர் நிரப்ப முயல்கிறேன்..!
வாடிய மலரில்
வர்ணம் தேடுகிறேன்..!
சிந்திய கண்ணீரை
சேகரிக்க நினைக்கிறேன்..!
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012
இறகுகள்
எங்கள் சிறகிலிருந்து பிரிந்த இறகுகள்
எங்கள் காலடிகளில் சிதறிக்கிடக்கின்றன
இயன்றவரை சேகரிப்போம் வாருங்கள்
மீண்டும் ஒருமுறை முயசிபோம்
இறகுகள்கூட்டி சிறகுசெய்து பறப்பதற்கு..!!
அப்பாவின் பெண்ணே
உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!
என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...
உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...
உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...
நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...
உன் கண்ணீருக்கெல்லாம்
கண்ணீர் சொல்ல முடியா
வலியில் நான் துடிக்கின்றேன்...
என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...
சொல்லத் தேவையில்லை
காலம் முழுதும் உன்னை
மனதில் சுமப்பேன் என்பதை
திங்கள், 30 ஜனவரி, 2012
சனி, 28 ஜனவரி, 2012
நான் கண்ட கனவு
கண்ணோடு எந்நாளும் மறையாத
கனவொன்று நான் கண்டேன்...
விலையில்லா புன்னகை இதழோடு
பூக்ககண்டேன்...
மனதோடு மறையாத முகமொன்று
என்னை புதுவித உணர்வுக்குள் தள்ள கண்டேன்...
வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் என்னை சுற்றி பறக்க கண்டேன்...
இதுதான் உன்னை நேரில்
கண்டதும் உணர்ந்து கொண்டேன்
வியாழன், 26 ஜனவரி, 2012
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
ஏன் நான்
நானும் பூவாய் தான் !!
பூத்தேன் !!!
நீ பூத்த தோட்டத்தில் !!!
நீயோ பல பூவையரின் !!!
கூந்தலில் புன்னகைக்கிறாய் !!!
நானோ புள் கட்டுகளின்!!!
கூட்டத்தில் புதைக்க பட்டேன் !!!
பறிப்பார் ஆள் இல்லாமல் !!
எடுப்பார் ஆள் இல்லாமல் !!
வெள்ளி, 20 ஜனவரி, 2012
நேசம்
கண்ணீர் விடுகின்றேன் தினம்! தினம்!
கண்ணீரை துடைக்க கரம் கிடக்கும் என்று !
உதவி செய்கின்றேன் தினம் தினம்!
ஒரு இதயமாது உதவி செய்ய வருமாம் என்று !
இறக்கம் படுக்கின்றேன் தினம் தினம் !
ஒரு இதயமாது இறக்க பட வருமாம் என்று !
கண்ணீரை துடைக்க கரம் கிடக்கும் என்று !
உதவி செய்கின்றேன் தினம் தினம்!
ஒரு இதயமாது உதவி செய்ய வருமாம் என்று !
இறக்கம் படுக்கின்றேன் தினம் தினம் !
ஒரு இதயமாது இறக்க பட வருமாம் என்று !
செவ்வாய், 17 ஜனவரி, 2012
எல்லாளன்: இன சமத்துவக் காவலனான சமணத் தமிழ் மன்னன்
[மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்]
(பாகம் : 3)
ஏலாரா என்ற ஒரு தமிழ்க்குடிமகன்,சோழ நாட்டில் இருந்து வந்து, அசெலாவை வென்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள், நண்பன் பகைவன் என்று பாராமல் நீதி செலுத்தினான்." (மகாவம்சம்)
துட்ட கைமுனு மகாவம்சத்திற்குப் பிடித்த கதாநாயகனாக இருந்த போதிலும், அவன் எதிரியான எல்லாளனை பற்றியும் வானளாவப் புகழ்கின்றது. "எமது நண்பர்கள் எல்லாம் நல்லவர்கள். நமது எதிரிகள் எப்போதுமே கெட்டவர்கள்." என்ற கறுப்பு, வெள்ளைப் பார்வை, குறுகிய அரசியல் நலன்களை பெற்றுத் தரலாம். ஆனால், உண்மையை அறிந்து கொள்வதற்கு உதவப் போவதில்லை. சிங்கள இனவாதிகள், துட்டகைமுனுவை தமது மாவீரனாக போற்றுவதற்கு கூறும் நியாயம், "எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளன்" என்பது தான். மகாவம்சம் குறிப்பிடும் முதலாவது அந்நிய ஆக்கிரமிப்பானது, விஜயனதும், அவன் தோழர்களினதும் வருகை தான். தம்மை விஜயனின் வம்சாவளியினர் என்று கூறிக் கொள்ளும் சிங்கள இனவாதிகள், எல்லாளன் போன்றோரை ஆக்கிரமிப்பாளர்களாக காட்டுவது வேடிக்கையானது. உண்மையில், இருபதாம் நூற்றாண்டு சிங்கள-தமிழ் முரண்பாட்டு அரசியலுக்கு ஏற்றவாறு, தம்மை பூர்வ குடிகளாக காட்டுவதே அவர்களது நோக்கம். இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சிங்களவர்கள், தமிழர்களின் முன்னோர்கள் இலங்கையின் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர். அதே நேரம், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மக்கள் திரளுடனும் கலந்துள்ளனர். இன்றுள்ள சிங்களவர்களும், ஈழத் தமிழரும் கலப்பினங்கள் தான். குறுகிய மனோபாவம் கொண்ட இனவாதிகள் மட்டும், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
வட இந்தியாவில் (வங்காள தேசம்?) இருந்து வந்து குடியேறிய விஜயனும், தோழர்களும் பேசிய மொழி என்ன? அவர்களது மதம் என்ன? அவர்கள் முதலில் பழங்குடி இனமான இயக்கர் இனப் பெண்களையும், பின்னர் பாண்டிய நாட்டுப் பெண்களையும் மணம் முடித்து வாழ்ந்துள்ளனர். அவர்களது சந்ததியினர் சிங்களவர்களா, அல்லது தமிழர்களா? உண்மையில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர், சிங்களவர், தமிழர் என்ற பேதம் உருவாகி இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மொழி ஒரு இனத்தின் குறியீடாக கருதப் படவில்லை. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே நிறுவனமயப் படுத்தப் பட்ட மதங்கள், உலகில் தோன்றலாயின. அது ஒரு "மதப் புரட்சி". நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன்னை, நிறுவனமயப் பட்ட மதத்துடன் இனம் கண்டான். மேற்குலகில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியன அரசுகளால் அங்கீகரிக்கப் பட்ட மத நிறுவனங்கள். இந்திய உப கண்டத்தில், பௌத்தமும், சமணமும் நிறுவன மயப் பட்ட மதங்களாக கருதப் பட்டன. இந்து மதத்தை ஒரு மதமாக கருத முடியாதா? அன்றிருந்த இந்து மதம், இன்றுள்ளதை விட மிகவும் வித்தியாசமானது. யாரும் இந்து மதத்தில் புதிதாக சேர முடியாது, அந்த மதத்தில் பிறந்திருக்க வேண்டும். இத்தகைய கடுமையான விதிகளால், பிராமணர்கள் மட்டுமே இந்துக்களாக இருந்தனர். அதனால், பிற சாதிகளை சேர்ந்த மக்கள், ஒன்றில் பௌத்த மதத்திற்கு, அல்லது சமண மதத்தில் சேர்ந்ததில் வியப்பில்லை.
தமிழகத்தில் பல்லவர் காலத்தில், இந்து மதம் மீளுயிர்ப்புப் பெற்றது. மக்களுக்கு புரியக் கூடிய மொழியிலேயே மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை சைவ சமயக் குரவர்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் உணர்ந்து கொண்டனர். அவர்கள் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, பௌத்த, சமண மதத்தவர் மீது புனிதப் போரை தொடுத்தார்கள். சோழர்கள் காலத்தில், மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் புனிதப் போர் தீவிரமடைந்தது. ஆனால், தமிழகத்தில் இந்து மதம் தலை தூக்குவதற்கு முன்னர், இன்னொரு மதப்போர் நடந்தது. பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் இடையிலான போர் அது. அந்தப் போரில் சமணர்கள் வென்றனர். தமிழ் பௌத்தர்கள் பலர், புத்த மதத்தின் கோட்டையாக விளங்கிய இலங்கைக்கு சென்று அடைக்கலம் கோரினார்கள்.
"பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன.சில காலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்கு குறைந்து விட்டது. ....... கி.பி. 8 ம் நூற்றாண்டில் சமண சமயக் குருவான பேர்பெற்ற ஆச்சாரிய அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்த கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள், இலங்கைக்கு சென்று விட்டனர்." (சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி)
இன்றைக்கு பௌத்த மதத்தை பின்பற்றும் அனைவரும் சிங்களவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் தமிழர்களாகவும் உள்ளனர். ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரும் இதே மாதிரித் தான் இருந்திருப்பார்களா? இந்துக்களின் "தாய் நாடான" இந்தியாவிலேயே, இந்து மதம் அழிந்து கொண்டு சென்றது. இலங்கையில் அது தனியாக நிலைத்து நின்றிருக்குமா?
"தமிழ் நாட்டிலே சமண சமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர, ஏனைய தொழில்களை எல்லாம் இந்த மதம் சிறப்பித்து போற்றி வந்தது. மிகச் சிறந்த தொழிலான பயிர்த் தொழிலை,பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வு படுத்தியது போலல்லாமல்,சமண சமயம் பயிர்த் தொழிலை சிறந்த தொழில் என்று போற்றியது.....சேர, சோழ,பாண்டிய, பல்லவ அரசர்களில் சமண சமயத்தை சேர்ந்திருந்தனர். இவர்களால் சமண சமயத்திற்கு ஆசியும், செல்வாக்கும் ஏற்பட்டன." (சமணமும் தமிழும்)
ஒரு காலத்தில் தமிழ் நாடு முழுவதும் சமண மதம் பரவியிருந்திருப்பின், இலங்கையிலும் பரவியிருக்க வாய்ப்புண்டல்லவா?
அன்று தமிழகத்தில் நிலவிய சூழ்நிலை போன்று தான், இலங்கையிலும் காணப்பட்டது. மக்கள் ஒன்றில் பௌத்தர்களாக, அல்லது சமணர்களாக இருந்தனர். வட பகுதியில் சமணர்களும், தென் பகுதியில் பௌத்தர்களும் பெரும்பான்மையாக இருந்திருப்பார். மக்கள் சிங்களம், தமிழ் எந்த மொழியைப் பேசினாலும், அவர்கள் இவ்விரண்டு மதங்களில் ஒன்றைப் பின்பற்றினார்கள். அனுராதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரை, முன்னொரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அது போன்று, வேறு பல சமணக் கோயில்கள், பிற்காலத்தில் பௌத்த விகாரைகளாக அல்லது சைவக் கோயில்களாக மாற்றப் பட்டிருக்கலாம்.
ஈழத்தில் சமண சமயம் சீரும் சிறப்புடனும் இருந்ததைக் குறிக்கும் இன்னொரு சான்று, எல்லாளனின் வரலாறு. எல்லாளன் சமண மதத்தை சேர்ந்தவன் என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கு முதலில், எல்லாளன் ஒரு இந்து மன்னன் என்பதற்கு, யாராவது ஆதாரத்தை காட்டியுள்ளனரா? இலங்கையை ஆண்ட இந்து- சோழ மன்னர்கள், சைவக் கோயில்களைக் கட்டியதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன. எல்லாளன் ஒரு சைவக் கோயிலையாவது கட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், அனைத்து மதங்களையும் சமமாக நடத்தியதாக பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. "எல்லாளன் சென்ற தேர் ஒரு தடவை, புத்த ஸ்தூபியின் ஒரு இடத்தில் இடித்து விட்டது. அரசன் அதனை வேண்டுமென்றே செய்யா விட்டாலும், தேரின் மீதிருந்து இறங்கி வீதியில் படுத்துக் கொண்டு, தான் மீது தேரைச் செலுத்த சொன்னான். ஆனால், பிட்சுக்கள் அதனை அனுமதிக்கவில்லை..... அவன் அந்த பதினைந்து ஸ்தூபிகளை செப்பனிட்டு விட்டுப் புதிதாக நிறுவ, பதினைந்தாயிரம் காசுபணம் செலவிட்டான்." (மகாவம்சம்)
எல்லாளனின் நீதி வழங்கும் நெறி முறைக்கு உதாரணமாக, படுக்கையின் மேல் கட்டப் பட்ட மணி பற்றிய கதை கூறப் படுகின்றது.
" அவனுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப் பட்டிருந்தது. நீதி கேட்டு வந்தவர்கள், எந்த நேரத்திலும் அதை அடித்து அரசனை அழைக்கலாம். அந்த அரசனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. ஒரு நாள் திசா குளத்திற்கு அந்த மகன் தேரில் சென்ற போது, தெரியாமல் தாய்ப்பசுவுடன் படுத்துக் கிடந்த கன்றுக் குட்டியின் கழுத்தில் தேரை ஏற்றிக் கொன்று விட்டான். அந்தப் பசு மனவேதனையில் மணியை அடித்தது. அதே தேர்ச் சக்கரத்தின் அடியில் மகனைக் கிடத்தி கழுத்தின் மீது தேரைச் செலுத்தித் தலையைத் துண்டித்தான்." (மகாவம்சம்) ஒரு பசுவுக்கு நீதி வழங்குவதற்காக, தனது மகனைக் கொன்ற நியாயவானாக எல்லாளன் மகாவம்சத்தால் புகழப் படுகிறான். இந்தப் பெருமை வேறெந்த தமிழ் மன்னனுக்கோ, அல்லது சிங்கள மன்னனுக்கோ கிடைக்கவில்லை. இதிலே கவனிக்கப் பட வேண்டிய இரண்டு அம்சங்கள். ஒன்று, மிருகங்களையும் மனிதருக்கு சமமாக மதிக்கும் ஜீவகாருண்யம். இரண்டு, பசுவும்,பறவையும் கூட நீதி கேட்டு வரக் கூடியதாக கட்டப்பட்ட மணி. இவையெல்லாம், இந்து மரபு அல்ல. சமண மத நம்பிக்கைகள். இன்றைக்கும் தீவிர சமண மதப் பற்றாளர்கள், வெளியில் போகும் பொழுது வாயை துணியால் கட்டிக் கொள்வார்கள். அதற்கு காரணம், தெரியாமல் எந்தப் பூச்சியாவது வாய்க்குள் அகப்பட்டு சாகக் கூடாது என்பது தான்.
நமது காலத்திய இனவாதிகள், எல்லாளன்- துட்ட கைமுனு போரை, சிங்கள- தமிழ் போராக திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது சிங்கள-தமிழ் முரண்பாட்டால் எழுந்த போரல்ல. அதே நேரம், பௌத்த - இந்து மதங்களுக்கு இடையிலான யுத்தமும் அல்ல. ஒரு வேளை, தமிழகத்தில் தீர்க்கப்படாத பௌத்த - சமண மோதல், இலங்கையில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் அந்தக் கருத்தை உறுதிப் படுத்தும் சான்றுகள் கிடைக்கவில்லை. துட்ட கைமுனுவின் பக்கத்தில் தமிழ் வீரர்கள் போரிட்டனர். அதே போன்று, எல்லாளனின் படையில் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல, சிங்கள சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். போர் முடியும் வரையில், சிங்கள தளபதிகளும், வீரர்களும் எல்லாளனுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். ஒருவர் கூட எல்லாளனுக்கு துரோகமிழைத்து விட்டு, "சிங்கள மன்னனான" துட்ட கைமுனுவிடம் போய்ச் சேரவில்லை. எல்லாளனின் படையில் முன்னணி அரங்கில் நின்று போரிட்ட சிங்கள சேனாதிபதிகளின் பெயர் விபரம் பின்வருமாறு: தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா .... இந்த சிங்கள சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இன்னொரு முக்கியமான தகவல். தீகபாய சேனாவி, துட்ட கைமுனு பக்கம் நின்ற (சிங்கள) குறுநில மன்னர்கள் மத்தியில், எல்லாளனுக்கு ஆதரவு திரட்டும் இராஜதந்திர நகர்வுகளை செய்துள்ளான்!
எல்லாளன் - துட்ட கைமுனு போர், நமது காலத்திய இனப் பிரச்சினையுடன் எந்த விதத்திலும் ஒத்துப்போகவில்லை என்பது தற்போது தெளிவாகியிருக்கும். சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் வரலாற்றைத் திரித்து, தமக்கேற்றவாறு அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் யாவும், எல்லாளனுக்கும், துட்ட கைமுனுவிற்கும் அபகீர்த்தியை தேடித் தருகின்றன. துட்ட கைமுனுவுக்கு சிங்கள முலாம் பூசியதும், எல்லாளனுக்கு சைவ முலாம் பூசியதும், மன்னிக்க முடியாத வரலாற்று மோசடிகளாகும். நமது காலத்திய இனவாதிகள் பெரிதும் விரும்பும், இன அல்லது மத முரண்பாட்டுப் போர்கள், கி.பி. 9 ம் அல்லது 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றின. ராஜராஜ சோழனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் இலங்கை வரையில் விஸ்தரிக்கப் பட்டது.
சோழர்கள் "தமிழுணர்வு" கொண்டவர்கள் அல்ல, மாறாக "சைவ ஆகம மத உணர்வு" கொண்டவர்கள். அவர்களது செயற்பாடுகள் பல மத அடிப்படைவாதிகளின் செயல்களை ஒத்துள்ளன. சோழர்களின் ஆக்கிரமிப்புப் படைகளால், இலங்கையில் பௌத்த மதம் நசுக்கப் பட்டது. புத்த விகாரைகள் இடிக்கப் பட்டன, புத்த பிக்குகள் கொல்லப் பட்டனர். பிற்காலத்தில், விஜபாகு அரசனால் சோழர்கள் வெளியேற்றப் பட்டாலும், அப்போது பௌத்த மதத்தை வளர்ப்பதற்கு ஒரு பிக்கு கூட இருக்கவில்லை! அதனால் பர்மாவில் இருந்து புத்த பிக்குகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது!! இத்தகைய கொந்தளிப்பான காலகட்டத்தின் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. பௌத்த மதத்திற்கு நேர்ந்த நெருக்கடிகளை பட்டியலிடும் மகாவம்சம், சோழர்களால் பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில், மகாவம்சம் ஒரு பக்கச் சார்பாகவே எழுதப் பட்டுள்ளது.
(முற்றும்)

துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!
மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்
(பாகம் : 2)
<துட்டகைமுனு என்ற பண்டைய சரித்திர கால மன்னன், இன்று சிங்கள தேசியவாதிகளின் ஒப்பற்ற கதாநாயகன். தமிழர்களுடனான இன முரண்பாட்டுப் போரில், துட்டகைமுனுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப் பட்டது. சிறிலங்கா அரசு கூட, தனது சிறப்புப் படையணிக்கு, "கெமுனு படைப்பிரிவு" என்று பெயரிட்டிருந்தது. "துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை போரிட்டு வென்றதாலேயே", அவனுக்கு அவ்வளவு மரியாதை. இந்தக் கதையானது, பாடசாலை மாணவர்களுக்கான, சிங்கள மொழிப் பாட நூலில் கூட எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின், சரித்திரப் பாட புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதியிருக்கும் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை. சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான அரச பாடத்திட்டம், ஒரே மாதிரியான சரித்திரத்தை தான் போதிக்கின்றது. இதிலே குறிப்பிட்டளவு பகுதி, மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. வேடிக்கை என்னவென்றால், சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், ஒரே கதைக்கு வெவ்வேறு விதமான பொழிப்புரைகள் வழங்கி வருகின்றனர். எமக்கு சரித்திரம் படிப்பித்த ஆசிரியர் பின்வருமாறு விபரிப்பார். "எமது தமிழ் மன்னர்கள், சிங்களவர்களை ருஹுனு (தென் பகுதி) வரை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இன்னும் கொஞ்சம் போனால் கடலுக்குள் குதித்திருப்பார்கள்." வகுப்பறையில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகும். "மகாவம்ச மனோபாவம்", சிங்களவர்களை மட்டுமல்லாது, தமிழர்களையும் ஆட்டிப் படைக்கின்றது. பண்டைய மன்னர்களின் சரித்திரத்தை, சிங்கள, தமிழ் முரண்பாடாக மாற்றுவதில் மகாவம்சம் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளது. இருப்பினும், அது முழுக்க முழுக்க தமிழின விரோதக் கருத்துக்கள் கொண்டது எனக் கூறி விட முடியாது. மகாவம்சத்தைப் பொறுத்த வரையில், புத்த மதத்தை பாதுகாத்து பேணி வளர்க்கும் மன்னர்கள் எல்லோரும் அதற்கு நாயகர்கள் தான். பௌத்த ஆலயங்களை கட்டிய, அல்லது தானம் வழங்கிய, தமிழ் மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகளின் பெயர்களை குறிப்பிடத் தவறவில்லை. "ஸ்ரீசங்கபோதியின் சேனைத் தலைவனாக விளங்கிய பொத்தசதா என்ற தமிழன், ஜெத்தவன விகாரைக்கு ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான். மகாகந்தன் என்ற தமிழ் அமைச்சன், தனது பெயரில் ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான்." ( சூளவம்சம். 22 ) அதே நேரம், புத்த விகாரைகளை நாசப்படுத்தி, மத வழிபாட்டை ஒடுக்கிய மன்னர்களை வில்லன்களாக சித்தரிக்கின்றது. சீதாவாக்க ராஜசிங்க என்ற "பௌத்த-சிங்கள மன்னன்", இந்து மதத்திற்கு மாறி, பல புத்த பிக்குகளை கொன்ற கதை ஒன்று மகாவம்சத்தில் உள்ளது. "இலங்கையில் முதன்முதலாக பௌத்த சமயத்தை தழுவிய தேவநம்பிய தீசன் என்ற மன்னன் ஒரு தமிழன் தெரியுமா?" என்று கூறி, தமிழ்த் தேசியவாதிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். ஆனால், அவர்களிடம் "துட்டகைமுனு யார்?", என்று கேட்டால், ஒரு சிங்களவன் என்ற பதில் வரும். தேவநம்பியதீசன் என்ற தமிழ் அரசனின் பரம்பரையில் வந்த துட்டகைமுனு எப்படி சிங்களவன் ஆனான்? துட்டகைமுனுவின் பாட்டன், முப்பாட்டன் பெயர்கள் எல்லாம், "மூத்தசிவன், காக்கவண்ண திஸ்ஸ" என்று தமிழ்ப் பெயராகக் காணப்படுகின்றன. இதனை தமிழ்த் தேசிய இணையத் தளமான Tamil Canadian விரிவாக விளக்குகின்றது. It may be of interest and value to note that all kings from Muthu Siva (307-247 B.C.) right down to the beginning of the Christian era (a period of 300 years), were Tamils and barring King Muthu Siva, others were Buddhist by faith. The much adored and admired King Duttu Gemunu was a Tamil, both from his father`s side Kavan Tissa, and his mother`s side Vihara Devi, daughter of the Naga King of Kelaniya and a direct descendent of King Uttiya. They were of course, Buddhist by faith. (Source : www.tamilcanadian,com) அப்படியானால், தமிழ் மன்னர்களான எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையில் எதற்காக போர் மூள வேண்டும்? ஒரே இன மக்களிடையே நிலவும், உறவினரின் கொலைக்காக பழிவாங்கும் பகையுணர்ச்சி தான் காரணம். பரம்பரை பரம்பரையாக பழிவாங்கும் வழக்கம். துட்டகைமுனுவின் பாட்டனான அசெலாவை கொன்று தான், எல்லாளன் ஆட்சியைக் கைப்பற்றினான். தேவநம்பிய தீசன் காலத்தில் இருந்து, இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து வந்த, புகழ்பெற்ற உள்நாட்டு அரச பரம்பரைக்கு, அது ஒரு பேரிழப்பு. பண்டைய இலங்கையில், எத்தனையோ அரச பரம்பரைகள் இருந்த போதிலும், முதன் முதலாக பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்ட அரச வம்சம் என்பதால், மகாவம்சத்தினால் போற்றப் பட்டது. தெற்குப் பகுதி குறுநில மன்னர்களை போரில் வென்று, ருஹுனு மாநிலத்தை ஒன்றாக்கிய பெருமை, துட்டகைமுனுவின் தந்தை கவன்திஸ்ஸவை சேரும். துட்டகைமுனுவும், அவன் சகோதரனும் சிறுவர்களாக இருந்த காலத்தில், தந்தையான கவன்திஸ்ஸ அவர்களுக்கு தினசரி உணவூட்டுவான். அப்பொழுது "தமிழர்களிடம் யுத்தம் செய்வதில்லை" என்று உறுதிமொழி தருமாறு கேட்டிருக்கிறான். சகோதரர்கள் இருவரும், உறுதிமொழி கொடுக்க மறுத்து சாப்பிடாமல் போயிருக்கிறார்கள். துட்டகைமுனு வாலிபனாக வளர்ந்த காலத்தில், "தமிழர்களுடன் போரிட மறுத்த" தந்தையை சேலை கட்டிக் கொள்ளுமாறு பரிகசித்துள்ளான். ஏதோ ஒரு காரணத்திற்காக, கவன்திஸ்ஸ எல்லாளனுடன் போரிடுவதை விரும்பவில்லை. அந்தக் காரணம் என்ன? அதனை மகாவம்சம் விளக்கவில்லை. ஒரு வேளை, "எல்லாளனுடன் போரிடுவதற்கு இது ஏற்ற தருணம் அல்ல, என்று கவன்திஸ்ஸ நினைத்திருக்கலாம். நீதியும், நேர்மையும் மிக்க மன்னனாக இலங்கை மக்களால் மதிக்கப்பட்ட எல்லாளனை எதிர்ப்பது புத்திசாலித் தனமானதல்ல." என்று நினைத்திருக்கலாம். துட்டகைமுனு இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து, பல வருடங்கள் மலேயாவில் தங்கியிருந்திருக்கிறான். அவன் தகப்பனின் சொல் கேளாத தனயன் என்பதால் தான், "துஷ்ட காமினி" (துட்ட கைமுனு அல்லது துட்ட கெமுனு) என்று பெயர் வந்தது. இலங்கை முழுவதும், சிங்களவர், தமிழர் பேதமின்றி, அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எல்லாளனின் புகழ் பரவியிருந்தது. இந்துக்கள் மட்டுமல்லாது, பௌத்தர்களாலும் மதிக்கப் பட்ட எல்லாளனை, போரிட்டு வெல்வது அரசியல் தற்கொலைக்கு சமமாகும். மலேயாவில் இருந்து திரும்பிய துட்டகைமுனு, எல்லாளன் மீது போர் தொடுக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தான். எல்லாளன் நீதிநெறி தவறாத அரசனாக ஆட்சி புரிந்த போதிலும், அவனது பிற்கால ஆட்சிக் காலத்தில், சில பௌத்த விரோத நடவடிக்கைகள் இடம்பெற்றன. குறுகிய மதவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்பட்ட, சில குறுநில மன்னர்களும், தளபதிகளுமே அதற்கு காரணம். அவர்களால் துன்புறுத்தப்பட்ட புத்த பிக்குகள் எல்லாளனின் நாட்டை விட்டோடி, துட்டகைமுனுவின் நாட்டில் அடைக்கலம் புகுந்தனர். உண்மையில், எல்லாளனின் வீழ்ச்சி அப்போதிருந்தே ஆரம்பமாகி இருக்க வேண்டும். துட்டகைமுனு, "பௌத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரை" அறிவிப்பதற்கு, அது போன்ற சம்பவங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. எல்லாளனின் பூர்வீகம் சோழ மண்டலம் என்பதால், அன்னியர்கள் மீதான வெறுப்புணர்வும் சேர்ந்து கொள்ளவே, அதிர்ஷ்டக் காற்று துட்டகைமுனு பக்கம் வீசியது. எல்லாளனின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், பௌத்தர்களும் ஒரு தாய் மக்களாக சரிசமமாக நடத்தப் பட்டனர். அதனால் தான், எல்லாளனின் ஆட்சியை நாற்பத்துநான்கு ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியவில்லை. இந்த உண்மையை, குறுகிய இனவாத மனோபாவம் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை, எல்லாளன் இன்று ஆண்டிருந்தால், சிங்களவர்களையும், தமிழர்களையும் சகோதரர்களாக கருதிய காரணத்திற்காக, அவனுக்கு துரோகிப் பட்டம் சூட்டியிருப்பார்கள். துட்டகைமுனு ஒரு தமிழன், அவனது படையில் தமிழ் வீரர்களும் இருந்துள்ளனர். அப்படியாயின், மகாவம்சம் எதற்காக தமிழர்களை எதிரிகளாக சித்தரிக்கின்றது? இதற்கான விடையை, கிறிஸ்தவ மத வரலாற்றில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்கள். ஆனால், விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் யூதர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப் படுகின்றன. மகாவம்சம் தமிழர்களை பகைவர்களாக சித்தரிக்கும் அதேயளவு வன்மத்துடன், பைபிள் யூதர்களை சித்தரிக்கின்றது. அதற்கு காரணம், ஆதிக் கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் பூர்வீகம் யூத இனமாக இருந்த போதிலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள். கிரேக்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் தான், பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். அவர்கள், யூத சமயத்தை பின்பற்றிய ஒரே இனத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து, தங்களை "வேறு இனமாக" காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அதன் விளைவு தான், யூதர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் பிரச்சார அணுகுமுறை. மகாவம்சத்தில் காணப்படும் தமிழர் விரோத கருத்துகளின் மூலமும், நோக்கமும் அது தான். அதாவது, பௌத்த மதத்தை பின்பற்றிய தமிழர்கள், தமக்கென சொந்தமாக சிங்கள மொழி ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். வரலாற்றில் செயற்கையாக உருவாக்கப் படும் இனம் ஒவ்வொன்றும், தனக்கென பிரத்தியேகமான பூர்வீகக் கதைகளையும் கற்பித்துக் கொள்ளும். அதற்கு சிங்கள இனமும் விதி விலக்கல்ல. மகாவம்சம் பற்றிய பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு காரணம், அதனது தவறான மொழிபெயர்ப்பு. இந்திய இந்துக்களுக்கு சமஸ்கிருதம் போன்று, இலங்கை (சிங்கள) புத்தர்களுக்கு பாளி புனித நூல்களின் மொழியாகவிருந்தது. சமஸ்கிருதம் போன்றே, பாளி மொழியும் பிற்காலத்தில் யாராலும் பேசப்படாமல் அழிந்து போனது. 19 ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்கள் மகாவம்சத்தை கண்டெடுத்தார்கள். 1837 ல், George Turnour என்ற ஆங்கிலேய அரச அதிகாரி, மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரையில், "இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இந்திய படையெடுப்பாளர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டு வந்தவர்கள்." இன்றைக்கும் பல பிரிட்டிஷ்காரர்களின் மனதில் மறைந்துள்ள தவறான அபிப்பிராயம், மகாவம்சத்தை மொழிபெயர்த்த காலத்திலும் இருந்திருக்கும். இன்றைக்கு நாம் வாசிக்கும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் யாவும், ஆங்கில மொழியில் எழுதப் பட்ட மூலப் பிரதியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டவை தான். சிங்களவர்களை ஆரியர்கள் என்றும், தமிழர்களை திராவிடர்கள் என்றும் சமூக விஞ்ஞானம் போதித்த ஆங்கிலேய இனவாத கற்பிதத்திற்கு ஏற்றதாக, இந்த மொழிபெயர்ப்புகள் (மொழி திரிப்புகள்) அமைந்துள்ளன. மகாவம்சத்தின் சிங்கள மொழிபெயர்ப்பும் பிற்காலத்தில் எழுதப் பட்டது தான். இதனால், இந்த மொழிபெயர்ப்புகள் யாவும் மூலப் பிரதியில் இருந்து மாறியிருக்க வாய்ப்புண்டு. துட்டகைமுனுவின் தாயின் வரலாற்றைக் கூறும் கதையில் காணப்படும் முரண்பாடே அதற்கு ஒரு உதாரணம். துட்டகைமுனுவின் தாயான விஹாரமகாதேவி, களனி நாட்டை (இலங்கையின் மேல் மாகாணம்) சேர்ந்த இளவரசி என்று, ஒரு மொழிபெயர்ப்பில் எழுதப் பட்டுள்ளது. அவள் கல்யாணி நாட்டை சேர்ந்த இளவரசி என்று இன்னொரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது. இவ்விரண்டில் எது சரியானது? இது ஒன்றும் கவனக்குறைவால் ஏற்பட்ட எழுத்துப் பிழையல்ல. கல்யாணி நாடு, மலேசியா அல்லது இந்தோனேசியாவுக்கு அருகில் இருந்த தீவாகும். அதனை சுனாமி தாக்கி அழித்தாக செவிவழிக் கதை ஒன்றுண்டு. அதன் அடிப்படையில் பார்த்தால், ராணி விஹாரமகாதேவி ஒரு சிங்களத்தியோ, அல்லது தமிழச்சியோ அல்ல என்பது நிரூபணமாகின்றது. ஆனால், ஒரு அந்நிய நாட்டுப் பெண்ணான, வேறொரு இனத்தை சேர்ந்த விகாரமகாதேவி தான், அதிகமான தமிழர் விரோதப் போக்கை கொண்டிருந்தாள் என்பது வியப்புக்குரியது. தனது மகன் துட்டகைமுனு குழந்தையாக இருக்கும் பொழுதே, அவன் மனதில் தமிழர்கள் மீது வெறுப்புணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறாள். போர்க்களத்திற்கு நேரில் சென்று படை நகர்த்திய பெண்ணாக போற்றப்படும், விகாரமகாதேவி தமிழர்களை வெறுக்க காரணம் என்ன? (தொடரும்) div class="separator" style="clear: both; text-align: center;">

(தொடரும்)
மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்
சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான "புனித நூல்" ஒன்று இருக்குமானால், அது மகாவம்சம் தான். இவ்விரண்டு மொழித் தேசிய இனவாதிகளும், அடிக்கடி மகாவம்சத்தை உதாரணமாகக் காட்டிப் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக துட்டகைமுனுவின் கதை, அதில் அவன் தமிழர்களைப் பற்றிக் கூறும் வாசகம், அளவுக்கு அதிகமாகவே மேற்கோள் காட்டப் படுகின்றது. ("கங்காவுக்கு அப்பால் தமிழர்களும், இந்தப் பக்கம் கோதா கடலும் இருக்கும் போது, நான் எப்படி கை, கால்களை நீட்டி சுகமாகப் படுக்க முடியும்?" - துட்டகைமுனு) எல்லாளனை வென்று இலங்கைத் தீவை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த துட்டகைமுனு வாழ்ந்த காலத்திற்கும், மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையில் குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. இத்தனை வருடங்களுக்குள் ஆயிரம் மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், மகாவம்சத்தில் எழுதப் பட்டவற்றை உண்மை என்று நம்புவதால், அது ஒரு புனித நூல் தானா, என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
கி.பி. 400 ம் நூற்றாண்டளவில் மகாவம்சம் எழுதப் படுவதற்கு முன்னர், தீபவம்சம் என்றொரு நூல் இருந்தது. அந்த நூல் குறித்து, வெளியில் அறிந்தவர்கள் குறைவு. தீபவம்சத்தில் எழுதப் பட்ட சரித்திரக் குறிப்புகள், மகாவம்சத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளன. மகாவாம்சம் எழுதிய மகாசேன தேரர், அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார். மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவம், துட்ட கைமுனுவுக்கு கிடைத்துள்ளது. நூலில் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதி, அந்த மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 - 137. இதற்கும் மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கவனிக்கவும். சுமார் 500 ஆண்டு இடைவெளிக்குள், இலங்கைத் தீவில் பல்வேறு அரசியல்/பொருளாதார/சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நமது காலத்தில் சில சரித்திர நாயகர்களை போற்றி, அவர்களைப் பற்றிய இலக்கியங்களைப் படைப்பது போன்று தான், மகாவம்ச காலத்திலும் நடந்திருக்கும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்தில் இடம்பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் தலைவிதி, அந்தக் காலத்திலும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது.
அசோக சக்கரவர்த்தி காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்த மதம் பிற்காலத்தில் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் பக்தி மார்க்கம் என்ற பெயரில், சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கவனிக்கப் படாத குறுநில மன்னர்களாக இருந்த சோழர்கள், வட நாட்டு பார்ப்பனர்கள் உதவியுடன் ஆட்சியை ஸ்திரப் படுத்தினர். சோழ சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட சைவ சமயம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. சைவ சமயம் ஆட்சியாளர்களின் மதமாக ஆதிக்கம் செலுத்திய காலத்தில், பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. பௌத்த, சமண மதங்கள் மட்டுமல்ல, இந்து மதத்தின் பிரிவாக கருதப்படும் வைஷ்ணவமும் அடக்குமுறைக்கு உள்ளானது.
சோழர்களின் காலத்திற்கு முன்னரே, தமிழகத்தில் பௌத்த மதம் ஏறக்குறைய அழிந்து விட்டிருந்தது. அந்த இடத்தை சமண மதம் பிடித்திருந்தது. அதனால், சைவ மத ஆதிக்க சக்திகள், சமண மதத்தை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. பௌத்த மதத்தை சேர்ந்த தமிழர்கள், ஏற்கனவே இலங்கைக்கு தப்பியோடி புகலிடம் கோரியிருந்தனர். இவர்களில் பல பௌத்த துறவிகளும் அடக்கம். இன்றைக்கு அகதிகளாக புலம்பெயரும் மக்கள், எத்தகைய கோரமான கதைகளை காவிக் கொண்டு வருவார்கள், என்பதை நான் விளக்கத் தேவையில்லை. அது போன்று தான், அந்தக் காலத்தில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழக பௌத்த அகதிகள், சோழர்களின் கொடுமைகளை கூறும் கதைகளை காவிச் சென்றிருப்பார்கள்.
பிற்காலத்தில் சோழர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது சாம்ராஜ்யத்துடன் இணைப்பதற்கு முயற்சித்தனர். இராஜேந்திர சோழன் காலத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. இலங்கையும் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. இத்தகைய சரித்திரப் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. அதாவது, சோழ ஏகாதிபத்தியம், பிராமணிய-சைவ மத ஆதிக்கம், இவற்றிற்கு எதிரான, ஒரு வகை "பௌத்த மத தேசியவாதத்தை" உருவாக்குவதே, மகாவம்சம் எழுதியவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். நமது காலத்திற்கு முந்திய நூல்களையும், நாயகர்களையும் அந்தக் காலத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், வரலாற்றுத் திரிபுகளும், தவறான கருத்துகளும் நமது கால அரசியலை தீர்மானிக்க வைத்து விடும்.
இலங்கை மீதான சோழர்களின் படையெடுப்பு கூட, அவர்களின் தமிழக எதிரியான பாண்டிய மன்னனின், இரத்தினக் கற்கள் பதித்த முடியை அபகரிப்பதற்காகவே நிகழ்ந்துள்ளது. அதாவது, அன்று இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் நெருங்கிய ராஜதந்திர உறவு காணப்பட்டது. பல சிங்கள மன்னர்களும், பிரபுக்களும், பாண்டிய நாட்டு உயர்குல தமிழ் பெண்களை மணம் முடித்திருந்தனர். இத்தகைய நெருங்கிய உறவின் நிமித்தம் தான், சோழர்களால் ஒடுக்கப்பட்ட பாண்டிய மன்னன், தனது பொன்முடியை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தான். ஆகவே, அன்றைய போர்களை சிங்கள-தமிழ் முரண்பாடாக கருதுவது அறியாமையின் பாற்பட்டது. சைவ- பௌத்த முரண்பாடு கூட, சில வேளை ஆட்சியாளர்களின் ஆதிக்க வெறிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால், அது அன்றைய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தவில்லை. ஏனெனில், இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட சோழர்கள், சைவக் கோயில்களை மட்டும் கட்டவில்லை. உதாரணத்திற்கு, தமிழ் பௌத்தர்கள் வழிபடுவதற்காக, சோழர்கள் கட்டிக் கொடுத்த பௌத்த ஆலயம், இன்றைக்கும் திருகோணமலையில் இடிபாடுகளுடன் காணப் படுகின்றது.
எல்லாளன், துட்டகைமுனு வாழ்ந்த காலம், சோழர்களின் வருகைக்கு முந்தியது. குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. எல்லாளனின் வருகைக்கு பல வருடங்களுக்கு முன்னர், சேனன், கூத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்களும் தமிழர்கள் என்றே, இன்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் குஜராத்திகளாக இருக்கலாம் என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. எல்லாளன் சோழர் வம்சத்தை சேர்ந்ததாக சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக, பண்டைய சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன. எல்லாளன் ஒரு தமிழனா, கன்னடனா, மலையாளியா, என்பது யாருக்கும் தெரியாது. (சேனன், கூத்திகன், எல்லாளன் ஆகியோரை "மலபாரிகள்" என்றே சரித்திர ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.) எல்லாளனின் பூர்வீகம் பற்றி அதிகம் தெரியா விட்டாலும், மகாவம்சத்தில் எழுதியதை வைத்து தான், எல்லாளனை சோழனாகவும், தமிழனாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாவம்சத்தில் எழுதியுள்ளதை எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் அதற்கு புனித நூல் அந்தஸ்து கொடுக்கிறோம் என்று தான் அர்த்தம்.
நமது காலத்தில், வரலாற்று உண்மைகளையும், கற்பனையும் கலந்து, சரித்திர நாவல்கள் எழுதுவதைப் போன்று தான், மகாவம்சமும் எழுதப் பட்டிருக்கலாம். இருப்பினும், மகாவம்சம் தனது இனத்தின் எதிரிகள் யார் என்று வரையறை செய்கின்றது. பிராமணீய ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்களை மட்டுமே, இனவிரோதிகளாக சித்தரிக்கின்றது. மகாவம்சம் தமிழர்களை எதிரிகளாக சித்தரிப்பதாக சில இடங்களில் தோன்றலாம். ஆனால், அதே மகாவம்சம், தமிழர்களான பாண்டியர்களை எதிரிகளாக காட்டவில்லை. "சிங்கள" மன்னர்கள் வசமிருந்த தமிழ்ப் படையினர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வருகின்றன. அப்படியானால், மகாவம்சம் எதிரியாக சித்தரிக்கும் "அந்தத் தமிழர்கள் யார்?" சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழர்கள் தான். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எல்லாளன்- துட்டகைமுனு போர் பல வரலாற்றுத் திரிபுகளுடன் எழுதப் பட்டது.
எது எப்படி இருப்பினும், துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய இனம், வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்கள மொழி, அரசவை மொழியாகியது. அப்போதும், சிங்கள மன்னர்களினால் ஆளப்பட்ட குடிமக்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருக்கவில்லை. டச்சு காலனிய ஆட்சி நடந்த 17 ம் நூற்றாண்டில் கூட, அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி பேசினார்கள். இதனை, கண்டி மன்னனின் சிறையில் இருந்து தப்பியோடிய ஆங்கிலேய மாலுமியான ரொபேர்ட்ஸ் நொக்ஸ் பதிவு செய்துள்ளார்.
“The people stood amazed as soon as they saw us, being originally Malabars, though subjects of Kandy. Nor could they understand the Sinhalese language in which we spake to them, and we stood looking one upon another until there came one that could speak the Sinhalese tongue who asked us, from whence we came? We told them from Kandy, but they believed us not, supposing that we came up from the Dutch from Mannar. So they brought us before their Governor. He not speaking Sinhalese spake to us by an interpreter.” (Robert Knox in the Kandyan Kingdom, Ed. E.F.C.Ludowyk, p 50).
அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள், காலச் சுழற்சியில் சிங்களவர்களாக மாறியிருக்கிறார்கள். இருப்பினும் அனுராதபுரத் தமிழர்களில் ஒரு பிரிவினர் முஸ்லிம்களாக, இன்றைக்கும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லாளன் சமாதி இருந்த இடம், இஸ்லாமிய தர்க்காவாக அண்மைக் காலம் வரையில் வழிபடப் பட்டு வந்தமை, அதற்கு சான்றாகும். சில மாதங்களுக்கு முன்னர், பௌத்த மத அடிப்படைவாதிகள் அந்த தர்க்காவை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், "அந்த இடத்தில் துட்டகைமுனுவின் சமாதி இருந்தது" என்பது தான். (இந்தியாவில் இடம்பெற்ற பாபர் மசூதி இடிப்பு ஞாபகத்திற்கு வருகின்றதல்லவா?) எல்லாளனை போரில் வென்ற துட்டகைமுனு, எல்லாளனுக்கு சமாதி கட்டினான். அந்த வழியாக பயணம் செய்பவர்கள் சமாதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்.
ஆயிரக் கணக்கான வருடங்கள் உருண்டோடிய பிறகு, எல்லாளன் சமாதியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டு போனது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், எல்லாளன் சமாதி என்ற ஒன்று இருப்பதையே, மக்கள் மறந்து விட்டார்கள். சிங்கள-பௌத்த பேரினவாதிகள் அந்த இடத்தில் துட்டகைமுனு சமாதி இருந்ததாக உரிமை கோரினார்கள். உண்மையில் துட்டகைமுனுவின் சமாதி எங்காவது கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லை. இத்தனை காலமாக, ஒரு தமிழ் தேசியவாதி கூட, எல்லாளன் சமாதிக்கு உரிமை கோராதது ஆச்சரியத்திற்குரியது! சிங்கள- பௌத்த பேரினவாதிகள், எல்லாளன் சமாதியை தகர்த்த செய்திக்கு கூட, எந்தவொரு தமிழ்த் தேசிய ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுக்க காரணம் என்ன? மகாவம்சம் கூற விளைவதைப் போல, துட்டகைமுனுவின் மனதில் தமிழின வெறுப்பு காணப்பட்டதா? மகாவம்சம் தனது அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை திரித்தது என்றால், நமது கால இனவாதிகள் மகாவம்சத்தையே தவறாக மொழிபெயர்த்தார்கள். (மகாவம்சத்தின் மூலம் பாளி மொழியாகும்) "எல்லாளனைப் போன்று, துட்டகைமுனுவும் ஒரு தமிழன். எல்லாளன் ஒரு இந்து மத நம்பிக்கையாளன். துட்டகைமுனு ஒரு பௌத்த மத நம்பிக்கையாளன். அது மட்டுமே வேறுபாடாக இருந்திருக்க வேண்டும். ஒரு பௌத்தனான துட்டகைமுனு, இந்து மத வழிபாட்டையும் கடைப்பிடித்தமை குறிப்பிடத் தக்கது. எல்லாளனை போரில் தோற்கடிக்க கதிர்காமக் கந்தனை வழிபட்டுள்ளான்." தமிழ்த் தேசிய இணையத்தளமான, Tamil Canadian இல், Dr. S. K. வடிவேல் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist, while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact, loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle.
அது சரி, இந்த உண்மைகளை எல்லாம் எதற்காக ஆங்கிலத்தில் மட்டும் எழுத வேண்டும்? தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழில் எழுதக் கூடாதா?

சனி, 14 ஜனவரி, 2012
மனிதன் மனம்!...-ஒரு விசித்திரம்!
மனம் சில நேரம் சந்தோசமாய் இருக்கும்!
மனம் சில நேரம் துக்கமாய் இருக்கும்!
மனம் நல்லவரை தீயவராக மாற்றும்!
மனம் தீயவரை நல்லவராக மாற்றும்!
மனம் ஒரு தீய சக்தியைப் போல நம்மை அழித்துவிடும்!
'மனம்' என்னும் மாய சக்தியை அடக்க
'அறிவு' என்னும் தூய சக்தியை உபயோகிக்க வேண்டும்!
என்றும் எதிலும் எப்போதும் 'அறிவை ' பயன்படுத்தி செயல்களைச் செய்ய வேண்டும்!
மனது சொல்வதை அறிவால் சிந்தித்து செயல்பட்டால் வாழ்கையில் என்றும் நிம்மதி நிலைக்கும்!
மன வியாதி -புற்று நோயை விட கொடியது!
மன வியாதி -இதய நோயை விட கொடியது!
மன வியாதியை அடியோடு தொலைப்போம்!
மன நிம்மதியை அன்போடு பெறுவோம்!
அனைவரும் வாழ்க மன நிம்மதியுடன்!

தாயும் மகளும்
பத்து மாதங்கள் சுமந்திருந்து,
உயிரைக் கொடுத்து பெற்றெடுத்து,
பகலிரவாய் கண்விழித்துக் காத்து,
தன்னுதிரத்தை பாலாக்கி கொடுத்து,
விதவிதமாய் உணவு செய்து ஊட்டி,
எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்து,
அழகிய துணிமடணிகள் வாங்கித் தந்து,
உயரிய நகைகள் பூட்டி அழகு பார்த்து,
பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து,
துன்பம் என்பதே அறியாமல்,
வளர்த்து பெரியவளாக்கினாள் தாய்.
யாரோ ஒருவனை எங்கோ பார்த்து,
கண்ணால் பேசி மனதை பறிகொடுத்து,
தாயென்ன..அவன்தான் தன்னுயிரென,
தயங்காமல் ஓடிப்போனாள் மகள்
ஞாயிறு, 4 டிசம்பர், 2011
நரைமுடி
இருக்கின்ற முடிகளிலே தனியாக தெரியுதடா
ஒரு சில வெள்ளை முடி முகத்தினிலே
கிள்ளி எறிந்திடவே தோன்றுது மனதினில்
கிடக்கட்டும் என்றது என் அவளின் குரலோசை
என் உடலுக்கு மட்டும்தான் இது முதுமையின் முயற்சி
என் உள்ளத்திற்கு என்றுமே இளமையீன் உணர்ச்சி
இன்று இருப்பவர்கள் நாளை இல்லை இந்த உலகினிலே
இதில் கருமை நிறமென்ன வெண்மை நிறமென்ன போடா போ
சனி, 5 நவம்பர், 2011
போர்க்களமாய் என் வாழ்வு…….
எண்ணிட முடியா சோதனைகள்
ஏக்கம் நிறைந்த வேதனைகள்....
ஏன் பிறந்தேன்
ஏன் வளர்ந்தேன் இம் மண்ணில்...
அன்புக்கு ஏங்கினேன்.....
அறிவை தேடினேன்....
அணைத்திடும் உறவுகளை தேடினேன்
அனைத்தும் அன்னியமாய் இன்று
அங்கலாய்க்கிறது என் மனம்...
போர்க்களமாய் என் வாழ்வு
போராட்டத்தால் சீர்குலைந்து-இன்று
போராடுகிறேன் மறுவாழ்வுக்காய்
போரட்டமே வாழ்வாகி போனதிங்கு...
உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....
ஏக்கம் நிறைந்த வேதனைகள்....
ஏன் பிறந்தேன்
ஏன் வளர்ந்தேன் இம் மண்ணில்...
அன்புக்கு ஏங்கினேன்.....
அறிவை தேடினேன்....
அணைத்திடும் உறவுகளை தேடினேன்
அனைத்தும் அன்னியமாய் இன்று
அங்கலாய்க்கிறது என் மனம்...
போர்க்களமாய் என் வாழ்வு
போராட்டத்தால் சீர்குலைந்து-இன்று
போராடுகிறேன் மறுவாழ்வுக்காய்
போரட்டமே வாழ்வாகி போனதிங்கு...
உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....
வாழ்க்கை
எத்தனை கோடி மலர்கள் மலர்ந்தன
இதயச் சோலையிலே - இதில்
எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன
எந்தன் வாழ்வினிலே
எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன
எனது கண்களிலே - அதில்
எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன
எந்தன் வாழ்க்கையிலே
பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன
பாழும் மனதினிலே -
அதில்
ஓசையில்லாமல் ஓய்ந்தவை பற்பல
உலக வாழ்க்கையிலே
கொள்கையும் நேர்மையும் உண்மையும்
பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே – அதில்
கல்லால் அடித்த கனிபோல்
உதிர்ந்தவை
கணக்கில வாழ்க்கையிலே
இதயச் சோலையிலே - இதில்
எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன
எந்தன் வாழ்வினிலே
எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன
எனது கண்களிலே - அதில்
எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன
எந்தன் வாழ்க்கையிலே
பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன
பாழும் மனதினிலே -
அதில்
ஓசையில்லாமல் ஓய்ந்தவை பற்பல
உலக வாழ்க்கையிலே
கொள்கையும் நேர்மையும் உண்மையும்
பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே – அதில்
கல்லால் அடித்த கனிபோல்
உதிர்ந்தவை
கணக்கில வாழ்க்கையிலே
சே குவேராவின் வாழ்வில் கவனம் பெறும் நிகழ்வுகள்
■1928
ஜூன்
14 - பிறப்பு
■
1945 - மருத்துவப்படிப்பை
மேற்கொள்ளுதல்
■
1950 - உந்துருளியில்
3000 மைல் தூரம் ஆர்ஜென்டீனா
முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்
■
1952 - தனது நண்பன்
அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு,
கொலம்பியா,
வெனிசூலா,
ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர்
குடியிருப்பில் பணிபுரிதல்
■
1953
ஜூன்
12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.■
ஜூலை
6 -
லத்தீன்
அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்
■
1955 ஜூலை -
ஃபிடல்
காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும்
குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர
முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
■
ஆகஸ்ட்
18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில்ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
■
1956
பெப்ரவரி
15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.■
ஜூன்
24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57நாட்கள் சிறையில் இருக்கிறார்.
■
1958 ஜூலை
- புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
■
டிசம்பர்
28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.
■
1959
■
ஜனவரி
1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே
ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
■
ஜனவரி
2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
■
ஜனவரி
3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
■
ஜனவரி
8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
■
மே 17 -
உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
■
ஜூன்
2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
■
ஜூன்
12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட
பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா,
ஆபிரிக்கா,
மற்றும் ஆசிய
நாடுகளுக்கு செல்கிறார்.
■
அக்டோபர்
7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு
தலைவராக நியமிக்கப்படுகிறார்.
■
நவம்பர்
26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
■
1960
■
அக்டோபர்
-
சோவியத்
கூட்டமைப்பு,
கிழக்கு
ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா,
சீனா,
வடகொரியா
ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்
■
நவம்பர்
24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.
■
1961
■
ஜனவரி
3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
■
பெப்ரவரி
23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
■
ஆகஸ்ட்
8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின்சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
■
1962
■
மே 20 -
சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
■
ஆகஸ்ட்
27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
■
1963
■
ஜூன்
14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
■
ஜூலை
3 - பிரான்சிடமிருந்து
அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு
பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.
■
1964
■
பெப்ரவரி
24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
■
மார்ச்
14 - சே கியூபா திரும்புகிறார்.
■
அக்டோபர்
31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு
தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம்
எழுதுகிறார்.
■
டிசம்பர்
- காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி
வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
■
1966
■
நவம்பர்
- சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
■
1967
■
மார்ச்
23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை
சிதறடிகிறது.
■
ஏப்ரல்
16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட
முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற
சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
■
ஆகஸ்ட்
4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை
நோக்கி முன்னேறுகிறான்.
■
செப்டெம்பர்
26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
■
அக்டோபர்
8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள்
அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
■
அக்டோபர்
9 - சே கொலைசெய்யப்படுகிறார்
■
1968
■ஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின்
பொலிவிய
நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.
■
1995 - கொலை செய்து
புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி
தொடங்குகிறது.
■
1997
■
ஜூன்
28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின்
சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
■
ஜூலை
14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
■
அக்டோபர்
13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
■
அக்டோபர்
14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.
சேவைப் பற்றி திரு.மாதவராஜ் அவர்கள் எழுதிய நூலை
தன் வலையிலே பதிவிட்டிருக்கிறார். அதை இங்கே
சென்று படிக்கலாம்.
சேவின் பேச்சுகள், அரிதான புகைப்படங்கள், மேலும்
பல விதயங்கள் தெரிந்துக் கொள்ள இங்கே
அழுத்துங்கள்.
சேவின் பிரபலமான வசனங்கள்:
“I don't care if I fall as long as someone else picks up
my gun and keeps on shooting.”
“I know you are here to kill me. Shoot, coward, you are
only going to kill a man.”
”Why does the guerrilla fighter fight? We must come to
the inevitable conclusion that the guerrilla fighter is a social reformer, that
he takes up arms responding to the angry protest of the people against their
oppressors, and that he fights in order to change the social system that keeps
all his unarmed brothers in ignominy and
misery”
“Better to die standing, than to live on your
knees.”
“I
don't know if the Cuban revolution will survive or not. It's difficult to say.
But [if it doesn't] . . . don't come looking for me among the refugees in the
embassies. I've had that experience, and I'm not ever going to repeat it. I will
go out with a machine gun in my hand, to the barricades. . . I'll keep fighting
to the end.”

என் முதல் கவிதை ம்மா ம்மா ம்மா ம்மா
அம்மா உன்னைப்பற்றி கவிதையா
என்னால் முடியாது!
இயற்கையை ரசித்து
பொய் கலந்து எழுதுவேன்
நட்பை விவரித்து
கவிதைகளா எழுதுவேன்
கடவுளைப் பற்றி
கதை கதையாக எழுதுவேன்
அம்மா உன்னைப் பற்றி
என்ன எழுதுவேன்!
எதைஎதையோ படைத்த
இயற்கைக்கு
நன்றி!
உன்னையும் படைத்த தற்காக!
அம்மா!
நான் சொன்ன முதல் வார்த்தையே !
கவிதை தானே
என்னால் முடியாது!
இயற்கையை ரசித்து
பொய் கலந்து எழுதுவேன்
நட்பை விவரித்து
கவிதைகளா எழுதுவேன்
கடவுளைப் பற்றி
கதை கதையாக எழுதுவேன்
அம்மா உன்னைப் பற்றி
என்ன எழுதுவேன்!
எதைஎதையோ படைத்த
இயற்கைக்கு
நன்றி!
உன்னையும் படைத்த தற்காக!
அம்மா!
நான் சொன்ன முதல் வார்த்தையே !
கவிதை தானே
வாழ்க்கை
எத்தனை கோடி மலர்கள் மலர்ந்தன
இதயச் சோலையிலே - இதில்
எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன
எந்தன் வாழ்வினிலே
எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன
எனது கண்களிலே - அதில்
எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன
எந்தன் வாழ்க்கையிலே
பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன
பாழும் மனதினிலே -
அதில்
ஓசையில்லாமல் ஓய்ந்தவை பற்பல
உலக வாழ்க்கையிலே
கொள்கையும் நேர்மையும் உண்மையும்
பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே – அதில்
கல்லால் அடித்த கனிபோல்
உதிர்ந்தவை
கணக்கில வாழ்க்கையிலே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)