எண்ணிட முடியா சோதனைகள்
ஏக்கம் நிறைந்த வேதனைகள்....
ஏன் பிறந்தேன்
ஏன் வளர்ந்தேன் இம் மண்ணில்...
அன்புக்கு ஏங்கினேன்.....
அறிவை தேடினேன்....
அணைத்திடும் உறவுகளை தேடினேன்
அனைத்தும் அன்னியமாய் இன்று
அங்கலாய்க்கிறது என் மனம்...
போர்க்களமாய் என் வாழ்வு
போராட்டத்தால் சீர்குலைந்து-இன்று
போராடுகிறேன் மறுவாழ்வுக்காய்
போரட்டமே வாழ்வாகி போனதிங்கு...
உறவிருந்தும் உதவியின்றி
ஊமையாய் நானிங்கு...
உயிருடன் ஊசலாடுகிறேன்
உயிரற்ற ஜடமாக.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக