திங்கள், 9 ஜனவரி, 2023

தமிழராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்-1974

 

                                          நடந்ததென்ன?
  
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி  தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த உலகத் தமிழர்கள் பெரும் அளவில் தயாராகி வந்தனர். 
இந்தத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த இலங்கை அரசாங்கம் அப்போது விரும்பவில்லை. கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மேயர் மூலம் யாழ்ப்பாணத்தி லுள்ள விழா அமைப்பாளர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தியது. மாநாட்டிற்கான திறந்தவெளி அரங்குகளை நிர்மாணிப் பதற்கான அனுமதியும் கடைசி நிமிடம் வரை வழங்கப்படவில்லை.
ஆயினும் 1974ஆம் ஆண்டு  4வது உலகத் தமிழராய்ச்சி மகாநாட்டை  யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தீர்மானம் எடுத்தது. அப்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கை யின் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் நெருங்கிய ஆதரவாளராகவும் அந்தக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் இருந்த யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா அதனை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாது தடுப்பதற்குப் பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்தார். இதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென்பதில் அரசாங்கம் முனைப்பாக இருந்ததால், யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இந்த மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக, யாழ்ப்பாணத் திற்குச் செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த அந்நிய மொழியியலாளர்களான தமிழ் ஆராய்ச்சி யாளர்கள் ப
 அதேவேளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியின் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்க அஞ்சியோ என்னவோ தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தம்பையா, யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்துவதை விரும்பவில்லை. ஆயினும் எனைய அனைவரும் யாழ்ப்பாணத்திலேயே நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததால்,அவர் வேறு வழியின்றித் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். ஆனால் தமிழ்மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த அனுமதிக்கமுடியாது என்று கருதிய பேராசிரியர்.சு.வித்தியானந்தன் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பைத் து

அரசின் இந்த நெருக்கடியான கட்டுப்பாடுகளின் மத்தியிலும் பேராசிரியர். சு.வித்தியானந்தன் அவர்களின் தலைமையின்கீழ் உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட்டன. அதற்கமைய திட்டமிட்டபடிஇ 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஜனவரி 3 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்இ வடமாகாணத்திற்கு வெளியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள்; யாழ்ப்பாண நகருக்கு வந்து சேர்ந்தனர்.ணிச்சலுடன் ஏற்றுக்கொண்டார். 


ஜனவரி மாதம் 10ஆம் திகதியே மாநாட்டின் இறுதி நாளாக இருந்ததால். அன்றைய நாள் மிகவும் சிறப்பாக ஆய்வரங்க நிகழ்ச்சிகள் மற்றும் பண்பாட்டு ஊர்வலங்கள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆய்வரங்கத்தின் இறுதி நிகழ்ச்சியாக “மொழியின் மகத்துவம் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு;” என்னும் தலைப்பில் தமிழ்மொழி ஆய்வாளர்களினால் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நைனா முகமது அவர்கள் இறுதியாக சிறப்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அலங்கார ஊர்திகளின் பண்பாட்டுப்பவனி இடம்பெற்ற பொழுது, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலத்தின் பொழுது, புகைக்கூண்டுகள், பொம்மலாட்டம், நடன நிகழ்ச்சிகள், சிலம்படி மற்றும் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள் என்பனவும் இடம்பெற்றன. உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி, உணர்வு பூர்வமாகக் கொண்டாடிய அந்த வெற்றி விழாவைக் கண்டு சகிக்காத சிங்களப் பொலிசார், 10 ஆம் திகதி இறுதிநாள் கலை, பண்பாட்டு ஊர்வலம் நடைபெற்றபொழுது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடிஇ உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்ரர்; சந்திரசேகராவின்  தலைமையில் 40 பொலிசாரைக் கொண்டுவந்து தமிழ் மக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர். அதேவேளை மின்கம்பியை நோக்கிப் பொலிசார் துப்பாக்கியால் சுட்டதும். மின்கம்பி அறுந்து விழுந்ததில் பலருக்குக் காயங்களையும் ஏற்படுத்தியது. அதேவேளை மாநாட்டு ஆய்வரங்க மேடைகளும், அலங்காரப் பந்தல்களும் பொலிசாரினால் உடைத்தெறியப்பட்டன. இந்த மிலேச்சத் தனமான தாக்குதலில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது தமிழ் இளைஞர்கள்; கொல்லப்பட்டு, 50க்கு மேற்பட்டோர் படுகாயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அதுவரை நிலவிய மகிழ்ச்சியும், உற்சாகமும் இருந்த இடம் தெரியாமல்போய் சிறிது நேரத்திலேயே அந்த இடம்; மயான பூமியாகக் காட்சி அளித்தது. 



அன்று இந்தப் படுகொலைகளை மேற்கொண்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்; சந்திரசேகராவுக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா “பொலிஸ் அத்தியட்சகராகப்” பதவி உயர்வு வழங்கிக் கௌரவித்தார். 


01 வேலுப்பிள்ளை கேசவராஜன்  -மாணவன்   15  வயது            


02 பரம்சோதி சரவணபவன்              26


03 வைத்தியநாதன் யோகநாதன்              32



04 ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம்    ஆசிரியர்          53


05 புலேந்திரன் அருளப்பு தொழிலாளி           53



06. இராசதுரை சிவானந்தம ;     மாணவன்          21 


07 இராஜன் தேவரட்ணம்                        26 


08 சின்னத்துரை பொன்னுத்துரை- ஆயுள்வேத வைத்தியர்  56  


;09. சின்னத்தம்பி நந்தகுமார்       மாணவன்         14







01 வேலுப்பிள்ளை கேசவராஜன்  -மாணவன்   15  வயது            

02 பரம்சோதி சரவணபவன்              26

03 வைத்தியநாதன் யோகநாதன்              32

04 ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம்    ஆசிரியர்          53

05 புலேந்திரன் அருளப்பு தொழிலாளி           53

06. இராசதுரை சிவானந்தம ;     மாணவன்          21 

07 இராஜன் தேவரட்ணம்                        26 

08 சின்னத்துரை பொன்னுத்துரை- ஆயுள்வேத வைத்தியர்  56  

;09. சின்னத்தம்பி நந்தகுமார்       மாணவன்         14

சனி, 7 ஜனவரி, 2023

பனியின் துன்பம்



வானத்தின் குளிர்ந்த

 நீர்குவளை வற்றும் வரை 

கொட்டித்தீர்க்கின்றது பனி 

எல்லா நிலையிலும் நிலைகுலைந்த!

 

அவசர ஊர்தி 

அமரர் ஆருடம்  

பொதுமக்கள் பேருந்து  

எது  எப்படியும் 

வந்தாலும், சென்றாலும்

வெண் கம்பளத்துக்குள் 

புகுந்து முடங்கி இருக்கிறது சாலை !

 

நீடிக்கும் பனிப் பொழிவால் 

மரங்களும் செடிகளும் 

உறைந்த நீரை போர்த்து 

அழகு பேசுகின்ற்து !



குளிர்ந்த கற்று 

உள்புகுந்த  உடம்பில்  

வெண்கலம்  செங்கலத்துடன்  மோதுண்டு

 உஷ்ணமடையச்  செய்கின்றது ! 


பயணம் செல்லும் பாதசாரிகள் 

பாதகமாக  இழித்து உயிரற்றவாங்கும் 

சாலையின்  அனுபவங்களை   

பரிமாறி கொள்கின்றனர்!



சதுக்கங்கள், சறுக்கலை -ச்சோ

என பரிதாபப்பட்டாலும்

ஓடும் வாகனங்கள் 

யாரும் யாருக்காகவும் 

ஒருபோதும் நிறுத்தமாட்டார்கள்

பாதிவழியில் பயணத்தை !



நானும் என் பயணத்தை 

நிறுத்தியது இல்லை 

 சாலை ஓரத்தில் யாருக்காகவும் 

நீங்கள் ஏற்காவிட்டாலும்

நானும் நாளாந்த பயணிதான்,

நீண்ட நெடுஞ்சாலை தனிலே !


அதிகம் 

ஆனால்

 யாரும்

 யார்மேலும் 

 அனுதாபப் படாதீர்கள்

நானும் இந்த அண்டத்தில் ஒருவன் !

  -பங்கிரையான்-

வெள்ளி, 30 டிசம்பர், 2022

கட்டுவன்

 



குட்டுவன் கடலைத்தாண்டி

இராவண தேசம் கண்டு
கட்டினன் தனக்கேயாங்கு
தனித்துவப் பண்பு மேவ
மண்வளம் செழிக்க நாளும்
சிந்தினன் வியர்வைதன்னை
பெற்றனன் விருத்தியூராம்
பெருமைகள் சூழக்கண்டு
குட்டுவனூர் மருவியாங்கு
கட்டுவனாம் மாற்றங்கண்டு
பல்கலைகள் பயின்றேநாளாய்
புத்துயிரும் பெறமின் சீரே
மயிலையும் குப்பிளான் சூழ
தெல்லியூர் குரும்பையூர் ஈறாய்
புன்னாலை தொடவேநோக்க
மல்லாகம் புறத்தேயாமே
கரண்டையின் ஐயன் காக்க
மருதடித் துதிக்கை பற்றி
வானமே எல்லையுமாக்கி
பெற்றனன் இறைநல் ஆசி
பத்திரன் வீரன் நிற்க
காப்பவன் வைரவன் நோக்க
உயருகை அவற்றேயாகி
உதித்தது அரும்பொற் சாதி
விசுவநாத புலவோன் பெரியோன்
ஆக்கிய ஆட்டம் கூப்பி
நெடுதிடும் ஆடவர்மேலாய்
அதிர்ந்த நல்வசந்தன் கூத்து
ஆதிய நன்னிலமே மாறி
காத்தவன் கண்ணயர் தருணம்
ஓட்டினன் ஊரை நிசியில்
மறைந்தன ஊரவனுறக்கம்
பட்டவை விழலேயாகி
உதிரமும் உறையக் கூர்வாள்
குத்தியே இதயம் வெம்பி
கிளம்பினன் இலட்சியம் விலக
தன்னிறை பொருள்சேராங்கே
திமிரவன் கட்டுவனூரான்
மற்றவன் தயத்தே ஒடுங்க
நித்தமும் விழிநீர் மல்கி
சிரந்தாழ் நிலையில்நாளும்
தன்னவன் நம்பியவெண்ணம்
மீண்டுமோர் பிறப்பைச்செய்தான்
கட்டுவனை கட்டிக்காத்தான்
விடியலின் வெளிச்சம்தன்னில்
ஊரது நிழலும் காண
புயலென நகர்ந்தான் மீண்டு
புதியதோர் உலகம் செய்வான்
கட்டுவன் துளிர்க்கும் இந்நாள்
உதடுகள் மலரக்கண்டு
மாறிய பொன்னாள் ஏனோ
உள்ளகம் குளிரல் காணேல்
பாட்டனவன் கையை பற்றி
பாரிதோ உன் ஊர்மொழிய
பாட்டனும் உயிரோடில்லை
கட்டியவன் கல் வீடில்லை
வளமாரி வளமும் மிதமே
மும்மாரி பொழிவும் நிதமே
சிவக் கொழுந்தன்னான் இல்லா
ஊரது எனக்கினியன்றே
விளக்கம்:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குட்டுவர் என்கிற திராவிட ஆதிக்குடியொன்று கடல்தாண்டி வந்து இராவண தேசமென்று சொல்லப்படுகின்ற இலங்கையில் தனக்கென ஒரு வதிவிடத்தை உருவாக்கிக்கொள்கிறது. தன்னுடைய அயராத உழைப்பினால் மண்வளத்தின் செழுமையை ஆதாரமாய்க் கொண்டு தன்னுடைய ஊரை அந்தக் குடியினர் விருத்தியடையச் செய்கின்றனர். காலங்கள் உருண்டோட அந்தக் குட்டுவர் வாழ்ந்த குட்டுவனூர் என்ற இடத்தின் பெயர் மருவிக் “கட்டுவன்” ஆகியது. தொடர்ந்து அந்த வம்சமும் பெருகி அம்மக்கள் பல கலைகளையும் பயின்று கட்டுவனுக்கு புத்துயிர் வழங்கத் தொடங்கினர். மயிலிட்டி, குப்பிளான், தெல்லிப்பளை, குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன், மல்லாகம் போன்ற அயற் கிராமங்களைக் கொண்டு கட்டுவனின் அமைவிடம் அமைந்தது. கரண்டை ஐயப்பனதும், மருதடி விநாயகரதும் இறையாசிகளை வானளாவப் பெற்றதுமட்டுமின்றி வீரபத்திரரும், காக்கும் கடவுளாம் வைரவரும் வீற்றிருக்கும் அவ்வூருக்கு இறைவிருத்தியும் சேரச் சேர அவ்வூரவரின் வாழ்க்கைத் தராதரமும் அதுவாகவே வளர்ந்தது.
அவ்வூரின் அரும்பெருஞ் சொத்தெனப் போற்றப்படும் 17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஸ்வநாதர் என்கிற புலவர் (அவருடைய ஆறாவது பரம்பரை வாரிசு நானாம்) எழுதிய வசந்தன் நாடகம் அவ்வூரின் கடும் உடலுழைப்பினால் கட்டுறுதிமிக்க தேகம் கொண்ட ஆண்களினால் இசையோடு தாளலயப் பாணியில் ஆடப்பட்டு அந்தக் கிராமத்தின் பண்பாடுகள் இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றன.
இவ்வாறான தொன்மைமிக்க வரலாறு கொண்ட அந்த ஊரின் கடவுள் சற்றே கண்ணயர்ந்த வேளையில் அந்த ஊரின் தூக்கம் கெட்டது. அந்தச் சமுதாயம் சிறுகச் சிறுக வளர்த்துவந்த ஒரு சாம்ராச்சியமே ஆட்டம் காணும்படியாக அவ்வூரின் மக்கள் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். உடலின் இரத்தம் உறைந்துபோக முன்னர் கூரிய வாளொன்றினால் இதயத்தைப் பதம்பார்ப்பது போன்ற வலியை கட்டுவனின் குடியினர் உணரலாயினர். தமக்குத் தேவையானதைத் தாமே உருவாக்கி அடுத்தவன் நிழலில் வாழாத தன்னிறைவு நிலையில் வாழ்ந்த “திமிருள்ளவன்” என்கிற பதத்துக்குரிய கட்டுவன் வாழ்மக்கள் தலைதாழ்ந்து மற்றவனின் தயவுடன் வாழவேண்டிய வேதனைமிக்க ஒரு இக்கட்டுக்குள் தள்ளப்படுகிறார்கள். ஆனாலும் தைரியமிக்க கட்டுவனானின் நம்பிக்கை தளரவில்லை. முப்பது ஆண்டுகள் கழித்து ஓர் விடியல் பிறந்தது. கட்டுவனில் மீண்டும் அவன் கால் தடம் பதிந்தது. ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம். அனைவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி ஆரவாரம். கட்டுவன் மீண்டும் அவர்களுக்கே உரித்தானது. ஆனால் இந்த மீள்குடியேற்றம் என்னைமட்டும் ஏனோ மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. காரணம், என் பாட்டன் வாழ்ந்த இடம்தான் எனக்குக் கட்டுவன். “எங்களுடைய ஊரை மீண்டும் பாருங்கள் அப்பப்பா” என்று மீளக்குடியமரும் வேளையில் அவரின் கையைத் தொட்டுக்கூற என் பாட்டன் இன்று உயிரோடில்லை. அவர் கட்டிய வீடும் இன்று அங்கில்லை. வளமாரி வைரவர் இருக்கிறார் என்பதற்காகவோ… மும்மாரியும் பொழிந்து வளம் கொழிக்கும் ஊராக இருக்கிறதே என்பதற்காகவோ என் பாட்டன் சிவக்கொழுந்தர் இல்லாத அந்த ஊரை என்னால் நேசிக்க முடியவில்லையே என்று வருந்தி நிற்பதைக் கூறுகிறது இவ்வரிகள்.
ரஞ்சித் தவா
(சிவக்கொழுந்தரின் பேரன்)
கட்டுவன்

புதன், 28 டிசம்பர், 2022

மதப் புராணம்

 

சிலப்பதிகாரம் ,
மணிமேகலை,
சீவக சிந்தாமணி,
வளையாபதி ,
குண்டலகேசி
பௌத்த காவியம்
பெரியபுராணம்,
கந்தபுராணம்,
திருவிளையாடல்
சைவ சமயம் காவியம் .
கம்பராமாயணமும் ,
வில்லிபாரதமும்
வைணவ காவியம்
தேம்பாவணி,
இரட்சணிய யாத்திரிகம்,
இரட்சணிய மனோகரம்,
இயேசு காவியம்
சீறாப்புராணம்
இசுலாமியக் காவியம்

துயரம் ஒன்று நேரும் என உணர்த்தும் பகுதி,
உள்ளவாறு வருணிக்கப்படுகிறது.
மனிதனை ஆழ்வதற்கு

அரசியல்சாரா அறிவுஜீவி: ஓட்டோ ரெனே காஸ்டில்லோவின் ஒரு கவிதை



ஒரு நாள்
என் நாட்டின்
அரசியல்சாரா அறிவுஜீவிகள்
எளிய எம் மக்களால்
விசாரனை செய்யப்படுவார்கள்.
அவர்கள்
தங்கள் தேசம்
மெல்ல மெல்ல
இறந்து கொண்டிருந்த பொழுது
என்ன செய்து கொண்டிருந்தார்கள் என
கேள்வி கேட்கப்படுவார்கள்.
யாரும்
அவர்களுடைய உடைகளைப் பற்றியோ
கனமான மதிய உணவிற்குப் பிறகான
நீண்ட துாக்கத்தைப் பற்றியோ
கேட்கப் போவதில்லை,
யாரும்
அவர்களுடைய “சூன்யத்தைப் பற்றிய கருத்துக்கள்”
குறித்த மலட்டு விவாதங்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பப் போவதில்லை,
யாரும்
அவர்களுடைய உயர் பொருளாதார வாசிப்பு குறித்து
கவலைப்படப் போவதில்லை.
அவர்கள் இவர்களிடம்
கிரேக்கப் புராணங்கள் குறித்தோ
அல்லது அவர்களிடையே
இறந்து போன கோழைகளின் மரணம் குறித்த
சுய பச்சாதாபங்களை குறித்தோ
கேள்வி கேட்கப் போவதில்லை.
அவர்கள்
இவர்களின் மொத்த பொய்யின் நிழலில் பிறந்த
வறட்டு நியாயங்கள் எதைப்பற்றியும் கேட்கப் போவதில்லை.
அந்த நாள்
எளிய மனிதர்கள் வருவார்கள்.
அவர்கள்
இந்த அரசியல்சாரா அறிவுஜீவகளின்
புத்தகங்களிலோ கவிதைகளிலோ
எந்த இடமும் இல்லாதவர்கள்,
ஆனால் தினம்தோறும்
இவர்களுடைய
ரொட்டியையும் பாலையும்,
சப்பாத்தியையும் முட்டையையும்
விநியோகிப்பவர்கள்.
அவர்களின் வாகனங்களை ஓட்டுபவர்கள்,
இவர்களுடைய நாய்களையும் தோட்டங்களையும்
பராமரிப்பவர்கள்
இவர்களுக்காக வேலை செய்பவர்கள்,
அவர்கள் கேட்பார்கள்:
“உங்களுடைய கனிவும், பண்பும், இரக்கமும்
எங்கே எரிந்து போயின
ஏழைகள் துன்புற்றுக் கொண்டிருந்த பொழுது
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”
என் இனிய நாட்டின்
அரசியல்சாரா அறிவுஜீவிகளே
உங்களால் பதில் கூற முடியாது.
உங்கள் தைரியத்தை
பினம்திண்ணி கழுகைப் போன்ற
உங்கள் மௌனம் தின்று தீர்க்கும்.
உங்களின் சொந்த விரக்தி
உங்கள் ஆத்மாவை ஆக்கிரமிக்கும்.
நீங்கள் அவமானத்தால் விக்கித்து நிற்பீர்கள்.

வள்ளுவனும் /கிராமத்தானும்

 



"சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்"

-திருக்குறள் -664(வினைத் திட்பம்)

கிராமிய கவிதை பாணியில் உரை :

இருக்கணும் இருக்கணும்
தெடமா இருக்கணும்,
எந்தச் செயலையும் செய்யிறதில
தெடமா இருக்கணும்..

இந்தச் செயல
இப்புடி இப்புடி செய்வேண்ணு
சொல்லுறது ரெம்ப லேசு,
சொன்னபடி அதச்
செய்யத் தொடங்கி காலத்தில
செய்து முடிக்கிறது
கடினமான காரியந்தான்..

அதால
இருக்கணும் இருக்கணும்
தெடமா இருக்கணும்,
எந்தச் செயலையும் செய்யிறதில
தெடமா இருக்கணும்…!

புதன், 7 டிசம்பர், 2022

தல்ஸ்தோயின் ஆதித்தேடல்

https://images-na.ssl-images-amazon.com/images/I/A1uTmmPSQ2L.jpg



 ஓருயர்ந்த ஒப்பற்ற படைப்பாளிக்கும்கூட வாழ்க்கை அர்த்தப்படாதது வியப்புதான். தல்ஸ்தோயின் ‘வாக்குமூலம்’ அவரது சொந்த மெய்ஞானத் தேடலின் தடங்கள் நமக்கு உரைப்பதென்ன என்ற ஆர்வம் மேலிட டேவிட் பாட்டர்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது.  மரபுவழி கிறிஸ்துவத்தில் திரித்துவ நம்பிக்கையைக் கொண்டிருந்தார் தல்ஸ்தோய். 1879ல் கீவ் நகரிலிருந்த குகை மடங்களில் தங்கியிருந்த ஆதிகிறிஸ்துவ வழியில் வசித்துவந்த துறவிகளின் எளிய வாழ்முறையோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

ஆகமங்களின்படி தேவாலயங்கள் நடத்தப்படவில்லை என்பதை அறிந்து மதம்சார்ந்த பற்றுகளைக் கைவிட்டார். அதன் சட்டதிட்டங்களைச் சாடினார். எல்லையற்றதை அனுபூதியாய் உணர இயலும் என்றும் ஒன்றுமற்றதில் அடங்கியிருக்கிறது இப்பிரபஞ்சம் என்றும் இறுதியில் ஒரு கனவின் வழி உரைத்துப்போகிறார். கிட்டத்தட்ட பைபிளின் கடைசி நூலான ‘வெளிப்படுத்தின சுவிசேஷத்திற்கு இணையானதொரு படிமக்கனவு.  

ஆதியோடு ஒன்றும் அறிவைப் பெறுவதுதான் நீதியார் செய்த தவம் என்கிறது ஒளவைக்குறள். தனது 51வது வயதில் போரும் அமைதியும் (1869), ஆன்னா காரனீனா (1877) எனும் இரு நாவல்களை எழுதிய தல்ஸ்தோய், தான் எதையும் சாதிக்கவில்லை, வாழ்க்கை அர்த்தமற்றதென எண்ணலானார். அப்போது ‘நான் யார்’ எனும் சுயசரிதையின் மூலம் தன் தேடலைப்பற்றியும், தான் கண்டறிந்தவற்றையும் எழுதினார். 1882ல் ரஷிய சஞ்சிகையில் வெளியானாலும் பிறகு ‘வாக்குமூலம்’ என 1884ல் ஜெனீவாவில் பிரசுரமானது. அந்நூல் தனக்குள்ளான விசுவாசம் சார்ந்த மனப்போராட்டங்களை, ஆதியிலிருந்து பல மகான்களால் தேடப்பட்ட அல்லது அத்தேடல்களின்வழி மகான்களான, வாழ்வின் அர்த்தம் பற்றிய கேள்விகளினூடே தன்னறிதலைப் பகிர்ந்துகொண்டார். அவரது மெய்ஞானத் தேடலின் சுருக்கம். 

தன் மெய்வழிப்பாதையில் ஆர்தர் ஷோப்பனவர், சாக்கியமுனி புத்தர், சாக்ரடீஸ், பழைய ஏற்பாட்டின் சாலமன் ஆகியோரை எதிர்கொண்டார். பழைய ஏற்பாட்டின் நீதிமொழிகளில் சாலமனின் ‘எல்லாம் விருதா’ எனும் கூற்றையே ஆரம்பத்தில் அவரால் உணர முடிந்தது. அவ்வறிதல் கசப்பானதாகவே இருந்தது. உண்மையிலிருந்து விலகி அதலபாதாளத்திற்குள் செல்வதாய் உணர்ந்தார். 


அதன் சாரத்தைப் பேசுகிறார். ‘ஒன்றுமின்மை பற்றிய நமது அச்சமே வாழவேண்டுமெனும் அவாவாகப் பரிணமிக்கிறது. ஒருவிதத்தில் நிஜமென உணரப்படும் இப்பிரபஞ்சமேகூட ஒன்றுமின்மையாகத்தான் திகழ்கிறது என்று உற்றறிந்தார் தல்ஸ்தோய். சாலமன் கூறுகிறான், ‘சூரியனுக்கீழே மனிதனின் அத்தனை உழல்வுக்குமான லாபம்தான் என்ன? ஒரு சந்ததி கழிய அடுத்தது தழைக்கிறது. எனினும் பூமி என்றைக்குமாய் நீள்கிறது. இங்கு எதுவுமே புதிதல்ல.’ இம்மாமனிதர்களைப் போன்றே நானும் எண்ணுகிறேன். கால தேச வர்த்தமானங்களுக்கும் காரண காரியங்களுக்கும் உட்பட்டும் அப்பாற்பட்டும் இங்கு எதுவுமில்லை என்பதே என் பதில். 

பகுத்தறிவால் கண்டதென்னவோ எல்லைக்குட்பட்டதை  எல்லைக்குட்பட்டதுடனும் அதற்கு அப்பாற்பட்டதை அதனுடனும் ஒப்பிட்டு பொருண்மை பொருண்மையாகவும், ஆற்றல் ஆற்றலாகவும் அவா அவாவாகவும் எல்லைக்குட்பட்டது எல்லைக்குட்பட்டதாகவும், ஒன்றுமின்மை ஒன்றுமின்மையாகவுமே தொடர்கின்றன. அதுதாண்டிப் போக இயலவில்லை. வாழ்க்கை அர்த்தமற்றதாயினும் அவ்வாழ்வுக்கான நம்பிக்கை அதற்கான அர்த்தத்தையும் வாழ்வதற்கான சாத்தியத்தையும் பெற்றுத்தருவதாக அறிந்தேன் என்கிறார்.

‘செறிந்து அறிந்து நாடிச் செவ்விதாயுள்ள அறிந்தரனை ஆய்ந்து கொளல்’ என ஒளவைக்குறள் உரைப்பதுபோல் ஆரம்பம் முதலே எல்லைக்குட்பட்டதற்கும் அதற்கு அப்பாற்பட்டதற்கும் இடையிலான உறவை வார்த்தைக்குட்படுத்த முயல்வதே மானுடத்தின் தேடலாக இருந்துவருகிறது’ என்றறிகிறார்.

‘அனைத்தின் தோற்றம் போல, அனைத்தைப் பற்றிய விளக்கமும் மறைபொருளாய் எல்லையற்றதில் பொதிந்திருக்க வேண்டுமென்பதை நானறிவேன். எனினும் தவிர்க்கவியலாமல் உய்த்ததுணர முடியாத நிலைக்கு ஆளாவேன் என்பதால் அதைப்பற்றி அறிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. உய்த்ததுணர முடியாதவை அப்படியே இருக்கட்டுமென்றே விரும்புகிறேன். நுண்ணறிவு அத்தனை திடமானதல்ல என்பதால் அல்ல (அது திடமானதுதான் ஆனால் அதற்கு அப்பால் அதுபற்றி என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை). ஆனால் நுண்ணறிவு எல்லைக்குட்பட்டது என்பதால்தான். உய்த்ததுணர இயலா தருணங்கள் வாய்க்கையில் அது காரணகாரியங்களின் தேவையைக் கொண்டதாக இருக்கவேண்டுமே தவிர நம்பிக்கையின் எதிர்பார்ப்பாக இருத்தல் கூடாது என்பதாலேயே  நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.’

வெறும் அறிவின் வழியன்றி உணர்வின் வாயிலாகவும் மெய்ஞானப் பயணம் தொடர்தல் சித்தர்வழி. திருமந்திரம் பாடலொன்று ‘வெளியில் வெளிபோய் விரவிய வாறும், அளியில் அளிபோய் அடங்கிய வாறும், ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறுந்தெளியும் அவரே சிவசித்தர் தாமே’ என்கிறது. பிரபஞ்ச உணர்வு வெளியில் வியாபித்து அன்பில் நெகிழ்ந்தடங்கி ஞானப் பேரொளியில் அமிழ்ந்து தெளிந்துணரும் சித்தரே அவராகிறார்.   

ரூமி பாடுகிறார்: 

ஒரு நிலவெளியுள்ளது
அங்கு உனைச் சந்திப்பேன்
அப்புல்வெளியில் ஆன்மா
படுத்திருக்கையில்
எதுபற்றியும் பேசுவதற்கு அன்றி
உலகம் வெகுவாய் நிரம்பிக்கிடக்கிறது
கருத்துகள், மொழி
அவற்றின் வழியான சொற்றொடர்
எவ்வொன்றும்
புலப்படுவதாய் இல்லை.

அவ்வகண்ட பரப்பின் வெளியில்தான் தல்ஸ்தோய் எனும் மகானும் உலவுகிறார்.

சனி, 24 செப்டம்பர், 2022

சின்னப்பெடியங்களின் சங்கமம்

 நிகழ்வொன்றுக்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்று நான்கு நாட்கள் தங்கியிருந்தேன்

பலவருடங்களுக்கு பின் எதிர்பாராவிதத்தில் எம் ஊர் உறவினர்களை "லா கோர்னேவ் ( La Courneuve) " என்ற
இடத்தில் சந்திக்க நேர்ந்தது எதிர்பார்ப்பு இன்றி கிடைக்கும் அன்பு பெருமழைக்கு ஈடானது .
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எம்மை ஆவலுடன் சந்திப்பதற்காக பாரிஸ் நகரத்தில் வாழும் கட்டுவனுர் மக்கள் திரண்டார்கள்
"ஊரில் தெருக்கள் இருக்கும் ,தெருக்கள் எல்லாம் எம் ஊர் மக்கள்"
மிக நெருக்கமான உறவுகள் கட்டிஅணைத்து
“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து..!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
உறவினர்கனுடன் பேசுகையில்
பயம்
மனநெருடல்
என்னை உலுக்கியது
எம் பேரு ஞாபகமிருக்கா..?
என கேட்டு விடுவார்களே..?
நான் யார் என்பதை அறிமுகப்டுத்தும்போது நீ சின்னப்பெடியனாக இருந்தாய் என்று நினைவுக்கு தெரிந்த பல கதைகளை ஒவொருவரும் கூறும்போது நான் அறிந்திடாத சொந்த, பந்த எங்கள் உறவு அமைப்பு பெரும் வியப்பை ஏற்படித்திஇருந்தது
சொந்தம் என்பது யார் ?
பந்தம் பிணைபு யார் ?
சுவாரஸ்யமான உறவுமுறை தகவல்கள் நீண்டுகொண்டே இருந்தது
1983ம் ஆண்டுக்கு பின் துரதிஷ்டமாக எம் மண்ணின் முகங்கள் சிதைக்கப்பட்டு பூர்விகக்குடிமக்கள் சிதறுண்டு ,வாழ்வியல் சிதறடிக்கப்பட்ட பின் உறவுகளின் உறவுமுறைகள் வாழ்வியல் சிறப்பம்சங்களை இழந்துவருகின்றோம்
உறவுகள் உறுதிபெற அடிப்படை நம்பிக்கை.கொண்டு உறவுகளைப் பேணுவோம் என்ற கருப்பொருளைக் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாக மாறி விட்டது.
உறவுகள் தரும் அனுபவங்கள் மிகவும் இனிமையானது. இந்த இனிய அனுபவம் நமக்கு கிடைத்தது போல், நமது வாரிசுகளுக்கு கிடைக்குமா என்பது வேதனைக்குரியது.



புதன், 14 செப்டம்பர், 2022

"அழகம்மாவின் தேடல் புத்தக வெளியீடு " 06.08.22 அன்று ஒஸ்லோ

 


ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும் - நீ"
உயர்ந்த மனிதனாக’ வாழும் வழிமுறைகளைச் சொல்கிற ,பட்டுக்கோட்டை கல்யாணானசுந்தரத்தின் பாடல் நினைவுகளுடன் இந்த மலர் வெளியீட்டை உணர்கின்றேன்
அன்பு பல்வேறு வகையான விளக்கங்களை கொண்டிருந்தாலும் அது தாய்க்கும் ,மகனுக்கும் ஏற்பட்டிருக்கும் அன்யோன்யம், ஆறுதல் மற்றும் நேர்மறை உணர்வுகளை பிரதிபலிக்கிறது. தோழர் பத்மநாதனின் உறவுமுறை தொகுப்பு
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதர்களும் துன்பத்தால் துவள்வது இயற்கை, அப்போது மனிதநேயம் கொண்ட மனிதனாக முடிந்த உதவி, பசித்தவற்கு உணவழித்தல், தாகமாய் இருப்போற்கு நீர் கொடுத்தல், வறுமைகோட்டுக்குள் வாழும் மனிதர்கள் கண்டு ஊக்கிவித்தல் , தலைமுறைக்கான உயர் தரம் கற்கும் மாணவர்களின் நன்மை கருதி பிரபல பாட ஆசானாக, சமூகத்தின் தேவைகருதி செயல்பட்டுவரும் ஆசிரியர் தோழர் பத்மநாதன் தன் தாயின் வரலாற்று திறமையை வாழும் காலத்தில் கௌரவித்து
தாயின் பேனாவில் இருந்து வெளியான கையெழுத்துபரிபாஷையை தொகுத்து வெளியில் கொட்டுவந்துளார்
இது சுயசரிதையும் அல்ல... சுயவிளம்பரமும் அல்ல, ஒரு பெண் தான் வாழ்த்த வாழ்நாளில் தனக்கான சவால்களுடன் ஒரு குடும்பதின் தாயாக , சிரியதாயாக, பாட்டியாக ,கற்பியல் ஆசானாக தன் வாழ்வை வாழும் ஒரு அம்மாவின் அன்பு , ஆர்வம், திறமை, தொழில் ஆன காலச்சுவடு
"அழகம்மாவின் தேடல்"
ஆசிரியர் அழகம்மாவின் ஆங்கில மொழி ஆளுமையிழும் அவரது அறிவியல் சிந்தனையில் இருந்தும் எழுதப்பட்ட இந்த ஓரெழுத்து இரு மொழி என்று இலக்கண சொற்களாக இந்த நன்நூலில் அமைந்துள்ளது
, எதிர்காலச் சமுதாயத்துக்குப் பயன் படக்கூடிய வித்தக இந்த புத்தகத்தின் வாயிலாகக் கிடைக்கும் என்று நம்புகின்றேன்

புதன், 3 ஆகஸ்ட், 2022

இலங்கையில் பௌத்த வரலாற்றை தோற்றுவித்த மன்னன்

 

மகாமேகவனத்தின் கொடிவீட்டில் அமர்ந்தபடி, இலங்கையின் வரலாற்றில் மாறாப்பெருமையும், முக்கியமும் பெற்ற பண்டுகாபய மன்னனின் வாரிசான மூத்தசிவன் தன்னுடைய வாழ்வின் இறுதிநாட்களை எண்ணி காத்துக்கொண்டுருந்தார். மூத்தசிவனுக்கு 10 புதல்வர்களும் 2 புதல்வியரும் இருந்தனர். மரபுரிமையின் பிரகாரம் தந்தைக்கு பின்பு தலை மகனையே ஆட்சியை தொடர்ந்திருக்க வேண்டும். எனினும் இங்கு அவ்வாறு நிகழவில்லை. அநுராதபுர ஆட்சியின் வரலாற்றில் அவருக்கிணையான அமைதியான ஆட்சியை பிறிதொரு மன்னரும் மேற்கொண்டதில்லை. 60 வருடங்களாக தன்னுடைய ஆட்சியில் நிலவிய அமைதியும், சௌபாக்கியமும் தனக்கு பின்னும் தொடர்வதற்கு உரியதோர் அரசியல் வாரிசை ஆட்சியில் ஏற்ற வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கிக்கொண்டிருந்ததை மூத்தசிவன் உணரத்தலைப்பட்டார். தன் மைந்தருள் திறமையும் அறிவும் மிக்கவனான தீசன் எனும் இரண்டாவது புதல்வனை அடுத்த அரசனாக பிரகடனம் செய்து மூத்தசிவன் தன்னுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக்கொண்டு இறையடி சேர்ந்தார்.

 

கி.மு.307 இன் மார்கழி பூர்ணிமை அன்று தீசன் இலங்கையின் புதிய மன்னனாக பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டான். தீசனின் ஆட்சியில் மக்கள் சொல்லுமளவுக்கு எந்த குறைகளும் இல்லாது இனிதாக வாழ்ந்து வந்தனர்.  தீசனின் ஆட்சியில் இலங்கை தீவின் பல பகுதிகளிலும் சிறப்பான நன்னிமித்தங்கள் தோன்றின. பல்லாண்டுகாலமாக நிலமகளின் மடியில் புதையுண்டிருந்த உலோகங்களும், மாணிக்கங்களும் தன்னியல்பாக வெளிப்பட்டன. செல்வங்கள் நிறைந்த பெரும் நாவாய் ஒன்று சூறைக்காற்றால் அடிக்கப்பட்டு சிதைவுண்டு இலங்கையின் கரைகளை அடைந்தது. தீவின் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து தெற்கு திசையில் இரண்டு யோஜனா தொலைவில் அமைத்திருந்த சத்தாமலை எனும் பகுதியில் தேர்த்துலாவின் தடிப்பை கொண்ட தங்க,வெள்ளி,பலவர்ண பூக்களின் நிறத்தில் விளைந்த மூன்று பெரும் மூங்கில்கள் தோன்றின. கயா, ஹாயா, ரதா, அமலகி, அங்குலி, வைத்தக, கும்பக், வளைய, பரகதிக எனும் எண்வகை முத்துக்களும் ஒரே நாளில் கரையொதிங்கின. இதனை கண்ட மக்கள் இவ்வனைத்து செல்வங்களையும் ஒன்று திரட்டி அனுராதபுரத்திற்கு கொண்டுவந்து மன்னன் தீசனுக்கு அன்பளித்தனர். அவற்றை மனமுவந்து வாங்கிக்கொண்ட தீசன் அச்செல்வங்களின் மதிப்பை உணர்ந்து அவற்றை தன்னுடைய மனதுக்கினிய நண்பனுக்கு அளிப்பதே பொருத்தமானதாக அமையும் என எண்ணினான்.  அந்நண்பன் உலக வரலாற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தியாவின் பெரும் சக்ரவர்த்தியான அசோகர்.

அசோக மன்னன் தேரோட்டும் காட்சி:
பட உதவி : விக்கிபீடியா

அசோகரை சந்தித்து பரிசில்களை கையளிப்பதற்காக  விசேட தூதுக்குழு ஒன்று ஒதுக்கப்பட்டது. அசோகருக்கும் தனக்கும் நிலவிய நட்பினை மனதில் நிறுத்தி, அக்குழுவின் தலைவனாக தன்னுடைய சொந்த மருமகனும் முதன்மை அமைச்சனுமான மகா அரிட்டனை நியமித்தார். மேலும் அரசின் பிரதம புரோகிதர், அரசின் தனாதிகாரி, அமைச்சர் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் அடங்கிய தூதுக்குழுவாக அது அமைந்தது. மூவகை இரத்தினங்கள், சத்தாமலையில் இருந்து பெறப்பட்ட அரசுதேருக்கான மூன்று மூங்கில் துலாக்கள், வலம்புரி சங்குகள், எண் வகை முத்துக்கள் மற்றும் மேலும் பல செல்வங்களுடன் தூதுக்குழுவானது ஜம்புகோளப்பட்டினத்தின் (தற்போதைய யாழ்ப்பாணம்) துறையில் இருந்து பயணப்பட்டனர்.

பதினான்கு நாட்கள் பயணத்தை தொடர்ந்து, மௌரிய சாம்ராஜ்யத்தின் தலைநகர் பாடலிபுத்திரத்தை அடைந்தனர் தீசனின் தூதுக்குழுவினர். லங்காபுரியில் இருந்து தன் அன்பு நண்பன் அனுப்பிய அனைத்து பரிசல்களையும் மனமுவந்து ஏற்றுக்கொண்ட அசோக சக்ரவர்த்தி தூதுக்குழுவினர்க்காக தனிமாளிகை ஒன்றை ஒதுக்கி விருந்தினரை சிறப்பாக கவனித்து கொண்டார். அடுத்துவந்த நாட்களில் தன்னுடைய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மகா அரிட்டனுக்கு ‘சேனாபதி’ என்ற பட்டத்தையும், பிராமனருக்கு ‘புரோகிதர்’ பட்டத்தையும், தனாதிகாரிக்கு ‘தண்டநாயகன்’ பட்டத்தையும், அமைச்சருக்கு ‘சேதி’ பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார். ஐந்து மாத காலம் பாடலிபுத்திரத்தில் தங்கிய அரிட்டனின் குழுவினர் நாடு திரும்பும் போது அசோகர் தீசனுக்காக பட்டாபிஷேக வஸ்துக்களை பரிசில்களாக அனுப்ப முடிவு செய்தார். அதன் பிரகாரம் யாக் மாட்டின் மயிரால் செய்யப்பட்ட பீலிவிசிறி, மகுடம், உடைவாள், தங்கப்பாதுகைகள், வெண்குடை, தலைப்பாகை, காதணிகள், சங்கிலிகள், பொற்குடங்கள், சந்தனக்கட்டைகள், உயர் பட்டாலான துவாய்கள், நாகர்களிடம் இருந்து பெற்ற ஆபரணங்கள், வாசனைத்தைலங்கள், செம்மண், கங்கைநதி நீர், அனோத்தை ஏரி நீர், தங்கப்பாத்திரங்கள், மதிப்புமிக்க அம்பாரி, அரிய மூலிகைகள், பழங்கள், நூற்றியறுபது மூட்டை மலையரிசி என பல்வேறு பரிசில்கள் தயார்செய்யப்பட்டன. இவற்றுக்கு மேலாக தீசனுக்காக மௌரிய அரசகுலத்தில் பிறந்த இளவரசி ஒருத்தியும் பரிசாக வழங்கப்பட்டது அவர்கள் நட்பின் உறுதியை வெளிப்படுத்தி காட்டியது. இந்த பரிசில்களுடனும், தீசனுக்கான ஒரு தனிப்பட்ட செய்தி ஓலையுடனும் அரிட்டனின் குழு தாமிரலிப்தி (தமியிற்றியா) துறையில் இருந்து புறப்பட்டு கடல்வழியாக தாய்த்தேசம் திரும்பினார்கள்.பாடாலிபுரத்தில் இருந்து மீண்ட அரிட்டன் தீசனை சந்தித்து அசோகரின் ஓலையை கையளித்தான். அவ்வோலை இலங்கையின் வரலாற்றில் பெரும் மாற்றத்தை உருவாக்கவுள்ளதை தீசனோ, அரிட்டனோ அறிந்திருக்கவில்லை. ஓலையை பிரித்த தீசன் அவற்றில் பொதிந்திருந்த வார்த்தைகளின் மீது கண்களை ஓட்டினான்.

“நான் புத்தரின் அடிமை, அவரின் தர்மத்திலே சரணடைந்தவன். மனிதருள் சிறந்தவனே! நீயும் புத்தம்,சங்கம்,தர்மம் எனும் மும்மணிகளை ஏற்று அவரிடம் சரணடைவாயாக”

கலிங்க யுத்தத்தின் பின் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த அசோகர் பௌத்த மதத்தை தழுவினார். அது தன்னளவில் ஏற்படுத்திய பல மாற்றங்களை உணர்ந்து பௌத்தத்தை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் பலநாடுகளுக்கு தர்ம மஹா மாத்ராக்கள் எனும்  தூதுவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் ஒரு அங்கமாகவே இலங்கைக்கான இந்த செய்தியும் காணப்பட்டது. உடனடியாக எந்த முடிவையும் எடுக்க விழையாத தீசன் இதுகுறித்தான ஆலோசனையை தள்ளிவைத்தான். அசோகரின் பரிசில்களை கொண்டு மீண்டும் மாகுடதாரண விழாவை நடத்த நன்னாள் குறிக்கப்பட்டது. மௌரிய குலா இளவரசியை முறைப்படி திருமணம் செய்து கொண்ட பின்பு, அசோகர் தீசனுக்கு வழங்கிய ‘தேவநம்பிய’ என்ற பட்டதுடன் மௌரிய முறையின் படியே முடிசூட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இலங்கையின் ஆட்சிக்கட்டில் முதல் முறையாக மௌரிய அரசவம்சம் நிலைகொண்டது இந்நிகழ்வுக்கு பின்னேயாகும். அன்றில் இருந்து அவன் தேவநம்பிய தீசன் எனவே அனைவராலும் அறியப்பட்டான்.

தேவநம்பிய தீசன் சிலை

தேவநம்பிய தீசனின் ஆட்சிக்காலம் வரை இலங்கையில் இந்துமத வழிபாடுகளும், நம்பிக்கைகளும் வலுவாக நிலைகொண்டிருந்தன. மக்களிடையே லிங்கவழிபாடு பிரதானமாக இருந்ததுடன், நாகதீபம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்தமும், இன்னும் சில பகுதிகளில் சமணம் மற்றும் பழந்தமிழ் வழிபாடான ஆசிர்வகமும் வழக்கத்தில் இருந்தன. பூர்வீக்குடிகளான நாகர்கள் நாகவழிப்பட்டையும், இயக்கர்கள் ஆவி வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தனர். வைகாசி மாத பௌர்ணமி தினமொன்றில் தேவநம்பிய தீசன் நாற்பதாயிரம் பேர்கொண்ட பெரும் பரிவாரத்துடன் மிசாகபர்வதத்தின் (மிகிந்தலை) அடிவாரத்திற்கு வேட்டையின் பொருட்டு விஜயம் செய்திருந்தார். விதியின் வலிமையை வெல்லும் ஆற்றல் மானுடருக்கு அரிது, லங்காபுரியின் வரலாற்றில் பாரிய மாற்றத்தை உருவாக்க விதியானது அன்று மாரீசன் என மாயமான் உருக்கொண்டது. மிரளும் மணிவிழி கொண்ட அந்த மானை தன் வில்லுக்கு இறையாக்குவதன் பொருட்டு விரட்டிச்சென்றான் தீசன். மாரீசன் மாயமான் என அது கணப்பொழுதில் மின்னிமறைந்து ஓடியவண்ணமே இருந்தது. அரசனின் கைவில்லில் இருந்து தன்னுயிரை காக்க அம்மான் அம்பத்தாலா சிகரத்தை அடைந்தது. எண்ணித்துணிந்த கருமத்தை நிறைவுற்றத விரும்பிய மன்னனோ மானை தொடர்ந்து சிகரத்தை அடைந்தான்.

அடுத்த நாள் மகிந்தரும் குழுவினரும் ஆகாயமார்க்கமாக அனுராதபுரத்தை அடைந்தனர். அவர்கள் காலடிபதிந்த இடத்தில் பிற்காலத்தில் பத்மன சைத்தியம் என்ற விகாரை அமைக்கப்பட்டது. அரண்மனையில் விருந்தினை முடித்துக்கொண்ட மகிந்தரின் குழுவினருடன் அரச குடும்பத்தினருக்கான விசேட கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் மன்னனின் தம்பியும், யுவராஜனுமான மகாநாகனும், அவனின் மனைவி அனுலா தேவியும் கலந்துகொண்டனர். விடயம் அறிந்த அனுராதபுரத்தின் மக்களும் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். மக்களின் வசதிக்காக அரண்மனை பெருமுற்றமும், யானைக்கொட்டிலும் சுத்தம் செய்து ஒருக்கங்கள் செய்யப்பட்டது. எனினும் அவ்விடமும் போதாமையால் அரண்மனைக்கு தெற்கே இருந்த புகழ்பெற்ற மகாமேகவனம் என்ற பூங்காவில் தர்மோபதேசத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மகாமேகவனத்தில் தொடர்ச்சியாக போதனைகள் நடைபெற்றது. மகிந்தர் தலைமையிலான குழு மகாமேகவனத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கதம்ப நதிக்கரையில் தித்தாவ சைத்தியம் அமைக்கப்பட்டது. பிக்குகள் தங்குவதற்கான போயாமனை, தங்கும் மனை, அன்னசாலை முதலியவை ஒருக்கப்பட்டது. மக்கள் தொடர்ச்சியாக மேகவனத்துக்கு வந்தமையால், பௌத்த வழிபாட்டின் பொருட்டு அப்பூங்கா மகிந்தருக்கு கையளிக்கப்பட்டது. மேகவன வளாகத்தில் மகிந்ததேரர் குறித்து தந்த இடங்களில் மகாவிகாரைதூபாராம மற்றும் ஸ்ரீ மகாபோதி விருட்சம் ஆகியவை அமைக்கப்படுவதற்கான வேலைகள் தொடங்கின. மகாமேகவனம், மகாவிகாரை வளாகம் என மாறியது.
மிகிந்தலை மகாவிகாரை பட உதவி: ccf.gov.lk

*மன்னர் மூத்தசிவனின் ஆட்சிக்காலத்திலேயே மகாமேகவன பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவிற்கான நிலம் அரண்மை யானைகளால் தெரிவுசெய்ப்பட்டவுடன், ஆகாயத்தில் கருமேகங்கள் பல சேர்ந்து மக்கள் காணாத பெரும் மழையை கொட்டித்தீர்த்தது. இந்நன்னிமிதத்தை கருத்தில் கொண்டு அப்பூங்கா மகாமேகவனம் (பெரும் முகில்களால் ஆசிர்வதிக்கப்பட்ட வனம்) என பெயரிடப்பட்டது.

மழைக்காலத்தை கழிக்கும் எண்ணத்துடன் சேத்திய பர்வதத்தில் தங்கியிருந்த மகிந்ததேரரை கண்டு அரிட்டனும் அவனது 55 தோழர்களும் பிக்குகளாக அபிடேகம் செய்துகொண்டனர். இலங்கையின் முதல் பிக்குசாசனம் அமைக்கப்பட்டது. அங்கு பிக்குகள் மழைக்காலத்தை கழிக்க 32 கற்குகைகள் கட்டப்பட்டது. சிலகாலத்தில் மகிந்தரின் முயற்சியால் கயாவில் இருந்து புத்தரின் தாடையெழும்பு, பிச்சைப்பாத்திரங்கள் என்பன இலங்கைக்கு பெறப்பட்டன. புத்தரின் தாடையெழும்பை கொண்டு இலங்கையின் முதல் தாதுகோபமான தூபாராம தூபி அமைக்கப்பட்டது.

தூபாராம விஹாரை
பட உதவி: lankapura.com

புத்தர் ஞானம் அடைந்த போதிமரத்தின் கிளையை பெற்றுவர தீசன் தனது அமைச்சனும், முதல் பிக்குவுமான அரிட்டன் தலைமையிலான குழு மீண்டும் பாடாலிபுரத்துக்கு சென்றது. சங்கமித்ரா பிக்குனியின் தலைமையில் வெள்ளரசு கிளை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. அவர்களுடன் 18 பிக்குனிகள், 18 அரசகுலத்தவர்கள், 18 பிரபுக்கள், 8 பிராமணர்கள், 8 வர்த்தக குடும்பங்கள், யாதவர்கள், நெசவாளர்கள் என பெரியதொரு குழு இலங்கையை அடைந்தது. ஜம்புகோலத்தை அடைந்த பிக்குனியின் கப்பலை தேவநம்பிய தீசன் தானே சென்று வரவேற்றான்.

சங்கமித்ரவினால் கொண்டுவரப்பட்ட வெள்ளரசு மரம் : விக்கிபீடியா

அரசன் தானே வெள்ளரசு கிளையை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக வந்தான். அனுராதபுரத்தின் தெற்கு வாயில் வழியாக மேகவன வளாத்திற்குள் கொண்டுவரப்பட்ட போதிக்கிளை 16 அரச பிரதானிகளால் மகிந்தர் நிர்ணயித்த இடத்தில் நடப்பட்டது. போதிமரம் செழித்து வளர்ந்ததும் நாட்டின் எட்டு பகுதிகளுக்கு அதன் கிளை கொண்டு சென்று நடப்பட்டது. மகாராணி அனுலாவும் அவளின் 500 தோழிகளும் சங்கமித்ரா மூலம் பிக்குனிகளாக அபிடேகம் செய்துகொண்டு இலங்கையில் பிக்குனி சாசனத்தை ஏற்படுத்தினர்.

ஈழத்தீவை நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறான். “கோ எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே” என்பதற்கு பொருந்தி தீசனின் தனிப்பட்ட முடிவினால் இலங்கையின் முழுவரலாறும் மாற்றி அமைக்கப்பட்டது.


தகவல்கள் உதவி : மகாவம்சம்