புதன், 4 மார்ச், 2015
செவ்வாய், 17 பிப்ரவரி, 2015
உலகப்புகழ் பெற்ற புகைப்படங்கள் வரிசை: அந்தக் கண்கள்
அகதிகள் முகாம்
அது 1984-ம் வருடம். அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்டிவ் மெக்கரி பாகிஸ்தானில் உள்ள அந்த அகதிகள் முகாமிற்குள் நுழைந்தார். பார்வை நீளும் இடம் வரைக்கும் அங்கே தற்காலிக டெண்ட்கள் நூற்றுக்கணக்கில் அகதிகளுக்காக உருவாக்கபட்டிருந்தன. வாழ வழியில்லாமல் ஒடும் மக்களுக்கான இடம் இப்படி தானிருக்கும். இதை விட வசதியான ஓர் இடத்தை அவர்கள் எதிர்பார்த்து விட முடியாது. தன்னுடைய புகைப்பட கருவிகளுடன் ஸ்டீவ் எதை எவற்றை யாரை புகைப்படம் எடுக்கலாம் என அங்கு நடந்து கொண்டு இருந்தார்.
அது சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து கொண்டிருந்த காலம். ஆப்கானிஸ்தான் மக்கள் போரில் இருந்தும் வறுமையில் இருந்தும் தங்களை காப்பாற்றி கொள்ள ஓடிக் கொண்டு இருந்தார்கள். அப்படி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தவர்களுக்கான அகதிகள் முகாம் இது. நசீர் பாக் முகாம் என்று அந்த இடத்திற்கு பெயர். நேஷனல் ஜியோகிராபிக் இதழுக்காக ஸ்டீவ் அங்கு வந்திருக்கிறார்.
அகதிகள் முகாமில் ஒரு டெண்டிற்குள் ஒரு தற்காலிக வகுப்பறையை உருவாக்கி இருந்தார்கள். ஸ்டிவ் அங்கு நுழைந்த போது, ஒரு பெண் மங்கலான ஒரு கறுப்பு போர்டினை கொண்டு குழந்தைகளுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்தார். ஸ்டிவ்வினுள் புகைப்பட கலைஞர்களுக்கே உரிய ஆர்வம் துளிர்த்தது. குழந்தைகளை படமெடுக்க அனுமதி கேட்டார். இது போல எவ்வளவோ புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். போர் மனிதனை எப்படியெல்லாம் சிதைத்து இருக்கிறது என்பது தான் அவரது பயணமாக இருந்தது. உலகம் முழுக்க பல இடங்களுக்கு சுற்றி இருக்கிறார். இந்தியாவில் இருந்த போது அவர் ஒரு முக்கியமான உண்மையைக் கற்று கொண்டார். அது வாழ்க்கையை கவனித்திரு, காத்திரு என்பது.
“நீங்கள் காத்து இருந்தால், மனிதர்கள் உங்கள் கேமராவை மறந்து விடுவார்கள். அவர்களுடைய ஆத்மாவை அப்போது பார்க்கலாம்,” என்பார் ஸ்டீவ்.
அந்த வகுப்பறையில் உள்ள குழந்தைகளில் ஒரு பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கதக்க ஒரு சிறுமி இருந்தாள். பச்சை நிற கருவிழிகள் கொண்டவள். அசாதாரணமான அழகும், எதோ ஒரு கோபமும் இறுக்கமும் கொப்பளித்து கொண்டு இருந்தது அவளது முகத்தில். ஸ்டீவ் தன்னைப் பார்த்ததும் அவள் தனது சிகப்பு நிற துப்பட்டாவை கொண்டு முகத்தை மூடிக் கொண்டாள். ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து ஸ்டீவ் அந்த சிறுமியைப் புகைப்படம் எடுத்தார்.
அந்த சிறுமியின் பெயர் என்ன?
கடலின் பச்சை நிற கண்கள்; அழகும் குரோதமும் நிறைந்த முகம், கிழிசல்களோடு துப்பட்டா முகத்தை மேலோட்டமாக போர்த்திய நிலையில் கேமராவை நேருக்கு நேராய் பார்த்து நின்ற அந்த சிறுமியின் புகைப்படம் பார்ப்பவரை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைப்பதாய் இருந்தது. உலகம் முழுவதும் புகைப்படம் பிரபலமாக தொடங்கியது. வல்லரசுகளாலும் உள்நாடு அரசியல்வாதிகளாலும் வன்முறையும் போரும் நிறைந்த ஆப்கன் நாட்டை விட்டு ஓடி வரும் அகதிகளின் நிலையை பிரதிபலிப்பதாய் இருந்தது அந்தப் புகைப்படம். இன்னும் சொல்லபோனால் உலகத்தின் அத்தனை அகதிகளின் அவலத்தை உணர்த்தும் படமாக அது மாறிப்போனது. நீங்கள் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தால் அது எத்தனையோ விஷயங்களை உணர்த்துவதாய் இருந்தது.
உலகப் புகழ் பெற்ற புகைப்படமாய் ‘ஆப்கன் சிறுமி’ மாறி கொண்டிருந்த போது, புகைப்பட கலைஞர் ஸ்டீவ் அந்த சிறுமியை மீண்டும் சந்திக்க பல பிரயத்தனங்கள் எடுத்தார். அந்த சிறுமி தன் குடும்பத்தாருடன் அகதிகள் முகாமை விட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு போய் விட்டார் என்கிற செய்தி தான் கிடைத்தது. விரைவில் ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி ஏற்பட்டது. வெளிநாட்டினர் முக்கியமாக செய்தியாளர்கள் ஆப்கானிஸ்தானிற்குள் போவது என்பது முடியாத காரியமாகி போனது.
உலகப் புகழ் பெற்ற புகைப்படத்தில் இருந்த சிறுமியின் பெயர் கூட யாருக்கும் தெரியாது. பதினேழு வருடங்கள் உருண்டோடின. புகைப்படத்தின் புகழ் அதிகரித்து கொண்டு தான் இருந்தது. 2001-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் தாலிபன் ஆட்சி முடிவிற்கு வந்தது. 2002-ம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் இதழ் இந்த சிறுமியை தேடுவதற்காக ஒரு டாக்குமெண்டரி குழுவை உருவாக்கியது. அந்த குழுவில் புகைப்பட கலைஞர் ஸ்டீவ்வும் இருந்தார். பாகிஸ்தானில் இருந்த நசிர் பாக் அகதிகள் முகாம் விரைவில் மூடப்பட போகிறது என்கிற செய்தி அறிந்து ஸ்டீவ் தனது தேடலை முதலில் அங்கு இன்னும் இருந்த அகதிகளிடமிருந்து தொடங்கினார். ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியர் இந்த சிறுமியை தனக்கு தெரியும் என்றார். அருகாமை கிராமம் ஒன்றில் இருந்த அந்த சிறுமி (பதினெழு வருடங்கள் கழித்து அவள் பெண்ணாகி விட்டாள்) ஆலம் பீபி கண்டறியப்பட்டார். ஆனால் ஸ்டீவ் அந்த பெண் தனது புகைப்படத்தில் உள்ள சிறுமியல்ல என்று மறுத்து விட்டார். அகதிகள் முகாம், மற்ற இடங்கள் எங்கும் இந்தப் புகைப்படத்தினை அங்கிருப்பவர்களிடம் காட்டி அலைந்து திரிந்தும் உருப்படியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. புகைப்படம் எடுக்கபட்டு ஏறத்தாழ பதினேழு வருடங்கள் ஆகி விட்ட நிலையில், அகதிகள் முகாமிலிருந்து பெரும்பாலனோர் தாயகம் திரும்பிய சூழலில் அவரது தேடல் முதலில் எந்த உருப்படியான தகவலையும் கண்டறியவில்லை. நிறைய பெண்கள் இந்த படத்தில் இருப்பது தாங்கள் தான் என பொய்யாக முன்வந்தனர். ஒரு சில ஆண்கள் இந்த படத்தில் இருப்பது தன்னுடைய மனைவி எனவும் பொய் தகவல் சொன்னார்கள்.
அந்த சிறுமியை இனி கண்டுபிடிக்க முடியாது என்கிற மனநிலைக்கு ஸ்டீவ் தள்ளப்பட்ட போது, முகாமில் இருந்த ஒருவர் இந்த சிறுமியின் சகோதரனை தனக்கு தெரியும் என்று சொன்னார். ஆப்கானிஸ்தானில் உள்ள தோரோ போரோ என்கிற மலைப்பகுதியில் அவர்கள் குடியிருப்பதாக அந்த மனிதர் சொன்னார். ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து ஆறு மணி நேர கார் பயணம், பிறகு மூன்று மணி நேர நடைப்பயணம் என வெளியுலகோடு தொடர்பு அதிகம் இல்லாத மலைபகுதியில் அந்த மனிதர் சொன்ன பெண் வசித்து வந்தாள். குழுவினரின் பல முயற்சிகளுக்கு பிறகு அந்த பெண்ணை அவளது குடும்பத்தாருடன் வேறொரு இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பெண்ணை முதலில் சந்தித்தவுடனே ஸ்டீவ்வின் முகம் மலர்ந்தது.
“நான் புகைப்படமெடுத்த சிறுமி இவர் தான்,” என்றார். இதை மேலும் உறுதி செய்வதற்கு அந்தக் குழு அந்த பெண்ணின் கண்களை பயோமெட்ரிக் ஆராய்ச்சி செய்து புகைப்படத்தில் இருக்கும் சிறுமி தான் இந்த பெண் என உறுதி செய்து கொண்டனர்.
அந்த புகைப்படத்தில் இருந்த சிறுமியின் பெயர் ஃபர்பத் குலா. 17 வருடங்களுக்கு பிறகு உலகம் இந்த பெயரை அறிந்து கொண்டது.
குழுவினர் அவளை சந்திப்பதற்கு முன்பு வரை தனது புகைப்படம் உலகப் புகழ் பெற்ற புகைப்படமாக மாறியிருக்கும் செய்தி குலாவிற்கு தெரியவே தெரியாது. அந்த புகைப்படம் தான் அவள் முதன்முதலாக புகைப்படம் எடுக்கபட்ட நிகழ்வு. அதன்பிறகு மீண்டும் ஸ்டீவ் வரும்வரை அவளை வேறு யாரும் புகைப்படம் எடுத்திருக்கவே இல்லை.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாஸ்துன் என்கிற பழங்குடியினத்தை சேர்ந்தவர் குலா. இங்கு முஸ்லீம் பெண்களுக்கு கடுமையான விதிமுறைகள் உண்டு. அவள் சிறுமியாக இருந்த போது ரஷ்ய விமானங்களின் தாக்குதலில் இருந்து தப்பி அவளது குடும்பம் பாகிஸ்தான் எல்லையை கடந்து நசீர் பாக் அகதிகள் முகாமிற்கு வந்தது. பாஸ்துன் பழங்குடியின பெண்கள் எப்போதும் பர்தா அணிந்திருக்க வேண்டும். தனது கணவனை தவிர வேறு ஓர் ஆணை பார்த்து சிரிக்க கூடாது. புகைப்படத்தில் உள்ள சிறுமியின் முகத்தில் உள்ள இறுக்கத்திற்கான காரணம் இதுவாக கூட இருக்கலாம். புகைப்படம் எடுக்கபட்ட நிகழ்வை குலா இன்னும் நினைவில் வைத்து இருக்கிறார். வாழ்க்கையில் முதன்முதலாக புகைப்படம் எடுக்கபட்ட நிகழ்வல்லவா?
ஸ்டீவ் மீண்டும் ஆப்கன் சிறுமியைச் சந்தித்த போது குலாவிற்கு முப்பது வயதாகி இருக்கலாம். குலாவிற்கே தன்னுடைய வயது சரியாக தெரியவில்லை. மற்ற ஆண்களின் பார்வைக்கு உட்படாமல் பர்தாவில் வாழ்ந்து கொண்டிருந்தார் குலா. சிறிது நேர பேச்சுக்கு பிறகு அவர் மீண்டும் தன்னை புகைப்படம் எடுக்க அனுமதி கொடுத்தார். இந்த முறை புகைப்படம் எடுக்கும் போதும் அவருடைய பார்வையின் தீவிரம் அப்படியே இருந்தது.
“அந்தக் கண்களின் சக்தி இன்னும் குறையவில்லை,” என்றார் ஸ்டீவ்.
ஆப்கன் சிறுமி
ஆப்கானிஸ்தானில் ஒரு புகைப்படத்தால் பிரபலமான பெண் என்கிற பெயரோடு வாழ்வது ஆபத்தான விஷயம். ‘ஆப்கன் சிறுமி’-யான குலா தற்போது வேறொரு தொலைதூர கிராமத்திற்கு மாறி விட்டார். அவருடைய தேவைகளுக்கு நாங்கள் வழிவகை செய்து இருக்கிறோம். ஆனால் குலா தன் சொந்த நலன் கருதி இனி வெளியுலகிற்கு மீடியா மூலம் வெளி வர மாட்டார் என நேஷனல் ஜியோகிராபிக் இதழ் அறிவித்து இருக்கிறது. நேஷனல் ஜியோகிராபி சொசைட்டி, ஆப்கான் சிறுமி என்கிற பெயரில் அந்நாட்டில் உள்ள இளம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரு தன்னார்வ கொடை திரட்டு உருவாக்கி இருக்கிறது. உலகம் முழுக்க வரும் நன்கொடைகள் இங்கு சிறுமிகளுக்கான நலத்திட்டங்களுக்காக உள்நாட்டில் உள்ள சில நிறுவனங்கள் மூலம் செலவழிக்கபடுகிறது.
எத்தனையோ பேருக்கு தன் புகைப்படம் மூலம் தாக்கமேற்படுத்திய ஆப்கன் சிறுமி இன்று ஒரு மலைப்பகுதியில் மிக சராசரி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
சனி, 14 பிப்ரவரி, 2015
வெள்ளி, 13 பிப்ரவரி, 2015
காதலென்ற புனிதமதை

சிலரின் அழுகை
சிலரின் சிரிப்பு
சிலரின் போராட்டம்
சிலரின் சமதானம்
சிலரின் ஏக்கம் .....
என பல முகங்களில்
புதிது புதிதாய்
பிறந்து கொண்டுதான்
வருகின்றது ........!
காதலர் தினங்கள்..!
நாளைய காதல் தினம்
காதலைக்கொண்டாடுங்கள்
கனிவோடு இதயத்துக்குள். .
காட்சிப்பொருளாய் ஆக்காதீர்
காதலென்ற புனிதமதை
அன்புடன்
சன் நரேன்
வெள்ளி, 6 பிப்ரவரி, 2015
மழை நீர்

பணக்காரன் வீட்டு மொட்டை மாடி
ஒட்டுத் திண்ணையில் விழும்
ஓட்டு மழை நீரை கையில்
பிடித்தாடும் சிறுமி!
முற்றதில் நிறைத்தோடும்
வெள்ளத்தில்காகிதப் படகு
விடும் சிறுவன்!
ஏழை குடிசையில் வீட்டுக்குள்
விழுகின்ற மழைதுளி
அழகில்லை என்று
கண்ணீர் மழை பொழியும்
அவ் வீட்டு சிறார்கள் !
ஓட்டு மழை நீரை கையில்
பிடித்தாடும் சிறுமி!
முற்றதில் நிறைத்தோடும்
வெள்ளத்தில்காகிதப் படகு
விடும் சிறுவன்!
ஏழை குடிசையில் வீட்டுக்குள்
விழுகின்ற மழைதுளி
அழகில்லை என்று
கண்ணீர் மழை பொழியும்
அவ் வீட்டு சிறார்கள் !
கார்த்திகை

கார்த்திகை ஒளிர் மிளிர்கின்றன
நினைவுகளும் மலர்கிறது
கல்லறையில் துயில் கொள்ளும் காவியநாயகர்களின்
உறங்க கனவுகளாக பெருமை படுகின்றது ……..!
வீரத்தோடும் தன்மானத்தோடும்
மண்ணை காக்க வீரம் கொண்டுவந்தவன்
காலத்தின் சூழ்ச்சியால் அங்கமிழந்து
எம்மை காக்கவந்தவன் இன்று
தன்னைகாக இயலாத கனவுகள் பெருகிட ……..!
காலங்கள் உருண்டோடி போகிறது
எமது எழுச்சியும் மங்கிதான் போகிறது!
அங்கே சாட்சிகளும் அழிக்கபடுகிறது
எழுச்சிகளும் நொறுக்கபடு பெருகிட ……..!
வாழ நினைப்பவன் ஈழ தமிழன்
இங்கே பகுத்தறிவோடும் சுய மதிப்போடும்
வாழ மறுப்பவன் புலன்பேர் தமிழினம் பெருகிட……..!
தோள்கொடுத்து ஒரு பாதையில் வந்தவன்
விழ்ந்தவன் மாவீரன் இழந்தவன் அன்னியன்!
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்

உறங்க கனவுகளாக பெருமை படுகின்றது ……..!
வீரத்தோடும் தன்மானத்தோடும்
மண்ணை காக்க வீரம் கொண்டுவந்தவன்
காலத்தின் சூழ்ச்சியால் அங்கமிழந்து
எம்மை காக்கவந்தவன் இன்று
தன்னைகாக இயலாத கனவுகள் பெருகிட ……..!
காலங்கள் உருண்டோடி போகிறது
எமது எழுச்சியும் மங்கிதான் போகிறது!
அங்கே சாட்சிகளும் அழிக்கபடுகிறது
எழுச்சிகளும் நொறுக்கபடு பெருகிட ……..!
வாழ நினைப்பவன் ஈழ தமிழன்
இங்கே பகுத்தறிவோடும் சுய மதிப்போடும்
வாழ மறுப்பவன் புலன்பேர் தமிழினம் பெருகிட……..!
தோள்கொடுத்து ஒரு பாதையில் வந்தவன்
விழ்ந்தவன் மாவீரன் இழந்தவன் அன்னியன்!
இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்

முறிந்த மரகொப்பு!

நேற்றைய போரின்
கதாநாயகர்கள்
`புனர்வாழ்வு` எனும்
சித்திரவதைக்குப்
பின்
வாழ
வழியின்றி
வாழ்வை
முடித்துக்கொள்கிறார்கள்
மனக்குழப்பத்தோடு
....!
தங்கத்தலைவன்
வழிகாட்டுதலில்
சாதனைகள்
பலபடைத்த
சரித்திர
நாயகிகள்
ஒதுக்கப்பட்டும்
துன்புறுத்தப்பட்டும்
`யார் காப்பார் எம்மை இனி `
என்று
பெருமூச்சுவிடுகிறார்கள்
வாழ்க்கையைத்
தொலைத்துவிட்டு ...!
`யாரும் இருக்குமிடத்தில்
இருந்துகொண்டால்
எல்லாம்
சௌக்கியமே ...`
சரித்திர
நாயகரின்
இன்றைய
நிலை பார்த்தபின்
ஞாபகத்திற்கு
வருகிறது
கண்ணதாசனின்
வரிகள் ...!
அப்பாவின் நினைவில்...25 ஆண்டுகள் கழிந்தன

கடவுள் முகம் கண்டதில்லை !
படைக்கும் கடவுளின் முகமாக- நீ
என்னைப்படைத்த உந்தன் அன்புமுகம் கண்டேன் !
மென்மையாய் பேசுபவனேபணிவினைக் கற்பித்தவனே...........
அன்பு ஒன்றை வாடகையாய்க் கொடுத்து-என்
நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று !
உண்மையான நண்பனாக இருப்பவர்...
நேரம் தவறாமை கடுஞ்சொல் கூறாமை
மறு மனம் நோகமை
நன்றி மறவாமை
பகைமையைத் தொடராமை..
சேயான எனக்கு அனைத்தையும் கற்பித்தாய்!
உதவி புரிவதற்கு நீ என்றும் சிந்தித்தவனில்லை
உனக்கு உபத்திரம் செய்ததை நினைப்பதுமில்லை
பள்ளிக்கு பின்பே பல்கலை கழகம் செல்வார்கள்-நான்
பல்கலை கழகமே உன்னிடம் பயின்றபின் தான் பள்ளிக்குச் சென்றேன்!
நீ நம்பின ஆண்டவன் உன்னை அதிகம் நேசித்து விட்டானோ?
விரைந்து உன்னை அவனிடம் அழைத்துக்கொண்டானே???
சுயநலம் பிடித்த கடவுள் அவன் .
என்னை உலகிற்களித்தவனே -இன்று
உன் பிரிவால் நான்சிந்தும் கண்ணீருடன்
உன்னிடம் வரம் ஒன்று யாசிக்கிறேன்?
என் பிள்ளை உன்னைப்போல் இருக்கவேண்டும்
பிற்காலத்திலும் என்னை காத்திட நீ வேண்டும்!!
உள்ளத்தில் உதயமாக இருப்பவர்..!
குடும்ப கஷ்டத்திற்கு உழைப்பாளியாக இருப்பவர்...
குணத்தில் நல்ல மனிதராக இருப்பவர்..!
அவர் தான் அப்பா ! என் கடவுள் !
அன்புக்குரிய தோழன்
சன் நரேன்
என்னைப்படைத்த உந்தன் அன்புமுகம் கண்டேன் !
மென்மையாய் பேசுபவனேபணிவினைக் கற்பித்தவனே...........
அன்பு ஒன்றை வாடகையாய்க் கொடுத்து-என்
நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று !
உண்மையான நண்பனாக இருப்பவர்...
நேரம் தவறாமை கடுஞ்சொல் கூறாமை
மறு மனம் நோகமை
நன்றி மறவாமை
பகைமையைத் தொடராமை..
சேயான எனக்கு அனைத்தையும் கற்பித்தாய்!
உதவி புரிவதற்கு நீ என்றும் சிந்தித்தவனில்லை
உனக்கு உபத்திரம் செய்ததை நினைப்பதுமில்லை
பள்ளிக்கு பின்பே பல்கலை கழகம் செல்வார்கள்-நான்
பல்கலை கழகமே உன்னிடம் பயின்றபின் தான் பள்ளிக்குச் சென்றேன்!
நீ நம்பின ஆண்டவன் உன்னை அதிகம் நேசித்து விட்டானோ?
விரைந்து உன்னை அவனிடம் அழைத்துக்கொண்டானே???
சுயநலம் பிடித்த கடவுள் அவன் .
என்னை உலகிற்களித்தவனே -இன்று
உன் பிரிவால் நான்சிந்தும் கண்ணீருடன்
உன்னிடம் வரம் ஒன்று யாசிக்கிறேன்?
என் பிள்ளை உன்னைப்போல் இருக்கவேண்டும்
பிற்காலத்திலும் என்னை காத்திட நீ வேண்டும்!!
உள்ளத்தில் உதயமாக இருப்பவர்..!
குடும்ப கஷ்டத்திற்கு உழைப்பாளியாக இருப்பவர்...
குணத்தில் நல்ல மனிதராக இருப்பவர்..!
அவர் தான் அப்பா ! என் கடவுள் !
அன்புக்குரிய தோழன்
சன் நரேன்
ஆத்திசூடி மூன்று மொழியில் (தமிழ் ஆங்கிலம் நோர்வே )

அறம் செய்ய விரும்பு (Aram Seiya Virumbu) -> Have desire to do good -> Har ønske om å gjøre godt
ஆறுவது சினம் (Aaruvadhu Sinam) -> The one that reduces should be anger -> Den som reduserer bør være sinne
இயல்வது கரவேல் (Iyalvadhu Karavel) -> Give what you don’t need.-> Gi det du ikke trenger
ஈவது விலக்கேல் (Eevadhu Vilagel) -> Do not stop giving.-> Ikke slutte å gi.
உடையது விளம்பேல் (Udaiyadhu Velambel) -> No Publicity.-> Ingen publisitet.
ஊக்கமது கைவிடேல் (Ookamadhu Kaividale) -> Do not lose hope -> Ikke miste håpet
எண், எழுத்து இகழேல் (Enn, Ezhuthu Igalel) -> Do not underestimate the power of Mathematics and literature -> Ikke undervurder kraften av matematikk og litteratur
ஏற்பது இகழ்ச்சி (Yerpadhu Igazhchi) -> Receiving is meaner.-> Motta er slemmere.
ஐயமிட்டு உண் (Iyamittu Unn) -> Eat after sharing.-> Spise etter deling
ஒப்புரவு ஒழுகு (Oppuravu Ozhugu) -> Get used to what you have. Get along with the world.- >Bli vant til det du har. Komme sammen med resten av verden
ஓதுவ தொழியேல் (Odhuvadhu Ozhiyel) -> Never stop learning or preaching.-> Aldri slutte å lære eller forkynnelse.
ஒளவியம் பேசேல் (Oviyam Pesale) -> Do not talk ill about others.-> Ikke snakk syk om andre.
ஃகஞ் சுருக்கேல் (Akanjurukale) -> Do not be stingy.-> Ikke vær gjerrig
ஈவது விலக்கேல் (Eevadhu Vilagel) -> Do not stop giving.-> Ikke slutte å gi.
உடையது விளம்பேல் (Udaiyadhu Velambel) -> No Publicity.-> Ingen publisitet.
ஊக்கமது கைவிடேல் (Ookamadhu Kaividale) -> Do not lose hope -> Ikke miste håpet
எண், எழுத்து இகழேல் (Enn, Ezhuthu Igalel) -> Do not underestimate the power of Mathematics and literature -> Ikke undervurder kraften av matematikk og litteratur
ஏற்பது இகழ்ச்சி (Yerpadhu Igazhchi) -> Receiving is meaner.-> Motta er slemmere.
ஐயமிட்டு உண் (Iyamittu Unn) -> Eat after sharing.-> Spise etter deling
ஒப்புரவு ஒழுகு (Oppuravu Ozhugu) -> Get used to what you have. Get along with the world.- >Bli vant til det du har. Komme sammen med resten av verden
ஓதுவ தொழியேல் (Odhuvadhu Ozhiyel) -> Never stop learning or preaching.-> Aldri slutte å lære eller forkynnelse.
ஒளவியம் பேசேல் (Oviyam Pesale) -> Do not talk ill about others.-> Ikke snakk syk om andre.
ஃகஞ் சுருக்கேல் (Akanjurukale) -> Do not be stingy.-> Ikke vær gjerrig
மீண்டும் வருமா வசந்தம்?

முடிந்த அத்தியாயத்திற்கு முகவுரை தேடுகிறேன்...
விடிந்த இரவுக்கு விளக்கேற்ற விழைகிறேன்..!
பட்டமரத்தில் பசுந்தளிர் தேடுகிறேன்..!
அணைந்த நெருப்பில் குளிர்காய முயல்கிறேன்..!
விரிசல் கண்ணாடியில் ஒற்றை உருவம் தேடுகிறேன்..!
ஓட்டைப் பானையில் நீர் நிரப்ப முயல்கிறேன்..!
வாடிய மலரில் வர்ணம் தேடுகிறேன்..!
சிந்திய கண்ணீரை சேகரிக்க நினைக்கிறேன்..
அணைந்த நெருப்பில் குளிர்காய முயல்கிறேன்..!
விரிசல் கண்ணாடியில் ஒற்றை உருவம் தேடுகிறேன்..!
ஓட்டைப் பானையில் நீர் நிரப்ப முயல்கிறேன்..!
வாடிய மலரில் வர்ணம் தேடுகிறேன்..!
சிந்திய கண்ணீரை சேகரிக்க நினைக்கிறேன்..
தமிழ் கவி இயற்றினேன் !

சிந்தையில் சுரந்த தமிழால்
கற்பனை ஊறியது என்னுள்
முத்தமிழ் என்னுள் மூண்டதுமே
ஒளிர் விட்ட்து தமிழ்
வாழிய தமிழ் வாழிய
தமிழ் வாழிய வாழியவே !
முத்தமிழ் என்னுள் மூண்டதுமே
ஒளிர் விட்ட்து தமிழ்
வாழிய தமிழ் வாழிய
தமிழ் வாழிய வாழியவே !
பகலும் இரவும் சேரும் அந்த மயக்கம் தரும் மாலை நேரம்

இருளின் ஆக்கிரமிப்பு
ஒதுக்கப்படும் பகலவன்.
வெண் பனி மூடிய சாலை
வழுக்கும் பனியில்
சறுக்கி செல்லும்
சிதறிய மக்கள்
கரையும் நாட்கள்
உறைந்து கொண்டிருக்கும் -மனம் !முத்தமிழ் அறிவாலயமும் தமிழர் திருநாளும் ...!

இவர்கள் 'சேற்றில் ' கை வைத்தால்தான் நாம்
'சோற்றில் ' கை வைக்க முடியும்.
யார் இவர்கள் என்ற வினாக்களுக்கு
முத்தமிழ் அறிவாலய மாணவர்களின் ஆராய்ச்சியும்ஆதரபுர்வம்மான சேகரிப்பும் கொண்ட கண்காட்சி மனதை கவரும்வண்ணம் அமைந்தது

உழவர் பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள்;
அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான்... பொங்கல் திருநாள்.
பொங்கல் விழா என்று பெயர் வந்தது ஏன் ? இது ஒரு சமுதாயத்தினர் கொண்டாடும்விழாவா ? அல்லதுமதம் சார்ந்த பண்டிகையா ? சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாதான் இந்தப் பொங்கல் விழாவா? என்றெல்லாம்வினாக்கள் வினாக்களும் விடைகளும் கண் முன்விரித்து காட்டினார்கள் முத்தமிழ் அறிவாலய மாணவ செல்வங்கள்







மாணவர்களுக்கான கோலம் போடும் முறைகளும் பெற்றோர் களினால் பயிற்சியளிக்கப்பட்டது













மனத்தை அதிரவைக்கும் மாணவர் செல்வங்களின்உரைகள்


உழவர் தினம் எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும். இந்த வேளாண்மை அனைத்து தரப்புமக்களுக்கும் பொதுவானது என்ற ஆதாரங்களை முன் வைத்து உரையாடினார்கள் எத்தனைப் பொங்கல்காலத்தை நாம் இந்தத் தமிழ்க்குடிகள் பார்த்திருக்கும்? இந்த புலன்பெயர் மாணவர்களை எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது.
'மொழிச் செல்வம் கோழைபடாது '
என்ற கொள்கையே இத் புலன் பெயர் தமிழ்ச் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது.



இந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று என்ற அடையாளம் காட்டும் வர்ணத்தில் காட்சி வழங்கள் அமைந்தது

பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும்போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்த சமுதாயத்தைக் கட்டிக் காக்கும்அரணாக ஆகிவிடுகிறது.
இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா!
இதனை வடிவான முறையில் அமைத்தார்கள் பாடசாலை ஆசிரியர்களும் நிர்வாக குழுக்களும்
இந்தப் பொங்கல் விழாக்காலம் தமிழ்ச்சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தைஒருங்கிணைக்கும் நல்விழாவாக, வேளாண்திருக்காலமாக இருப்பது எவ்வளவு பொருத்தமான ஒன்று;எவ்வளவு அறிவார்ந்தசெயல் அது!
அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப் பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாகமுற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது எத்தனை அறிவார்ந்த பொருத்தமானசெயல்!.
ஒளவைப்பிராட்டியார் 'இளவரசே வாழ்க பல்லாண்டு! 'என்று வாழ்த்தவில்லை!
அரசே உன் 'வரப்பு உயர்க '! என்று வாழ்த்தினார். ஏன் ?
வரப்புயர நீருயரும்!
நீருயர நெல்லுயரும்!
நெல்லுயுர குடியுயரும்!
குடியுயர கோனுயர்வான்!.
என்ற கருத்துக்கு அமைய இந்த விழா அமைந்தது !

நண்பர்கள் ஒன்று சேரும் நல்லதோர் பேருந்து பயணம்....!
பாதி வாழ்க்கை கடந்த பின்னும்
கலையாத பள்ளிகுடா நடப்பு கனவு
பலநேரம் தோள் கொடுத்தத பரிவாய் உறவு !
இன்பம் வந்து இருந்த போதும்
துன்பம் வந்து தொலைத்த போதும்
இரண்டிலுமே பங்கு கொண்டு
இதமளித்த பாடசாலை நினைவுகள்........ !
காலம் பல கடந்த பின்னும்
காட்சிகளை தொலைக்கவில்லை
இனிய பல நட்புக்காலம்
இன்னமும் நாம் மறக்கவில்லை ..........!
நாளை நம் தலைமுறை பாடும் ...
பாடசாலை தோழமை என்பது இதுதான்
நண்பா நாங்கள் தான்
நடப்பு என்பதும் இதுதான் அதுவும் நாமே !


இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
