செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

கலை அரங்கம் -பங்கிரையன்-


ஒருத்தி
ஒரு மேடை
இரு அரங்க பிரவேசம்
சனிக்கிழமை மாலை 11.12.2023 அன்று நோர்வே ,லிலஸ்ரோம்(lillestrøm samfunnshus ) கலாசார மண்டபத்தில் நிறைவான பார்வையாளர்கள், பெருமைமிக்க கலைஞர்கள் ,கலை விமர்சகர்கள் மத்தியில் பதினைந்து வயதுடைய சிறுமி அஞ்சனா ராஜகோபால் அவர்களின் ஒன்பது வருடங்களுக்கு மேல் கர்டாக இசையையும் பரத கலையையும் முறைப்படி கற்று ஒரே நாளில் அரங்க பிரவேசம் ஒப்பேரியது.
*#பகுதி ஒன்று
குரலிசை
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தனது குரலினால் தனக்கென்று ஒரு தனித்தடம் பதித்த முனைவர் சுயம்பு ஹரிஹரன் அவர்களிடம், தான் கற்ற கருநாடக பாரம்பரிய இசை , வகைப்படுத்தப்பட்ட இசையின் இராகங்களின் இலக்கணங்கள் தெளிவாக இசையில் அமைந்தவன்ம் நிகழ்வு இருந்தது
அஞ்சனா ராஜகோபால் கருநாடக பாரம்பரிய குரலிசை மற்றும் இசைக்கருவியில் நன்கு பயிற்சி பெற்றவராவார் என்பதால் அவரின் குரலில் இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்கள் குறிப்பிடத்தக்கது .
அஞ்சனாவின் குரலின் இனிமையை மெருகூட்டிய பக்கவாத்திய கலைஞர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்
இரண்டுமணிநேரம் அரங்கத்துக்கு வகைப்படுத்தப்பட்ட இசையை தளர்வின்றி ஒப்பேற்றினார் அஞ்சனா
இந்த மடந்தை பருவத்தில் அவரின் திறம்மை மிகவும் பாராட்டுக்கு உரியது . வாழ்த்துக்கள்
*#பகுதி இரண்டு
பாரதம்
லயன் நடனப் பள்ளியின் நிறுவனர்,கவின்கலை வல்லுநர் நாட்டியக்கலாயோதி அஞ்சனா ராஜகோபால் அவர்களின் அக்கா அஞ்சலி ராஜகோபால் அவர்களின் முதலாவது பரதநாட்டிய ஆற்றுகையில் தங்கையின் நாட்டியம்
பரதக்கலையின் ஆரம்ப அங்கமாகிய மல்லாரி நடனத்தை அரங்கினில் நிகழ்த்தி மலர்தனை தூவி இறை பணிந்து, குருவிடம் சென்று ஆசியை பெற்று, இசைக்கலைஞர்களுக்கு சிரம்தனை தாழ்த்தி, மக்களை வணங்கி .அரங்கேறியது நடனம்
அஞ்சனா ராஜகோபால் நவரசத்தில் ஒன்பது வித உணர்வுகளை வாழ்க்கைப்பற்றிய சுலோகங்களில் அந்தந்த உணர்வுகளுக்கேற்ற ராகங்களில் தேர்வின் பாடியமுறை அடுத்தடுத்து முகபாவங்களின் பிரதிபாலித விதம் யாவும் பிரமாதம் .
நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் அமைந்தன எமது தலைமுறையின் நடனக் கலையில் புதிய பலதோற்றங்களை உருவாக்கி அக்கலையை விரிவடையச் செய்துள்ளமை புதுமையாகவே உணரமுடிந்தது
கலைகள் அனைத்தையும் பார்வையாளருக்கோ ரசிகருக்கோ வழங்குகின்ற போது அவற்றில் சில நெறிமுறைகள், பொருளமைப்பு, பொருத்தப்பாடு, அழகியல் அம்சங்கள் முதலியன நடன அமைப்பில் கவனிக்கப்பட்டிருப்பது மகிழ்வுக்குக்குரிய விடயம்
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு வழங்கப்படும் கலை நிகழ்ச்சியினை அதாவது பரதநாட்டியக் கலை நிகழ்ச்சியினை ஜனரஞ்சகமாக தொகுத்து இக்கலைக்குரிய பாவம், அபிநயம், இசை முதலியவையும் சமய சார்புகளும் பிறவும் தகுந்த முறையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் இடம்பெற்றது மிகவும் சிறப்பம்சம்
அஞ்சனா,அஞ்சலி ராஜகோபால் இரு சகோதரிகளின் ஆளுமை எதிர்காலத்தில் உயர்ந்த நிலை தொடக்கூடியவை
இசைக்கலைஞர்களும் இணைந்து நிகழ்வை சிறப்பாக்கினர். இசைக்கலைஞர்களை உற்சாகப்படுத்தி நடனமும், நடனத்தை உற்சாகப்படுத்தி இசைமுழக்கமும் இடம்பெற்றதால் அபிநயம், இராகம் தாளம் என்பன நன்றே அமைந்தது
*#பிரதம விருந்தினர் உரையாற்றிய, தயாளன் வேலாயுதபிள்ளை காத்திரமான சில குறிப்புகளை முன் வைத்து உரையாற்றினார்,நட்பின் மகத்துவம், தணித்தாயின் பெருமை , அக்கா ,தங்கை உறவு ,அடுத்த தலைமுறையின் நகர்வு ,அக்கா தங்கைக்கு நடனம் பயில்வித்து அரங்கேற்றம் செய்வதன் சவால் , நிகழ்வின் கதாநாயகியின் அரங்கத்துக்கேற்ற ஆளுமை ,தன்னியல்பான நுகர்வு மாற்றம் சமநிலை அணுகுமுறை, வியக்கதக்க என்றும் அஞ்சனா, அஞ்சலி ராஜகோபால் அவர்களை மனம் நிறைந்து வாழ்த்தினார்
நோர்வே நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைமுறை அழியக்கூடாது என்பதற்க்காக மொழி, கலை, பண்பாடு விழுமியங்களை உரமிட்டு வளத்தவர்கள் ஒதுக்கப்படுகின்றனர் அவர்கள் உள்வாங்கி செய்லபடவேண்டும் என்றும் #உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றவரு உரை முடிவு இருந்தது
*#சிறப்பு விருந்தினர் கவிதாலட்சுமி கற்கை முறை சார்ந்த பார்வையில் இளம் தலைமுறை கலைஞர்கள் படைப்புகளை எப்படி அணுகிறார்கள், அவர்களின் மனவோட்டங்கள் என்ன .குறுகிய நேரத்தில் தர்க்கமான அறிவுரை சார்ந்த வாழ்த்துரையை வழங்கினார்.
இனி வரும் காலங்களில் நோர்வேபல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி ,எமது பண்பாட்டு கலைகள் கற்கலாம் என்றும் அதற்கான கற்பித்தல் முறைகள் உருவாக்கி இருப்பதாகவும் கூறினார்
மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட ஒரு அரங்கேற்றம். ஆடையலங்காரம் ஒலி, ஒளி அமைப்பு, மேடை ஒழுங்கமைப்பு என்பனவும் பாராட்டுக்குரியது.
வெறுமனமே அரங்கேற்றம் என்று பாராது, அரங்கேற்றத்திற்கு பின்னாலுள்ள உழைப்பும் சிந்திக்கப்பட வேண்டியது
"எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் இந்த மண்ணில் பிறக்கையில்லே
நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னைவளர்ப்பிலே "
என்ற பாடலுக்கு அமைய ஒரு தனிமை தாயின் தலைமைத்துவ ஆளுமை
நடந்தேறிய தன் மகளின் அரங்கபிரவேச நிகழ்வு
புலம் பெயர் நாட்டில் பிறந் இன்றைய பிள்ளைகளே நாளைய தலைமுறையினர் என்றால், அவர்களை அந்நிலைக்கு ஆளாக்கிய தாய்மார்கள் மதிப்புக்கும் மரியாதைக்கும் ஆதரவுக்கும் தகுதியானவர்கள்
இந்தவரிசையில் மூன்று பிள்ளைகளின் தாயார் அமிர்த மயில்வாகனம் நடந்தகால நிகழ்வுகளைவிட , பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளுக்காக வாழும் தாயின் சாதனையே
தமிழ் பண்பாட்டின் ஒரு தாயின் பெருமை வாழ்த்துக்கள்

செவ்வாய், 24 ஜனவரி, 2023

இலக்கிய பரதம்

 புலம்பெயர் நாட்டின் துருவ நட்சத்திரமாய் வலம் வரும் கவிதா லக்ஷிமியின் கலாசாதனா நடன பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம் 22.01.2023 ஞாயிறு மாலை நோர்வே கலாசார கலையரங்கில் நடைபெற்றது


அரங்கம் 1
பதினோராடல்:
தமிழ் கடவுள்கள் ஆடிய பதினொன்று வகையான நடனங்களை
தெய்வம் பல்வேறு உருவம் கொண்டு ஆடியதாக , சிலப்பதிகாரம் மாதவி இப்பதினோரு வகையான ஆட்டங்களில் சிறந்து விளங்கியதாகக் கூறுகிற பதினோராடல்

பாடல்களுக்கு கலாசாதனா நடன பள்ளியின் மாணவர்கள் கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து, இடை, முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அவர்களின் அபிநயங்கள் நிகரற்றவை .அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆடலுக்கு இசையும் ,ஒளியும் மிகவும் மெருகூட்டியது என்றால் அது மிகையாகாது.
அரங்கம் 2
உயிர்மிகும் ஓவியங்கள்


நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர் ராஜா இரவி வர்மா


கவிதா லட்சமி ராஜா ரவி வர்மாவின் ஓவியத்துக்கு பின்நவீனத்துவ நாட்டிய அபிநயங்கள் , நவீன இலக்கியகலை, விமர்சன மரபு ரசனையை புதுக்கவிதை நாட்டிய மரபின்னுடாக ஓவியமரபை அரங்கத்தில் அழகா கொண்டுவந்தார்
எப்போதும் கவிதா லக்ஷிமியின் புலனுகர்வுகளின் கற்பனை விரிந்து விரிந்து பெருகும்
ஆழ்ந்து ஆழ்ந்து ஆழம் காணும்,பறந்து பறந்து சிகரம் தேடும்
சுய பார்வை தன்னிறைவுடனும் . இலக்கிய ஞானத்துடன் ஆன்மவெளியில் கலைஞன் வந்திறங்கும் போது அக்கலைஞனின் கலைப்படைப்பில் ஒரு மகோன்னதம் சித்திக்கும்…
இலக்கியம் வளர்த்த அழகுக் கலைகள்
வாழ்த்துக்கள் வளர்க்க





திங்கள், 16 ஜனவரி, 2023

காலம் கடந்த காதல் கவிதைகள

 





எப்போதாகிலும்
உன் நினைவுகளில்
வந்து போகலாம்
நான்

எப்பவுமே
என்னோடு இருக்கிறாய்
நேசத்துக்குரியவளாக
நீ

கிழித்து
கூறுபோட்டு போனது
நீ சொன்னதான
வார்த்தை
உன்னோடு தொலைந்து
போயிற்று
உனக்கும் எனக்குமெயான
என் காதல்

உன்னை நேசிப்பதாக
சொன்ன
அந்த
ஒத்தை வார்த்தையோடு
தொலைந்து
போனவனாகிறேன்
நான்

நாற்பதை
தொட்டுவிட்டது வயசு
இன்னமும்
நிற்கிறது
செல் பட்ட
அந்த
பூ நாறும் மரம்


-பங்கிரையன்-

விடை

 


இழந்த காலம்
இழந்த வெளிச்சம்
ஒலிகளின் மறைவு
நிலங்களின் மாற்றம்
நான் பேசுவது மறைவு !
ஏன் ?
மறைந்தவர்களை
மறைய போபவர்கள்
பேசவேண்டும்
காலம் காத்திருக்கும்
மனிதர்கள் !
நான் இன்மைபற்றியே
பேசுகின்றேன் !

-பங்கிரையான்-
30.01.22

 மகன்

என்னிடம் எதோ பேசினான்
பறவையை கண்டவனுக்கு
வானம் தெரிவதில்லை என்றேன்
சிரித்தான் போனான்
வந்தான் மீண்டும் சிரித்தான்
விட்டு விலக்குவதுபோல்
சென்றுவிடடான் !








உழவே தலை




வெண்பனி மீது பொன்மலர் சூடும்
செங்கதிரோனை வாழ்த்தி
கண்பனி சூடி எம் நினைவோடு
ஏங்கும் எம் தேசத்தின்
கமக்காரனை கை கூப்பி
வாழ்த்தி வணங்குவோம் !

தீது மனம் படைத்தோரும்
தீய குணம் உடையோரும்
இல்லறம், நல்லறம்.
குற்றம் குறையையும் ஏற்று
புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் நேசமுடன்
சுற்றமுடன் நிறைவாய்க்
வாழ்த்தி வணங்குவோம் !

புலம்பெயர் உலகமெங்கும்
மொழியால் ஒன்றுபட்டு
தலைமுறை கண்ட பண்பை
தலைமுறைக்கு கூறி
உழவே தலை என
வாழ்த்தி வணங்குவோம்!

பொங்கல் மகிழ்வுகண்டு
பொங்கலோ பொங்கல்
கூவிய பல குரல்கள்
சொற்களை தாண்டி
தேசத்தின் ஏழையின்
வாசலில் பொங்கி
வாழ்த்தி வணங்குவோம்!

-பங்கிரையான்- 

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

திருநங்கை நர்த்தகி நடராஜ்

 


திருநங்கை நர்த்தகி நடராஜ் பல உயரங்களை எட்டினா பரதநாட்டியக் கலைஞர்.

இவர் நோர்வே வாழ் தமிழ்கலைஞர்களின் அனுசரணையில் வந்த இவரை சந்திக்கவும் இவரின் கலையை பார்த்து ரசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது

அவர் உரையாடும்போது தன் பால் அடையாளம், தான் காதல் கொண்ட தமிழ் மொழி இலக்கியத்தின் ஊடன் கலை மற்றும் இலக்கண , இலக்கியத்தின் மேல் அவர் கொண்ட நேசம் ,தன்னை தங்கி பயணிக்கும் அவரின் தோழி ஷக்தி இவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என வாழ்வியல் கூறினார்


திருநங்கையாக இருப்பதால் மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவியிடையே இருக்கவேண்டிய ஒப்புமைகள் உணர்வுகளை தன்னுள் இயல்புடையதக வெளிப்படுகின்றது என்றும்
அவருடய நாட்டிய உடல் மொழி ,கண் அபிநய பாஷை உள்ளத்து உணர்ச்சிகளை மிக்க அற்புதமாக வெளிப்படுத்தி காட்டினார்

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம் -
என பாரதி கூறியது போல

பாரதியின் கனவுக்குள் நர்த்தகி நடராஜ் சென்றார் அவரின் கனவுக்குள் நாமும் சென்றோம்
பல காலங்களுக்கு பின் அன்புத்தமான நடனக்கலையை பார்த்த மனநிறைவு




திங்கள், 9 ஜனவரி, 2023

தமிழராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்-1974

 

                                          நடந்ததென்ன?
  
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி  தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த உலகத் தமிழர்கள் பெரும் அளவில் தயாராகி வந்தனர். 
இந்தத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த இலங்கை அரசாங்கம் அப்போது விரும்பவில்லை. கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மேயர் மூலம் யாழ்ப்பாணத்தி லுள்ள விழா அமைப்பாளர்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தியது. மாநாட்டிற்கான திறந்தவெளி அரங்குகளை நிர்மாணிப் பதற்கான அனுமதியும் கடைசி நிமிடம் வரை வழங்கப்படவில்லை.
ஆயினும் 1974ஆம் ஆண்டு  4வது உலகத் தமிழராய்ச்சி மகாநாட்டை  யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தீர்மானம் எடுத்தது. அப்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கை யின் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் நெருங்கிய ஆதரவாளராகவும் அந்தக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் இருந்த யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா அதனை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாது தடுப்பதற்குப் பல இடையூறுகளை ஏற்படுத்தி வந்தார். இதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென்பதில் அரசாங்கம் முனைப்பாக இருந்ததால், யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள இந்த மகாநாட்டில் பங்குபற்றுவதற்காக, யாழ்ப்பாணத் திற்குச் செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த அந்நிய மொழியியலாளர்களான தமிழ் ஆராய்ச்சி யாளர்கள் ப
 அதேவேளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியின் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்க அஞ்சியோ என்னவோ தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தம்பையா, யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்துவதை விரும்பவில்லை. ஆயினும் எனைய அனைவரும் யாழ்ப்பாணத்திலேயே நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததால்,அவர் வேறு வழியின்றித் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். ஆனால் தமிழ்மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த அனுமதிக்கமுடியாது என்று கருதிய பேராசிரியர்.சு.வித்தியானந்தன் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைமைப் பொறுப்பைத் து

அரசின் இந்த நெருக்கடியான கட்டுப்பாடுகளின் மத்தியிலும் பேராசிரியர். சு.வித்தியானந்தன் அவர்களின் தலைமையின்கீழ் உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட்டன. அதற்கமைய திட்டமிட்டபடிஇ 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஜனவரி 3 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்இ வடமாகாணத்திற்கு வெளியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள்; யாழ்ப்பாண நகருக்கு வந்து சேர்ந்தனர்.ணிச்சலுடன் ஏற்றுக்கொண்டார். 


ஜனவரி மாதம் 10ஆம் திகதியே மாநாட்டின் இறுதி நாளாக இருந்ததால். அன்றைய நாள் மிகவும் சிறப்பாக ஆய்வரங்க நிகழ்ச்சிகள் மற்றும் பண்பாட்டு ஊர்வலங்கள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆய்வரங்கத்தின் இறுதி நிகழ்ச்சியாக “மொழியின் மகத்துவம் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு;” என்னும் தலைப்பில் தமிழ்மொழி ஆய்வாளர்களினால் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நைனா முகமது அவர்கள் இறுதியாக சிறப்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அலங்கார ஊர்திகளின் பண்பாட்டுப்பவனி இடம்பெற்ற பொழுது, பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர். ஊர்வலத்தின் பொழுது, புகைக்கூண்டுகள், பொம்மலாட்டம், நடன நிகழ்ச்சிகள், சிலம்படி மற்றும் கண்ணைப் பறிக்கும் வாண வேடிக்கைகள் என்பனவும் இடம்பெற்றன. உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி, உணர்வு பூர்வமாகக் கொண்டாடிய அந்த வெற்றி விழாவைக் கண்டு சகிக்காத சிங்களப் பொலிசார், 10 ஆம் திகதி இறுதிநாள் கலை, பண்பாட்டு ஊர்வலம் நடைபெற்றபொழுது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடிஇ உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்ரர்; சந்திரசேகராவின்  தலைமையில் 40 பொலிசாரைக் கொண்டுவந்து தமிழ் மக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர். அதேவேளை மின்கம்பியை நோக்கிப் பொலிசார் துப்பாக்கியால் சுட்டதும். மின்கம்பி அறுந்து விழுந்ததில் பலருக்குக் காயங்களையும் ஏற்படுத்தியது. அதேவேளை மாநாட்டு ஆய்வரங்க மேடைகளும், அலங்காரப் பந்தல்களும் பொலிசாரினால் உடைத்தெறியப்பட்டன. இந்த மிலேச்சத் தனமான தாக்குதலில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது தமிழ் இளைஞர்கள்; கொல்லப்பட்டு, 50க்கு மேற்பட்டோர் படுகாயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அதுவரை நிலவிய மகிழ்ச்சியும், உற்சாகமும் இருந்த இடம் தெரியாமல்போய் சிறிது நேரத்திலேயே அந்த இடம்; மயான பூமியாகக் காட்சி அளித்தது. 



அன்று இந்தப் படுகொலைகளை மேற்கொண்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்; சந்திரசேகராவுக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா “பொலிஸ் அத்தியட்சகராகப்” பதவி உயர்வு வழங்கிக் கௌரவித்தார். 


01 வேலுப்பிள்ளை கேசவராஜன்  -மாணவன்   15  வயது            


02 பரம்சோதி சரவணபவன்              26


03 வைத்தியநாதன் யோகநாதன்              32



04 ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம்    ஆசிரியர்          53


05 புலேந்திரன் அருளப்பு தொழிலாளி           53



06. இராசதுரை சிவானந்தம ;     மாணவன்          21 


07 இராஜன் தேவரட்ணம்                        26 


08 சின்னத்துரை பொன்னுத்துரை- ஆயுள்வேத வைத்தியர்  56  


;09. சின்னத்தம்பி நந்தகுமார்       மாணவன்         14







01 வேலுப்பிள்ளை கேசவராஜன்  -மாணவன்   15  வயது            

02 பரம்சோதி சரவணபவன்              26

03 வைத்தியநாதன் யோகநாதன்              32

04 ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம்    ஆசிரியர்          53

05 புலேந்திரன் அருளப்பு தொழிலாளி           53

06. இராசதுரை சிவானந்தம ;     மாணவன்          21 

07 இராஜன் தேவரட்ணம்                        26 

08 சின்னத்துரை பொன்னுத்துரை- ஆயுள்வேத வைத்தியர்  56  

;09. சின்னத்தம்பி நந்தகுமார்       மாணவன்         14