வெள்ளி, 14 ஜூன், 2019

மட்சுவோ பாஷோ கவிதைகள்

மட்சுவோ பாஷோ கவிதைகள் தீவிர கலைப்படைப்புகள் மட்டுமின்றிச் சமுக அக்கறை கொண்டவைகளாகவும் இருந்தன.....  

1-
நீங்கள் தீ மூட்டுங்கள் 
உங்களுக்கு ஒர் அற்புதம் காட்டுகிறேன் 
மிகப்பெரிய பனிப்பந்து.....

2-  
ஒரு தேனீ 
தள்ளாடி விழுகிறது 
வெளிர் சிவப்பு மலர்ச் செடியிலிருந்து.....

3-
ஒரு கம்பளிப்பூச்சி, 
இந்த இலையுதிர் கால வீழ்ச்சியிலும் 
இன்னும் ஒரு பட்டாம்பூச்சியாக மாறவில்லை


4- 
ஒரு சிள்வண்டு 
தன்னைப் பற்றியே பாடியது  . 
முற்றிலும் மாறுபட்டு..

5-
தொடங்கியது ஒரு குளிர் மழை
தொப்பி எதுவும் இல்லை -
அதனால்என்ன...?.


6-
அந்தத் துறவிமடத்தில் 
குளிர்முடிந்த இரவு விருந்துக்கு 
தயாராகக் கத்தரியும் வெள்ளரியும்

7-
மூங்கில் புதருக்குள் 
பின்னிரவு நிலவு ஒளிரும் போது
ஒரு குயில் அழுகிறது...

8-
பருத்திக்காட்டில் 
நிலவுப்பூக்கள் 
மலர்ந்தது போல்..

9-
ஒரு வயோதிக கிழவன் 
மெதுவாக உண்ணுகிறான் 
முள் மீன்

10-
காலைத்தேநீர் அருந்தும் துறவி 
சாமந்திப்பூ மலர்வது போல் 
அமைதி 

11-
ஒரு பனிக்காலை 
எனக்கு நானே சவைத்தப்படி 
வஞ்சிரமீன் கருவாடு

12-
ஒரு விசித்திரமான மலர் 
பறவைகளுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் 
இலையுதிர் வானம்

13-
நினைவுகளின் கொந்தளிப்பு 
கால அழிவின் எஞ்சிய எலும்புக்கூட்டில் 
கத்தியால் குத்துவது போன்று

14-
சடோ(Sado) தீவிலிருந்து தூரமாக 
கொந்தளிக்கும் கடல்-
பால் வெளி.

15-
பழைய குளம் .....
ஒரு தவளை குதிக்கும் 
தண்ணீர் சத்தம்


16-
மழை வெள்ளத்திற்குப் பிறகு 
சாமந்திப்பூக்களின் மனம் போல 
அவர்கள் உயர்வடைகிரார்கள்

17-
இலையுதிர்கால நிலவொளியில்
ஒரு புழு அமைதியாகக் குடைகிறது
பாதாம் கொட்டை மேல் அமர்ந்து.


18- குளிரில் நீர்ஜாடியின் 
விரிசல் ஒலி 
நள்ளிரவில் விழிக்கச் செய்தது.

19- இறந்த பிறகு என் பயணத்தில் 
அனாந்தரப் பொட்டல் வெளிகளில் 
என் கனவுகள் மட்டும் சுற்றும் 

20- கசக்கும் பணிப்பாகு ஆயினும் 
தொண்டை நனைக்கப் போதும் 
பெருச்சாளிக்கு 

21-
மவுண்ட் அசாமா (Mount Asama) சாலை நெடுகிலும்
கற்களை வீசுகிறது
இலையுதிர் காற்று

22-
தவுட்டுக்குருவி
தடுப்பு கம்பி வேலி முகப்பிலிருந்து
சோற்றுக்கவளத்தில் எச்சமிடுகிறது.

23-
புதர்-மணப்புல் மலர்கள்
அசைந்தாடினாலும் கீழே தள்ளவில்லை
அவைகளின் பனித்துளி மணிகளை

24-
இலையுதிர்கால மழை
மவுண்ட் ஃபுஜி(Mount Fuji) மலையை 
மிகவும் அழகாக திரையிட்டு மறைக்கிறது.


25-
குளிர் இரவில் அந்தக் காட்டு வாத்து
வானத்திலிருந்து விழுந்தது போல்  
உடல்வலியில் அசந்து தூங்குகிறது.

26-

இரவில் விழித்து பார்த்தப்போது 
உறைந்த எண்ணெயால் 
குறைந்த விளக்கு வெளிச்சம்  

27-
களத்து மேட்டு வைக்கோல் 
கெட்டு கறுக்கும் அளவுக்கு 
போதுமான அளவு மழை 

28-
குளிர்கால மழை 
மாட்டுக் கொட்டகை மீது விழுகிறது.
சேவல் கூவுகிறது 

29-
புதிதாகக் கழுவிய 
வெள்ளைப்பூண்டின் மனம் 
ஜில்லென்று வீசுகிறது 

30-
கடல் கறுக்கிறது 
கடல் வாத்துக்களின் குரல்கள் 
களையிழந்து வெளிருகிறது....

31- 
காலைப்பனியின்  
சகதியில் சிதறின-
குளிரும் முலாம்பழங்கள்

32-
நீண்ட தூர வெளிகளைக் கடந்ததால்   
சவ்வாரி இருக்கை உறைந்து 
என் நிழல் ஊர்ந்து செல்கிறது.

33-
என்னைப் பின்பற்றாதீர்கள் 
முலாம் பழத்தை பிளப்பது போன்று 
அலுப்பாகத் தெரியும் உங்களுக்கு.

34-
பேன்களையும் உண்ணிகளையும் 
உயிரோடு தின்று இளைப்பாறுகிறது  
அந்த குதிரை என் தலையணையில்    

35-
அந்தக் கஞ்சா செடியில்
கிழிந்த ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறகு
எதையோ ஞாபகப் படுத்துகிறது.

36-அந்தச் சாலையின் மீது
யாரும் பயணிக்கவில்லை 
இலையுதிர் கால இரவின் தொடக்கம் 

37-
மலைரோஜாக்களின் இதழ்கள்
அப்போதும் இப்போதும் வீழ்ந்திடுமா
நீர்வீழ்ச்சியின் ஓசைக்கு...? 

38-
மலைப்பகுதி  வயல்வெளியில்
பூச்சாண்டி பொம்மை
நல்ல பயன்

39-
கல்லறையைக் குலுக்குகிறது
என் அழுகைக் குரல்
இலையுதிர்காலக் காற்றால்.

40-
குதிரையின் மீதமர்ந்து குட்டித்தூக்கம்
தூரத்து நிலவின் தொடரும் கனவு  
சூடான நீராவியுடன் தேநீர்

41- ஆன்மாக்களின் திருவிழா
இன்றும்  புகைச்சல்  
சுடுகாட்டிலிருந்து  

42- வசந்த மழை
கூரை வழியாகக் கசிவு
சொட்டும் குளவிக் கூடு 


43-
விடுதியில் தங்குவதும் 
அங்கே விலைமாதர்களுடன் தூங்குவதும் 
தரிசுப்புல் திண்டும் நிலவும்  

44- ஒரு குட்டித்தூக்கம் 
அடிக்கல் நாட்டுவது போன்று 
குளிர் சிறைக்கு எதிராக 

45- கீரை சாலட்டில் கிடந்த 
மணலைக் கடித்த பற்களின் கூச்சம் 
வயோதிகம் வந்த நினைவு 

46-
வாழைமரத்தின் 
காற்றில் கிழிந்த இலைகளிலிருந்து 
வாளியில் கொட்டும் மழைத்துளிகள் 

47- அந்தப் பட்டாம்பூச்சி மணக்கிறது 
அதன் இறக்கைகளில் வாசனை 
மந்தாரை மலர்கள் 

48- அந்தத் தும்பி 
தரையிறங்க முடியாது 
புல் என்ற கத்தி மீது.

49-
முதல் பனியில்  
செவ்வந்திச் செடியின் இலைகள் 
ஒட்டி வளைந்தன 

50- அதிகாலைப் பெருமிதம் 
பழைய வேலியிட்ட 
கோட்டைவாயிலில் மலர்ந்தது.

51- வசந்தம் கடக்கின்றது....
துக்கத்தில். பறவைகள் 
கண்ணீர் சிந்தும் கண்களோடு மீன்கள் 

52- மஞ்சள் மலைரோஜாவின்
இதழ்களில் நடுக்கம்-
நீர்வீழ்ச்சியின் கர்ஜனை

53- அந்த மீன் வியாபாரியின் குரல்
கலந்தது 
குயிலின் குரலோடு 

54- 
மூங்கில் காட்டில் மறைந்திருந்த
பனிப்புயல்
அமைதியை விரட்டியது.

55- அந்தப் பழைய கிராமத்தில் 
ஒரு வீடுகூட....
ஈச்சமரங்கள் இல்லாமல் இல்லை

56- என் மரக்கூரையின் கீழ்
ஏப்ரல் மழையின் தனித்தனி சொட்டுகள்
வரையும் கோடுகள்

57- ஒரு சிறந்த போர்வீரனின்
காலி தலைக் கவசத்திலிருந்து  
ஒரு வெட்டுக்கிளி பாடுகிறது

58- கோடை புற்கள்
துணிச்சலான வீரர்களின்   

மிச்சமுள்ள கனவுகள்

59- 
குளிர்காலத் தோட்டத்தில் 
தேய்ந்துபோன நிலவை 
பூச்சிகள் பாடுகின்றன 

60-
மேகங்கள்-
நிலவைப் பார்த்து ரசிப்பவர்களுக்கு  
ஏமாற்றும் பாசாங்குக்காரர்கள் 


இவைகள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட பாஷோவின் ஹைக்கூ கவிதைகளிலிருந்து எனக்கு பிடித்தவைகள் எனது நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டன விதிமுறைகளுக்கு இங்கே இடமில்லை........
  

வியாழன், 13 ஜூன், 2019

"மன்னித்துவிடு"


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம் மற்றும் வெளிப்புறம்
முதலில் என் மனதை
காயப்படுத்தினாய்...
பின் என் உணர்வுகளை கூட
சாகடித்தாய்...
இறுதியில் என்னையே
வெறுக்க வைத்தாய்...
நீ என் தோழியென்று
என்னை இதுவரை
நினைக்கவும் வைத்தாய்....
ஆனால்
இனி இதுபோல்
உன் கற்பனைகளுக்கு
நான் இரையாக போவதில்லை...
உண்மையாகத்தான் சொல்கிறேன்
'மன்னித்துவிடு'

நான் கவிஞன் அல்ல...

Bilderesultat for பேனா
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
நிறைய கவிதைகள் படித்து...
நிறைய நிகழ்வுகளை நினைத்து...
பாதிக்கப்பட்டு.. ..
இப்படி பலவித அனுபவங்களில்
எனக்குள் எழுந்த
வார்த்தைக் குவியல்களை சேமித்து வைத்திருக்கிறேன்...
படித்து முடிக்கும் உங்களுக்கு அது கவிதைதானென தோன்றினால்
இந்த வலைப்பூவுக்கு வைத்த தலைப்பில் மகிழ்வேன்...
தொடர்ந்து வாருங்கள்..... இந்தப்பூவை தொட்டுச்செல்லுங்கள்...

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

அழித்துபோன உறவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்
காலையில் எப்போதும் போல
பழக்க தோஷத்தில் முகநூலின் 
முன்பக்கத்தை பார்க்கிறேன்,
அப்போதுதான் விலகிப்போன போன
நட்பார்த்தமான பற்றியே 
நினைவு வருகிறது !

முன்னுணர்வு


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், வானம் மற்றும் வெளிப்புறம்
அந்தக் கல் வார்த்தை
என் நெஞ்சில் விழுந்தது.
பரவாயில்லை ,நான் தயார்தான்
சமாளித்துக் கொள்வேன்.
இன்று நான் செய்ய வேண்டியது அதிகமுள்ளது;
ஞாபகங்களைக் ஒரேயடியாகக் கொன்றாக வேண்டும்

இதுமாறாது


இது மாறாது இப்போது
பல வருடங்களுக்குப் பின்னும்
வாழ்க்கை இதை உடைத்துவிடாது
பிரிவினாலும் கண்ணீரினாலும்
மரணம் இதை மாற்றிவிடாது
இது வாழும்
என்னுடைய உனக்கான
அனைத்து கவிதைகளும்
நான் சென்ற பிறகும்

மறைந்த நிழல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வரைதல்
எதிர்ப்படும் உன்னை 
என் விழிகளால் விழுத்தும் 
எண்ணம் எனக்கில்லை 
என் கண் பட்டவுடன்
உன்னைக்கான என்
கண்கள் தேடும்
இன்னும் ஒருமுறை பார்க்க
யாரோ ஒருத்தியாக 

கால நிகழ்வு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
மரணம் ஒருவகை அமைதி. 
மரணம் உலகிற்கு புதிதல்ல!
ஆனால் அவரவர்க்கு வரும்போது 
தான் மரணம் புதிதாக உள்ளது!
மரணம் பற்றிய பேச்சு தவறல்ல!
வாழ்வின் யதார்த்தம் தான் மரணம்!

மன உடைவு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அவள் மீது எனக்கு காதலில்லை......
அது வருமா எனத் தெரியவில்லை,
வராமல் இருந்தால் நல்லதென அறிந்தும்,
ஒருவித வருத்தம் என்னை ஆட்கொள்கிறது,
அவள் விலகி போகும்போது !

வன்மம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்
எண்ணங்களெல்லாம் - ஏன்
உம்முள்ளே உருவாகின
உன்னை அறியாமல்
எல்லை அற்று விரிகின்றன
இவ்வளவு தன்மானம்
இருக்கிற எதற்காக உனக்கு
நல் வாழ்த்து சொல்லும் பச்சோந்தி...
நினைத்து, நினைத்து முடிவை மாற்றிப்
பேசும் உன் நலத்திற்காக....
மனம் வாடும் நண்பர்கள்
எண்ணித்தான் திருந்தாயோ?
இன்னொருயுகத்தில் -நீ
வன்மம் கொண்டு
பிறக்காத வரம் வேண்டாயோ..???

Shift+Delete

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
ஒரு நேசித்த உறவை,
ஒரு பழகிய முகத்தை,
ஒரு நீண்ட நினைவுகளை,
ஒரு பழக்கப்பட்ட உரையாடலை,
ஒரு முகப்புத்தக முகங்களை
ஒரு தொடர்பு எண்ணை
ஒரு போனிலிருந்து
டெலிட் செய்யப்படுவது போல
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை
மனதிலிருந்து ஒவ்வொன்றாக டெலிட் செய்ய முயற்சிக்கையில்…!

நீ இல்லை நான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
சொல்லிக்கொண்டு இருக்கின்றாய்
நீ இல்லை 
நான் என்று
வரிக்கின்றாய் என்னைப்பற்றி
நீ இல்லை
நான் என்று
வசப்பட்டதில்
வசித்துக்கொண்டிருக்கின்றாய்
நாளாந்தம்
அதுவும் நான் என்று
என் சிறகுகளை
பார்த்திருக்க முடியாது -நீ.
ஏனெனில்
அவை முழுமையாய்
விரிக்கப்பட விடவேயில்லை!
ஒருவேளை கட்டுக்களை
விடுவித்து என் சிறகுகளை
விரித்திருந்தால்
நான் யாரென பாதியாவது
தெரிந்திருக்கும்!
உனக்கு
நினைத்து கொண்டுஇருக்கின்றாய்
நீ இல்லை நான் என்று
-சன் நரேந்திரன் -

கலைந்தஉறவு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
ஆழமாக நேசிக்கப்படடவர்கள் 
என்னில் இன்றில்லை 
கருத்து வேறுபாடு ....
கருணை வேறுபாடு....
காலச்சுலசுழற்சி...
கலைத்துப்போட்டது உறவை !

அடையாளம் தெரியாத உறவு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
புதைந்தது கிடந்த 
என் உணர்வுகளை 
எழுத தொடங்கினேன் ,
படித்து விட்டுச் சொன்னார்கள்
யார் உன் காதலி என்று ...
எழுத தெரிந்த எனக்கு
உன்னை அடையாளம்
காணமுடியவில்லை
அன்று ....?
இன்று......?

இழப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
புரிந்துணர்வு என்பது
எல்லாத் தரப்பு உறவு 
முறைகளுக்கும் பொதுவான ஒன்று. 
புரிந்துணர்வு இல்லையென்றால் 
வேலை, 
சொந்தங்கள்,
நட்பு
என்று எல்லாவற்றையும்
இழக்க வேண்டிய
சூழல் உருவாகி விடும்.

முறிந்த பேனா...

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
உன் நிலமை கருதி
என் குருதி சிந்தி,
உன்னாலே உனக்காக
கவிதைகள் பல எழுதியும்,
உன்னால் நான்
முறிந்தது ஏனோ...?

என்ன மனசு:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மேகம், வானம் மற்றும் வெளிப்புறம்
உன் சின்ன சின்ன கோபங்களின்
உடைந்து போகிறது எனது இதயம்
இது அதிகாரத்திற்கும் ஆணவத்துக்கும் 
நடக்கும் சண்டையாகவும் இருக்கலாம்
அல்லது காரியம் சாதிப்பதற்குபயன்படும்
ஆயுதமாக இருக்காலம்
முடிவில்
காயங்களும் இழப்புகளும்
மறக்கப்பட்டு
விட்டு கொடுப்பதும்
விட்டு விலகாமல்
நிலைத்திருப்பதிலும் அடங்கியிருகிறது
எனது காதலும் உனது ஊடலும்

துயரம் துரமாகக்கூடாது

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தூர நின்று பார்க்கிறேன் விலகிப்போக அல்ல ------
தூரம் துயரமாகிவிடக்கூடாதுஎன்ற எண்ணத்தில்...
வார்தைகளில் வழுக்குகிறேன்மௌனமாய்ப்போக அல்ல ....
வார்த்தை வாதமாகிவிடும்என்ற அச்சத்தில்...
ஆனாலும் எழுத்துளியால் செதுக்கினேன் .......
நட்பெனும் சிற்பத்தை ஆம் விழியின் ஓவியமாய்...
நட்பே நட்பை உணரவேண்டு மென்பதற்க்காக...

இரவில் மடியில்..!

இரவில் மடியில்..!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
நான் உறங்காமல்
விழித்திருந்த இந்த இரவுகள்
இரவல் வாங்கப்பட்டவை அல்ல..!
நான் எனக்காக விழிதிறந்து
காணும் கனவுகள்..!
நான் விழித்துறங்கும் வரை..!
என் விழி திறந்திருக்கும் வரை..!
இந்த கனவு
கலையவோ
களவு போகவோ
வாய்ப்பில்லை..!
என்றும் நான்
இரவல் பிள்ளையாய்,
இரவில் மடியில்..!

ஏழ்மையிலுருந்து விடுதலை

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்துச் சென்றான். இரு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான் :
அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம், அந்த கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது, அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம், அவர்கள் உடனடிப் பாலைக் கறந்து சாபிடுகிரர்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள் . நாம் வீட்டைச் சுற்றி மதில் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிக்கொண்டே சென்றான்.
மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது.. தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று.....!
நீதி: ஏழ்மை என்பது நம் எண்ணத்திலேயே குடி கொண்டால் என்னதான் வசதி கிடைத்தாலும் ஏழ்மையிலுருந்து விடுதலை கிடைக்காதுபடம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

பிரிகின்ற பாதை


பொறாமை பிரிவுகளை முடிவெடுத்தது
சந்தர்ப்பங்கள் சந்திப்பில்
சந்திக்கின்றோம்
நியாயப்படுத்தும் காரணங்களை
வரலாறாக வாசிக்கிறாள்
தொந்தரவுகளைப் பற்றி
ஒவ்வொன்றாக கதைசொல்கிறாள்
எல்லாவற்றையும் நான்
எதிர்க்கருத்துச் சொற்களில்
விளங்கிக் கொண்டிருக்கிறேன்
வாசிப்பு முடிவில்
புத்தகம் மூடப்பட்டது
கண்களின் எல்லையைத்
தாண்டிச் சென்ற கண்ணீர்
அவள் கணங்களில்
தாண்டவம் ஆடுகின்றது !

கவிதை

கவிதை 
ஓர் இடத்தில் கவிதை என்பது 
கற்பனை..... 
ஓர் இடத்தில் கவிதை என்பது 
உணர்வு..... 
ஓர் இடத்தில் கவிதை என்பது
தேடல்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வார்த்தை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாழ்க்கை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மகிழ்ச்சி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கண்ணீர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தாகம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பசி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மௌனம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வேகம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தீர்வு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அன்பு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உண்மை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பொய்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கானல்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஊற்று.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பேச்சு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மூச்சு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வார்த்தைகளின் கோர்வை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாழ்க்கையின் கோர்வை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
விதை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
விலை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணவு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
குப்பை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மருந்து.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஊமை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
நாதம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
தாளம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உயிர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
சுவாசம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வாசம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
இலக்கணம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பிழை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
நந்தவனம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
பாலை நிலம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
புதிர்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
எளிமை.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
புதுமை......
ஓர் இடத்தில் கவிதை என்பது
ஆடம்பரம்.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வலி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வழி.......
ஓர் இடத்தில் கவிதை என்பது
அமைதி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
உணர்வுகளின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
கண்ணீரின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
வீரத்தின் மொழி......
ஓர் இடத்தில் கவிதை என்பது
கையாளாகாத தனத்தின் மொழி.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
எண்ணத்தின் வெளிப்பாடு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
சமூகத்தின் வெளிப்பாடு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அழகு.....
ஓர் இடத்தில் கவிதை என்பது
அழுகை.....
கவிதை எங்கேயும் இல்லை
உனக்குள்ளேயே இருக்கிறது
உன்னை சுற்றி இருக்கிறது
நாங்கள் என்ன
உங்களைப்போல்
மா… மரமனிதர்களா என்ன?
எங்கள் மனவலியின்
கடுகு விதைகள் ஒவ்வொன்றும்
உங்களுக்கு வதைசெயும் ஒருநாள்
தம்பட்டம் அடிக்காதீர்கள்!
பயப்படுகிறோம்…..
எங்கள் வேதனை
எங்கள் மனவலி
உங்களுக்கு தெரியப் போவதில்லை
ஒன்று மட்டும் உண்மை!
எங்களுக்கு உங்களுக்குள்ள
பாரிய நோய்கள் இல்லை..
பயப்படுகிறோம்………
மாமனிதன் என்ற
மாபெரும் பட்டங்கள் எல்லாம்
பரீட்சை எழுதாமலே
உங்களை அடைகின்றனவே!
கொஞ்சம் மனம் வையுங்கள்
நறுமணம் வீசலாம்
உங்கள் அழுக்குகளை
உங்கள் அசிங்க அறைகளுக்குள்
கைவிலங்கிட்டு வையுங்கள்!

பயப்படுகிறோம்……
ஓரிரு நாட்களேனும்
எங்களையும் வாழ விடுங்கள்
எங்கள் உழைப்பில்
உப்புச் சாப்பிட
உயிர்கள் காத்துக் கிடக்கின்றன.
உயிரோடு ஒட்டிப் பிறக்காததை

பயப்படுகிறோம்…………
மேடையிட்டு மேவும் பல ஏமாற்றங்கள்
மேலாடையிடுகிறது மேன்மைக் குணங்களிற்கு.
மேன்மாடம் அமைக்கிறது அவநம்பிக்கை உணர்விற்கு.
மேற் பார்வையை அறிவு மயக்குகிறது.

பயப்படுகிறோம்………
பல்வேறு தருணங்களில்
கடந்து வந்த பாதைகளில்
கடந்து போன பாடங்களை
மீண்டும் படிக்க நேர்கையில்
தோன்றுகிறது, நம் வாழ்க்கை

நாம் விழுந்த இடத்தில் எழுந்து நடப்போம்
எம்மை விழுத்துபவர்களை
தலைவர்களாக விடமாட்டோம்”
எங்கள் வலி புரியும்!
உங்கள் வழி தெரியும் ???????????????

புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர் பதிவேற்றியது தமிழரங்கம்

அவ்ரோ விமானத் தாக்குதலுக்குத் திட்டமிடுகின்ற அளவிற்கு எமக்கு மத்தியில் நம்பிக்கையும் உறுதியும் வேர்விட்டிருந்தது. ஏதோ பெரிய தாக்குதலை நடத்தி முடிக்கப் போகிறோம் என்ற பய உணவெல்லாம் எம்மிடம் இருக்கவில்லை. கடந்து சென்ற ஒரு வருடத்தினுள் எமது இராணுவத் தாக்குதல்களின் வெற்றியும், இயக்கதினுள் ஏற்பட்டிருந்த ஒழுங்கமைப்பும் நாம் குறிப்பிடத்தக்க பிரதான அமைப்பாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

பிரபாகரனது நோக்கமும் அதன் வழி எமது நோக்கமும் ஒரு பலமான இராணுவக் குழு ஒன்றைக் கட்டியமைத்துக்கொள்வதே. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை நாங்கள் போதுமானதாக எண்ணியிருந்தோம்.



பெருந்திரளான மக்களைக் அமைப்பு மயப்படுத்தி, கட்சியையும் ஏன் இராணுவ அமைப்பையும் கூட அந்த மக்களின் பலத்திலிருந்து உருவாக்கும் போராட்டங்கள் மட்டுமே உலகத்தில் வெற்றியடைந்திருக்கின்றன என அப்போதெல்லாம் நாம் அறிந்திருக்கவில்லை.



இந்த வகையில் கடந்த கால இராணுவத் தாக்குதல்களின் வெற்றியையும், அரச படைகளின் இழப்புக்களையும் மட்டும் வைத்துக்கொண்டு நாம் கணிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவிட்டதாகவே எண்ணிப் பெருமிதமடைகிறோம்.



ஈரோஸ் அமைப்பினருக்கு இங்கிலாந்திலிருந்த அவர்களின் உறுப்பினர்கள் வழியாகப் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பிருந்தது மட்டுமன்றி அவ்வியக்கத்திடம் பயிற்சி பெறும் வசதிகளையும் கொண்டிருந்தனர். கொலைசெய்யப்பட்ட பற்குணத்தினூடாக ஈரோஸ் இயக்கத்துடனான தொடர்புகள் வலுவடைந்திருந்தமை குறித்து முன்னமே பதிந்துள்ளேன்.



தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளின் மீது மதிப்புவைத்திருந்த ஈரோஸ் அமைப்பினர், எமது இரு உறுப்பினர்களுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி நடவடிக்கைகளை ஒழுங்கு செய்கின்றனர்.



>உமாமகேஸ்வரனும் விச்சுவும் பயிற்சி பெறுவதற்காகப் பாலஸ்தீனம் செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. ஏறக்குறைய மூன்று மாதங்கள் வரையான பயிற்சிக்கு அவர்கள் அங்கு செல்கின்றனர்.



உமாமகேஸ்வரனும் இங்கிலாந்திலிருந்து எம்மோடு வந்து இணைந்துகொண்ட விச்சு என்ற விச்வேஸ்வரனும் எம்மத்தியிலிருந்த ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடியவர்கள். இவர்கள் தவிர, கொழும்பிலிருந்து வந்து எம்மோடு இணைந்திருந்த சாந்தன் என்பவரும் சரளமாக ஆங்கிலம் பேச வல்லவர். இவரூடாகவே பிரபாகரன் ஆயுதங்கள் தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பதுண்டு.



உமா மகேஸ்வரன் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சிக்குச் சென்ற வேளையில், தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஊடாக கியூபாவில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வேளையில் சாந்தன் கியூபாவிற்குச் செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. இவரைத் தவிர வேறு ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் இல்லாத நிலையில், சாந்தனுடன் எமது ஆதரவு மட்டத்தில் செயற்பட்ட வேறொருவரும் அங்கு அனுப்பப்படுகிறார்.



இறுதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் இருவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் இருவருமாக நான்குபேரும் கியூபா செல்கின்றனர்.



இவர்கள் கியூபா சென்றதும், பாலஸ்தீனத்தில் எமது உறுப்பினர்களோடு பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த ஈரோஸ் அமைப்பினருடன் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக விச்சு பயிற்சியை முடிக்காமலே திரும்பிவிடுகிறார். உமா மகேஸ்வரன் தனது கால எல்லைக்குள் வழங்கப்பட்ட பயிற்சிகளை முடித்துக்கொண்டு பின்னதாக நாடு திரும்புகிறார்.



இவர்கள் திரும்பிய சில காலங்களினுள்ளேயே எமது மத்தியகுழுக் கூட்டம் நடைபெறுகிறது. அங்கு பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தில் விச்சு மற்றும் உமாமகேஸ்வரன் ஆகியோரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். சில நாட்களில் எமது இயக்க நடவடிக்கைகள் பரந்து பட்ட மக்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பையும் உள்வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அமைப்பிற்கான அதிகார மட்டத்திலான பேச்சுக்கள், வேறு அமைப்புக்களுடனான தொடர்புகள், அன்னிய நாட்டுத் தூதரகங்களுடனான தொடர்புகள் போன்ற அனைத்தும் எம்மது வேலைப்பணிகளை அதிகரிக்கின்றன. இந்த வேளையில் எமக்கு மத்தியில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவரும் ஏற்கனவே அகதிகள் மீள் குடியேற்றம் போன்ற வேலைகளில் ஈடுபட்டவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பான கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளருமான உமா மகேஸ்வரனின் வேலைப்பழு அதிகரிக்கின்றது.



ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், எம்மை விட அதிகமான தொடர்புகளைக் கொண்டிருந்தவருமான உமா மகேஸ்வரனை தமிழீழ விடுத்லைப் புலிகளின் தலைவராக நியமிக்கலாம் என பிரபாகரன் தனது கருத்தை முன் வைக்கிறார்.



உமா மகேஸ்வரன் அதை மறுக்கவில்லை. நாங்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறோம். இறுதியில் நமது இயக்கத்தின் முதலாவது தலைவராக உமா மகேஸ்வரன் நியமிக்கப்படுகிறார். அரசியல்ரீதியான சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளை முன்னெடுக்க அரசால் தேடப்படாத ஒருவரின் பிரசன்னம் தேவைப்பட்டது. இந்த வகையில் உமாமகேஸ்வரன் இதுவரை அரசால் தேடப்படாத நிலையில் இருந்ததால் இவரைத் தலைவராக நியமிப்பது நியாயமானது என அனைவரும் கருதினர்.



உமாமகேஸ்வரன் ஒரு கடின உழைப்பாளி. வரித்துக்கொண்ட வேலையச் செய்து முடிக்கும் வரை ஓய்வதில்லை. சிறிய தொகைப் பணத்திற்கும் கணக்கு வைத்துக்கொள்ளும் நேர்மை அவரிடமிருந்தது. நிர்வாக ஒழுங்கும் திறமையும் படைத்தவர்.



உமாமகேஸ்வரன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தாலும் பிரபாகரனின் ஆளுமைதான் காணப்பட்டது. எமது குழுவின் அதிகாரம் மிக்கவராக பிரபாகரனே இருந்தார்.



இவ்வேளையில், கனகரத்தினம் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் இரட்டை உறுப்பினர் தொகுதியான பொத்துவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். 23990 வாக்குகளைப் பெற்று கனகரத்தினம் பாராளுமன்றத்திற்குத் தெரிவுச்ய்யப்படுகிறார். தனித் தமிழீழத்திற்கான பிரச்சாரம் மேற்கொண்டே கனகரத்தினம் வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார். டிசம்பர் மாதம் 19ம் திகதி டெய்லி நியூஸ் பத்திரிகையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மீது தான் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் தமிழ் மக்களிற்கு நீதி வழங்குவார் என்றும், தவிர, கிழக்கு மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்த போதும், தனித் தமிழ் நாட்டை விரும்பவில்லை என்றும் இந்தக் காரணங்களால் அவர் யூ.என்.பி கட்சியில் இணைந்து கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.



மறு நாளே அமிர்தலிங்கத்தின் அறிக்கை வெளியாகிறது.கனகரத்தினம் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி என்கிறது அந்த அறிக்கை. இவற்றையெல்லம் பார்த்துக்கொண்டிருந்த உணர்ச்சி மயப்பட்ட இளைஞர்களான நாம், கனகரத்தினம் உயிர்வாழக் கூடாது என்ற முடிபிற்கு வருகிறோம்.



உமா மகேஸ்வரனுக்கு நன்கு பழக்கப்பட்ட கொழும்பில் வைத்தே கனகரத்தினம் கொலை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கனகரத்தினம் கொலை வெற்றியளிக்காத ஒரு சம்பவமாயினும் நாட்டின் தலைநகரில், ஜே.ஆர் அரசின் இராணுவத்தின் இரும்புக்கரங்கள் இறுகியிருந்த கொழும்பின் நடுப்பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை முயற்சி மூழு நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஜனவரி மாதம் 26 ஆம் திகதி 1978 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தப் கொலை முயற்சி இலங்கையில் இதயப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய முதல் தாக்குதல்.



பிரபாகரன், உமா மகேஸ்வரன், செல்லக்கிளி ஆகிய மூவரும் நேரடியாக களத்தில் நின்று நிகழ்த்திய இந்தத் தாக்குதல் முழுமையான வெற்றியளிகாமல் வெறுமனே கொலை முயற்சி என்ற அடிப்படையில் முடிந்தது.



மிகக் கவனமான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்ட உமா மகேஸ்வரனும் பிரபாகரனும், செல்லக்கிளியும் கனகரத்தினம் அவரது கொழும்பு இல்ல்லத்திலிருந்து மெய்ப் பாதுகாவலர்களோடு காரை நோக்கிச் செல்லும் போது, துப்பாகியால் சுடுகிறார்கள்.



உமா மகேஸ்வரன், பிரபாகரன், செல்லக்கிளி ஆகிய மூவருமே கைத் துப்பாக்கி வைத்திருந்தனர். உமாமகேஸ்வரன் கனகரத்தினத்திற்கு முன்னால் சென்றதும் அவரை கனகரத்தினம் அடையாளம் கண்டுகொள்கிறார். கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளராகவிருந்த உமாமகேஸ்வரன் கனகரத்தினத்திற்கு முன்னமே அறியப்பட்டவர். உமாமகேஸ்வரனைக் கண்டதும் கனகரத்தினம் எப்படி இருக்கிறீர் தம்பி என்கிறார். உடனே உமாமகேஸ்வரன் துரோகியைச் சுட்டுத்தள்ளுங்கோடா என்று சத்தமிட்டவாறே கனகரத்தினத்தை நோக்கிச் சுடுகிறார்.



பின்னதாகப் பிரபாகரனும் கனகரத்தினத்தை நோக்கி குறிவைத்துச் சுடுகிறார். அவர்கள் இருவரின் குண்டுகளுமே தவறிவிடுகின்றன. இந்த வேளையில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் எதிர் எதிர்த் திசைகளிலிருந்து தாக்குதல் நடத்தியதால், உமா மகேஸ்வரனின் குண்டு பிரபாகரனுக்கு அருகாமையில் சென்றதால் அவர் அங்கு மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவத்தையும் நாங்கள் பின்னதாக அறிந்து கொண்டோம். இவர்கள் இருவரினது குறிகள் தவறிவிட செல்லக்கிளியின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தான் கனகரத்தினத்தைக் காயப்படுத்தியது.



ஒரு துப்பாக்கிக் குண்டு அவரை நோக்கிப் பாய்கிறது. குண்டுபட்ட காயத்தோடு அவர் மருத்துவ மனையை நோக்கி எடுத்துச்செல்லப்படுகிறார். அங்கு அவசர சிகிச்சையின் பின்னர் அவர் உயிர்தப்பிவிடுகிறார். ஆனால் துப்பாக்கிச் சூட்டின் தாக்கத்தினால் மூன்று மாதங்களின் பின்னர் கனகரத்தினம் உயிரிழந்துவிடுகிறார்.



பொத்துவில் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் கொலை முயற்சி இடம் பெற்ற பின்னர் தான் உமா மகேஸ்வரன் தேடப்பட்டவராகின்றார். அவரும் இப்போது முழு நேரமாக எம்மோடு வடக்கிலிருந்தே இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.



செல்லக்கிளி, உமா மகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் தவிர கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான நாகராஜாவும் இக் கொலை முயற்சிக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். போக்குவரத்து ஒழுங்கு, தங்குமிட வசதிகள் போன்ற பல நடவடிக்கைகளை நாகராஜாவே முன்னின்று கவனித்துக்கொண்டார்.



பிரபா, உமா மற்றும் செல்லக்கிளி மூவரும் கனகரத்தினத்தின் இருப்பிடம் நோக்கிச் செல்லும் வேளையில், பொலீஸ் மோப்ப நாய்களின் தேடுதலிலிருந்து தப்புவதற்காக காகிதம் ஒன்றில் மிளகு சுற்றிக் கொண்டு சென்றனர். மிளகு தூள் சுற்றிய காகிதம் கொழும்புப் காவல்துறையிடமும், உளவுத் துறையிடமும் அகப்பட்டுவிடுகிறது. அந்தக் காகிதம் நாகராஜாவின் தங்குமிடத்தில் அச்சடிக்கப் பட்டிருந்தது. இதனை அவதானித்த பொலீசார், நாகராஜாவை விசாரணைக்கு உட்படுத்தி அவருடன் கொலைமுயற்சிக்கு இருந்த தொடர்பைக் தெரிந்துகொள்கின்றனர்.



இந்த விசாரணைகளில் முக்கிய பங்கு வகித்தவர் முன்னமே துரையப்பா கொலை வழகில் பிரதான அதிகாரியாகச் செயற்பட்ட பஸ்தியாம்பிள்ளை. நாகராஜாவை சித்திரவதை செய்து விசாரணகளை மேற்கொண்டதில் தவிர்க்கவியலாதவாறு அவர் சில தகவல்களைச் சொல்லவேண்டிய நிலைக்கு உட்படுத்தப்படுகிறார். இந்த வேளையில், அவர் எமது பண்ணைகள் குறித்தோ, எமது ஏனைய முக்கிய நிலைகள் குறித்தோ எந்தத் தகவல்களையும் வழங்கவில்லை. ஏற்கனவே வேறு வழிகளில் உமா மகேஸ்வரனுக்கு கொலைமுயற்சியோடு இருந்த தொடர்பை உளவுத்துறை அறிந்திருந்ததால், நாகராஜா, உமா மகேஸ்வரன் மீதே எல்லாப் பழியையும் சுமத்துகிறார்.



இதன் பின்னர் நாகராஜாவையும் அழைத்துக்கொண்டு பஸ்தியாம்பிள்ளை உமா மகேஸ்வரனின் கட்டுவன் இல்லத்திற்குச் செல்கிறார். நாகராஜாவும் உமாமகேஸ்வரனைக் அடையாளம் காட்டுவதாக ஒத்துக்கொள்கிறார். மிக நீண்ட நேரப் பிரயாணத்தின் பின்னர், பஸ்த்தியாம் பிள்ளையின் பொலீஸ் வாகனத்திலேயே உமா மகேஸ்வரனின் இல்லைத்தை அடைகின்றனர். துரையப்பா கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுல் நாகராஜாவும் ஒருவர் என்பதால் பஸ்தியாம்பிள்ளையுடன் இவர் சரளமாகப் பேசக்கூடிய நிலை இருந்தது. வழி நெடுக பஸ்தியாம்பிள்ளையுடன் பேசிக்கொண்டு வந்த நாகராஜாவிற்கு உமா மகேஸ்வரன் வீட்டில் தங்கியிருக்க மாட்டார் என்பதும் தெரியும். அங்கே கட்டுவனை அடைந்ததும், பொலீசைக் கண்டால் உமா மகேஸ்வரன் தப்பி ஓடிவிடுவார் என்றும், பஸ்தியாம் பிள்ளையை வெளியே நிற்குமாறும், தான் உள்ளே சென்று அவரைத் தந்திரமாக அழைத்து வருவதாகவும் பஸ்தியாம்பிள்ளையிடம் கூறி அவரையும் சம்மதிக்க வைக்கிறார்.



இதற்கு பஸ்தியாம்பிள்ளை சம்மதம் தெரிவிக்கவே நாகராஜா உமா மகேஸ்வரன் வீட்டினுள் சென்று, வீட்டின் பின்பகுதியால் தப்பியோடிவிடுகிறார். இந்தத் துணிகரமான நடவடிக்கையால் அங்கிருந்து தப்பிய நாகராஜா, பண்ணைகளிலிருந்த எம்மை நோக்கி வந்து எம்மோடு மீண்டும் இணைந்து கொள்கிறார். இந்தச் சம்பவத்தின் பின்னர், நாகராஜாவும் தேடப்படுபவர்கள் பட்டியலில் இணைந்து கொள்கிறார்கள்.

(இன்னும்வரும்…)

புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)ஐயர்

இந்த இரு வருட எல்லைக்குள் பல உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். பண்ணைகளின் தேவை அதிகமாகிறது. எமது இயக்க உறுப்பினராவதற்கான நுழைவாயில் பண்ணைகள் தான். அங்குதான் அவர்களின் உறுதித்தன்மை பரிசீலிக்கப்படும். தேடப்படுபவர்களோ, முக்கிய உறுப்பினர்களோ பொதுவான பண்ணைகளில் நிரந்தரமாகத் தங்குவதில்லை.






பண்ணை வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் பலர். காடு சார்ந்த பிரதேசங்களிலும், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளிலும், எந்த வகையான மத்தியதர வாழ்க்கைக்கும், பண்பிற்கும் உட்படாத தனிமைப்பட்ட வசதியற்ற பண்ணைகளில் போராட வேண்டும் என்ற உறுதியோடு இறுதிவரை தாக்குப்பிடிக்கும் உறுப்பினர்களே இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாகச் இணைத்துக்கொள்ளப்படுவர்.



80 களில் புலிகள் இயக்கத்தின் அறியப்பட்ட போராளிகளாகத் திகழ்ந்த பலர் 1977 களின் இறுதியிலிருந்து எம்மோடு பண்ணைகளிலிருந்தவர்கள் தான். பண்ணைகளை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பும் என்னிடமே வழங்கப்பட்டிருந்தது. அவற்றை ஒழுங்குபடுத்துவதும், பண வசதிகள் குறித்து செயற்படுவதும், உறுப்பினர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்வதும், எனக்குப் பாரிய சுமையாகவிருந்தது. நான் ஓரிடத்தில் ஒரு நாளிற்கு மேல் தங்குவதே முடியாத ஒன்றாக அமைந்திருந்தது. பண்ணைகளிடையே பயணம் செய்வதும் ஒழுங்குபடுத்துவதும் பிரதான பணியாக அமைந்தது. பிரபாகரன் உட்பட ஏனைய உறுப்பினர்களுக்கு புதிய பண்ணை உறுப்பினர்கள் பலரை தெரியாதிருந்தது. என்னிடமே அனைத்துத் தொடர்புகளும் முடங்கிப் போயிருந்தன.



முதலில் வவுனியா பூந்தோட்டம் பண்ணையும் தவிர புளியங்குளத்திற்கு அருகாமைலயமந்திருந்த பன்றிக்கெய்த்த குளம் பண்ணையுமே எம்மிடமிருந்தன. பின்னதாக , புதுக்குடியிருப்புக்கு அருகாமையிலுள்ள வள்ளிபுரம் என்ற இடத்தில் ஒரு பண்ணையை உருவாக்குகிறோம். இது தான் எமது மூன்றாவது பண்ணை.



இப்பண்ணையுடன் ஒரு வீடும் அமைந்திருந்ததால் பல நடவடிக்கைகளுக்கு வசதியானதாக அமையும் என உறுதிசெய்கிறோம். இங்கு நிலக்கடலை பயிர்ச்செய்கைக்கான நிலம் இருந்ததால் பண்ணையின் பராமரிப்புச் செலவுகளுக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்பு இருந்தது. தவிர, ஆயுதங்களை மறைத்து வைக்கவும் இந்த இடத்தைத் தெரிவுசெய்வதாகத் தீர்மானிக்கிறோம். இந்த நோக்கங்கள் அனைத்துக்குமாக இந்தப்பண்ணையை 25 ஆயிரம் ரூபா பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்கிறோம். பன்றிக்கெய்தகுளம் பண்ணையைப் போலவே இந்தப் பண்ணையும் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்திருந்தது.



இப்ப்பண்ணை இயங்க ஆரம்பித்த உடனேயே மாங்குளம் பகுதியிலிருந்த கல்மடு என்ற இடத்தில் பண்ணையை உருவாக்குகிறோம் . இந்தப்பண்ணையை நாம் விலைகொடுத்து வாங்கவில்லை. இது காட்டுப்பகுதியில் அமைந்திருந்தது. முன்னதாக விவசாயம் செய்யும் நோக்குடன் இந்தப்பண்ணை காட்டுப்பகுதியில் தனியார் சிலரால் உருவாக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பராமரிக்கும் வசதியீனம் காரணமாக அதனை எம்மிடம் ஒப்படைக்கிறார்கள்.



அவ்வேளை, மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்களுக்கான அங்கீகாரம் உருவாகியிருந்த காலகட்டம். இதனால் நாம் விடுதலை இயக்கம் எனத் தெரிந்துகொண்டே எம்மிடம் இந்தப் பண்ணை தரப்படுகிறது.



சிறீமாவோ ஆட்சிக்காலத்தில் இலங்கையில் விவசாயப் பொருளாதாரம் முன்னிலைக்கு வந்திருந்தது . தென்னிலங்கை இடதுசாரி அமைப்புக்களுடன் சிறிமாவோ ஏற்படுத்திய கூட்டு, தேசியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தது.



அந்த வேளையில் முத்தையன்கட்டுப் பகுதியில் பல படித்த இளைஞர்களுக்குக் தோட்டக்காணிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காணியை ஒருவர் எமக்கு வழங்குகிறார்.ஒட்டிச்சுட்டானில் அமைந்திருந்த இந்தத் தோட்டக்காணி விவசாயம் செய்வதற்கு ஏற்ற பகுதியாக அமைந்திருந்தது.



இதன் பின்னதாக மடு வீதியிலுள்ள முருங்கன் பகுதியில் ஒரு பண்ணையை உருவாக்குகிறோம் . இதுவும் ஒரு தெரிந்தவர் மூலம் இந்தப் பண்ணையைப் பெற்றுக்கொள்கிறோம். இது காட்டுப்பகுதியில் மிகவும் பாதுகாப்பானதாக அமைந்திருந்தது. இங்கு தங்குமிடம் எதுவும் இருக்கவில்லை. ஒரு தண்ணீர்க் கிணறு மட்டுமே அமைந்திருந்தது. நாங்கள் தங்குவதற்கான கொட்டில்களை அமைத்துக்கொள்கிறோம்.



பின்னர் பன்னாலை என்ற இடத்தில் ஒரு கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்குகிறோம். இது யாழ்ப்பாணப்பகுதியில் உருவான முதல் பண்ணை எனலாம்.



இப்போது எமது பண்ணைகளைக் கிழக்கு மாகாணம் வரை விரிவு படுத்துகிறோம். மட்டக்களப்பில் மியான் கற்குளம் மற்றும் புலிபாய்ந்த கல் என்ற இரண்டு இடங்களில் எமது பண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன.



திருகோணமலையில் பண்ணையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை எல்லாவற்றிற்கும் பின்னர் இறுதிக்காலத்தில் திருகோணமலை நகர்ப் பகுதியில் படிப்பகம் போன்ற ஒன்றை ஏற்படுத்துகிறோம். சிறு குடிசை ஒன்றை அமைத்து அங்கு நான்கு அல்லது ஐந்து பேர் வந்து பேசிக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.



மூதூர் பகுதிகளில் பண்ணையை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இறுதிவரை பண்ணை அமைக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கவில்லை. ஒப்பீட்டளவில் மாங்குளம் பண்ணையும் மடுப்பண்ணையும் பாதுகாப்பான இடங்களில் அமைந்திருந்தன. ஏனைய பண்ணைகளில் மன உறுதி மிக்கவர்களாக அடையாளம் காணப்படுபவர்களை இந்த இருபண்ணைகளிலும் சிறிய இராணுவப் பயிற்சிகளுக்காக தெரிவுசெய்து அழைத்து வருவோம். அங்கு சிறிய ரகத் துப்பாகிகளால் சுடப்பழக்குவோம்.



உடற்பயிற்சியிலிருந்து குறிபார்த்துச் சுடுதல் வரை பல நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.காட்டுப்பகுதியில் சன நடமாட்டமற்ற பகுதிகளில் அமைந்திருந்த இப்பண்ணைகள் இந்த நடவடிக்கைகளுக்கு வசதியானதாக அமைந்திருந்தது.



தவிர தேவிபுரத்தில் தென்னம் தோட்டம் ஒன்று ஒரு வயதான பெண்ணிற்குச் சொந்தமாக இருந்தது. அவரது மகன் கூட இயக்கத்தில் இணைந்திருந்தார். ரத்தினம் என்ற அவரது மகன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்திருந்தார். இந்தத் தென்னந்தோப்பும் எமது இயக்கத்திற்கு வழங்கப்பட நாம் அதனையும் ஒரு பண்ணையாகப் பாவிக்கிறோம். இந்தப் பண்ணைகளை ஒழுங்குபடுத்தும், நிர்வகிக்கும் பொறுப்பு என்னிடமே இருந்தது.



இந்தப்பண்ணைகளில் ஏறக்குறைய ஐம்பது பேர்வரை இணைந்திருந்தனர். பொதுவாக அனைவருமே மத்தியதரவர்க்க இளைஞர்களாக இருந்தனர். இவர்களிடம் கணக்கு எழுதி வாங்குவது மட்டும் சிரமமான வேலைப்பகுதியாக எனக்கு இருந்தத்து. மத்திய குழுக் கூட்டங்களில் நான் கணக்குகளைச் சமர்ப்பித்தாலும் யாரும் அவற்றைப் பெரிதாகப் பரிசீலிப்பதில்லை. அந்தளவிற்கு எம்மத்தியில் பரஸ்பர நம்பிக்கை இருந்தது.



பண்ணைகளில் இருந்தவர்களைத் தவிர இதே காலத்தில் வெளியே இருந்து இயக்கத்திற்கு முழு நேரமாக வேலை செய்பவர்கள் சிலரையும் இணைத்துக் கொள்கிறோம். இவர்களுக்கும் இயக்கச் செயற்பாடுகளுக்காக வெளியே அனுப்பப்படுபவர்களுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபா வீதம் வழங்கப்பட்டது.



இது தவிர பண்ணைகளின் உறுப்பினர்கள் தொகை, வசதிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பண்ணைகளுக்கான பணம் வழங்கப்படும்.



புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று சிகரட் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த வேளைகளில் வழமையான சண்டைகளெல்லாம் வந்து ஓயும் தருணங்களும் உண்டு. ஒருவரது சிகரட்டை மற்றவர் திருடுவதும், அதற்காக மற்றவர்கள் முறையிடுவதும் போன்ற குடும்பமாக, பரஸ்பர நம்பிக்கைகளுடனும் உறுதியுடனும் எமது உறுப்பினர்கள் வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார்க்கிறேன்.



ஒவ்வோரு பண்ணைகளிலும் முதலில் இணைந்து கொண்ட உறுப்பினர்களே பொறுப்பாக இருந்தனர். பண்ணைகளில் வேலைப்பழு அதிகமாக எனக்கு உதவியாக குமணனும் மாதியும் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். நான் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைப் பண்ணைகளிற்கு ஒரு தடவை தான் சென்று வந்துள்ளேன். குமணன்,மாதி ஆகியோரே இவற்றின் தொடர்பாளர்களாக இருந்தனர்.



பிற்காலத்தில் மனோ மாஸ்டரும் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களுடனான தொடர்புகளுக்கு எனக்கு உதவியாகச் செயற்பட்டார். குமணன்,மாதி,மனோ மாஸ்டர் ஆகியோரின் உறுதி மிக்க உற்சாகமான செயற்பாடுகள் மறக்கமுடியாதவை.



பண்ணைகளில் எமக்குக் குறித்தளவு வருமானமும் இருந்தது. ஒட்டிச்சுட்டனில் வெங்காயம் மிளகாய் போன்ற பயிர்ச்செய்கைகளும்,பன்றிகெய்த குளத்தில் நெற்செய்கையும் மேற்கொண்டோம். இவற்றை ஒழுங்படுத்துவதும், வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக்கொள்வதும் என இயக்க வாழ்க்கை சுமையானதாகவும், வேகமானதாகவும் ஒரு சில வருடங்களுள்ளேயே மாறிவிட்டது.



பிரபாகரன் , உமா மகேஸ்வரன், நாகராஜா போன்ற தேடப்படும் உறுப்பினர்கள் பண்ணைகளுக்கு சென்றுவருவதில்லை என்பதால் அவர்களுக்கு பண்ணை உறுப்பினர்களுடன் அதிக தொடர்புகள் இருந்ததில்லை. ஒரு குறித்த காலத்தின் பின்னர் மத்திய குழு உறுப்பினர்களும், தேடப்படுகிறவர்களும் மடுப் பண்ணையில் தங்கியிருந்தோம். நான் ஒவ்வொரு பண்ணைகளுக்கும் சென்றுவருவதால் நிரந்ததரமான தங்குமிடம் ஒன்று இருந்தில்லை.



உமா மகேஸ்வரன் , செல்லக்கிளி, ராகவன், நாகராஜா, கறுப்பி என்ற நிர்மலன், சற்குணா போன்றோர் மடுப் பண்ணையிலேயே தங்கியிருப்பர். வெளியே சென்று பண்ணைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்கு சித்தப்பா (ஞானம); ஆகியோர் செயற்பட்டனர். தவிர இங்கு இராணுவப் பயிற்சிகளும் மேற்கோண்டோம்.

இந்தப் பண்னையில் நம்பிக்கைகுரிய மூத்த உறுப்பினர்களும்,




தேடப்படுவோரும் தங்கியிருந்தனர். முக்கியமானவர்கள் மாங்குளம் பண்ணைக்கும் மடுப் பண்ணைக்கும் இடையே மாறி செல்வது வழமை. சாந்தன் கிட்டு போன்றோரும் மாங்குளத்தில் தான் தங்கியிருந்தனர். மாங்குளம் பண்ணை இரண்டாம் கட்டத் தெரிவுக்கான மையம் போல் செயற்பட்டது. உதாரணமாக,கிட்டு இயக்கத்தில் இணைந்து மூன்று மாதங்கள் அளவில் தேவிபுரம் தென்னந்தோப்புப் பண்ணையில் தங்கியிருந்த பின்னர் மாங்குளத்திற்கு இடம் மாற்றப்படுகிறார். அவர் இயக்கத்திற்கு ஏற்ற உறுதியான மனோவலிமை உடையவர் என அடயாளம் காணப்பட்ட பின்னர், மேலதிக பயிற்சிகளுக்காக இங்கு இடம் மாற்றப்படுகிறார்.



சேகுவேரா மக்களோடு தோட்டமொன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே கொல்லப்பட்டாராம் என்று நீண்ட காலத்தின் பின் தான் அறிந்து கொள்கிறோம். போராட்டம் வெற்றியடைந்த தேசங்களிலெல்லாம் வெகுஜன அமைப்புக்களும் கூட்டுப்பண்ணைகளும் உருவாக்கப்பட்டன. போராளிகள் மக்களோடு இரண்டறக் கலந்திருந்தனர். மக்களிலிருந்து தனிமைப்பட்ட பண்ணைகளைத் தான் நாங்கள் உருவாக்கினோம். எங்கிருந்து தொடங்கியிருக்கலாம் என்ற ஞானோதயம் உருவான போது எல்லாமே முடிந்துவிட்டிருந்தது. இன்னொரு போராட்டம் எழுந்தால் இந்தக் கற்றல்களிலிருந்து தவறுகளை களைந்துகொள்ள வாய்ப்புண்டு.



இந்தக் காலப்பகுதியிலேயே உழவு இயந்திரம் ஒன்றையும் , விசைப் படகு ஒன்றையும், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.



படகிற்குப் பொறுப்பாக குமரப்பாவும் , மாத்தையாவும் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீன் பிடித் தொழில் செய்துகொண்டே படகையும் பராமரித்துக் கொள்கிறார்கள். படகைப் பராமரிப்பதற்காகவும் மீன் பிடித் தொழிலை மேற்கொள்ளவும் இவர்கள் இருவரும் பண்ணையிலிருந்து வெளியிடத்தில் தங்கியிருந்தனர்.



உழவு இயந்திரம் தேவிபுரத்திலேயே விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. செல்லக்கிளி ஒரு உற்சாகமான போராளி, அவருக்கு உழவுதொழில் கைவந்த கலையாக இருந்தது. அவர் தான் தேவிபுரத்தில் விவசாயம் செய்வதில் தீவிரமாக இருந்தவர்.

 

மோட்டர் சைக்கிள் யாழ்ப்பாணத்திலேயே பாவிக்கப்பட்டது. எமது மத்திய குழு உறுப்பினராக இருந்த தங்காவிடம் தான் அது இருந்தது. அவர் இந்தக் காலப்பகுதியிலேயே இயக்கத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் போது அதனை எம்மிடமே ஒப்படைக்கிறார்.



தங்காவைத் தொடர்ந்து, லண்டனிலிருந்து வந்து எம்மோடு இணைந்துகொண்ட விச்சுவும் இயக்கத்திலிருந்து விலகிக்கொள்கிறார்கள். தங்கா ஒதுங்கிக்கொண்டதற்கான குறிப்பான எந்தக் காரணங்களும் சொல்லப்படவில்லை. ஆரம்பத்தில் இயக்கத்துடன் தனது வேலைகளைக் குறைத்துக்கொண்டவர், பின்னதாக முற்றாகவே செயற்பாடின்றி விலகிவிட்டார்.



விச்சுவிற்கு , உமாமகேஸ்வரனுடன் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சிபெற்ற காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்ந்தவண்ணமே இருந்தது. இதே வேளை இங்கிலாந்தில் இருந்து சார்ள்ஸ் போன்றோரின் அரசியல் நடவடிக்கைகளோடு ஏற்பட்ட தொடர்புகளும் அவரை விலகுவதற்குத் தூண்டியிருக்கலாம் என நம்பப்பட்டது. விச்சுவை கொலைசெய்ய முற்பட்டாலும் பின்னதாக அது நடைபெறவில்லை.



நான் எமது முதல் பண்ணைக்காக உறுப்பினர்கள் வந்து சேர்வார்கள் என்று புகையிரத நிலையத்தில் காத்திருந்து இறுதியில் நிர்மலன் மட்டுமே வந்து சேர்ந்த போது ஏற்பட்ட விரக்தி மூன்று வருட எல்லைக்குள் மிகுந்த உற்சாகமாக மாறியிருந்தது. ஐம்பதுக்கும் மேலான முழு நேர உறுப்பினர்கள். பலரின் ஆதரவு. உறங்குவதற்குக் கூட நேரமின்றி இயக்கத்தின் வளர்ச்சிக்காக செயற்பட்ட அனைவரதும் அர்ப்பணிப்பும் தியாகங்களும் அளப்பரியவை. விடுதலை என்று வியாபாரமாக மாறிவிட்ட இன்றைய சூழல் அல்ல நாம் வாழந்த காலம்



அது அர்ப்பணிப்புகளோடு கூடியது.



பிரபாகரன், கலாபதி, ராகவன் குலம், செல்லக்கிளி, சற்குணா, சித்தப்பா என்ற ஞானம், கறுப்பி என்ற நிர்மலன், நாகராஜா, கணேஸ்வாத்தி, பேபி சுப்பிரமணியம், தங்கா, பாலா, விச்சு, உமாமகேஸ்வரன், சாந்தன், குமணன், மாதி, பண்டிதர், சுந்தரம், சிறி என்ற மாத்தையா கிட்டு, குமரப்பா என்ற குமரன், சங்கர், கண்ணன் என்ற சிவனேஸ்வரன, காத்தான், பீரிஸ், யோகன், பவானந்தன் மரைக்கார், ராஜன், மனோ மாஸ்டர், அழகன், நந்தன், நெப்போலியன், சசி, ரத்தினம், சிவம், சோமண்ணை, முஸ்தபா, சற்குணாத்தம்பி,காந்தன் டானியல் என்ற தயாளன், இந்திரன், செயந்தன், பொன்னம்மான்,ராம் என்ற ஐயர் ஆசீர், புலேந்திரன்,ஜெயாமாஸ்டர்,ரகு, வீரபாகு,சாத்திரி,லாலா என்ற ரஞ்சன்போன்றோர் முழுநேர உறுப்பினர்களாக, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது இயக்கம் வேகமாக வளர்ச்சிபெறுகிறது.



ஒரு தேசத்தின் விடுதலைக்கான பணியின் சுமையை எமது தோள்களில் உணர்கிறோம். இவர்களோடு கூடவே பல்கலைக் கழகத்தில் மாணவர்களாகக் கல்விகற்றவாறே எம்மோடு இணைந்திருந்த அன்ரன் என்ற சிவகுமார், தனி, கே.பி. என்ற குமரன் பத்மநாதன் ஆகியோரும் எனது தொடர்பு வட்டத்துள் புலிகளுக்காகச் செயற்படுகின்றனர்.



திருகோணமலையில் நான் அதிகமாகச் சந்திக்க வாய்ப்பற்றறிருந்த இளைஞன் ஜான் மாஸ்டரும் இணைந்து கொள்கிறார். இவர்களோடெல்லாம் எனது தோழமையுள்ள இனிய நினைவுகள் என்றும் பசுமையானவை. ஒரு குடும்பமாய் அவர்களின் துயரங்களோடும், மகிழ்வுகளோடும், அவர்களது போராட்ட வாழ்க்கையோடு இழப்பதற்கு எமது உயிரைத் தவிர ஏதுமின்றி கலந்திருந்த காலங்களோடு எனது எனது நினைவு நரம்புகள் வேர்விட்டுப் படர்ந்துள்ளது. இந்த நினைவுகளை இனிவரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்வேன்.



இன்னும் வரும்…

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது.எது எவ்வாறாயினும் சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால் பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர்கள்.

அவர்கள் வரித்துக்கொண்ட வழியும்இ புரிந்து கொண்ட சமூகமும் தவறானதாக இருக்கலாம். ஆனாலும் தேவைப்பட்ட போராட்டம் ஒன்றின் முன்னோடிகள். சாதி ஒடுக்குமுறை, சமூக ஒடுக்குமுறை, பிரதேசவாதம் போன்ற எதுவுமே இவர்களைக் கட்டுப்படுத்தியதில்லை.

ஒரு புறத்தில் இலங்கை அரசின் பெருந்தேசிய வாத ஒடுக்கு முறை அத்தனை தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரையும் பாதித்தது. இன்று உருவாகியிருப்பது போல் அந்த ஒடுக்குமுறை வெளிப்படையான இராணுவ சர்வாதிகார ஒடுக்குமுறையாக இல்லாதிருப்பினும் அதன் நச்சுவேர்கள் அனைத்துத் தளத்திலும் பரந்திருந்தது. பண்பாடு,கலாச்சாரம், கல்வி, சமூக உறவு, அரசியல்,பொருளாதாரம் என்ற அனைத்து சமூகம் சார்ந்த அம்சங்களுள்ளும் பேரினவாதம் புகுந்து கோரத் தாண்டவமாடியது.

இலங்கை என்ற குட்டித் தீவு தமிழ்ப் பேசுகின்ற சிறுபான்மையினர் வாழ முடியாத நிலப் பகுதி என்பதை பெருந்தேசிய வாதிகள் தமது துப்பாக்கிகளை உயரே தூக்கிக் குரல் கொடுத்த போது சிரம் தாழ்த்தியவர்களா இவர்கள்? நாமும் வாழ்ந்து காட்டவேண்டிய நமது சொந்த நிலம் என தன்னம்பிக்கையோடு முன்வந்தவர்கள்.

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் இனிவரும் பதிவுகள் எங்கும் குறிப்பான சந்தர்ப்பங்களில் வெளிவருமாயினும் அவர்கள் தொடர்பான ஆரம்பக் குறிப்புகளைச் சுருக்கமாக தருகிறேன்.

பிரபாகரன் : துரையப்பா கொலைச் சம்பவத்திலிருந்து எமக்கெல்லாம் ஒரு கதாநாயகன் போன்று உருவாகியிருந்தபிரபாகரன் தனது பதினேழாவது வயதுமுதல் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்புகள், சரணடைவுகள் இன்றிப் போராட வேண்டும் என்ற கருத்துக்களைக் கொண்டிருந்த இவர் தூய இராணுவ வழிமுறைக்கு அப்பால் எதையும் சிந்திததில்லை. சுபாஸ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன் போன்றவர்களை வாசிக்கும் இவர் அவர்கள் மீது மிகுந்த அனுதாபத்தைக் கொண்டிருந்தார். தவிர ஹிட்லர் மீது கூட பிரபாகரன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இவ்வாறான விசித்திரக் கலவைக்கு எந்த அரசியலும் இருந்ததில்லை. இந்த மூவரும் இராணுவ வழிமுறையில் வெற்றிபெற்றவர்கள் என்பது தான் காரணமாக இருந்தது.

இராணுவ நூல்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார். ஆங்கில நூல்களைக் கூட ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஊடாக வாசித்து அறிந்து கொள்வார். ஆயுதங்களைக் கையாள்வதில் திறமைபெற்றவர். தாக்குதல் சம்வங்கள் நிகழும் போது துணிகரமாகச் செயற்படுபவர். உமாமகேஸ்வரன் தலைவராக இருந்த வேளையிலும் கூட முடிவுகளை முன்வைக்கும் தலைமைத்துவம் பிரபாகரனிடமே இருந்தது. அனைத்தையுமே இராணுவ ஒழுக்கப் பிரச்சனையாக முன்வைக்கும் பிரபாகரன் இவ்வெhழுக்க முறைகளை மீறுவோரை துரோகிகளாகக் கருதினார். இராணுவ ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் துரோகிகள் அழிக்கப்பட்டார்கள். தனது சொந்த நலனுக்கான அழிப்பு என்பதைவிட இராணுவ ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான செயலாகத் தான் இவற்றைக் கருத முடியும். முள்ளிவாய்க்காலில் மரணமடைந்த பிரபாகரன் அரசியல் வழிமுறைகள், மக்கள் அமைப்புக்கள், வெகுஜன முன்னணி போன்ற எந்த வழிமுறைகள் ஊடாகவும் போராட்டத்தை உருவமைப்பது குறித்துச் சிந்தித்ததில்லை.

பிரபாகரனின் இலகுவான சமன்பாடு என்பது தமிழ் மக்கள் இராணுவ ரீதியில் ஒடுக்கப்படுகிறார்கள் பலமான ஒழுக்கமான இராணுவத்தைக் கட்டமைத்து மட்டுமே விடுதலையடைய முடியும் என்ற வரையறைக்குள்ளே அமைந்தது.

செல்லக்கிளி: செல்லக்கிளி ஒரு நல்ல உழைப்பாளி. மத்தியதர வர்க்கத்தின் கீழணியைச் சார்ந்த இவர் உடலுழைப்பில்உறுதிவாய்ந்தவர். ஆயுதங்களைக் கையாள்வதில் மிகத்திறமையானவர். பெருமளவில் படித்திராத செல்லக்கிளி ஆயுதங்கள் தொடர்பான நல்ல அறிவைப் பெற்றிருந்தார்.வேட்டையாடும் திறமை கொண்ட செல்லக்கிளி செட்டியின் உறவினராவார். குறும்புத்தனம் மிக்கவர். எம்மத்தியில் இருந்தவர்களுள் பிரபாகரனை ஒருமையில் அழைப்பவர் செல்லக்கிளி ஒருவர்மட்டுமே. சில சந்தர்ப்பங்களில் அத்துமீறி நடந்துகொண்டாலும் செல்லக்கிளி மீது அனைவரும் அன்பு வைத்திருந்தோம். உரம்மிக்க இன்னொரு போராளி. கல்வியங்காடு இவரது சொந்த இடமாயினும் உடையார்கட்டிலேயே தோட்டம் செய்து வாழ்ந்தவர் செல்லக்கிளி. இலங்கை அரச படைகளுக்கு எதிரான தாக்குதலின் போது 1983 ஆம் ஆண்டு யுலை மாதம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியில் மரணமடைந்தார். இவரது மரணம் தொடர்பாக வேறுபட்ட குழப்பமான கருத்துக்கள் நிலவுகின்றன.

பேபி சுப்பிரமணியம்: தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து அரசியலுக்கு வந்தவர். புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களுள் ஒருவர். தீவிர எம்.ஜீ.ஆர் ரசிகன். இயக்கம் பிளவுப்பட்ட காலத்தில் கூட பிரபாகரனோடு இருந்தவர். மத்தியதர வர்க்கத்தின் கீழணிகளைச் சேர்ந்த இவர் காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

குலம்: குலம் எனது பால்ய நண்பனும் எனது ஊரைச் சேர்ந்தவரும் ஆவர். தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பின் ஆரம்ப்பத்திலிருந்தே எம்மோடு பங்களித்தவர். அவ்ரோ விமானக் குண்டு வெடிப்பின் பின்னர் சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். மிக நேர்மையான போராளி.இன்றும் கூட இயக்கத்திற்காக கடனாளியாகிப் போன ஒருவர் இவராகத் தான் இருக்கமுடியும். இன்றுவரை தனக்காக எதையுமே சேர்த்துக்கொள்ளாத அர்ப்பண உணர்வு மிக்கவர். தன்னை முழுமையாக இயக்கச் செயற்பாடுகளுக்கு அர்ப்பணித்தவர். மத்தியதர வர்க்க குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இயக்கத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று ஆரம்பத்தில் மேற்கொண்ட முடிவிற்கு இணங்க இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலிருந்த கொள்கைப் பிடிப்பாளன். பிரபாகரன் திருமணம் செய்துகொண்ட போது கூட கடுமையாக விமர்சித்தவர். உறுதிமிக்க போராளி. ஏனையோருக்கும் நம்பிக்கை தரவல்ல மனோவலிமையுள்ளவர்.

நாகராஜா: காங்கேசந்துறையைச் சேர்ந்தவர். துரையப்பா கொலை மேற்கொள்ளப்பட்ட வேளையில் இவரது ரியூசன் நிலையத்திலேயே பிரபாகரன் உள்பட பலரும் தங்கியிருந்தனர். அதற்குரிய அனைத்துச் செலவுகளையும் மிகுந்த இராணுவ அடக்குமுறைகளின் மத்தியில் மேற்கொண்ட நாகராஜா உற்சாகமான போராளி. மத்தியதர வர்க்கக் குடும்பப் பின்னணியைக் கொண்ட நாகராஜா பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை பார்தவர். பொத்துவில் எம்.பி. கனகரத்தினம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பியவர். தமிழர் விடுதலைக் கூட்டணியினரை ஆரம்பத்திலிருந்தே நிராகரித்து வந்தவர் நாகராஜா. வீ.பொன்னம்பலம் என்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் பின்னாளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டவருடைய அனுதாபி ஒப்பீட்டளவில் அரசியல் ஆர்வமுடையவாராயிருந்தார். தந்தையற்ற குடும்பத்தைச் சார்ந்த இவரின் உழைப்பிலேயே முழுக்குடும்பத்தையும் பராமரிக்க வேண்டிய நிலையிலிருந்தாலும் போராட்ட உணர்வோடு எம்முடன் தீவிரமாக உழைத்தவர்.

விச்சு : லண்டனிலிருந்து வந்து எம்மோடு இணைந்து கொண்டவர். எம்மத்தியிலிருந்த ஆங்கிலம் பேசத்தெரிந்த போராளிகளுள் இவரும் ஒருவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னதாக லண்டனிலிருந்து செயற்பட்ட சார்ல்ஸ் போன்றோரின் கருத்துக்களோடு உடன்பாடுகொண்டு இயக்கச் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டவர்.

ராகவன்: ஆரம்ப காலத்திலிருந்தே புலிகளோடு தொடர்பு நிலையிலும். உறுப்பினராகவும். தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்தவர். காலத்திற்குக் காலம் இயக்கத்திலிருந்து விலகியிருந்து பின்னர் இணைந்து கொள்வதுமாக இருந்த இவர் மிகுந்த மனிதாபிமானி. மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ராகவன் எனது ஊரைச் சேர்ந்தவர். முதலில் பிரபாகரனை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். என்னோடு இவரும் ஆரம்பத்திலிருந்தே கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் இவர் கல்விகற்றுக்கொண்டிருந்தார்.

ஜோன் என்ற சற்குணா : வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இவர் பிரபாகரனின் தூரத்து உறவினர். மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். புளியம் குளம் பண்ணை இருந்த இடம் இவருக்குச் சொந்தமானதே. அரசியல் ரீதியான உணர்வுகளால் உந்தப்பட்டு இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள் என்பதை விட ஆரம்பத்தில் பிரபாகரனின் தனிப்பட்ட தொடர்புகளூடாகவே இயக்கத்தில் இணைந்து கொண்டவர். ஆரம்பத்திலிருந்து பண்ணைகளில் தன்னை அர்ப்பணித்து வேலைசெய்த இவர் மிகவும் உறுதியான போராளி.

கறுப்பி என்ற நிர்மலன்: முதல் முதலில் பூந்தோட்டம் பண்ணையை உருவாக்குவதற்காக நான் பலருக்காகக் காத்திருந்த வேளையில் அங்கு வந்து சேர்ந்த ஒரே ஒருவர் நிர்மலன் தான். சற்றுக் கருமை நிறம் உடையவராதலால் செல்லக்கிளி தான் இவருக்குக் கறுப்பி என்று பெயர்வைக்கிறார். யாழ்ப்பாண நகரத்தைச் சேர்ந்த நிர்மலன் மிகுந்த விழிம்புனிலைச் சமூகத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பேரவையுடன் முன்னதாக இவருக்குத் தொடர்புகள் இருந்தது. அர்ப்பண உணர்வுமிக்க போராளி இவர். இன்று வாழ்விழந்து பரிதாபகரமான நிலையிலிருப்பவர்களுள் இவரும் ஒருவர்.

சித்தப்பா : லொறி ஒன்றில் சாரதியின் உதவியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னதாக இயக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே எம்மோடு இணைந்து பண்ணைகளில் வாழ்ந்தவர். பற்குணம் ஊடாக பிரபாகரனிற்கு பழக்கமானவர். அவரூடாகவே இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பற்குணம் கொலையுண்ட செய்தி இவருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. சுதுமலையைச் சேர்ந்த இவர் அன்னிய நாடொன்றில் இப்போது வாழ்கிறார். பெரிதாக எழுத வாசிக்கத் தெரியாதவராயினும் கிளித்தட்டு விளையாட்டில் மிகத் திறமை வாய்ந்தவர். தொலைக் கிராமங்களில் இருந்து கூடக் கிளித் தட்டு விளையாட்டிற்காக இவரைத் தேடி வந்து அழைப்பவர்கள பலர்.

தங்கா : கூட்டணியின் குறிப்பிடத்தக்க செயற்பாட்டாளராக இருந்து இயக்கத்தில் இணைந்து கொண்டவர். கூட்டணியின் மிக முக்கிய உறுப்பினரின் சகோதரர் இயக்கம் பெரிதாகிச் சுய செயற்பாடுகள் அதிகரிக்க இயக்கத்திலிருந்து தானாகவே விலகிக் கொண்டார்.

நிர்மலன். சித்தப்பா. சற்குணா போன்ற மூவரினதும் பங்கும் அர்ப்பணிப்பும் இன்றும் எனது எண்ணங்களைத் துரத்துகிறது. பண்ணைகளில் இருண்ட காடுகளின் மத்தியில் தனியாக வாழ்ந்திருக்கிறார்கள். கொடிய வன விலங்குகள் தனிமை வறுமை அனைத்துக்கும் மத்தியில் போராட்ட உணர்வோடு உறுதியாக வாழ்ந்திருக்கிறார்கள். சுகாதாரம் மருத்துவம் போன்ற வசதிகளின்றி பல நாட்கள் நோயால் வாடியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் மக்கள் மத்தியில் அரசியல் வேலைகளை முன்னெடுத்து அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தால் போராட்டத்தை வழிநடத்தும் பெரும் தலைவர்களாகியிருக்க முடியும்.

மாணவர்பேரவை தீவிரமாக உருவான வேளையில் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தின் மேலணிகளைச் சார்ந்தவர்கள் உத்தியோகம் பார்க்கும் இளைஞர்கள் ஆங்கிலம் பேசும் கனவான்கள் என்று ஒரு பெரிய கல்விகற்ற இளைஞர் கூட்டமே பங்களித்திருந்தது.

அவர்களின் சட்டரீதியான உணர்ச்சிப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக எம்மால் முன்னெடுக்கப்பட்ட போது இந்தப் படித்த இளைஞர்கள் எவரையுமே காண முடிவதில்லை. தான் தனது குடும்பம் தாம் சார்ந்த சமூகமும் அதன் மத்தியிலான அந்தஸ்து என்ற சமூக வரம்புகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள்.

சற்குணா. நிர்மலன். சித்தப்பா போன்ற இளைஞர்கள் தமது ஒவ்வொரு அசைவையும் இளைஞர் பேரவையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் உருவாக்கிய உணர்ச்சித் தீக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

பண்ணைகள் பெருகி இயக்கம் ஓர் அமைப்பு வடிவை தகவமைத்துக் கொண்ட வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனான தொடர்பு முற்றாகவே அற்றுப் போயிருந்தது.

பாலா : உரும்பிராயைச் சேர்ந்த இவர் இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக சிறிய கடை ஒன்றை வைத்திருந்தவர். கூட்டணியின் ஆதரவாளராக இருந்தவர். உரும்பிராய் கொலைச் சம்பவத்தின் பின்னர் எம்மோடு முழுமையாக இணைந்து கொண்டவர்.

உமாமகேஸ்வரன் : தெல்லிப்ப்ளையைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் வசதியான மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுள் இருந்த ஆங்கிலம் பேசத் தெரிந்த மிகச் சிலருள் இவரும் ஒருவர். நேர்மை மிக்க இவர் தாக்குதல்களில் முன்நிற்கும் துணிச்சல் நிறைந்த போராளி. நில அளவையாளராகச் தொழில் பார்த்துக்கொண்டிருந்த உமாமகேஸ்வரன்இ தனது தேசிய அரசியலிலான ஆர்வத்தையும் செயற்பாட்டையும் மாணவனாக இருந்த காலப்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டார். தமிழ்ப் புதிய புலிகளாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் எம்மோடு இணைந்து கொண்ட உமாமகேஸ்வரன்இ இதற்கு முன்னதாக அகதிகளுக்கு உதவும் மனிதாபிமான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். புலிகளில் இணைந்து கொண்ட சில காலங்களிலேயே பிரபாகரனின் சிபார்சின் அடிப்படையில் மத்திய குழுவில் அமைப்பின் தலைவராகத் தெரிவுசெய்யப்படுகிறார். 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

சாந்தன் : கொழும்பில் இருந்து எம்மோடு இணைந்து கொண்டவர் படித்த மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர் இவர். இயல்பாக ஆங்கிலம் பேசக் கூடிய இவர் தான் பிரபாகரனுக்கு ஆயுதங்கள் குறித்த ஆங்கிலப் புத்தகங்களை வாசித்துக் காட்டுவார். எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைமைப் பண்புடைய ஒருவர். ஓரளவிற்கு வசதியான நகர்புறக் குடும்பச் சூழலிலிருந்து எம்மோடு இணைந்து கொண்ட சாந்தன் பண்ணை வாழ்க்கைக்காக எப்போதுமே முகம் சுழித்ததில்லை. அனைவரோடும் உணர்ச்சிவயப்படாமல் அன்போடு பழகும் தன்மை படைத்தவர்.
எமது காலை உணவு மிளகாய்த் தூளோடு பிசையப்பட்ட தேங்காய்த் துருவலும் பாண் துண்டுகளும் மட்டும் தான். இதுவே பல மத்தியதர வர்க்க இளைஞர்களுக்குக் கசப்பான அனுபவமாக அமைந்திருந்தது. அதுவும் தட்டுப்பாடாகும் நாட்களும் இருந்ததுண்டு. சாந்தன் இந்த உணவை எந்ததத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்வார். மிகுந்த மனிதாபிமானி. அவ்ரோ விமானக்குண்டு வெடிப்பின் போது சிங்கள மக்கள் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்று ராகவன் என்னோடு சேர்ந்து சாந்தனும் எதிர்த்தரர்.

குமணன் என்ற குணரத்தினம் : கோண்டாவிலைச் சேர்ந்த வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். நிர்வாகத் திறனும் அர்ப்பணமும் மிக்க ஒரு போராளி. பண்ணைகளுக்குச் சென்றுவருதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் எனக்கு உதவியாகச் செயற்பட்டார். கோண்டாவிலில் பிரபாகரனுடைய தொடர்பாளர் ஒருவரின் ஊடாக இயகத்தில் இணைந்து கொண்டவர். இயக்கத்தில் இணைவதற்கு முன்னர் கல்விகற்றுக்கொண்டிருந்தவர்.

திருகோணமலைத் தொடர்புகளைக் கையாண்டவ்ர் குமணன் தான். திருகோணமலையில் பயஸ் மாஸ்டர் என்ற இடது சாரித் தத்துவங்களோடு ஈடுபாடுகொண்ட ஒருவரோடு குமணனுக்குத் தொடர்புகள் ஏற்படுகிறது. திருகோணமலையில் இருந்தவர்களுக்கு பயஸ்மாஸ்டர் தனது தத்துவார்த்த வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறார். புலிகள் பிளவுற்ற வேளையில் புதிய பாதையில் பிரதான பாத்திரம் வகித்தவர். குமணன் பாத்திரம் குறித்த தனியான பகுதியில் இவர் குறித்து மேலும் பேசலாம். இவர் புலிகளால் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

மாதி: இவர் கொழும்பிலிருந்து வந்து இணைந்து கொண்ட இன்னொருவர். பின்னர் பண்ணை ஒன்றிற்குப் பொறுப்பாக இருந்தவர்.

பண்டிதர் : கம்பர்மலையைச் சேர்ந்த இவர் மிகுந்த தமிழுணர்வு மிக்கவர். ஆங்கிலக் கலப்பற்ற தமிழ் பேச வேண்டும் என்பதில் தீவிரமான ஆர்வமுள்ளவர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மேடைப் பேச்சுக்களின் போது காசியானந்தனுக்கு இரத்தப் பொட்டு வைத்தவர். இவர் இணைந்து கொண்ட காலத்திலிருந்தே பண்ணைகளில் வாழ்ந்தவர். மிகுந்த பொறுப்புணர்வு படைத்தவர். இலங்கை இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டவர்.



சுந்தரம்: சுழிபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் எளிமையான போராளி. காந்தீயம் அமைப்பில் அகதிகளுக்கான வேலைகளில் ஈடுபட்டவர். எப்போதும் அரசியலுக்காகவும் புலிகள் அமைப்பிற்காகவும் தொடர்ச்சியாக உழைத்தவர். தனக்காக எந்த வசதியையும் எதிர்பார்ப்பவரல்ல. இடதுசாரியான எம்.சி.சுப்பிரமணியத்தோடு தொடர்புகொண்டிருந்த சுந்தரம் பின்னதாக தேசியப் போராட்ட உந்துதலால் புலிகளில் இணைந்து கொண்டார்.புலிகளிலிருந்து விலகிய பின்னர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் சித்திரா அச்சகத்தில் புதியபாதை பத்திரிகை பதிப்பித்திக்கொண்டிருந்த வேளையில் கொல்லப்பட்டவர் தலைமைப் பண்பு மிக்க போராளியான சுந்தரம் ஆயுதப் பயிற்சியிலும் திறமை வாய்ந்தவர். 1982 தை 02ம் நாள் யாழ் சித்திரா அச்சகத்தினுள் வைத்து பின்னிருந்து சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.


ரவி அல்லது பரா : புலோலி வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவராக இருந்ததால் பொலிசாரால் தேடப்பட்ட ரவி பின்னதாகப் புலிகளோடு இணைந்து கொண்டார். தேடப்படுகின்ற காலப்பகுதிகளில் டொலர்.கென்ட் பாம் போன்ற காந்தியப் பண்ணைகளில் தலைமறைவாக இருந்தவர். முத்தயன் கட்டுக் பண்ணைக்குரிய நிலம் ரவியினுடையதே. சண்டிலிப்பாயைச் சேர்ந்த ரவி இப்போது அன்னிய நாடொன்றில் வாழ்கிறார். உமாமகேஸ்வரனின் தொடர்புகளூடாக புலிகளில் இணைந்து கொண்டவர்.

மாத்தையா அல்லது சிறி : மிகவும் வறிய மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த மாத்தையா பொலிகண்டி மீன்பிடிச் சமூகத்தைச் சார்ந்தவர். வறுமை நிழலோடு தனது பிள்ளைப்பருவத்தைக் களித்தவர் தற்பெருமையற்ற அனைவரோடும் சகஜமாகப் பழகவல்ல போராளி. வல்வெட்டித் துறையில் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் இல்லை.

கிட்டு, பிரபாகரன் போன்றோர் மீன்பிடிச் சமூகத்தைச் சார்ந்தவர்கள ஆயினும் மீன்பிடித் தொழிலை வாழ்கையாக கொண்டவர்களாக இல்லை பிரபாகரனின் தொடர்புகளின் ஊடாகவே புலிகளில் இணைந்துகொண்ட மாத்தையா பிரபாகரனின் அதீத மரியாதை உடையவராகக் காணப்பட்டார். மிகவும் விசுவாசமான உறுதிமிக்க போராளி. மாத்தையா அல்லது சிறி குறித்த விரிவான பதிவுகள் இன்னும் தொடரின் ஏனைய சம்பவங்களோடு வரும்.விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக 80 இன் இறுதிப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மாத்தையா பின்னர் இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டு பிரபாகரனின் உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டார்.

கிட்டு : இந்தியக் கடற்பரப்பில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட கிட்டு எம்மோடு பண்ணைகளில் வேலை செய்த இன்னுமொரு போராளி. இவர் துடிப்பான இளைஞன். பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். மத்தியதர வர்க்க சமூகப் பின்னணியைக் கொன்டவராகும். இவரின் நடவடிக்கைகள் காரணமாக நான் இவர் பண்ணைக்குப் பொறுப்பாக இருந்த காலகட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இவரப் பண்ணையிலிருந்து வெளியேற்றிய சம்பவமும் எனது நினைவுகளுக்கு வருகிறது. பண்ணைகளில் வழங்கப்படுகிற உணவின் தரக்குறைவிற்காக எனையவர்களுடன் மோதிக்கொள்வார். ஒரு கால அட்டவணைப் படி ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் சமையல் வேலைகளில் ஈடுபடுவார்கள். பண்ணைகளில் நபர்களின் தொகையைப் பொறுத்து சில சமயங்களில் மூன்றுபேர் கூடச் சமையலில் ஈடுபடுவார்கள். இந்த வேளைகளிலெல்லாம் போராளிகளிடையே பிரச்சனை எழுவதும் அதனை சமாதானப்படுத்துவதற்காக எனது நேரத்தின் ஒருபகுதியைச் செலவிடுவதும் வழமையாக இருந்தது.

குமரப்பா : புத்தகங்களை வாசிப்பதும் புதியவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம்மிகுந்த எம் மத்தியிலிருந்த சிலருள் இவரும் ஒருவர். தனக்குச் சரியெனப்பட்ட கருத்தை முன்வைக்கும் திறமையுள்ளவர். பிரபாகரனது அதே உரைச் சேர்ந்த இவர் அவரை தனது ஊர்க்காரார் என்று கூடப்பார்க்காமல் விமர்சிப்பவர். மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்ட வறிய குடும்பத்தைச் சார்ந்தவர் இவர்.இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த காலப்பகுதியில் சிறையில் சயனைட் வில்லைகளை உட்கொண்டு தற்கொலைசெய்து கொண்டவர். புலிகளில் பிளவு ஏற்பட்ட வேளையில் எந்தப்பக்கமும் சாராது விலகியிருந்த குமரப்பா 83 இனப்படுகொலையின் பின்னரே மறுபடி புலிகளில் இணைந்து கொண்டார்.

சங்கர் : பண்டிதரின் ஊரான வல்வெட்டித்துறைக்கு அருகாமையிலுள்ள கம்பர்மலையைச் சேர்ந்த சங்கர் பண்டிதராலேயே புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டவர். உறுதியான போராளி. புலிகள் மீதான மிகுந்த விசுவாசத்தோடு செயற்பட்டவர். நிர்மலாவின் வீட்டிற்கு தகவல் சொல்லச் சென்ற வேளையில் இராணுவத்தால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டவர். பின்னர் இந்தியாவிற்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு மரணமானவர்.

காத்தான் : உமாமகேஸ்வரனுடைய தொடர்புகளூடாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர். கராத்தே பயிற்சிபெற்ற இவர் உடல் உறுதியும் மனோவலிமையும் மிக்கவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவர் கந்தரோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பின்னதாக உமாமகேஸ்வரனின் தலைமையிலான புளொட் அமைப்பில் இணைந்து கொண்டவர் இலங்கை இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டவர்.

பீரீஸ் : வடமராட்சியைச் சேர்ந்த இவர் வள்ளிபுரம் பண்ணைக்குப் பொறுப்பாக இருந்து நிர்வகித்தவர். வறிய குடும்பத்தைச் சேர்ந்த பீரீஸ் புலிகள் பிளவுபட்ட போது இயக்கத்திலிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொண்டவர்.இப்போது எங்கு வாழ்கிறார் எனத் தெரியவில்லை.

இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலிருந்து எம்மோடு வந்து இணைந்துகொண்டவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இராணுவ அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இவர்கள் தேசிய உணர்வு மிக்க உறுதிமிக்க போராளிகளாகக் காணப்பட்டனர்.

யோகன்(பாசி) : பண்டிதர் தான் இவ்வாறான போர்குணம் மிக்க ஒருவர் மட்டக்களப்பில் இருப்பதாக எங்களுக்குத் தெரியப்படுத்தினார். காசியானந்தனோடு இவருக்குத் தொடர்புகள் இருந்தது. காசியானந்னைத் தொடர்புகொண்டால் யோகனைத் தொடர்புகொள்ள முடியும் என்று அறிந்து கொண்டு அவரூடாக யோகனைத் தொடர்புகொண்டு இணைத்துக் கொள்கிறோம். நாகராஜாவும் உமாமகேஸ்வரனும் மட்டக்களப்பிற்குச் சென்று யோகனோடு இன்னும் இருவரை சேர்த்து எமது பண்ணைகளுக்கு அழைத்து வருகின்றனர். மரைக்காயர், பவானந்தன் ஆகியோரும் எம்மோடு இணைந்து கொள்கின்றனர். யோகன் பின்னர் புலிகளோடு தீவிரமாகச் செயற்பட்டவர். பவானந்தன் புலிகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகிப் போனவர். ஏனைய இருவர் குறித்த தகவல்கள் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.
இதன் பின்பதாக காந்தன் இந்திரன் என்ற வேறு இருவரும் கிழக்கிலிருந்து எம்மோடு இணைந்து கொண்டனர். காந்தன் மிக உற்சாகமான போராளி புலிகளின் பிளவின் போது ஒதுங்கியிருந்தாலும் 83 படுகொலைகள் ஏற்படுத்திய உணர்வலைகளின் தொடர்ச்சியாக மறுபடிசென்று புலிகளோடு இணைந்துகொண்டவர்.

மனோ மாஸ்டர் : பண்ணைகள் விரிவiடந்த காலப்பகுதியில் எம்மோடு இணைந்து கொண்டவர்களுள் மனோமாஸ்டர் குறிப்பிடத் தக்கவர். பின்னதாக இவரின் விரிவான பங்களிப்பு விபரிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. மனோ மாஸ்டர் உறுதியான பொறுப்புணர்வுள்ள போராளியாகத் திகழ்ந்தார். பல்கலைக் கழகப் படிப்பை தொடராமல் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பண்ணைகளை நிர்வகிப்பதில் என்னோடு இணைந்து செயற்பட்ட இவர் திருகோணமலை,மட்டக்களப்புப் பகுதிகளின் பண்ணைத் தொடர்புகளை பேணுவதில் முக்கிய பங்கு வகித்தவர். கம்பர்மலையைச் சேர்ந்தவர்.

இவர் புலிகளில் இணைந்து கொண்ட சில நாட்களிலேயே மார்க்சிய நூல்களைப் படிக்குமாறு எமக்கு முதலில் கூறியவர். ஆளுமை மிக்க மனோமாஸ்டர் ஜெயாமாஸ்டர், ஜான் மாஸ்டர் போன்றோரோடு மார்க்சிய விவாதங்களில் ஈடுபடுவதாகக் எனக்குக் கூறியிருந்தார். 84 நான்காம் ஆண்டளவில் பிரபாகரனின் உத்தரவின் அடிப்படையில் வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து புலிகளால் கொலை செய்யப்பட்டார்.


ஜான் மாஸ்டர் : குமணனுடன் ஆரம்பத்தில் தொடர்புகளைக் கொண்டிருந்த இவர் பின்னதாக மனோமாஸ்டர் திருகோணமலைக்குச் சென்றுவரும் காலகட்டத்தில் அவரோடு அரசியல் ரீதியாகவும், நடைமுறை விடயங்களிலும் முரண்பாடுகள் ஏற்பட்டன. ஜான்மாஸ்டர் மிகவும் உறுதியான மார்க்சியக் கருத்துக்களோடு உடன்பாடு கொண்டிருந்த போராளி. வாசிப்பதில் ஆர்வம் மிகுந்த கொண்டிருந்ததாக குமணன் கூறியிருக்கிறார்.பின்னதாக உமாமகேஸ்வரன் தலைமையிலான புளட் அமைப்பில் இணைந்து கொண்டவர்.

ஜெயச்சந்திரன் என்ற பார்த்தன் : பயஸ் மாஸ்டரின் வழியாக மார்க்சியக் கருத்துக்களில் ஆர்வம் மிக்கவராக இருந்தவர். புளட் அமைப்பில் இணைந்து கொண்டு அரச படைகளால் கொலை செய்யப்பட்டவர். ஆளுமை மிக்கவரென குமணன் கூறியிருக்கிறார்.
தவிர மைக்கல் மகேஸ் போன்றோர் திருகோணமலையைச் சேர்ந்த தொடர்பாளர்களாக இருந்தனர். கிழக்கு மாகாணத்தோடு எனக்குத் நேரடியான தொடர்புகள் இன்மையால் முழுமைப் படுத்தப்பட விபரங்களை அனுபவங்களூடாகத் தொகுக்க முடியாதுள்ளது.



நெப்போலியன் : புலிகளின் பிளவிற்குப் பின்னர் உருவான பாதுகாப்புப் பேரவை என்ற விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான இவர் மிகுந்த ஆர்வமுள்ள போராளி. மனோமாஸ்டரின் தொடர்புகளூடாக வாசிப்புப் பழக்கத்திற்கு உள்ளானவர்களுள் ஒருவர். ஈரோஸ் இயகத்தால் மலையகப் பகுதிகளில் நெப்போலியன் கொலை செய்யப்பட்டார்.
அழகன் என்ற ஒருவரும் நெப்போலியனோடு இணைந்து அழகனும் பாதுகாப்புப் பேரவையில் இணைந்தார். பாதுகாப்புப் பேரவைக்கு முன்னதாக இயக்கம் பிளவடைந்த வேளையில் புதிய பாதையில் இணைந்து செயற்பட்டனர். பாதுகாபுப் பேரவை முதன் முதலில் கிழக்கில் காவல்நிலையம் ஒன்றைத் தாக்கியழித்தது என்பதைக் குறிப்பிடலாம்.

அழகன் : முத்தயன்கட்டுப் பண்ணையிலிருந்து விவசாயத்தில் ஈடுபட்டார். அழகன் பாதுகாப்புப் பேரவையின் ஆரம்பகாலங்களில் மார்க்சிய நூல்களோடு கொழும்பிற்குப் பயணம்செய்த வேளையில் அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் குறித்த தகவல்களை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. அரச படைகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவே அனைவரும் கருதுகின்றனர்.