சனி, 5 ஏப்ரல், 2014

உலகின் மிகப்பெரிய கோயிலான அங்கோர் வாட் பற்றிய எனது பார்வை

தமிழர்களால் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என்றும் இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மத கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும் அதன் பெருமைகள் பற்றியும் சிறிது வாசித்திருந்தேன். ஆவல் மேலிட அதனை பற்றி தகவல் சேகரித்து எழுதலாம் ஒரு பதிவாய் என்று தேட வெளிக்கிட்டால் சுவாரசியமான சில செய்திகளும் கிடைத்தன. இவற்றை எல்லாம் சேர்த்து தொகுத்து எழுதுவதை விட அவற்றை அவ்வாறே சுவாரசியம் குன்றாமல் பதிவிட்டால் வாசிப்போருக்கு சிறப்பாக இருக்கும் என்பதால் தேடலின் முக்கியமான சிலவற்றை தருகிறேன். சில காலச்சுவட்டில் வெளிவந்தவை. காலச்சுவடு வாசகர்கள் ஏலவே வாசித்திருக்கக்கூடும். ஆனால் காலச்சுவடு என்றாலே என்னவென்று தெரிந்தவர்களை விட தெரியாதவர்களே அதிகம் என்பதால் இப்பதிவு அங்கோர் கோயிலின் பெருமைகளை வாசித்தறிய, பகிர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்





கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென் கிழக்கு ஆசியா முழுவதும் இந்து மதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்திய கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக்கி ஆளத் தொடங்கினான். அவன் பெயர் இரண்டாம் ஜெயவர்மன். கெமர் கலாச்சாரம் அவனிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கலாச்சாரம் அது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட கோயில்தான் அங்கோர் வாட். இது மிகப் பெரும் இந்துக் கோயில் மட்டும் அல்ல உலகின் மிகப் பெரிய கோயிலும்கூட. இருநூறு ஹெக்டர் நிலத்தில் மேற்குத் திசை நோக்கிய இக் கோயில் விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு அடுத்தபடியாக அதிகமான வழிபாட்டிற்குரியவர்களாக விஷ்ணுவும் புத்தரும் இருந்துள்ளனர்.



அங்கோர்என்கிற சொல் நகர்என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. வாட்என்றால் கோயில். அங்கோர் வாட்என்பது நகரக் கோயில்.
கோயிலைச் சுற்றிலும் நம் நாட்டு அரண்மனைக் கோட்டைகளைச் சுற்றியுள்ளதுபோல் அகழி உள்ளது. வெளிப் பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயில் உயர்ந்த கட்டடமாக எழுப்பப்பட்டுள்ளது. கோயிலை மூன்று அடுக்குகளாகப் பார்க்க முடிகிறது. முதல் அடுக்கில் புடைத்த சுவர் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இரண்டாம் அடுக்கில் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் (கேணி )கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இறங்கிக் குளிப்பதற்கேற்பப் படிகள் உள்ளன. புத்தர் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன. அங்கிருந்து இரண்டாம் அடுக்கிற்குச் செல்ல மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கு பெரிய தளப்பரப்புடையதாக அதற்கு மேலுள்ள மூன்றாம் அடுக்கிற்கான பிரகாரமாக அமைந்துள்ளது. மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.
படிகள் மிகவும் செங்குத்தாகவும் குறுகலாகவும் இருப்பதால் பல சமயங்களில் அவற்றின் மீது ஏறியவர்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். பொதுவாக அங்கோர் கோயில்களில்ராமாயண, மகாபாரதக் காட்சிகள் காணப்படுகின்றன
  அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்தப் பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன.
அங்கோர் வாட் கோயிலை இரண்டாம் சூர்யவர்மன் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. எட்டாம் ஜெயவர்மன் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் அது நிறைவுசெய்யப்பட்டது. இவ்வாறே பல கோயில்களும் நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டுள்ளன. Porul fe , mannarkalin alternativet er ponravarraip poruttuk kattatap panikalil viraivu , tamatankal ventum erpattirukka. சொல்லப்போனால் எல்லாக் கோயில்களுமே முடிக்கப்படாதவையாக இருப்பதாகக் கட்டடக்கலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.


அங்கோர் கோயில்களில் இப்போது வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை.
இங்கு  பாழ்பட்ட விஷ்ணு சிலைக்கு மாமிச உணவுகளும் வாழைப்பழம் பூ  வைத்தும்  ஒரு சில இடங்களில் பௌத்தர்கள் ஊதுபத்திகளை வைத்துச் சிறிய ஆராதனைகள் புரிவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. கோயில்கள் முற்றாகவே சுற்றுலா இடங்களாக மாறிவிட்டன. சாலைகள் எழில் மிகுந்த கானகங்களினூடே செல்வதால் பயணிகள் பலரும் விரும்பி சைக்கிள்களில் செல்கிறார்கள். இவற்றினூடே கோயில்களைப் புனருத்தாரணம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. யுனெஸ்கோ வேர்ல்ட் ஹெரிடேஜ் சென்டரின் மேற்பார்வையில் அவை செய்யப்படுகின்றனநடைபெறுகின்றன.
    




   











பல இடங்களில் பல நூறு வருடங்களாகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள மரங்கள் கோயில்களை மலைப்பாம்புகள் போன்று பெரும் வடங்களாக நொறுக்கி வளைத்துள்ளன. காலமும் கலையும் ஒன்றாகக் கட்டுண்டு கிடப்பதுபோல் அவை ஒருவித அசுர அழகைத் தம்மகத்தே கொண்டுள்ளன. புனருத்தாரணப் பணிகளில் பல நாடுகளும் பங்கேற்றுள்ளன. அவற்றில் ஈடுபட கெமர் கைவினைக் கலைஞர்கள் தயார்செய்யப்படுகின்றனர்.

                     

அங்கோர் கோயில்களில் சிவன், விஷ்ணு, புத்தர் சிலைகள் ஏராளம். அதேபோல் அப்சரஸ் தேவதைகள் எல்லா இடங்களிலும் தென்படுகின்றனர். பற்கள் தெரியச் சிரிக்கும் அப்சரஸ்கள் அரிதாக உள்ளனர். ராமாயண, மகாபாரதப் புராணக் காட்சிகள் கோயில் சுவர்கள், தூண்கள் என்று எல்லாவற்றிலும் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கோயில் முகப்புகளும் புராணக் கதாபாத்திரங்களும் கெமர் கலாச்சாரத்தையும் அம்மக்களின் உருவங்களையும்தாம் கொண்டுள்ளன. இந்திய முகங்களை அவற்றில் காண முடியாது. ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கெமர்கள் தங்களுடையதாக உள்வாங்கிக்கொண்டதன் விளைவு அது.


 
கெமர் மக்கள்  தேரவாத பௌத்த  சமயத்தை ஏற்று வணங்குகின்றார்கள் என்றாலும்  இந்து, புத்த மதங்களை விரும்பி ஏற்றுக்கொண்டதாக இதன் மூலம் அறியலாம். படையெடுப்பாலோ வன்முறையாலோ மதம் அங்கே திணிக்கப்படவில்லை எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்திய அரசர்களின் காலனியாகவும் கம்போடியா ஒருபோதும் விளங்கியதில்லை. இந்தியாவில் இருந்து சென்ற புத்த மதம் பல நாடுகளிலும் பரவிப் பல்வேறு குணங்களைப் பெற்றுள்ளது. இந்தியாவில் வேரூன்றிய இந்து மதம் எத்தகைய மாறுதல்களுடன் கம்போடியாவில் குடியேறியது என்பதை அங்கோர் சிற்பங்களை வைத்து ஒருவாறாக ஊகிக்க முடிகிறது. இங்கிருந்து சென்ற வியாபாரிகள் வாயிலாகத்தான் இந்து மதம் அங்கே பரவியிருக்கிறது. ஆனால் ஆட்சியை நிலைநாட்டத் தொடங்கியவர்கள் அங்குள்ள கலாச்சாரத்திற்கு இணக்கமான ஒரு மதமாக இந்து மதத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்

 அதோடு அந்தக் கோட்டைகளையும் கோயில்களையும் எண்ணிப் பார்க்கவும் முடியாது.   ஏனென்றால் பார்க்கும் இடம் எல்லாம் கோயில்களாகத் தான் இருக்கும். எப்படி எண்ணுவது. இடது பக்கம் திரும்பினால் கண்ணுக்கு எட்டிய வரை கோயில்கள். வலது பக்கம் பார்த்தால் அதே மாதிரிதான். மொத்தம் பதினாறு சதுர கிலோமீட்டர் அளவுக்கு கோயில்கள், குளங்கள், ஏரிகள், தாமரைத் தடாகங்கள். முன்னூறு நானூறு வருடங்களுக்கு ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு கட்டிப் போட்டிருக்கிறார்கள்.



               




.
ஜெயவர்மன் VII எனும் அரசன் இந்து மதத்தில் இருந்து மாறிப் போய் புத்த மதத்தில் சேர்ந்தான். இது நடந்தது 1181ஆம் ஆண்டு. இந்த அரசன் தான் மஹாயனா புத்த மதத்தைக் கொண்டு வந்தவர். இவர் வருவதற்கு முன் Cham எனும் இனத்தவர் கம்போடியாவைக் கொஞ்ச காலம் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பாயோன் புத்த ஆலயங்களைக் கட்டியவர் ஜெயவர்மன் VII தான். அவர் இறந்த பிறகுஇந்திரவர்மன் II எனும் அரசர் வந்தார். இவரும் நிறைய ஆலயங்கள் என்றும்  கோட்டைகள் என்றும் கட்டினார். அதன் பின்னர் வந்தது ஜெயவர்மன் VIII என்பவர் வந்தார். இவர் கம்போடியாவை புத்த மதத்திலிருந்து மறுபடியும் இந்து வேதாதங்களுக்குக் கொண்டு வந்தார். இவர்தான் அங்கோர் சாம்ராஜ்யத்தின் ஆகக் கடைசி அரசர்.





இவர் இறந்த பிறகு கம்போடியா பலகீனமாகிப் போனது. கம்போடியா என்கிற நாடு சியாம் ஆட்சியின் கீழ் வந்தது. சில ஆண்டுகளில் சியாம் ஆட்சியும் சிதைந்தும் போனது. அப்புறம் பலப் பல மாற்றங்கள், பலப் பல அரசியல் திருப்பங்கள்  ஏற்பட்டன. இப்போது இந்த அங்கோர் வாட்டை உலகச் சுற்றுப் பயணிகளிடம் அடகு வைத்துக் கொண்டு கம்போடியா தன் 

தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இக்கோயிலின் புதுபித்தல் பணியினை செய்தது. அப்போதிலிருந்து இகோயிலின் சுற்றுலா வரவு பெருகியது. இக்கோயில் 1992ல் நிறுவப்பட்ட அங்கோரின் உலக பாரம்பரிய களத்தின் ஒரு பகுதியாக இருப்பதனால் இதை பராமரிக்க கம்போடிய அரசுக்கு ஊக்கமும், நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் அப்சரா பாதுகாப்பு திட்டம், இக்கோயிலின் அலங்காரத்தையும், கட்டமைப்பையும் பேணும் தேவதாக்களை பதுகாத்து வருகிறது. உலக நினைவிடங்கள் நிதியம், 2008ல் பாற்கடல் கூடத்தை பல ஆய்வுகளுக்கு பின்னர் புதுபிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது, இப்பணியின் முக்கிய கட்டம் 2012ல் முடிவைடைந்தது, இறுதி கட்டமாக முக்கோண வடிவிலான அலங்கார கும்பம் 2013ல் நிறுவப்படும் என தெரிகிறது. 2004 மற்றும் 2005ல், கம்போடிய அரசாங்க புள்ளிவிவரங்களின் படி முறையே, 561,000 மற்றும் 677,000 வெளிநாட்டு பார்வையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக கம்போடியாவுக்கு வருகை புரிந்தள்ளனர் என தெரிவிக்கபடுகிறது. சுற்றுலா வர்த்தகம் இக்கோயிலை பாதுகாக்க பெரும் அளவில் உதவியது. ஆனால் அதிக அளவு பார்வையாளர்களின் வரவால் இக்கோயிலின் சுற்று வட்டரம் மாசு பட்டுள்ளது குறிபிடத்தக்கது. எனவே இதை கட்டுப்படுத்த யுனெஸ்கோவும் அதன் சர்வதேச ஒருங்கிணைப்பு குழுவும் சேர்ந்து அதன் பாதுகாக்க முடிவு கொண்டது.


 அப்சரஸ் தேவதைகள்

கி.பி.434 க்குப் பின் வந்து ஆட்ட்சி செய்த  க்ஹ்மேர் அரச வர்க்கத்தினர்


ஜெயவர்மன் 1 (கி.பி.657- கி.பி.681) 
ஜெயாதேவி (கி.பி.681- கி.பி.713)
ஜெயவர்மன்  ll      (கி.பி.790- கி.பி.835)
ஜெயவர்மன் lll  (கி.பி.835- கி.பி.877)
இந்திரவர்மன் l (கி.பி.877- கி.பி.886)
யசோவர்மன் l (கி .பி 889-கி.பி 915 )
கரிஸ்வர்மன் 1(கி ,பி .915-கி .பி.923)
இசனவர்மன் 11(கி .பி. 923-கி. கி.பி 928)
ஜெயவர்மன் lV  (கி.பி .928.கி.பி.941)
கரிஸ்வர்மன் ll (கி ,பி .941-கி .பி.944)
ரஜெண்டேரவர்ம்மன் (கி.பி.944-கி.பி 968)      

Jஜெயவர்மன் V  (கி.பி.968- கி.பி.1000)
உடயடித்வர்மன் l (கி.பி.1001-கி.பி. 1002)
ஜெயவர்மன்    (கி.பி.1002-கி.பி.1010 )
சூரியவர்மன் l (கி.பி.1002-கி.பி.1049)
உடயடித்வர்மன் ll (கி.பி.1050-கி.பி. 1066)
கரிஸ்வர்மன் lll (கி ,பி .1066/7-கி .பி.1080)
ஜெயவர்மன்Vl     (கி.பி.1080-கி.பி.1107 )
தரனின்றவர்மன் l  (கி.பி.1107-கி.பி.1112)
சூரியவர்மன் ll (கி.பி.1113-கி.பி.1150)
யசோவர்மன் ll  (கி .பி 1150-கி.பி 1165 )
திரிபுவனடிட்வர்மன் (கி.பி.1165-கி.பி.1177)
ஜெயவர்மன்Vll    (கி.பி.1181-கி.பி.1220)
இந்திரவர்மன் ll (கி.பி.1220-கி.பி.1243)
ஜெயவர்மன் Vlll (கி.பி.1243-கி.பி.1295)
 ஸ்ரீ இந்திரவர்மன் (கி.பி.1295-கி.பி.1307)
ஸ்ரீ இந்திர ஜெயா வர்மன் (கி.பி.1307-கி.பி.1377)
ஜெயவர்மன் பரமேஸ்வர (கி.பி 1327


இந்த மனிதர்கள் கட்டிய கோயில்களைப் போய்ப் பாருங்கள். இப்படி எல்லாம் கட்டி இருக்கிறார்களே. பைத்தியம் பிடித்த மனிதர்கள் என்று நினைக்கத் தோன்றும். மூலைக்கு மூலை கோயில்கள். பார்க்கும் இடம் எல்லாம் கல் தூண்கள். மொத்தம் 2000 கோயில்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு வருடம் சுற்றினாலும் பார்த்து முடிக்க முடியாது. 

தேடலை நோக்கி மீண்டும் ........!

அன்பு தோழன் 


சண் நரேன் 

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு இரவு !







மது மலர் கிண்ணம் !
இதழ் பிரித்து உறவாடும் மனம் !
மயங்கித் திரிந்திடும் கண்கள் !
தேடல்களில் தோற்று போன முளைகள்  !
இறந்தகால வலிகளின் நினைவுகள் !
 எதிர்கால ஏக்கங்களின் கனவுகள் !
கவனிக்கப்படாமலே கடந்து செல்கிற 
நிகழ்காலம்  கவிதை நெஞ்சம் !

சண் நரேன் !
Shan Naran

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

இதுவும் ஓர் அனுபவம்



உயிர் தோழியின் 
திருமண மேடையது , 
வாய் நிறைய வாழ்த்துக்களுடனும் 
கை நிறைய பூக்களுடனும் 
மேடையை நோக்கிச் சென்றேன் 

கண்டவுடன் கட்டியணைத்தாள் 
புகைப்படம் எடுக்கும் தருணம் அது 
வழமை போல் கையை பிடித்துக்கொண்டாள்
மெதுவாக அவளது கையை மணமகன்
எடுத்து தன் கையுடன் இணைத்துக் கொண்டார்
எனக்கு அப்போது கவலை தெரிய வில்லை
வெளியே வந்தவுடன் தான் புரிந்துக்கொண்டேன் நட்பின் விரிசல் பாதை திறக்கப்பட்டு விட்டது என்று
இதுவும் ஓர் அனுபவமே.
வேதனை மிகுந்த அனுபவ

கவிதையால் மனம் நிறைந்தே வாழ்கிறேன்


















நினைவில் 
நகர்ந்து கொண்டே இருக்கிறேன் 

நகராமல் 
விழித்துக்கொண்டே இருக்கிறேன் 

விழிக்காமல் 
சிரித்துக்கொண்டே இருக்கிறேன்

சிரிக்காமல்
கனவுகண்டே இருக்கிறேன்

கனவில்
மனம் குளிர்ந்து போகிறேன்

மனதில்
தினம் நனைந்தே போகிறேன்

தினமும்
கவிதை சாலை போகிறேன்
கவிதையால்
மனம் நிறைந்தே வாழ்கிறேன்

நான்






வாழ்க்கையெனும் பாதையிலே
விரைந்த பல பயணங்கள்
மலர் தூவிய பாதைகள் சில
முள்தைத்த அனுபவங்கள் பல

கடந்து விட்ட காலங்கள் பலவே
கசந்து விட்ட நினைவுகள் பல
மலர்ந்து நின்ற கனவுகள் சில
மயங்க வைத்த கணங்களும் சில

நானென்னும் பள்ளியிலே படித்தேன்
நான் பல பாடங்கள் வாழ்வில்
சித்தியெய்தும் காலம் வரும் போது
சித்தத்தில் உறைந்த உண்மை ஒன்று

என்னை நானே அறியாமல் சென்ற
எண்ணற்ற வருடங்கள் தந்த
எண்ணிக்கையற்ற அனுபவங்கள்
என்னுள் இருந்த "என்னை" ஆழித்தன.

நான் நானாக வேண்டும் !





உணர்வுகளை புரிந்துகொள்ளும் உள்ளம் இருந்தால்தான் ..., 

நேசிக்க மனிதர்கள் கிடைகின்றன ... 

வலிகளை கற்று கொண்டவனுக்கு..., 

மொழிகள் நட்பாகிறது ..., 

மொழிகளை கற்று கொண்டவனுக்கு ..., 

வார்த்தைகள் அழகாகிறது ...

தேடலுக்கு முடிவு யில்லை...,

தேடிக்கொண்டே இருந்தால் நீ யார்ரென்று உன்னகே தெரிவதில்லை ...

உடல் மண்ணுக்குத்தான் ...,

அதற்காக நீ நடமாடும் பிணம்மாக எண்ணிக்கொள்ளாதே ...

தனக்கு வீரம் உண்டு ...,

அதற்காக மற்றவர்களை கோழையென்று நினைத்துவிடதே ...

தான் கெட்டவன் ஆனாலும் ...,

மற்றவர்கள் தன்னால் கெட்டவனாக மாற்றாத வரை நீ நல்லவன்தான்...!


திங்கள், 4 நவம்பர், 2013

ஞாயிறு, 3 நவம்பர், 2013

நம்பிக்கை !!!

திரும்பி வருவோம் என்ற அதீத நம்பிக்கையில்தான் ஒவ்வொரு முறையும் காற்று மண்டலம் நுரையீரல் தொடுகின்றது….
முட்டி மோதி முளைத்து தளைப்போம் என்ற நம்பிக்கையில்தான் விதைகள் மண்ணுள் மூழ்கி தற்கொலையுறுகின்றன…
ஒவ்வொரு மாலையிலும் தொலைத்த சூரியனை, எப்படியும் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் தான் – தினமும் பூமி அந்தரத்தில் சுழன்று தேடுகின்றது…
இன்றில்லாவிடிலும் என்றாவது ஒருநாள் எனை நீ உணர்வாய் எனும் அதீத நம்பிக்கையில் தான் உன் நினைவுகள் தாங்கி இன்னும் வாழ்கிறேன்
நம்பிக்கை !

முகம் அறிய முகப்புத்தகத்தில் நட்பு தோழமை

                                                         
இன அறியோம் !

மத அறியோம் !
மொழி அறியோம் !
ஊர் அறியோம் !
பிறப்பிடம் அறியோம் !
நட்பெனும் மொழியால் !
அனைவரும் இங்கே ஓர் தளம் !
  சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை தோழமை நட்பால் !
புரிந்து கொண்டோம்!
எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
ஏமாற்றங்கள் சிறிதுமில்லை!
அவரவர் கருத்துக்களை இடம் (பரி) மாற்றிக்க கொள்வோம்!பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் !சின்ன‌ சின்ன‌ ச‌ண்டைக‌ள் இடுவோம்!சீக்கிர‌த்திலேயே ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!ஆண்டுகள் புரண்டன நட்புகள் பல சேர்ந்தனர்!சிந்தனை பரிமாற்றம் பெற்றன.

புலன் உறவுமுறை !


இது வரை,  நாம் வாழ்ந்த வாழ்க்கையில் பலர்  நம்முடன் நேரடியாகவோ பழகி இருக்கலாம், சிலர்  மறைமுகமாகவோ நம்முடன்  பழகி இருக்கலாம்!

பழகியவர்கள் எல்லாம் நண்பர்களும் அல்ல

பழகாதவர்கள் எல்லாம் எதிரியும் அல்ல!

நம்முடன்  பழகியதில் நமக்கு பலர் பிடிக்காமலும் இருக்கலாம், சிலர் பிடித்தும் இருக்கலாம்!

பிடித்தவர்  நம்மை விட்டு பிரிந்தும் இருக்கலாம், பிடிக்காத ஒருத்தரிடம் நாம் பழகிக்கொண்டும் இருக்கலாம்!

நம்மை பிடித்த ஒருத்தர் தனக்கு, பிடிக்காத ஒருத்தர்  இடம் கட்டாயம் பழக  வேண்டிய சூழலும் இருக்கலாம்,

நம்ம மனசுக்குப் பிடிச்ச ஒருத்தர்,  நம்ம கிட்ட பழகாமலும் இருக்கலாம்!

சில உறவுகள்  நம்மிடம் தேவைக்காக  பழகலாம், தேவை முடிந்ததும் நகரலாம்!

அதுபோல  நாமும் சில  தேவைக்காக பிறர் இடம் பழகியும் இருக்கலாம் தேவை முடிந்ததும்  அவர்களை  மறந்தும் இருக்கலாம்!

எது எப்படியோ இன்னார்தான் வந்து நம்மிடம் வந்து பழக வெண்டும் என்பது எழுதி வைக்காத ஒரு உண்மை:-)

அதனால்,   நம்மை, தேடிவரும் உறவுக்கு ஆதரவு கொடுப்போம், ஆரோக்கியமான ஒரு  நட்பு  வட்டத்தை உருவாக்க்குவோம்!

மனித உறவுகள் இடையே மனஸ்தாபங்கள் இருந்தாலும், மறந்து விட்டு பழகுவோம்!

சண்டைகள் தவிர்ப்போம், சந்தோஷமாய் இருப்போம்!

எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொல்வோம் ஏமாற்றங்களைத் துரத்திடுவோம்!

அன்பை  அதிகரிப்போம், ஆசைகளை  ஒலித்திடுவோம்!

அப்படியே   இறுதி வரை. ஒற்றுமையாய்  இருந்துவிடுவோ

நவராத்திரி ஆரத்தி தட்டை அழகாக அலங்கரிக்க சில டிப்ஸ்...

பூக்கள்

ஆரத்தி தட்டை அலங்கரிக்க சிறந்த பொருள் என்றால் அது பூக்கள் தான். ஆகவே தட்டில் அழகான பூக்களை வைத்து அலங்கரிக்கலாம். குறிப்பாக சாமந்திப் பூ சிறந்ததாக இருக்கும்.




வெற்றிலை

 ஆரத்தி தட்டைச் சுற்றி வெற்றிலையை வட்டமாக அடுக்கி, அதில் பூக்கள் மற்றும் இதர பூஜை சாமான்களை வைத்து அலங்கரிக்கலாம். இதனால் ஆரத்தி தட்டு அழகாக இருப்பதோடு, நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.


முத்து

மற்றும் மணிகள் பெரும்பாலானோர் காப்பர் தட்டில் ஆரத்தி செய்வார்கள். ஏனெனில் அதனை பராமரிப்பு மிகவும் எளிமையானது மற்றும் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கக்கூடியது என்பதால் தான். ஆகவே அந்த காப்பர் தட்டில், முத்து அல்லது மணிகளைக் கோர்த்து கற்பனைக்கேற்ப அலங்கரிக்கலாம். இதுவும் ஒரு வித்தியாசமான தோற்றத்
பெயிண்ட்

ஆரத்தி தட்டில் விருப்பமான பெயிண்ட் அடித்து, அதில் முத்துக்களை பதித்து, விளக்குகள் மற்றும் வேண்டிய பொருட்களுக்கும் அதே நிற பெயிண்ட் அடித்து அலங்கரிக்கலாம். இதனால் விளக்கு ஏற்றும் போது, இது மிகவும் க்யூட்டாக இருக்கும்.