ஞாயிறு, 22 நவம்பர், 2020




  ஏகாந்த இரவு

ஆசைமனம் சிறிது தூங்க  

ஓய்வெடுத்த பகல்நினைவு 

மதுக்கோப்பைக்குள் 

தத்தளிக்கும் வண்டு ஒன்றை 

காட்சி படுத்துகின்றது 

 யாவும் இந்த இரவுக்கு மட்டும் 

சொந்தமானவை !



50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்மொழிக்கா உழைத்த ரஷ்ய தமிழறிஞரான அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி பற்றி ஒரு பார்வை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் தாடி





""1941 ஆண்டு சித்திரை மாதம் 27 திகதி" ரஷியாவில் பிறந்த இவருடைய முழுப்பெயர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மொஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் ஆசிய ,ஆபிரிக்க நாடுகளுக்கான தொடர்பான ஆய்விபிரிவில் ஆய்வாளர்கவும் விரிவுரையளராகவும் முன்னர் பணியாற்றியவர் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டு "முல்லைத்திணையின் பிரிவு "என்ற தலைப்பில் தன் ஆய்வேட்டை சமர்ப்பித்து கலாநிதியானவர் .நிலத்தை அடிப்படையாக வைத்து பகுக்கப்பட்ட ஐவகைத்திணைகள் பற்றி கற்றறிந்த இவர் காடும் காடு சார்ந்த நிலம்பற்றி ஆய்வுமேற்கொண்டிருப்பது இலங்கை ,இந்திய தமிழர்களை ஆச்சரியபடித்திய இலக்கண தகவல்
தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் நல்ல புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார்.
இவர் பல ஆண்டுகளாகத் தனி ஒரு மனிதராக துப்யான்ஸ்கி ரஷ்யாவில் தமிழ்மொழியை கற்பித்துவந்தார். ரஷ்யாவில் உள்ள 10 பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கு அவர் தமிழ் கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இவர் பல தமிழ் கவிதை , இலக்கிய நூல்களை ரஷ்ய மொழியில் பதித்து வெளியிட்டவர்.
இவர் தொல்காப்பியம் துணை நிற்கிறது. சங்க இலக்கியங்களுக்கு சங்க இலக்கியங்கள் பற்றிச் சொல்கிறது. சங்கம் பற்றி விளக்கம் கூறுகிறது. முச்சங்கங்களின் வரலாற்றைக் கூறுகிறது. சங்க இலக்கியங்கள் பற்றி அறிமுகம் செய்கிறத நூல்களை கற்று . எட்டுத்தொகை, பத்துப்பாட்டுப் பற்றி விளக்கி உரைக்கின்றது. சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகளைக் கூறுகிறது. சங்க இலக்கியத்தின் யாப்புப் பற்றியும், உவமைகள் பற்றியும் கூறுகிற. சங்கப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள், வாழ்வியல் செய்திகள்
ஆகியவற்றைக் கூறுகிற இலக்கணமாகத் திகழ்ந்த தொல்காப்பியம் பற்றி சிறப்பாக அறிந்து கற்று
தமிழ்நாடு கோயம்புத்தூரில் 2010-இல் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு தொல்காப்பியம் பற்றி சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை பலத்த விவாதத்தை எழுப்பியது.
கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்புப் பட்டறையை அவர் நடத்திவந்தார்.
துப்யான்ஸ்கி தனது ஆய்வுக் கட்டுரையில் . “ சங்க இலக்கியங்களுக்கும், தொல்காப்பியத்துக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளை அவரது கட்டுரை சுட்டிக்காட்டியது. அதற்காக சில உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார்.‘‘தொல்காப்பியம் நொச்சித் திணைப் பற்றி எங்கும் பேசவில்லை. உழிஞைத் திணைப் பற்றிப் பேசும்போது அதன் துணைப் பிரிவாக ஒரே ஒரு இடத்தில் நொச்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தொல்காப்பியத்துக்குப் பிறகு எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை நொச்சித் திணையை விரிவாகப் பேசியுள்ளது.
பிரிவு குறித்து தொல்காப்பியம் பேசிய இடத்தில் பிரிவுக்கான காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் குறிப்பிட்டு
பெண்ணோடு கடற்பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்காப்பியம் கூறுகிறது. அத்தகைய நிகழ்வு எதுவும் சங்கப் பாடல்களில் இல்லை. தலைவனின் தோழன் காதலர்கள் சந்திப்பதற்காகப் பன்னிரெண்டு விதமான காரியங்களைச் செய்வது குறித்தும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
ஆனால், சங்கப் பாடல்களில் அத்தகைய நிகழ்வுகளை எங்குமே நாம் காணமுடியவில்லை’’ என்று துப்யான்ஸ்கி குறிப்பிட்டு சுட்டிக்காட்டி தனது ஆய்வுக் கட்டுரையில் எழுப்பிய ஒரு பிரச்சனையை யாரும் விவாதிக்கவில்லை
அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு
தனது #"79-ஆவது வயதில் மொஸ்கோவில் 18.11.2020" அவர் காலமானார்.
"பொன்னியும் - வைகையும் - பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை - இலக்கியத்தினை - வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர்
இவர் எமது தமிழுக்கும் ,தமிழருக்கும் நெருக்கமானவர் ,இவரின் வரலாற்றை எமது மொழியுடனும் ,இனத்துடனும் , இணைத்தே பார்க்கவேண்டும்


ஞாயிறு, 4 அக்டோபர், 2020

காலை நிலம்


காலை தென்றல்

மெல்ல வீச..

கிளையை விட்டு 

விலக போகும் 

பழுத்த இல்லை ஒன்று 

பனியின் குமிழியை 

தங்கி நின்று அசைத்து ஆட 


கண்கள் விரும்புவதை

நான் உணர்கின்றேன் ..!

மனம் விரும்புவதை

நான் யாசிக்கின்றேன் ..!

 

வாழ்வு நேசித்து அமுத சுரபி

 என் நெஞ்சில். 

மிதந்து பின் அமிழ்கிறது.


நம்பிக்கையான நாளாக

அமையட்டும்!


-பங்கிரையான் -

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

1983ஆம் ஆண்டு ஜுலை 23

 983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் இந்த கறுப்பு ஜுலை வன்முறைகள் அமைந்துள்ளது
தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத ரணங்கள் (இரத்த காயம்)
.

சம காலப்பகுதியில் சிங்கள பேரினவாதத்தின் உந்துதலில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீதும் சிங்கள காடையர்களாலும் கைதிகளாழும் கொடூரமான தாக்குதல்கள் இடம் பெற்றன.
சிறைச்சாலையில் நிகழ்தேறிய கலவரச் சம்பவத்தில் காந்தியம் பிதா மருத்துவர் சோ. இராஜசுந்தரம்,குட்டிமணி ,தங்கதுரை ,ஜெகன் , தமிழ் அரசியல் கைதிகள் உற்பட 53 பேர் வரையான அநாகரியமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.

”சுதந்திரத்தமிழீழத்தை என் கண்கள் காணவேண்டும் அதனால் இறந்தபின் என் கண்களை தானம் செய்துவிடுங்கள்“ என்று தன் இறுதி ஆசையை நீதிமன்றத்தில் சொன்னதற்காய் ஜூலை-25 அன்று ‪‎ வெலிக்கடை‬ சிறைச்சாலையில் வைத்து ”குட்டிமணியின்“ கண்கள் உயிருடனிருக்கும்போதே சிங்களக்காடையர்களால் பிடிங்கி புத்தனின் காலடியில் போடப்பட்டது

குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்

1983 ஜூலை 23 தமிழரின் வாழ்வில் ஆறாத வடுவாக நிலைத்து விட்டது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர், இரவு மற்றும் வெளிப்புறம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், சன்கிளாஸ்கள், தாடி மற்றும் குளோஸ்-அப்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

வரலாற்று குறிப்பு





இன்று புரட்டாசி -5 தேசபக்த மாவீரர், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம்
உலகநாதன் சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்
இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் மக்களிடம் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவர்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள்.
திருநெல்வேலியில் ஒரு பொதுகூடத்தில்ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து பேசும்போது அவரை பேச மறுத்தும் திருநெல்வேலியைவிட்டு வெளியேறுமாறும் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்றும் கூறினார். வ.உ.சி. அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் வ.உ.சி.யும் சிவாவும் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை செய்யப்படடர்
விடுதலைக்கு பின்
வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்து பின் தூத்துக்குடி வந்தார்.
தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். வ.உ.சி. சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினார்.இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார்.அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம், , ’வ.உ.சிஅய்யா நடத்தி வந்த சுதேசி கப்பல் இது தான் காணகிடைக்காத புகைப்படம்.. prpppioy’ எனச்சொல்லும் உரை


ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஏகாந்த இரவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், இரவு, மரம், வெளிப்புறம், இயற்கை மற்றும் தண்ணீர்
முதுவேனி பொழுது
செவ்வானம்
தவழும் மேகம்.
அந்தித தாரகை,
அலைமோதும் கடல்
இயற்கையின் கலை
அபிநாகின்றது
மனித உணர்வுகளுடன்
உணரும் காட்சிகள்
இது எனது
அடையாளமற்ற இடங்கள்
அடையாளம் தேடி அலைகிறேன்
என்னை தொடர்கிறது
என் காதல்.

திங்கள், 29 ஜூன், 2020

புதிய அரசியல் அறிவியல்



அறிமுகம்
  1. கழகங்கள்
  1. கூட்டமைப்புகள்
  1. தேவாலயம்
  1. நிர்வாக அமைப்புகள்
உதாரணங்கள்
  1. நாட்டிடை அரசியல் அறிவியல் குழுமம்
  1. இந்திய அரசியல் அறிவியல் குழுமம்
  1. இந்திய பொது நிர்வாக நிறுவனம்
  1. அமெரிக்க அரசியல் அறிவியல் குழுமம் தூய அறிவியல் நிலையை பெறவேண்டும் என்ற இலக்கை நோக்கி நடத்தை இயல் செல்லும் போது, அரசியல் அறிவியலுக்கு ஒரு தொழில் ரீதியான அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.
  1. முன் அறிதல் மற்றும் விளக்கங்களை அளிப்பதில் அரசியல் அறிவியல் தக்க நெறிமுறைகளைக் கொண்டு அரசியல் நடத்தைகளைப் பயன்படுத்துவதாகும்.
  1. தனிமனித நடத்தை மற்றும் அரசியல் குழுக்களின் நடத்தைகளை எண்ணிக்கை அடிப்படையில் ஆராய்ச்சி செய்து அரசியல் புதிர்களை விளக்கச் செய்வதாகும்.
  1. முன்கூட்டி அறிதலை துணைசெய்யும் வகையில் புள்ளியல் விவரங்கள் அளவிடப்படவேண்டும்.
  1. ஒரு கோட்பாட்டின் மூலம் ஆராய்ச்சிகள் அமைய வேண்டும். மேலும் அவ்வாராய்ச்சிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்ற கருத்து முன்படிவத்தினை பெற்றிருக்க வேண்டும்.
  1. உண்மையான அறிவியல் ஆராய்ச்சி முறைகளை அரசியல் அறிஞர்கள் பின்பற்றவேண்டும்.
  1. அளவிடமுடியாத கருத்துகளாகிய மக்களாட்சி, சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை எண்ணிக்கையளவில் ஆராயமுடியவில்லையென்றால் அவைகளை ஒதுக்கவேண்டும்.
  1. அரசியல் அறிவியல் ஒரு பல இயல் அறிவாக உருவாகவேண்டும்.
  1. பல்நோக்கு பகுப்பாய்வு, சர்வே ஆராய்ச்சி, கணக்கு மாதிரிகள் துணைகொண்டு அரசியல் அறிவியல் ஆராய்ச்சி வழிமுறைகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
அரசியல் அதிகாரம் என்றால் என்ன?
ஆளுமையின் தன்மை மற்றும் முக்கியத்துவம்
  • பாரம்பரிய ஆளுமை
  • தலைமைபண்பு ஆளுமை
  • சட்ட - பகுத்தறிவு ஆளுமை
உயர் வகுப்பு கோட்பாடு
  1. ஒவ்வொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மை எப்பொழுதும் இருக்கும்.
  1. சிறுபான்மையினரான உயர்குடியினர் பெரும்பான்மையான மக்களை ஆள்வார்கள். உயர் குடியினரை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். "ஆட்சி செய்யும்’ உயர் குடியினர் மற்றும் ‘ஆட்சி செய்யா’ உயர் குடியினர் ஆவார்கள். இவ்விரு உயர் குடியினர் சமூக சமன்நிலையை செய்கின்றார்கள்.
  1. ஒவ்வொரு சமுதாயத்திலும் சலுகைகளையுடைய மக்கள் உள்ளனர். ஆகவே சமூக வாழ்வில் சமத்துவமின்மை தவிர்க்க இயலாதது. (சமூக வகைபாடுகள்)
  1. ஒவ்வொரு சமுதாயத்திலும் உயர் குடியினர் சிறுபான்மையினராகவே இருந்து பெரும்பான்மையான மக்களை ஆட்சி செய்வர்.
  • ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு குறிப்பிட்ட அதிகாரம் உடையவர்கள் சமுதாயத்தை கட்டுப்படுத்துவார்கள். எந்தவிதமான அரசாங்கமோ அல்லது பொருளாதாரமோ, அவற்றில் என்றும் உயர்குடி ஆட்சிதான் கோலோச்சும். பெரும்பான்மையான மக்கள் தங்களை ஆட்சி செய்யமாட்டார்கள்.
  • கிடைக்கின்ற வளங்களை தக்க அமைப்பு ரீதியாகவும், கூட்டு முயற்சியிலும் பெருமளவில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். உயர்குடி உறுப்பினர்கள் அதிகாரத்தை மையப்படுத்தி ஆட்சி செய்வார்கள்.
  • கிடைக்கின்ற அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி உயர்குடி வகுப்பினர் தங்கள் அதிகாரத்தை பாதுகாத்தும், விரிவுபடுத்தியும் கொள்வர். தங்களுக்கு பயன்படும் என்றாலொழிய அதிகாரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். தன்னிச்சையாக தங்கள் அதிகாரத்தை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
  • தங்கள் சமுதாயத்தை ஆட்சி செய்ய பல நுட்ப முறைகளை உயர் குடியினர் பின்பற்றுவர். பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல், காவல் மற்றும் இராணுவத்தை தங்கள் நலன் காக்க பயன்படுத்துதல், கல்வி முறை மற்றும் மக்கள் தொடர்பு சாதனங்களை தங்களுக்கு சாதகமாக சூழ்ச்சியாக நடத்துதல், தங்களை எதிர்பவர்களை தனிமைப்படுத்துவது அல்லது தீர்த்துகட்டுவது, தங்கள் அதிகாரத்தையும் ஆட்சியையும் நியாயப்படுத்தும் அரசியல் கொள்கைகளை உருவாக்குவது போன்ற வழிகளை பின்பற்றி தங்கள் ஆட்சியை நிலைப்படுத்துவர்.
  • தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களின் சுயநலத்தை பேணவும், தங்களின் அதிகார இடத்தை தக்க வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டுவர். இரண்டு காரணங்களுக்காக மார்கீசிய கோட்பாட்டினை உயர் கோட்பாட்டாளர்கள் மறுக்கின்றனர்.
சமூக வர்க்க கோட்பாடு
  1. இராணுவத்தின் துணைகொண்டு, சிறு குழு தலைவர்கள் அரசியல் ரீதியாக ஆட்சி செய்வது.
  1. நுட்ப பணியாளர்களை சார்ந்து ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள்இத்தகைய நுட்ப பணியாளர்கள் சமுதாயத்தின் அன்றாட நடவடிக்கையை கட்டுப்படுத்தி ஆட்சி செய்வர்.
  1. பொருளாதார மந்தநிலை ஏற்படுகின்ற காலங்களில் சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சியினைப் பெருக்குதல்.
  1. பல வர்க்கங்களின் மீது அடக்குமுறையைப் பயன்படுத்துதல், குறிப்பாக மத்திய வருவாய் வர்க்கத்தினர் மீது. காரல் மார்க்ஸின் உயர்குடி வகுப்பினர் அல்லா கோட்பாடு ஒரு சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் எவ்வாறு பிரித்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆரம்ப காலம் முதற்கொண்டே விளக்கியது மார்கீசிய கோட்பாடாகும். மார்க்ஸின் கூற்றுப்படி ஒவ்வொரு நாகரீகமடைந்த சமுதாயத்திலும் அரசியல் அதிகாரம் என்பது சமமான அளவில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. பொருள் உற்பத்தி செய்யும் முறையை தங்கள் வசமாக்கி கொண்டு ஆட்சியில் உள்ளவர்கள் அரசியல் அதிகாரத்தை ஒருமுகப்படுத்துவர். ஆகையால் அரசியல் தலைவர்கள் ஆதிக்க வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆவார்கள். அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க சமூக பொருளாதார காரணிகள் தீர்மானிக்கின்றது. ஆளப்படுவோருக்கும், ஆள்வோருக்கும் இடையே தொடர்ச்சியாக நடைபெறும் சச்சரவுகள் சமூக முறைமைகளை நிலை நிறுத்துகிறது. இத்தகைய சச்சரவுகள் உற்பத்தி சக்திகளை தீர்மானம் செய்கின்றது. வர்க்கரீதியாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என இருவேறு கூறாக மாறும் வர்க்க வேறுபாட்டுடன் வர்க்க பேதங்கள் உருவாக்குகின்றன. சச்சரவுகளின் தன்மைகளின் அடிப்படையில் அதிகார பகிர்ந்தளிப்பு நடைபெறுகிறது. ஆகவே பொருளாதார தன்மையை தீர்க்கவல்லது மார்க்கீசிய கோட்பாடு. அது வர்க்க போராட்டத்தை தூண்டவல்லது. வன்முறை அடிப்படையில் புரட்சியை ஆதரிப்பது. ஆகவே மற்ற சிந்தனையாளர்கள் மார்க்சீய கோட்பாட்டினை எதிர்க்கின்றார்கள்.
தொடர்புடையது
அரசு இயங்குகின்ற தன்மை பற்றி அறியும் இயல் அரசியல் அறிவியல் என்பதாகும். அரசாங்கத்தின் கட்டுமானம் மற்றும் அதன் இயக்கத்தை படிப்பதும் இதில் உள்ளடங்கியதாகும். அதனடிப்படையில் அரசியல் அறிஞர்கள் கீழ்க்கண்ட சமூக நிறுவனங்களை பற்றி படிக்க முற்படுகின்றனர்.
ஜான் போதான் (1530 - 1596) என்ற பிரெஞ்சு தத்துவ ஞானி 'அரசியல் அறிவியல்’ என்ற பதத்தைப் பயன்படுத்தினார். முடிவு எடுப்பதில் அதிகார ஒதுக்கீடு மற்றும் அதிகார இடப்பெயர்வை பற்றிய செய்திகளை அரசியல் அறிவியலாளர்கள் கற்கின்றனர்.
அரசியல் அறிவியல் என்பது நேர்மறை எண்ணக் கருத்துகளை முன் நிறுத்துவதிலும், அரசியலை பகுப்பாய்வு செய்வதிலும் மேலும் கொள்கை உருவாக்கத்திற்கு தேவைப்படும் கருத்துகளை சிபாரிசு செய்வதிலும் முற்படும். பாரம்பரிய அரசியல் அறிவியல் என்பது மனதளவில் உருவாகும் எண்ணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அறிவை வளர்ப்பதாகும். மேலும் அவைகள் ஒழுக்கலாறு அடிப்படையிலானவை. பாரம்பரிய அரசியல் கோட்பாடுகள் உத்தேசம் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முன் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி கேள்வி ஞானத்தால் உருவாகுவதாகும். ஆனால், புதிய அரசியல் அறிவியல் என்பது புள்ளி விவரங்களோடு சார்ந்த அறிவியல் அடிப்படையிலான கேள்வி ஞானமாகும். அரசியல் அறிவியலின் அறிவியல் தோற்றம் என்பது 1950-களில் நடைபெற்ற நடத்தை இயக்கத்தால் ஏற்பட்டதாகும்.
அறிவியல் ரீதியான அரசியல் என்பது 1950-களில் கண்ட நடத்தை இயல் புரட்சியின் மூலம் நாம் கண்டதாகும். இவ்வியக்கத்தின் பிறகே இவ்வியலின் பல உறுப்பினர்கள் அரசியல் பாடத்திற்கு ஒரு அறிவியல் தன்மை இருப்பதாக உணர்ந்து கொண்டனர். அரசியல் நடத்தைகளை உணர்வதிலும், எண்ணளவு அடிப்படையில் அரசியல் உணர்வுகளை துல்லியமாக எதிர்பார்ப்பதிலும், அனைவரும் ஏற்றுக் கொண்ட மதிப்பு அடிப்படையில் அல்லாத ஆராய்ச்சி வழிமுறைகளில், அரசியல் அறிவியல் நடத்தை இயலின் மூலம் நிலைநிறுத்தியது. நடத்தை இயக்கத்தின் பிறகு இவற்றில் சிறிது மாறி இருந்தாலும் நேர்மறை அறிவியல் மாதிரியை இன்றளவும் அரசியல் அறிவியல் பின்பற்றிவருகிறது. இதன் காரணமாய் எண்ண அடிப்படையில் உருவாகும் அரசியல் கோட்பாடுகள் ஒரளவு மங்கத் தொடங்கின. உண்மையில் வெறும் சிந்தனை அடிப்படையை அரசியல் கோட்பாடுகள் எண்ணளவு அடிப்படையிலான ஆதரிக்கவில்லை, என்பதால் நடத்தை இயல், எண்ணம் அடிப்படையிலான அரசியல் கோட்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பணி சார் குழுமங்களின் ஆதரவினால் அரசியல் படிப்பு என்பது தொழில்ரீதியான இயல் என்ற அந்தஸ்தைப் பெற்றது.
நடத்தை இயலின் காரணமாய் அரசியல் அறிவியலோடு தன்னை ஐக்கியப்படுத்தியது. இத்தகைய ஐக்கியப்படுதல் என்பது அன்று முதல் இன்று வரை எந்தவொரு மாற்றமில்லாமல் தொடர்கின்றது. அரசியலைப் பற்றிய உண்மையான அறிவை பெறவேண்டும் என்றால் அரசியல் அறிவியல் ஒரு அறிவியல் அடிப்படையிலான, தனித்தன்மைபெற்ற இயல் என்றும், தொழில்ரீதியான ஐக்கியப்படுத்துதல் என்ற நிலையில் இவ்வியல் தன்னைக் காட்டிக் கொள்ளவேண்டும். அறிவியல் அடிப்படையிலான வழிமுறைகளின் மூலம் அரசியல் ஆர்வலர்கள் குறிக்கோள் அடிப்படையிலான, எண்ணங்களின் அடிப்படையில் விடுபட்ட மதிநுட்ப ரீதியாக அரசியலை புதுமைப்படுத்துவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். மதிப்பீட்டிலிருந்து விடுபட்ட (Value-free) அறிவியலில் எண்ணம் அடிப்படையிலான குறிக்கோள்கள் கிடையாது.
ஒரு தொழில் ரீதியான பார்வையின் மூலம் அரசியல் ஆர்வலர்கள் புதிய அரசியல் அறிவியலை அறிமுகப்படுத்தினர். அரசு அமைப்புகளில் அரசியல் அறிவுகளைப் புகுத்தினார்கள். பகுத்தறிவு ரீதியான அரசியல் கட்டளைகள், புதிய அரசியல் சமுதாயத்தை உருவாக்குவதில் சமூக பொறியாளர்களான சார்லஸ் மேரியம் மற்றும் ஹெரால்டு லாஸ்கி போன்றோர் முற்பட்டனர்.
புதிய அரசியல் அறிவியல் அறிஞர்கள் குடிமக்களை ஒரு கருவாக மேலும் உற்றுநோக்கி அறிவதில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். சுதந்திர மக்களாட்சி அரசை ஊக்கப்படுத்துவதில் புதிய அரசியல் அறிஞர்கள் நாட்டம் கொண்டனர். அறிவியல் அடிப்படையிலான அரசியல் சாத்தியமென்றும் அதனடிப்படையில் உருவாகும் அரசியல் அறிவு சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்கவல்லது என்ற அடிப்படையில் இயங்கினார்கள்.
நுட்ப ரீதியாய் உருவாக்கப்பெற்ற அரசியல் அறிவியல் அறிவினை அரசியல் அறிஞர்கள் அரசாங்கப் பணிகளில் தக்க வழிகளில் செலுத்தி பயன்பெறச் செய்தனர்.
மெரியம் தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரைகளில் அரசியல் அறிவியல் ஆழ்ந்த அறிவியல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கருதினார். எதிர்பார்ப்பு மற்றும் யோசனை அடிப்படையிலான எண்ணங்களை விடுத்து அரசியல் அறிவியல், அறிவியல் நுட்பங்களையும், வழிமுறைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை காணத் துடித்தார். மனித நாகரீகத்தை முழுமை படுத்துவதில் எங்ங்ணம் அறிவியல் துணை புரிந்ததோ, அதே வகையில் அரசியல் அறிவியல் மனித நாகரீகத்தை காப்பதிலும், செழுமை படுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். அறிவின் பரிணாம வளர்ச்சியினையும் மற்றும் மனித உணர்வுகளையும் கட்டுப்படுத்தும் குடிமக்கள் கல்வியின் மூலம் மக்களாட்சி மாண்புகளை வளர்க்க முற்பட்டார். இதன் மூலம் முழுமைப்பெற்ற சமுதாயத்தை மற்றும் மனித இனத்தை காணமுற்பட்டார். நடத்தை இயல் அறிஞர்களாகிய ஹினஸ் யூலா (Heinz Eulau) மற்றும் டேவிட் ஈஸ்டன் (David Easton) நடத்தை இயல் ஆராய்ச்சி முறைகளை கண்டறிந்து, பயன்படுத்தி ‘புதிய அரசியல் அறிவியலை” வளர்க்க முற்பட்டனர். புதிய அரசியல் அறிவியலின் குணாதிசயங்களாய் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
யூலாவின் கருத்துப்படி பெரு அளவு பகுப்பாய்வு (Macro level analysis) என்பது நிறுவனங்களையும் சிறு அளவு பகுப்பாய்வு (Micro level analysis) என்பது தனிமனிதனையும் அடிப்படையாகக் கொண்டு அமையும். அறிவியல் ரீதியான அரசியல் என்பது அரசியல் நடத்தைகளை பெரு அளவு மற்றும் சிறு அளவு பகுப்பாய்வின் மூலம் நன்கு தெளிவு படுத்துவதாகும். ஒருமைதன்மை மற்றும் சீரான நெறிகளை வளர்ப்பதில் எண்ணிக்கை அடிப்படையிலான அறிவியல் தன் நோக்கினை செலுத்தும். நிறுவனங்களின் தாக்கம் தனிநபர் நடத்தையிலும், தனிநபர் தாக்கம் நிறுவனங்களின் மேலும் உள்ளவற்றை நாம் அறிவியல் ரீதியாய் அறியலாம்.
அரசியல் அறிஞர்கள் புள்ளியியல் விவரங்களையும், அதன் முடிவுகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும் என யூலா கருதுகின்றார். அளவிடுவது, இன்றைய ஆராய்ச்சி வழிமுறைகள், சோதனைக்குரிய கருத்து முன்படிவங்கள் ஆகியவைகள் செயல்பாட்டிற்குரிய மேலும் நம்பிக்கைக்குரிய அரசியல் அறிவினை பெருக்கும். எண்ணிக்கை அடிப்படையிலான அரசியல் அறிவியல் என்பது பல அரசியல் கருத்துகளுக்கு ஆதாரமாகவும், நம்பிக்கை தன்மையை கொடுப்பதிலும் முன் நிற்கும். நடத்தை இயல் மூலம் அறியப்படும் அரசியல் அறிவியல் என்பது பகுத்தறிவாக இருக்கும்.
மாக்ஸ் வீபரின் கூற்றுப்படி அரசியல் அதிகாரம் என்பது வரலாற்று சமூகங்களில் எதேச்சதிகார வர்க்கம் தன்வசம் உள்ள ஒரு பரிசாகும், தற்கால சமுதாயத்தில் அது செல்வத்தின் படைகளாகும். தற்கால சமுதாயத்தில் அரசியல் அதிகாரத்தினை அடைவதில் சச்சரவுகள் இருந்தாலும், அரசியல் அதிகாரத்தினை இன்று குழுக்களின் சமூக அந்தஸ்து, அரசியல் குழாம், மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவைகள் அரசியல் அதிகாரத்தினை பெற்று விளங்குகின்றன.
சமுதாயத்தில் அரசியல் மற்றும் அரசியல் நிறுவனங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கருத்து முன்படிவமாக, அரசியல் என்பது நாம் அன்றாட வாழ்வில் காணும் அதிகார உறவுகளை தெளிவுப் படுத்துவதாகும். உதாரணமாக, பெற்றோர்களிடையே அதிகார உறவுகள் இருப்பதைக் காணலாம். ஆகவே சமுதாயத்தில் சிறு அரசியல் (Micro Politics)மற்றும் பெரு அரசியல் (Macro Politics) உள்ளது. நாம் அன்றாட வாழ்க்கையில் காண்பது சிறு அரசியலாகும். நிறுவன அளவில் உள்ள அதிகார உறவுகள் பெரு அரசியல் எனலாம்.
அரசியல் சமூகவியல் என்ற பாடம் அரசு மற்றும் சமுதாயத்திற்கிடையே நிலவும் உறவுகளை பற்றிய படிப்புகளாகும். அதிகாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் நாம் அ மற்றும் ஆக்களுக்கிடையே உள்ள உறவுகளை அறிந்து கொள்ளவேண்டும். ஆ என்ற நபர் ஒரு காரியத்தை செய்யவேண்டாம் என்று நினைத்திருந்தாலும் அ அந்த காரியத்தை ஆ யின் மூலம் செய்து முடித்தால், அத்தகைய செயல்பாடு அ என்ற நபர் ஆ என்பவர் மீது செலுத்திய அதிகாரம் என நாம் கருதலாம். இதனடிப்படையில் அதிகாரம் என்பது ஒரு முக்கியமான முன் கருத்துப்படிவமாகும். மற்றொரு வகையில் நியமன அதிகாரம் என்பது ஆளுமையாகும் (Authority). உதாரணமாக, ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தங்கள் மக்கள் மீது அதிகாரம் செலுத்த முற்படுவர். இதன் காரணமாய் நியமன அதிகாரத்தை மக்கள் மீது இத்தலைவர்கள் செலுத்துகின்றனர் என்று மக்களை நம்பச் செய்வார்கள்.
அதிகாரம், நியாயத்தன்மை மற்றும் ஆளுமை ஒன்றொடு ஒன்று தொடர்புடையது. மேலும் இணைந்தே செல்வதாகும். மற்றவர் செய்ய மறுப்பினும், அதை அவர்கள் கொண்டே செய்வது என்ற அதிகாரம் பல வகைகளை கொண்டதாகும். ஆளுமை என்பது அதிகாரத்தைப் போலத்தான். ஆனால் ஆளுமைக்கு நிறுவனங்களின் துணையுண்டு. ஆளுமையில்லாமல் அதிகாரம் மட்டுமே இருக்குமிடத்தில் அதிகாரத்திற்கு நியாயத்தன்மை தேவைப்படுகிறது. அதிகாரத்திற்கு நம்பிக்கை மற்றும் நியாயத்தன்மையிருக்குமேயானால் அது ஆளுமையாகும். அதிகாரம் (Power) மற்றும் ஆளுமை (Authority) அரசியல் சமூகவியல் அறிஞர்களை சிந்திக்கச் செய்யும் இரு அடிப்படையான முன் கருத்துப்படிவமாகும். தனிமனித கருத்து, குழுக்களின் நடத்தை குணாதிசயங்கள் மக்களின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை இயக்கவல்லது அதிகாரமாகும். (உதாரணம் பெற்றோர் மற்றும் குழந்தைகள் அரசாங்கம் மற்றும் வரிகள்) ஆளுமை என்பது அதனோடு தொடர்புடைய நிறுவனங்களையும் குறிப்பிடுவதாகும். நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கிடையே தான் ஆளுமை வெளிப்பாடு அடையும்.
நம் வாழ்க்கையின் வழி நடத்த சமூக அமைப்புகள் சட்டம் மற்றும் வழிகாட்டிகளை உருவாக்குகின்றது. அத்தகைய சட்டம் மற்றும் விதிமுறைகள் ஆளுமையாகும். (உதாரணம்: பல்கலைக்கழகம் மற்றும் பேராசிரியர்கள்). பெரும் அளவிலான நிறுவனங்கள் வீழ்கின்ற போது (USSR) அதிகாரம் அவற்றினை கைப்பற்றும். நிலைத்த தன்மையுடைய ஆளுமையை உருவாக்கவேண்டுமென்றால், அதற்கு நியாயத்தன்மை தேவைப்படுகிறது. சுருங்கக்கூறின், அரசின் மூன்று முக்கிய குணாதியசங்கள் என்னவென்றால், அது அதிகாரம், ஆளுமை மற்றும் நியாயத்தன்மையாகும். அதிகாரம் என்பது பல்வேறு வடிவங்களை எடுத்தாலும் துன்புறுத்துதல், தாக்கம் மற்றும் கட்டுப்பாடு) ஆளுமையோடு செயல்படுத்தப்படும் அதிகாரம் அடிப்படையில் ஒருவரின் எண்ணத்தை மற்றவரின் மேல் திணித்து செயல்படுத்துவதாகும்.
மாக்ஸ்வீபரின் கருத்துப்படி ஆளுமை என்பது மூன்று வகைப்படும்
அரசாட்சிகள் மற்றும் பேரரசுகளில் உள்ள பாரம்பரிய சமுதாயத்தில் நாம் பாரம்பரிய ஆளுமையைக் காணலாம். பாரம்பரிய ரீதியாக அதிகாரத்தை இச்சமூகங்களில் காணலாம். தனிமனித மாண்புகளின் மூலம் தலைமை ஆளுமை அதிகாரம் உருவாகும். தலைமை ஆளுமை பண்பையுடைய ஒரு தலைவன் மிக எளிதில் தன் மக்களோடு தொடர்பு கொள்வார். ஒரு சில சிறப்பு குணாதியசங்களின் திறமையின் காரணமாய் தலைமை ஆளுமை நபர்கள் தோன்றுகின்றார்கள். இன்றைய உலகில், சட்டப்பகுத்தறிவு அடிப்படையிலான ஆளுமையை நாம் அரசியல் சாசனத்தின் மூலம் பெறுகின்றோம்.
ஒரு சமுதாயத்தில் செல்வம், அதிகாரம், முன்னுரிமைகள் மற்றும் உயர் தகுதிகளைப் பெற்றவர்களை உயர் வகுப்பினர் என்று கூறுகிறோம்.
உயர் குடியினர் என்பதை பரிட்டோ கீழ்க்கண்ட வகையில் விளக்குகிறார்.
உயர் குடியினர் என்ற கருத்து முன்படிவம், உயர்ந்த தகுதிகள், திறமை மற்றும் சிறப்பு சலுகைகளை பெற்றவர்களை குறிப்பதாகும். பரிட்டோவின் விளக்கப்படி உயர்குடியை இரண்டு விதமாக பார்க்கலாம்.
உயர் குடியினர் கோட்பாட்டாளர்கள் கூறுவது என்னவென்றால் மக்களாட்சி அமைப்புகளில் ஆட்சி செய்கின்ற ஒரு சில உயர் குடியினரே கொள்கை முடிவினை எடுக்கின்றார்கள். பல குழுக்களுக்கிடையே நடைபெறும் பகிரங்க போட்டியின் விளைவாய் ஏற்படும் கொள்கை முடிவுகள் அல்ல என்பதை நாம் அறியலாம். ராபர்ட் மைக்கேல் கூற்றுப்படி கீழ்க்கண்டவைகள் உயர்குடி வகுப்பினரை விளக்கும் கொள்கைகள் ஆகும்.
1. மார்கீசியம் குறிப்பிடுகின்ற 'ஆதிக்க வர்க்கம்’ என்பது தவறு, ஏனெனில் தற்கால தொழிற்கூட சமுதாயங்களில் உயர்குடி வகுப்பினரின் தொடர்ச்சியான சுழற்சி முறைதான் வழக்கில் உள்ளது.
2. ஒவ்வொரு சமுதாயத்திலும் சமூக படிநிலைகள் இருப்பதால் வர்க்கம் என்ற பிரிவு முக்கியத்துவம் பெறுகின்றது.
மக்களாட்சி மற்றும் உயர்குடியினர் கோட்பாட்டில் உள்ள அடிப்படை முரண்பாடுகள்.
1 உயர்குடியினர் கோட்பாடு என்பது ஒவ்வொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மை இருப்பதை குறிப்பிடுகின்றது. ஆனால் மக்களாட்சி கோட்பாடு சமுதாயத்தில் சமத்தவம் இருப்பதாகக் கூறுகிறது.
2 உயர் குடியினர் கோட்பாடு என்பது ஒரு சில உயர் குடியினரே பெரும்பான்மையான மக்கள் மீது ஆதிக்கம் செய்வதாகப் பகர்கின்றது. ஆனால் மக்களாட்சி கோட்பாடு என்பது பெரும்பான்மையாளர்களே ஆட்சி செய்கின்றனர் எனக் கருதுகின்றது. ராபர்ட் மைகேல் அதிகார வர்க்க எதேச்சதிகார ஆட்சியைப் பற்றி கூறுகிறார்.
தற்கால மக்கள் நலம் நாடும் அரசுகளில் அதிகார வர்க்கத்தின் ஆட்சி அதிகாரங்கள் வளர்ந்து வருவதாகக் கூறுகின்றார்.
தன்மை மற்றும் மற்றவரை கவருதலின் நன்மைகள்
அரசியல் சமூகவியல் என்பது எங்ங்ணம் மற்றவரை கவருதல், அரசியல் அதிகாரம் மற்றும் அதன் பகிர்வு ஆகியவற்றைப் பற்றி அறிவதாகும். தற்கால சமுதாயத்தில் மற்றவரை எந்தளவுக்கு நாம் கவருகிறோம் என்ற அடிப்படையில் நாம் வளமை பெறுகின்றோம். ஆகவே அதிகாரம் என்பது மற்றவரை கவரும் விதத்தில் தீர்மானிக்கப்படுகிறது. மற்றவரை கவருதல் என்பது ஒரு நபரின் நடத்தையை இயல்பாக கட்டுப்படுத்துவதாகும். இது அவர்கள் விரும்பும் வண்ணமாக இல்லாமல் எதிராகவும் இருக்கலாம். ஹரால்டு லாஸ்வேல் மற்றும் ஆபிரகாம் கப்பலான் மற்றவரை கவருதல் என்ற கருத்தை விளக்க முற்படும் பொழுது ‘கவருகின்ற தன்மையின் அடிப்படையில் அரசியல் தன்மைகள் தீர்மானிக்கப்படுகிறது’ எனக் கூறுகின்றார்கள். மற்றவரின் நடத்தையை பாதிப்பு அடையச் செய்யும் குணாதியசத்தை நாம் கவருதல் எனக் கூறுகிறோம். சில சமயம் மற்றவரை கவரும் தன்மை உச்சநிலையில் இருக்கும். இத்தகைய தருணத்தில் அதிகாரத்தை வைத்திருப்போர் அதிக கவருகின்ற தன்மையை பெற்றிருக்கவேண்டும்.
மூர்க்கதனம்
கவருதல் என்பதற்கான ஈடு கொடுக்கும் தன்மையில் சிறிது குறையும் பொழுது மூர்க்கத்தனத்தோடு கூடிய அதிகாரத்தை நாம் பயன்படுத்துகின்றோம். இதை நாம் மூர்க்கத்தனமான கவருதல் எனக் கூறுகிறோம். அச்சுறுத்துதல் அல்லது கட்டுப்பாட்டுகளை விதித்தல் என்ற விதத்திலான கவருகின்ற தன்மைகளை நாம் பயன்படுத்துகின்றோம். இத்தகைய அச்சுறுத்துதல்கள் பாராட்டுகள் அல்லது கொடுமைப் படுத்துதல் என்பவற்றோடு துணைவரும். தண்டனைகள் என்பது எதிர்மறையான கட்டுபாடுகள் எனவும், பாராட்டுகள் நேர்மறையான கட்டுப்பாடுகள் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மற்றவரை கவரும் தன்மையின் அளவு
மற்றவரின் நடத்தையை தாக்கம் செய்கின்ற வகையில் பயன்படுத்தும் எதிர்மறையான அல்லது நேர்மறையான கட்டுப்பாடுகளை நாம் அதிகாரம் என்ற பொருள் விளக்கத்தை அளிக்கின்றோம்.
அதிகாரம் என்பது தனிநபரின் சொத்து அன்று. அடிப்படையில் அது மற்றவையோடு தொடர்புடையதாகும். மற்றவர்களை தொடர்புபடுத்தியே அதிகாரம் பயன்படுத்தப்படும். ஏனையவரின் நடத்தையை பாதிக்கச் செய்வது அதிகாரம் எனக் கூறுகிறோம். ஒரு சமுதாயத்தில் அதிகாரம் செலுத்துகின்றவர், அதிகாரம் செலுத்தப்படுகின்றவர்கள் என்று உறவுகள் அதிகாரத்திற்கு தொடர்புடையவனவாக உள்ளது. நகரம் மற்றும் கிராம சமுதாயங்களில் இத்தகைய அதிகார உறவுகளை நாம் காணலாம். அரசு மற்றும் அதன் நிறுவனங்களின் அரசியல் அதிகாரம் செயலாக்கப்படுகிறது. அரசின் அதிகாரத்தின் மூலம் அரசியல் தீர்மானிக்கப்படுகிறது. சமுதாயத்தின் பல அடுக்குகளில் காணப்படும் அதிகாரத்தைக் காட்டிலும் எந்த விதத்திலும் அரசின் அதிகாரம் வேறுபட்டது அல்ல. ஆகவே சமுதாய மாற்று காரணிகளின்பார்வையில் அதிகாரம் தீர்மானிக்கப்படுகிறது. சமூக செயல்பாட்டின் அடிப்படையில், அரசியல் அதிகாரம் தீர்மானம் செய்யப்படுகிறது. சமுதாயம் செயல்படும் விதம் மற்றும் அரசியல் அதிகாரங்கள் மாறும் தன்மைபடைத்தது.
ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

ஞாயிறு, 7 ஜூன், 2020

என் வீடு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: காபிக் குவளை மற்றும் உட்புறம்
யாராவது என் வீட்டுக்கு
வர நினைத்தீர்களா- என்
தாழ்பாள் போடாத கதவு
வரவேற்கின்றது
நிதானமாக சிந்தியுங்கள்
நிபந்தனையற்ற
ஒரு ஏகாந்தம்
ஒரு புத்தகம்
ஒரு கதிரை
ஒரு தேனீர்குவளை
மனிதனில் இருந்து
மனிதம் தப்பிக்கொள்ள
பொதுவான நிலமையொன்றில்
தேவையை தீர்மானிக்கின்ற
என் வீட்டு இருக்கை

ஞாயிறு, 31 மே, 2020

நகுலன் கவிதைகள்

நகுலன் கவிதைகள்


nagu8
நகுலன் (இ. மே 172007
சேவ் நகுலன் - பேயோன்
Posted on August 3, 2014
http://www.writerpayon.com/2014/08/03/

நகுலனை விட்டுவிடுங்கள்
அவரெல்லாம் நல்ல கவிஞர்
சிக்கனமாக, அழகாக, மர்மமாக
எழுதுவார் வயதானவர்
உங்களுக்கும் எனக்கும் உண்மையிலேயே
புரிகிறதோ இல்லையோ
தத்துவங்கள் பொதிந்த கவிதைகளவை
புரிந்த வரைகூட
படிக்கும் ஒவ்வொரு கவிதையும்
ஒவ்வொரு வரியும்
சிந்தனைப் போதையேற்றும்
ஆமாம், அவர் தனியாகத்தான் இருந்தார்
தனிமை பற்றி எழுதினார் அழகாக
கருப்புவெள்ளைப் படங்கள் எடுத்து
அவரை அஞ்சலிப் பாப்பாவாக்கி அழகுபார்த்தனர்
நீங்களும் அவர்களில் ஒருவராகாதீர்கள்
நம் சடங்குகளுக்கு அவர் ஆளல்ல
சிலரைப் போலவர் வாட்டசாட்டமாக,
ஐம்பது வயதாக இருந்தால்
இவ்வளவு சீந்துவீர்களா?
இதைக் கடைபிடியுங்களேன்:
நீ ஒருவரை நேசித்தால் அவரை விட்டுவிடு
அவர் உன்னிடம் திரும்பி வந்தால்
அவர் உன்னுடையவர்.
உத்தரவாதமாகச் சொல்கிறேன்
அவர் உங்களிடம் திரும்பி வர மாட்டார்
அவர் அந்த மாதிரி ஆளில்லை
அவர் இன்னும் வாழ வேண்டியிருக்கிறது.
நண்பர்களே, நகுலனை விட்டுவிடுங்கள்
அவருடன் திருமதி சுசீலாவையும்தான்.
நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது.
ஆகவே நகுலனை விட்டுவிடுங்கள்
வேறு எவனாவது கிடைக்காமலா போய்விடுவான்
நன்றாகத் தேடிப்பாருங்கள்
ஆனால் நகுலனை விட்டுவிடுங்கள்.
கூடவே திருமதி சுசீலாவையும்.


வா.மு. கோமு
15 hrs ·

Sunday, ‎December ‎20, ‎2015


சுசீலா நகுலனைப் பார்த்துப் போக
அவர் வீட்டின் கதவைத் தட்டினாள்!
உள்ளே வரலாம் யாராகவிருந்தாலும்
என்றே நகுலனும் குரல் கொடுத்தார்.
உள்ளே வந்த சுசீலா நகுலனை அறைகளுக்குள்
தேடினாள்! -நகுலன் வெளியேறிச் சென்று
ஒரு விரற்கடையளவு நேரமிருக்கலாம்
என்றே எண்ணி திரும்பிவிட எத்தணிக்கையில்
வெளியே கதவு தட்டபட்டது மீண்டும்!
உள்ளே யாரு சுசீலாவா? என்று நவீனன்
குரல் கொடுத்தான்!
யார் நவீனனா..? யாரா இருந்தாலும்
உள்ளே வரலாமென நகுலன் குரல்
கொடுத்தார் உள் அறையிலிருந்து!
நிச்சயமாக எந்தக் கதவும்
எந்த சமயத்திலும் யாருக்கும் திறப்பதேயில்லை!


-(புது எழுத்து மனோன்மணிக்கு!)





நகுலனின் உலகம் - 

குருசு.சாக்ரடீஸ்

http://kurususocrates.blogspot.in/2011/08/blog-post_23.html
நகுலனின் உலகம் நான்கு அறைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கவிதை கதவை திறந்து நகுலனை தேடிக்கொண்டிருந்தபோது அவர் வேறு கதவு வழியே வெளியேறிக்கொண்டிருந்தார். நகுலன் எந்த அறையிலும் இல்லையென்பது கவிதைக்கு ஒருபொழுதும் தெரியபோவதில்லை. நகுலன் அப்பத்தை பிட்டு திராட்சை ரசத்தை பருகத்துவங்கினார் ஆமென்.

நானுமென்னெழுத்தும்   - நகுலன்

கசடதபற மே 1971 - 8வது இதழ்

http://www.navinavirutcham.in/2015/08/1971-8_20.html


 நின் கைவசம்
 என் கைப்பிரதி

 "இதனையெழுது"என்றாய்
 எழுதினேன்.

 "இதனையழி" என்றாய்
 "அழித்தேன்"
 "இதனையிவ் வண்ணமெழுது" என்றாய்
 சொன்னவண்ணமே செய்தேன்.

 இதுவென்னூல்
 இதுவென் பெயர்
 இது வென்னெழுத்து
 விமர்சனமும் விரைவில் வந்தது
 "ஆ என்ன வெழுத்து," என்றாரொருவர்
 "ஆ இதுவன்றோ வெழுத்து" என்றாரொருவர்.

 என்எனழுத்தில் நானில்லை
 என்றாலுமென் பெயருண்டு
 எழுதியெழுதி அழித்தேன்
 அழித்து அழித்து ஆளானேன்.
 விமர்சகரும் சொல்லி விட்டார்
 இல்லா ததையெல்லாம்
 உண்டென்று
 சொல்லி விட்டார்.

 மாமுனி பரமஹம்ஸன்
 அவன் மாபெரும் சீடன்
 சொன்னான்
 "மாயை யென்பது
 மன்பதையனுபவம்"
 மாயையென்னெழுத்து
 மாமாயை
 என் வாழ்வு
 என்றாலுமென்ன
 இது வென்னூல்
 இது வென்பெயர்
 இது வென்னெழுத்து.


கொல்லிப்பாவை 2
வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம் | நேரம்: 12:28 PM | 
நகுலன்

clip_image002
அகலிகை நகைக்க
அருந்ததியும் நின்றிகழ
வருமீரசை ஒருசொல்
நின்நாமம் செய்ய;

வில்லெடுத்து நாண் வளைத்துக்
குறிவீழ்த்தும் முன் கருத்துந்த
கண்ணூடு கண் வளைந்து
உள்ளம் புணர்ந்து உடல் தழுவத்துடித்து
அன்று நின்ற அச்சீதையும்
நின்செயல் கண்டு நெடிது நிற்பாள்.

நின்நாமம் கேட்டு
மாரனும் கை சோர்வான்.
அவன் உயிரனைய ரதிஅவளும்
நின்ற திசயிப்பாள்;

வில்லென உடலும் வளைய
விண்ணென்று நாணையொத்து உள்ளமும்
நெறித்து நிற்க
கண்ணெடுத்து உள்ளம் வளைத்துக்
குறிவீழ்த்த முடியாது நிற்கும் நின்செயல் கண்டு
விண்ணவரும் எட்டிநின்று
எள்ளி நகைப்பர்.

மெய்யின் இருளகல
உயிரின் கள்வரை
விண்ணவர் கோனும்
சேவலெனக் கூவியழைக்க
காவல்நீத்து கடிது சென்று
ஒரு கணம் அமுதம் பருகி
மறுகணம் கல்லென உருவெடுத்த
அகலிகையும் தீதிலள் என்று
கூறியவனும் அறம் வகுத்த அண்ணலே காண்.
ஆனால்
ஆசையகற்றி
வெறுங்கல்லென வறிது நிற்கும்
நின்செயல் புரிவதுமில்லை.

நீதான்
கல்லிலடித்த சிலையாக
கனவில் வடித்த ஓவியமாக
சதையும் குருதியும் சமைத்துயிர்த்த
உயிர்குடிக்க இதழ்துடிக்கும் பாவையாக
வாரி அணைக்க வந்த மரணமாய்
நெடிது நின்றாய்.

ஆனாலும்
அலையாது குலையாது
அலைதள்ளும் நின்குலவும்
வடிவழகு கண்டு
அல்குதலே அதன் வாழ்வெனக் கண்டு
அதனைப் புல்குதலே வாழ்வென வேண்டி
‘சில்’லென்று நின்றேன் நின்முன்.



கொல்லிப்பாவை 3 - நகுலன்

கடல் முனையில் கல்லுருப்பெற்று
கானகத்தில் சிலையாகி
ஆசை தூக்கத் துறக்கத் துறந்து
தெரு நடுவில் தேவன் இணையடி
தன்னறல் கூந்தலால் வருடி
ஏக பத்தினி மிதிலை தேவியாகித் தீக்குளித்து
ஐவர் வரித்த அருங்கனியாகிச்
சபை நடுவில் துயரெய்தி
வீடுவிட்டு வெளிவந்து
கூடுவிட்டு கூடு புகுந்து
கட்டுண்டு கூட்டுண்டு
மகப்பெற்றுச் சகத்தில் வாழ்ந்து
அம்முறையும் தவிர்த்து
வறிது வாடி தனி நொந்து
பலபெற்று நீ என்னருகமர
மறுத்ததும் என்கொல் என்னுள்ளங்
கவர் பிராட்டியே நீ ?

கொல்லிப்பாவை 1 - நகுலன்

திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான்
வில்லெடுத்துக் கணைபூட்டி
நாண் வளைத்துக் குறிவீழ்த்திச்
சௌரியம் காட்டிச் சமர் செய்து
காதல் பெற்றான் ஒருவன்.
ஆனால்
வந்து போகும் அருச்சுனன் நான்
நாக்கடித்து
வாய்ப்பறை கொட்டி
வேதாந்த கயிறு திரித்து
அவள் உருகக் கண்டு
உள்ளம் குலைந்து
உரம் வேண்டி
வந்து போகும் அருச்சுனன் நான்.

.

திரௌபதி அவள்;
நெற்றித் திலகமும்
நெறிமிக்க வாழ்வும்
கைத்திறனும் கலைப்பொலிவும்
மிக விளங்க,
நேர் நோக்கும் நிமிர்நடையும்
பொலிவூட்டக்
கல்வி கற்றுத் தொழில் புரிந்து
காரியத் திறனும் கருத்துறுதியும்
பூண்ட
இந்நங்கை நல்லாள் அருச்சுனன் தன்
அவ நம்பிக்கை உருவறிவாளா ?
அன்று
சுற்றத்தார் முகம் நோக்கி
களம் தனில் கை சோர்ந்தான்.
அதன் முன்னர்
விதிமுன் தலை வணங்கி
உருமாறி பேடியானான் அவன்.
என்றாலும்
கண்ணன் கை கொடுக்க
உள்நின்ற சௌகரியம் எடுத்துதவ
முன்னோக்கித் தருக்குடன் திரிந்தான் அவன்.
.

திரௌபதி அவள் ;
தூய்மையின் ஊற்று.
பலர் கண்டும் உருவ அமைதி பெற்று
பேடியெனச் செயலிழந்து
தன்னைக் கண்டு மயங்கித் திரிவோனை
“வாழ்க்கைப் பாடி வீடு சென்று
வாகை சூடி வா
காத்திருப்பேன்” என
மௌனத்தில் ஞானம் பேசி
முறுவல் பூத்துக் கற்பின் வைரப்படை
தாங்கி நிற்கும் கொல்லிப் பாவை அவள்.

.

திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான்.

         - எழுத்து, ஏப்ரல் 1961.


கொல்லிப்பாவை - 5   -  நகுலன்

நீ
என் வாழ்வைக்
கனவாக்கி விட்டாய்;
“கனவு
நினைவின் நிழல்”;
மனதை வசீகரிக்கும்
இதன்
“விருட்டென்ற நடை கண்டு
என் மனம் மிரள்கிறது”
தேதி 20
அதற்குள் பை,
ஓட்டை
நினைவு
பிய்த்துப் பிடுங்குகிறது.
பகல்
குற்றுயிராகிக் கிடக்கும்
அந்திப் பொழுது;
ஜுரவேகத்தில்
பிரக்ஞை தடுமாறுகிறது
பிராந்தி கௌவிப் பிடிக்கும் நேரம்
வரும்
மண்டைக் கனம்
மனம்
அட்டையாகச்
சுற்றிச் சுருண்டு
அசைவற்றுக் கிடக்கும்
முடக்கு வாதம்
நொண்டிப் போச்சு.
புலன்கள் மரத்துக்
கட்டையாகப் போகின்றன.
துயில் சுருட்டும் கண்கள்.
உள்ளிருக்கும் இருட்டில்
நிழல் போன்ற
நினைவின் நச்சரிப்பு;
தெருவில் காலிப்பையன்கள்
யாரையோ பார்த்துச் சிரிக்கிறார்கள்.
ஏன் ?
யாரைப் பார்த்து ?
ஒரு டயரிக் குறிப்பு.
எங்கும்
“வெளிப்பூச்சின்
ஏகாதி பத்தியம்”
பூச்சுக் கலைந்து விட்டால்
சூன்யம் பல்லிளிக்கிறது.
திரும்பிப் பார்க்காத
உன்னைப் பின்பற்றி
வாழ்க்கையைக்
கனவாக்கி விட்டேன்.
நினைவின் ஸ்பரிசம்
சுளீ ரென்று தைக்கிறது.
நீ என்னதான்
என் எனக்கு
உள்ளத்தைக் கவர்ந்தாலும்
“உன் தத்ரூப பிரதிபலிப்பு
ஆக
அப்பா அம்மா
சொன்னதைக் கேட்கும்
நல்ல பிள்ளையா என்ன நான் ? ”
என்ற
வினாவின் கொக்கி உருவைக்
கண்டதும்
இந்த நிகழும் நிமிஷங் கூட
தெருவின் காலிப் பையன்கள்
போல்
சீட்டியடித்துச் சிரிக்கிறது;
எல்லாம்
உடைந்த
கண்ணாடிச் சில்லின்
ஒளி வீச்சு

-எழுத்து, ஜனவரி 66

எல்லாம் என்பதுபற்றி ஒரு கவிதை - நகுலன்

வந்தது Zack
எப்போதும் போல்
துயிலிலிருந்த எழுந்தது போன்ற
ஒரு சோர்வு
அவன் முகத்தில்
எப்போதும் அப்படித்தான்
தோல் பையைத் திறந்து
குப்பியை எடுத்ததும்
நான் உள் சென்று
ஐஸ் கொண்டு
வந்ததும்
சரியாகவே இருந்தது
அவன்
ஓவியங்களை நான்
பார்த்திருக்கிறேன்
அவைகளும்
ஒரு குழம்பும் மயக்க நிலையைத்
தான் தெரிவித்தன
வண்ணக் கீறல்கள்
இருட் பிழம்புகள்
தாரளமாகவே
இருவரும் குடித்துவிட்டு
அடிமட்டத்தை
அணுகிகொண்டிருந்தோம்
அப்போது
அவன் சொன்னதும் அதை
நான் கேட்டதும்
இன்னும் என் பிரக்ஞையில்
சுழன்றுகொண்டிருக்கிறது
“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை”
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.

ஒரு கவிதை - நகுலன்

சின்னஞ்சிறு
சிட்டொன்று
சென்று திரிந்து
‘விர்’ரென்று பறந்து வந்து
அது திரிந்து பறந்ததும்
வந்து இருந்ததும்
மனதில் மறைய
இலையசையும்
கிளையொன்றில்
வந்து அமரக்கண்டு வியப்பெயதி
கண் தவற
கருத்து உயர
கண்டு நின்ற
என்னைக் கண்டு
“ இதுவா கவிதை ?
கவிதை இதுவா ? ”
என்று சிரித்தது
ஒரு பூதம்.

-ஞானரதம், 1972

வழக்கம்போல்

வழக்கம் போல் வெளி வாசல்
திண்ணையில் சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கின்றான்.
   அந்தி மயங்கும் வேளை--_ -
அதற்கு முன்: ஒளியும் நிழலும்
பக்கத்தில் பக்கத்தில் காணும்
போது அவனை ஒரு விசித்திர
உணர்ச்சி சூழ்கிறது, வெயிலில்
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும் பொழுது கலையின்
வசீகர_சக்தி அவனை ஆட்கொள்
கிறது.
      வெயில் மறைகிறது.
நிழல் மெல்ல மெல்ல இல்லாமல்
ஆகும் நேரம் நெருங்குகிறது.
இலைகளும் மரங்களும்
மங்கலாக மயங்கிக் கிடக்கும்
தோற்றம். தென்னை மரத்தின்
உச்சியில் ஒரு ஒற்றைக்
காகம் மெல்லக் கா கா என்று
குரல் கொடுக்கிறது. கையெழுத்து
மறையும் வேளை என்று
சொல்கிறார்கள். பிரமலிபியும்
என்று கூடச் சொல்லத் தோன்
றுகிறது. 'பட்'டென்று நிழல்கூட
இல்லாமல் போகிறது. இருள்
எங்கும் 'கப்'பென்று பரவுகிறது.
மரம், தந்திக்கம்பம், வீடு -
எல்லாமே மறைகின்றன.
எங்கும் 'திட்டு' 'திட்டாக'
இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது.



தன் மிதப்பு


யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலை
சீவிக் கொண்டிருந்தான்.
அவனைப் போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது - அது
கூடத் தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் - இந்த
நிலைமையையும் தன்னு
டைய வெளித் தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்.


ஸ்டேஷன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
   அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
          என்பதை;
ஸ்டேஷன் இருந்தது,
                என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்தும்
அவனால் அவனை
   விடுவித்துக்கொள்ள
   முடியவில்லை
   ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது,
* * *
வேறொரு நண்பனைப் பார்க்கச்
   சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
   பழக்கமாகி விட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?”
   என்று.

கடைசிக்கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
   எல்லாம்.

Thanks to
http://jyovramsundar.blogspot.com/2009/06/blog-post_26.html 

நகுலன் கவிதைகள் :

எல்லைகள்

அவன் எல்லைகளைக் கடந்து கொண்டி
ருந்தான். ஒரு காலைப் பின் வைத்து
ஒரு காலை முன் வைத்து நகர்வதில்
தான் நடை சாத்தியமாகிறது. இரு
காலையும் ஒரு சேர வைத்து நடந்தால்
தடாலென்று விழத்தான் வேண்டும்.
எல்லை தாண்டாமல் நின்றால் ”அவன்
அதுவாகும் விந்தை.” நெளிந்து
நெளிந்து தன் வளையமாகத் தன்
னையே சுற்றிக் கொண்டு கடைசியில்
தலையும் வாலும் ஒன்று சேர
வெறும் சுன்னமாகச் சுருண்டு
கிடக்கும் நிலை

அவன் எல்லைகளைக் கடந்து
கொண்டிருந்தான். ஒன்றிலும்
நிச்சயமில்லாத மனிதர்கள், அல்குலின்
அசைவுகள், “சுபாவஹத்தியை”
விழையும் மனதின் பரபரப்பைத்
தூண்டிவிடும் ஸ்தாபனங்கள்
சில்லறை சில்லறையாகத் தன்
னை இழப்பதால் வந்து சேரும்
காப்புகள். காலக்கறையான்
தின்று கொண்டிருக்கும் மேதை
களின் சிற்ப - சிதிலங்கள், இறந்த
வர்களின் சாந்நித்தியம் இருப்ப
வர்களின் மிரட்டல் - இவை
யெல்லாம் பின்தங்க அவன்
எல்லைகளைக் கடந்து கொண்
டிருந்தான்

அவன் பயணம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான்
இருந்தது. நடுவில் யாரோ
ஒருவன் அவனை நோக்கி
“நீங்கள்?” என்று உசாவ
அவனுக்கு அவன் பெயர்
கூட மறந்துவிட்டது.

அலைகள்

நேற்று ஒரு கனவு
முதல் பேற்றில்
சுசீலாவின்
கர்ப்பம் அலசிவிட்டதாக.
இந்த மனதை
வைத்துக் கொண்டு
ஒன்றும் செய்ய முடியாது.

வண்ணாத்திப் பூச்சிகள்

உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி.
கேசவ மாதவன் ஊரில் இல்லை. சிவனைப்
பற்றித் தகவல் கிடைக்கவில்லை. நவீனன்
விருப்பப்படி அவன் இறந்த பிறகு அவன்
பிரேதத்தை அவன் உற்ற நண்பர்கள்
நீளமாக ஒரு குழி வெட்டி அவனை
அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து
அடக்கம் செய்துவிட்டார்கள். எங்கும்
அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்
வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து
கொண்டிருக்கின்றன.


சுருதி

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு


சந்தை

செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்”


வரையறை

தலையும் வாலும்
இல்லாத பிழைப்பு
என்று
சொல்லிச் சிரித்தார்
சச்சிதானந்தம் பிள்ளை
கேட்டு நின்றவனுக்கு
ஒன்றும் புரியவில்லை


இவைகள் (2)

இந்திர கோபம்
இது ஒரு பூச்சியின் பெயர்
உக்கிரப் பெருவழுதி
இது ஒரு அரசன் பெயர்
யோக நித்திரை
இது ஒரு தத்துவச் சரடு


கனல் (2)

ஒரு
வரிப்புலி
கனல்
உமிழும்
அதன் கண்கள்
என்
உன்மத்த வேகம்


வேறு

உலகச் சந்தையில்
ஒரு மனிதன் போனால்
இன்னொருவன்
உனக்கென்று
ஒரு லாப நஷ்டக்
கணக்கிருந்தால்
விஷயம் வேறு

நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?
 


நான்(2)


நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன்போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.


நான் (2)

நேற்றுப்
பிற்பகல்
4.30
சுசீலா
வந்திருந்தாள்
கறுப்புப்
புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதே
விந்தை புன்முறுவல்
உன் கண் காண
வந்திருக்கிறேன்
போதுமா
என்று சொல்லி
விட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன


கோட் ஸ்டாண்ட் கவிதைகள் - நகுலன்
http://naveenakavithai.blogspot.in/2012/09/blog-post_8914.html

1.
அலுப்பு
            அவனுக்கு
            வாழ்க்கை அலுத்துவிட்டது
            அவன் 59 வயதில்
            அப்படியா என்று
            கேட்காதீர்கள்.
மறுபடியும் அறைக்குள் செல்கிறான்
            இப்பொழுது இங்கு
                           யாருமில்லை
            அவன் கூட
            அவள்
யார் என்று கேட்காதீர்கள்
உங்கள் துருவிப் பார்க்கும்
கண்களுக்குச் சற்று ஓய்வு
கொடுங்கள்
உங்களுக்கு இதைப் பற்றி
எல்லாம் ஒன்றும் தெரியாது
அக்கறையுமில்லை.
கை எழுதி அலுத்து விட்டது.
கண் பார்த்து
மூளை சிந்தித்து
மனம் அதையும்  இதையும்
            நினைத்து நினைத்து
தேகத்தையே உரித்து
கோட்  ஸ்டான்டில்
தொங்கவிடுகிறான்
அவனை
அது பரிதாபமாகப் பார்க்கிறது.
“நீ என்னை இப்படித்
தூக்கி எறியலாமா?
என்று.
அவன் சொல்கிறான்:
“இல்லை நீ அங்கேயே
தொங்கிக் கொண்டிரு;
உன்னைப் பிடித்துக் கொண்டு
நான் தொங்குவதை விட
நீ தனியாகத் தொங்கிக்
கொண்டிருப்பதுதான்
ரண்டு பேருக்கும் நல்லது
என்று,
சொல்லி விட்டு
அறைக்கதவைச் சாத்திவிட்டு
வெளியே செல்கிறான்.



2.


அவனும் அவன்
சிநேகிதனும்
சண்டைப் போட்டுக் கொண்டு
சமாதானமும்
அடைந்துவிட்டார்கள்.
அவன் இவன் வார்த்தைகளைப்
பொறுக்கமுடியாமல்
கையிலிருந்த புஸ்தகத்தை
நேர் பகுதியாக நாலைந்து
தடவை
கிழித்து எறிந்தான்.
கோட்  ஸ்டான்டில்
தொங்கிக் கொண்டிருந்த
உடலைப் போல்
அந்தப் புஸ்தகம் அவனைக்
கேட்டது.
“நீங்கள் இருவரும் படித்தவர்
கள் இல்லையா?
உங்களுக்குள் சண்டை
ஏற்பட்டால்
ஏன்,
நண்பா, என்னைக் கிழித்து
எறிய வேண்டும்?” 
சொன்னான்
“படித்தவன்
என்றதால்
என்னைக் கிழித்து எறிவதற்குப்
பதில்
உன்னைக் கிழித்தெறிந்தான்
மேஜையில் கிடந்த
புத்தகம்
அவர்களை என்னவோ
மாதிரிப்
பார்த்துக் கொண்டிருந்தது.

3.

அன்றிரவு அவன்
ஒரு கனாக் கண்டான்
வெகு நேரம்
கோட்  ஸ்டான்டில் தொங்கிக்
கொண்டிருக்கும் உடலையே
பார்த்துக் கொண்டு நின்றான்
அதைக் கழற்றிக்
கோட்  ஸ்டான்டில்
தொங்கவிட்டு விட்டான்
என்பது என்னவோ சரி.
ஆனால்
அவன் இப்பொழுதெல்லாம்
காணாமல் போன
தன் நிழலையே
தேடிக்கொண்டிருக்கின்றான்
நிழல்கள் மாத்திரம்
எங்குமே இருப்பதில்லை;
இங்கு கூட என்று இல்லை;
அங்கும்



4.


வேறொரு நண்பனைப் பார்க்கச்
      சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
      பழக்கமாகிவிட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு
திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?
      என்று.



5.


வெளி வாசல் திண்ணையில்
அவன்
ஒரு சூரல் நாற்காலி
அருகில்
ஒரு சூரல் வட்ட மேஜை
அதன் மீது
புஸ்தகம் நோட் புஸ்தகம்
பேனா, பாட், அகராதி
வெற்றிலை, பாக்கு புகையிலை
சுண்ணாம்பு வகையறாக்கள்
எதிரில் சிமிண்ட் திட்டையில்
ஒரு செம்புத் தண்ணீர்
கண் எதிரில்
வெளி முற்றம்
மரம் செடி கொடி
மெல்ல வந்து பறந்து
செல்லும் பறவைகள்
எல்லாமே மங்கலாகத்
தான் தெரிந்தன
வாய் வெற்றிலை பாக்குக்குப்
பரபரத்தது
கண் தெளிவான பார்வைக்கு
மனம் மெல்லத் துடித்துக்
கொண்டிருந்தது
துடிப்பின் கதி அதிகரிக்க....
அப்பொழுது தான்
ஏதாவது செய்ய முடியும்
ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை
பின்னால் அடுத்த அறையி
      லிருந்து
ஒரு குரல் ஒலித்தது
என்னைத் தூக்கி எறிந்து விட்டாய்
இப்பொழுது
தெரிகிறதா?
என்று.

6.

வெளி வாசல் திண்ணையில்
சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருந்தான்
இருட்டிக் கொண்டு வருகிறது
மங்கல் வெளிச்சத்தில்
எதிரில் இருக்கும்
அரளிச் செடியில்
இந்த அரை இருட்டிலும்
மஞ்சள் மஞ்சளாகப் பூக்கள்
தெரிகின்றன
தெருவில்
போகும் உருவங்கள் தெரியாவிட்டாலும்
குரல்கள் ஒலிக்கின்றன
இதிலும் ஒரு நிம்மதி
முழு இருட்டில் இருக்கப் பயம்
மீண்டும் அடுத்த அறைக்குள்
செல்ல ஒரு பரபரப்பு
எலெக்ட்ரிக் லைட்
மேஜை  நாற்காலி
புஸ்தகங்கள்
அம்மா அப்பா சகோதரி
குப்பிகள்
வெற்றிலைப் பாக்கு வகையறாக்கள்
ரேடியோ
இப்படியாக
கோட்-ஸ்டான்ட் கேட்கிறது?
“இப்பொழுது தெரிகிறதா?



7.


நள்ளிரவில்
தனியாக
சூரல் நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு
எழுதிக் கொண்டிருக்கின்
                  றான்
அருகில்
தரையில்
ஒரு பாம்பு
சுருண்டு கிடக்கிறது
காலம் கண்ணாடியாகக் கரைகிறது
ஒரு நதியாக ஒரு ஜலப்ரள
      யமாகச்
சுழித்துச் செல்லுகிறது
விறைத்த கண்களுடன்
அதன் மீது செத்த மீன்கள்
      மிதந்து செல்கின்றன
எழுந்து கோட்-ஸ்டான்டில்
தொங்கிக் கொண்டிருந்த
சவுக்கத்தை எடுத்து
ஒரே தெப்பமாக
நனைந்த
தலையைத் துடைத்துக்
            கொள்கிறான்



8.

அம்மாவுக்கு
      எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
      இன்னும் அருகில் வந்து
      உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்கார்கிறான்
அவன் முகத்தைக் கையை
      கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக் குரல்
      ஒலிக்கிறது
“நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?



9.


அன்று அவனுக்கு
ஒன்றுமே புரியவில்லை
வெளி வாசலிலா
அல்லது உள் அறையிலா
பகலா இரவா
நேற்றா இன்றா
வீடா கல்லூரியா
அம்மா அவனைத் தொட்டுத்
      தொட்டு
உணர்ந்தது போல
அவனுக்கும் தன்னைத்
தொட்டுத் தொட்டுத்
      தன்னையே உணர
வேண்டுமென்ற
ஒரு கட்டுக் கடங்காத
      ஆவல்
ஆனால் முடியவில்லை
அறை முழுதும் ஒரு
      லேசான நெடி;
எங்கிருந்து?
தரையில்
பேகான் தின்றுவிட்டுச்
செத்துக் கிடக்கும் கரப்புகள்
தரையில்
ஏதோ ஒரு ஜந்து
விரைந்து செல்லும்
      சப்தம்
எல்லாம் ஒரே இருட்டாக
      இருந்தது
அவனுக்கு இப்பொழுதும்
கோட்-ஸ்டான்ட்
ஞாபகம் வந்தது
ஆனால் அவன் அது
      இருக்கும்
பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.


10.


அந்த அறையில் அவன்
      இல்லை
கோட்-ஸ்டான்ட் இருந்தது
அங்கு நால்வர் இருந்தனர்
அவர்கள்
புது-க்-கவிதையைப் பற்றி
அ-நாவலைப் பற்றி
அதைப் பற்றி
இதைப் பற்றி
புதிய முயற்சிகள் பற்றி
இப்படியாக இப்படியாக
என்னவெல்லாமோ
எதைப் பற்றியெல்லாமோ
எப்படியெல்லாமோ
பேசிக் கொண்டிருந்தார்கள்
கோட்-ஸ்டான்ட்
அவர்களைப் பார்த்துக்
கொண்டிருந்தது

நினைவு ஊர்ந்து
செல்கிறது
பார்க்கப் பயமாக
இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும்
முடியவில்லை
நகுலன்

இரண்டு மூன்று வரிக் கவிதைகள் :

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?
அதுவும் உன் கைப்பாவை

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்


கடைசியாக....

மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை
மூலவராக நினைத்து
எவ்வளவு ஏமாற்றங்கள்

29.3.16



நகுலன் கவிதைகளை வாசிக்கலாமா?

அழகியசிங்கர்






எந்தச் சிறு பத்திரிகை ஆகட்டும் நகுலன் கவிதை இல்லாமல் இருக்காது. நகுலன் ஏற்கனவே கவிதைகளை எழுதி வைத்திருப்பார். சிறுபததிரிகைக்காரர்கள் எல்லோரும் அவர்களுடைய சிறுபத்திரிகைகளை நகுலனுக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்.  பின் அவர் எழுதிய கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்புவார்.  கூடவே தபால் தலைகளையும் சேர்த்து அனுப்புவார்.  ஒரு வார்த்தை எழுதுவார்.  கவிதைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தயவுவெய்து திருப்பி அனுப்பி விடுங்கள் என்று.  யாரும் அவர் கவிதைகளை திருப்பி அனுப்ப மாட்டார்கள்.  விருட்சம் இதழிற்கு ஒரு முறை அவர் எழுதிய கவிதையைப் பிரசுரம் செய்தேன்.  உடனே ஒரு படிம கவிதை எழுதுபவர் என்னிடம் சண்டைக்கே வந்து விட்டார்.  பின் அவர் எழுதிய அதிரடி கவிதையில் என்னையும் நகுலனையும் திட்டி ஒரு கவிதை எழுதி விட்டார்.  

மீட்சி 27 ல் வந்த ஐந்து கவிதைகள் என்ற நகுலன் கவிதைகளை நாங்கள் நடேசன் பூங்காவில் வாசித்தோம்.  அவற்றைக் கேட்கும்போது ஒரே சிரிப்பு. இதோ இங்கேயும் அவற்றை உங்களுக்கு படிக்க அளிக்கிறேன்.  நீங்களும் சிரிப்பீர்கள்.

ஐந்து கவிதைகள் 

'நகுலன்'
வால்ட் விட்மன் :
அவன் "ஆத்ம ஸ்துதி"
என்ற கவிதைத் தொடரின்
கடைசி வரி
எங்கேயோ
நான் உனக்காகக்
காத்துக்  கொண்டிருக்கிறேன்                     ******

வந்தவன் கேட்டான்
"என்னைத் தெரியுமா?"
"தெரியவில்லையே"
என்றேன்.
"உன்னைத் தெரியுமா?"
என்று கேட்டான்
"தெரியவில்லையே"
என்றேன்.
"பின் என்னதான் தெரியும்?"
என்றான்
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன். *********


அவன்
செத்துச் சில்லிட்டு
நாட்கள்
கடந்து விட்டாலும்
ஒருவரும்
ஒருவரிடமிருந்தும்
ஒன்றும்
தெரிந்து கொள்வதில்லை
என்ற நிலையில்

அவன் சாவு
இன்றும் இவனை
என்னவோ செய்கிறது.
*********

இந்த
ஊரில்
எல்லாமே
தலைகீழாகத்
தொங்குகிறது
மனித உடல்களில்
வீடுகள்
முளைத்திருக்கின்றன
இவர்களில் பலர்
எப்பொழுதுமே
சிடுசிடுத்த
முகங்களுடனேயே
காணப்படுகிறார்கள்
எங்கேயோ
யாரோ போவது
மாதிரி தோன்றுகிறது
உற்றுப் பார்த்தால்
யாருமில்லை ******

சென்ற இடத்தில்
தெரியாமல்
"ராயல்டி"
என்று
கேட்டு விட்டேன்
அவருக்குப்
பிரமாதமாகக்
கோபம் வந்துவிட்டது
"போட்டது
கை நஷ்டம்
ராயல்டி வேறு"
என்று
உரக்கக் கத்தினார்
நான் பேசாமல்
திரும்பி விட்டேன்

அறையில்
சுசீலா
உட்கார்ந்திருந்தாள்
நடந்ததைச்
சொன்னேன்
"உனக்கு உன் வழியில்
எழுதத்தான் தெரியும்"
"பின்ý"
"வாசகர்கள்
எதை வாசிக்கிறார்களோ
அதை
அவர் விற்கிறார்
அவர்கள் வாசிப்பது போல்
இவர் விற்பது போல்
நீ எழுத வேண்டும்"

நான் பேசவில்லை
மீண்டும்
சொன்னாள்
உனக்குச் சாகத்தான்
தெரியும்
நீ என்ன சொல்வாய்
என்று எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும்
இப்படிச்
செத்துக் கொண்டிருக்க வேண்டும்
என்பதுதான்
என் விருப்பமும்
என்றாள்

பிறகு
அவள்
ஜோல்னாப் பையைத்
திறந்து
இந்தா
வாங்கிக் கொள்
உனக்கு
என்றுதான்
கொண்டு வந்திருக்கிறேன்
என்று
ஒரு குப்பி கான்யாக்கும்
ஒரு பாக்கெட்
'ஸலம் ஸீகரெட்டும்
கொடுத்துவிட்டு
அடுத்த சனிக்கிழமை
மறுபடியும் வருகிறேன்
என்று
சொல்லிச்சென்றாள்

எனக்குள்
அவர் கோபம் அவருக்கு
சுசீலா
இருக்கின்ற வரையில்
எதுவும் சரியாகிவிடும்
என்று
என்னை நானே
சமாளித்துக் கொண்டேன்.

நகுலன் கவிதைகள் - விகடன் (Nagulan Kavithaigal)

‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’
தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.
தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மெளனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.
நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!

மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!

வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?

ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மெளனம்; மகா மெளனம்!

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!

வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!



http://www.vikatan.com/av/2007/jan/03012007/av0901.asp