திங்கள், 20 அக்டோபர், 2014
ஏற்கமறுக்கும்பயணம்
இரத்த கறை படிந்த
நினைவுகளைமறைத்து
கருப்பு கம்பளத்தால் போர்த்த
சாலையில் மேல் ஏக்கத்துடன்
பயணிக்கின்றேன் !
திரும்பிய திசையெல்லாம்
திட்டுதிட்டாய் வலிகளின் ஞாபகக் கறை ... !
நான் செவிக்கும் இசையெல்லாம் கேட்கிறது
தமிழ் இனத்தின் வறுமை குரலாய் ... !
இதயம் துடிக்க மறுத்தும் ..
கண்ணீர்தீர்ந்து இரத்தம் கசிந்தும் !
வாழவேண்டும் என்று ...
யசிக்கின்ரர்கள்இன்னும் சில காலம் .. !
எம் இனம் எம் மக்கள் எம் மொழி .
நினைவுகளைமறைத்து
கருப்பு கம்பளத்தால் போர்த்த
சாலையில் மேல் ஏக்கத்துடன்
பயணிக்கின்றேன் !
திரும்பிய திசையெல்லாம்
திட்டுதிட்டாய் வலிகளின் ஞாபகக் கறை ... !
நான் செவிக்கும் இசையெல்லாம் கேட்கிறது
தமிழ் இனத்தின் வறுமை குரலாய் ... !
இதயம் துடிக்க மறுத்தும் ..
கண்ணீர்தீர்ந்து இரத்தம் கசிந்தும் !
வாழவேண்டும் என்று ...
யசிக்கின்ரர்கள்இன்னும் சில காலம் .. !
எம் இனம் எம் மக்கள் எம் மொழி .
இளையராஜா பிரிந்த பின் வைரமுத்து எழுதிய கவிதை
இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.
மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்
நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.
திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.
பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.
நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.
ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே
நேசிக்கிறேன்.
நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.
என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.
அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.
ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.
என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.
நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.
வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.
நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.
சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.
நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.
உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை
நினைத்தேன்.
‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே
புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.
அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.
எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று நினைக்கிறேன்.
பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.
உன் அறிக்கைதான்.
ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.
படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.
உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!
உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!
காரணமே இல்லையே.
இது இருதயத்திற்கு ஆகாதே.
நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.
ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.
இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.
நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!
இப்போது சொல்கிறேன்.
உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.
ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.
உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.
உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.
நான் கொதித்தேன்.
"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்
சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.
மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.
நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.
இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.
நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?
‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ
துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.
மழை வந்தது.
நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.
அப்போது சேர்ந்து விட்டோம்.
ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இப்போது முடியுமா?
இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?
செவ்வாய், 29 ஜூலை, 2014
ஞாயிறு, 15 ஜூன், 2014
வியாழன், 29 மே, 2014
சனி, 5 ஏப்ரல், 2014
உலகின் மிகப்பெரிய கோயிலான அங்கோர் வாட் பற்றிய எனது பார்வை
தமிழர்களால் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என்றும் இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மத கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும் அதன் பெருமைகள் பற்றியும் சிறிது வாசித்திருந்தேன். ஆவல் மேலிட அதனை பற்றி தகவல் சேகரித்து எழுதலாம் ஒரு பதிவாய் என்று தேட வெளிக்கிட்டால் சுவாரசியமான சில செய்திகளும் கிடைத்தன. இவற்றை எல்லாம் சேர்த்து தொகுத்து எழுதுவதை விட அவற்றை அவ்வாறே சுவாரசியம் குன்றாமல் பதிவிட்டால் வாசிப்போருக்கு சிறப்பாக இருக்கும் என்பதால் தேடலின் முக்கியமான சிலவற்றை தருகிறேன். சில காலச்சுவட்டில் வெளிவந்தவை. காலச்சுவடு வாசகர்கள் ஏலவே வாசித்திருக்கக்கூடும். ஆனால் காலச்சுவடு என்றாலே என்னவென்று தெரிந்தவர்களை விட தெரியாதவர்களே அதிகம் என்பதால் இப்பதிவு அங்கோர் கோயிலின் பெருமைகளை வாசித்தறிய, பகிர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்
இங்கு பாழ்பட்ட விஷ்ணு சிலைக்கு மாமிச உணவுகளும்
வாழைப்பழம் பூ வைத்தும் ஒரு சில இடங்களில் பௌத்தர்கள் ஊதுபத்திகளை
வைத்துச் சிறிய ஆராதனைகள் புரிவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. கோயில்கள்
முற்றாகவே சுற்றுலா இடங்களாக மாறிவிட்டன. சாலைகள் எழில் மிகுந்த கானகங்களினூடே
செல்வதால் பயணிகள் பலரும் விரும்பி சைக்கிள்களில் செல்கிறார்கள். இவற்றினூடே
கோயில்களைப் புனருத்தாரணம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. யுனெஸ்கோ
வேர்ல்ட் ஹெரிடேஜ் சென்டரின் மேற்பார்வையில் அவை செய்யப்படுகின்றனநடைபெறுகின்றன.

பல இடங்களில் பல நூறு வருடங்களாகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள மரங்கள் கோயில்களை மலைப்பாம்புகள் போன்று பெரும் வடங்களாக நொறுக்கி வளைத்துள்ளன. காலமும் கலையும் ஒன்றாகக் கட்டுண்டு கிடப்பதுபோல் அவை ஒருவித அசுர அழகைத் தம்மகத்தே கொண்டுள்ளன. புனருத்தாரணப் பணிகளில் பல நாடுகளும் பங்கேற்றுள்ளன. அவற்றில் ஈடுபட கெமர் கைவினைக் கலைஞர்கள் தயார்செய்யப்படுகின்றனர்.


ஜெயவர்மன் VII எனும் அரசன் இந்து மதத்தில் இருந்து மாறிப் போய் புத்த மதத்தில் சேர்ந்தான். இது நடந்தது 1181ஆம் ஆண்டு. இந்த அரசன் தான் மஹாயனா புத்த மதத்தைக் கொண்டு வந்தவர். இவர் வருவதற்கு முன் Cham எனும் இனத்தவர் கம்போடியாவைக் கொஞ்ச காலம் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பாயோன் புத்த ஆலயங்களைக் கட்டியவர் ஜெயவர்மன் VII தான். அவர் இறந்த பிறகுஇந்திரவர்மன் II எனும் அரசர் வந்தார். இவரும் நிறைய ஆலயங்கள் என்றும் கோட்டைகள் என்றும் கட்டினார். அதன் பின்னர் வந்தது ஜெயவர்மன் VIII என்பவர் வந்தார். இவர் கம்போடியாவை புத்த மதத்திலிருந்து மறுபடியும் இந்து வேதாதங்களுக்குக் கொண்டு வந்தார். இவர்தான் அங்கோர் சாம்ராஜ்யத்தின் ஆகக் கடைசி அரசர்.
கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென் கிழக்கு ஆசியா முழுவதும் இந்து மதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்திய கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக்கி ஆளத் தொடங்கினான். அவன் பெயர் இரண்டாம் ஜெயவர்மன். கெமர் கலாச்சாரம் அவனிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கலாச்சாரம் அது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட கோயில்தான் அங்கோர் வாட். இது மிகப் பெரும் இந்துக் கோயில் மட்டும் அல்ல உலகின் மிகப் பெரிய கோயிலும்கூட. இருநூறு ஹெக்டர் நிலத்தில் மேற்குத் திசை நோக்கிய இக் கோயில் விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு அடுத்தபடியாக அதிகமான வழிபாட்டிற்குரியவர்களாக விஷ்ணுவும் புத்தரும் இருந்துள்ளனர்.
‘அங்கோர்’ என்கிற சொல் ‘நகர்’ என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக்
கொள்ளப்படுகிறது. ‘வாட்’ என்றால் கோயில். ‘அங்கோர் வாட்’ என்பது நகரக் கோயில்.
கோயிலைச் சுற்றிலும்
நம் நாட்டு அரண்மனைக் கோட்டைகளைச் சுற்றியுள்ளதுபோல் அகழி உள்ளது. வெளிப்
பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயில் உயர்ந்த கட்டடமாக எழுப்பப்பட்டுள்ளது.
கோயிலை மூன்று அடுக்குகளாகப் பார்க்க முடிகிறது. முதல் அடுக்கில் புடைத்த சுவர்
சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இரண்டாம் அடுக்கில் நான்கு
திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் (கேணி )கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இறங்கிக் குளிப்பதற்கேற்பப் படிகள் உள்ளன. புத்தர் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன. அங்கிருந்து இரண்டாம் அடுக்கிற்குச் செல்ல மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கு பெரிய தளப்பரப்புடையதாக அதற்கு மேலுள்ள மூன்றாம் அடுக்கிற்கான பிரகாரமாக அமைந்துள்ளது. மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.
படிகள் மிகவும் செங்குத்தாகவும் குறுகலாகவும் இருப்பதால் பல சமயங்களில் அவற்றின் மீது ஏறியவர்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். சறுக்கி
விபத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். பொதுவாக அங்கோர் கோயில்களில்ராமாயண, மகாபாரதக் காட்சிகள் காணப்படுகின்றன
அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்தப் பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன.
அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்தப் பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன.
அங்கோர் வாட் கோயிலை இரண்டாம் சூர்யவர்மன் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. எட்டாம் ஜெயவர்மன் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் அது நிறைவுசெய்யப்பட்டது. இவ்வாறே பல கோயில்களும் நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டுள்ளன. Porul fe , mannarkalin alternativet er ponravarraip poruttuk kattatap panikalil viraivu , tamatankal ventum erpattirukka. சொல்லப்போனால் எல்லாக் கோயில்களுமே முடிக்கப்படாதவையாக இருப்பதாகக் கட்டடக்கலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
அங்கோர் கோயில்களில் இப்போது வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை.

பல இடங்களில் பல நூறு வருடங்களாகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள மரங்கள் கோயில்களை மலைப்பாம்புகள் போன்று பெரும் வடங்களாக நொறுக்கி வளைத்துள்ளன. காலமும் கலையும் ஒன்றாகக் கட்டுண்டு கிடப்பதுபோல் அவை ஒருவித அசுர அழகைத் தம்மகத்தே கொண்டுள்ளன. புனருத்தாரணப் பணிகளில் பல நாடுகளும் பங்கேற்றுள்ளன. அவற்றில் ஈடுபட கெமர் கைவினைக் கலைஞர்கள் தயார்செய்யப்படுகின்றனர்.
அங்கோர் கோயில்களில் சிவன், விஷ்ணு, புத்தர் சிலைகள் ஏராளம். அதேபோல் அப்சரஸ் தேவதைகள் எல்லா இடங்களிலும் தென்படுகின்றனர். பற்கள் தெரியச் சிரிக்கும் அப்சரஸ்கள் அரிதாக உள்ளனர். ராமாயண, மகாபாரதப் புராணக் காட்சிகள் கோயில் சுவர்கள், தூண்கள் என்று எல்லாவற்றிலும் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கோயில் முகப்புகளும் புராணக் கதாபாத்திரங்களும் கெமர் கலாச்சாரத்தையும் அம்மக்களின் உருவங்களையும்தாம் கொண்டுள்ளன. இந்திய முகங்களை அவற்றில் காண முடியாது. ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கெமர்கள் தங்களுடையதாக உள்வாங்கிக்கொண்டதன் விளைவு அது.
கெமர்
மக்கள் தேரவாத பௌத்த சமயத்தை ஏற்று வணங்குகின்றார்கள் என்றாலும் இந்து, புத்த மதங்களை விரும்பி ஏற்றுக்கொண்டதாக இதன் மூலம்
அறியலாம். படையெடுப்பாலோ வன்முறையாலோ மதம் அங்கே திணிக்கப்படவில்லை எனக் கருத
நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்திய அரசர்களின் காலனியாகவும் கம்போடியா ஒருபோதும்
விளங்கியதில்லை. இந்தியாவில் இருந்து சென்ற புத்த மதம் பல நாடுகளிலும் பரவிப்
பல்வேறு குணங்களைப் பெற்றுள்ளது. இந்தியாவில் வேரூன்றிய இந்து மதம் எத்தகைய
மாறுதல்களுடன் கம்போடியாவில் குடியேறியது என்பதை அங்கோர் சிற்பங்களை வைத்து
ஒருவாறாக ஊகிக்க முடிகிறது. இங்கிருந்து சென்ற வியாபாரிகள் வாயிலாகத்தான் இந்து
மதம் அங்கே பரவியிருக்கிறது. ஆனால் ஆட்சியை நிலைநாட்டத் தொடங்கியவர்கள் அங்குள்ள
கலாச்சாரத்திற்கு இணக்கமான ஒரு மதமாக இந்து மதத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்
அதோடு அந்தக் கோட்டைகளையும் கோயில்களையும் எண்ணிப்
பார்க்கவும் முடியாது. ஏனென்றால் பார்க்கும் இடம் எல்லாம் கோயில்களாகத் தான்
இருக்கும். எப்படி எண்ணுவது. இடது பக்கம்
திரும்பினால் கண்ணுக்கு எட்டிய வரை கோயில்கள். வலது பக்கம் பார்த்தால் அதே மாதிரிதான். மொத்தம் பதினாறு சதுர கிலோமீட்டர் அளவுக்கு கோயில்கள், குளங்கள், ஏரிகள், தாமரைத் தடாகங்கள். முன்னூறு நானூறு வருடங்களுக்கு ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு கட்டிப்
போட்டிருக்கிறார்கள்.

ஜெயவர்மன் VII எனும் அரசன் இந்து மதத்தில் இருந்து மாறிப் போய் புத்த மதத்தில் சேர்ந்தான். இது நடந்தது 1181ஆம் ஆண்டு. இந்த அரசன் தான் மஹாயனா புத்த மதத்தைக் கொண்டு வந்தவர். இவர் வருவதற்கு முன் Cham எனும் இனத்தவர் கம்போடியாவைக் கொஞ்ச காலம் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பாயோன் புத்த ஆலயங்களைக் கட்டியவர் ஜெயவர்மன் VII தான். அவர் இறந்த பிறகுஇந்திரவர்மன் II எனும் அரசர் வந்தார். இவரும் நிறைய ஆலயங்கள் என்றும் கோட்டைகள் என்றும் கட்டினார். அதன் பின்னர் வந்தது ஜெயவர்மன் VIII என்பவர் வந்தார். இவர் கம்போடியாவை புத்த மதத்திலிருந்து மறுபடியும் இந்து வேதாதங்களுக்குக் கொண்டு வந்தார். இவர்தான் அங்கோர் சாம்ராஜ்யத்தின் ஆகக் கடைசி அரசர்.
இவர்
இறந்த பிறகு கம்போடியா பலகீனமாகிப் போனது. கம்போடியா
என்கிற நாடு சியாம் ஆட்சியின் கீழ் வந்தது. சில
ஆண்டுகளில் சியாம் ஆட்சியும் சிதைந்தும் போனது. அப்புறம்
பலப் பல மாற்றங்கள், பலப் பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. இப்போது இந்த அங்கோர் வாட்டை உலகச் சுற்றுப்
பயணிகளிடம் அடகு வைத்துக் கொண்டு
கம்போடியா தன்
தொல்பொருள் ஆராய்ச்சி
நிறுவனம் இக்கோயிலின் புதுபித்தல் பணியினை செய்தது.
அப்போதிலிருந்து
இகோயிலின் சுற்றுலா வரவு பெருகியது. இக்கோயில் 1992ல் நிறுவப்பட்ட அங்கோரின் உலக பாரம்பரிய களத்தின் ஒரு பகுதியாக இருப்பதனால்
இதை பராமரிக்க கம்போடிய அரசுக்கு ஊக்கமும்,
நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் அப்சரா பாதுகாப்பு திட்டம், இக்கோயிலின் அலங்காரத்தையும், கட்டமைப்பையும் பேணும் தேவதாக்களை பதுகாத்து வருகிறது.
உலக நினைவிடங்கள்
நிதியம், 2008ல் பாற்கடல் கூடத்தை பல ஆய்வுகளுக்கு பின்னர்
புதுபிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது,
இப்பணியின் முக்கிய கட்டம் 2012ல் முடிவைடைந்தது, இறுதி கட்டமாக முக்கோண வடிவிலான அலங்கார கும்பம் 2013ல் நிறுவப்படும் என தெரிகிறது. 2004 மற்றும் 2005ல், கம்போடிய அரசாங்க புள்ளிவிவரங்களின் படி முறையே, 561,000 மற்றும் 677,000 வெளிநாட்டு பார்வையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக
கம்போடியாவுக்கு வருகை புரிந்தள்ளனர் என தெரிவிக்கபடுகிறது.
சுற்றுலா வர்த்தகம்
இக்கோயிலை பாதுகாக்க பெரும் அளவில் உதவியது. ஆனால் அதிக அளவு
பார்வையாளர்களின் வரவால் இக்கோயிலின் சுற்று வட்டரம் மாசு பட்டுள்ளது
குறிபிடத்தக்கது. எனவே இதை கட்டுப்படுத்த யுனெஸ்கோவும் அதன் சர்வதேச ஒருங்கிணைப்பு குழுவும் சேர்ந்து
அதன் பாதுகாக்க முடிவு கொண்டது.
அப்சரஸ் தேவதைகள்
கி.பி.434 க்குப் பின்
வந்து ஆட்ட்சி செய்த க்ஹ்மேர் அரச
வர்க்கத்தினர்
ஜெயவர்மன்
1 (கி.பி.657- கி.பி.681)
ஜெயாதேவி
(கி.பி.681- கி.பி.713)
ஜெயவர்மன் ll (கி.பி.790- கி.பி.835)
ஜெயவர்மன்
lll (கி.பி.835- கி.பி.877)
இந்திரவர்மன்
l (கி.பி.877- கி.பி.886)
யசோவர்மன்
l (கி .பி
889-கி.பி 915 )
கரிஸ்வர்மன்
1(கி ,பி .915-கி
.பி.923)
இசனவர்மன்
11(கி
.பி. 923-கி.
கி.பி 928)
ஜெயவர்மன்
lV (கி.பி .928.கி.பி.941)
கரிஸ்வர்மன்
ll (கி ,பி .941-கி
.பி.944)
ரஜெண்டேரவர்ம்மன்
(கி.பி.944-கி.பி 968)
Jஜெயவர்மன்
V (கி.பி.968- கி.பி.1000)
உடயடித்வர்மன்
l (கி.பி.1001-கி.பி.
1002)
ஜெயவர்மன் (கி.பி.1002-கி.பி.1010 )
சூரியவர்மன்
l (கி.பி.1002-கி.பி.1049)
உடயடித்வர்மன்
ll (கி.பி.1050-கி.பி.
1066)
கரிஸ்வர்மன்
lll (கி ,பி .1066/7-கி
.பி.1080)
ஜெயவர்மன்Vl (கி.பி.1080-கி.பி.1107 )
தரனின்றவர்மன்
l (கி.பி.1107-கி.பி.1112)
சூரியவர்மன்
ll (கி.பி.1113-கி.பி.1150)
யசோவர்மன்
ll (கி .பி 1150-கி.பி 1165 )
திரிபுவனடிட்வர்மன்
(கி.பி.1165-கி.பி.1177)
ஜெயவர்மன்Vll (கி.பி.1181-கி.பி.1220)
இந்திரவர்மன்
ll (கி.பி.1220-கி.பி.1243)
ஜெயவர்மன்
Vlll (கி.பி.1243-கி.பி.1295)
ஸ்ரீ இந்திரவர்மன் (கி.பி.1295-கி.பி.1307)
ஸ்ரீ
இந்திர ஜெயா வர்மன் (கி.பி.1307-கி.பி.1377)
ஜெயவர்மன் பரமேஸ்வர (கி.பி 1327
இந்த மனிதர்கள் கட்டிய கோயில்களைப் போய்ப் பாருங்கள். இப்படி எல்லாம் கட்டி இருக்கிறார்களே. பைத்தியம் பிடித்த மனிதர்கள் என்று நினைக்கத் தோன்றும். மூலைக்கு மூலை கோயில்கள். பார்க்கும் இடம் எல்லாம் கல் தூண்கள். மொத்தம் 2000 கோயில்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு வருடம் சுற்றினாலும் பார்த்து முடிக்க முடியாது.
தேடலை நோக்கி மீண்டும் ........!
அன்பு தோழன்
சண் நரேன்
சண் நரேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)










