சனி, 5 நவம்பர், 2011

போர்க்களமாய் என் வாழ்வு…….

எண்ணிட முடியா சோதனைகள்

ஏக்கம் நிறைந்த வேதனைகள்....

ஏன் பிறந்தேன்

ஏன் வளர்ந்தேன் இம் மண்ணில்...

அன்புக்கு ஏங்கினேன்.....

அறிவை தேடினேன்....

அணைத்திடும் உறவுகளை தேடினேன்

அனைத்தும் அன்னியமாய் இன்று

அங்கலாய்க்கிறது என் மனம்...

போர்க்களமாய் என் வாழ்வு

போராட்டத்தால் சீர்குலைந்து-இன்று

போராடுகிறேன் மறுவாழ்வுக்காய்

போரட்டமே வாழ்வாகி போனதிங்கு...

உறவிருந்தும் உதவியின்றி

ஊமையாய் நானிங்கு...

உயிருடன் ஊசலாடுகிறேன்

உயிரற்ற ஜடமாக.....

வாழ்க்கை

எத்தனை கோடி மலர்கள் மலர்ந்தன
இதயச் சோலையிலே - இதில்
எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன
எந்தன் வாழ்வினிலே
எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன
எனது கண்களிலே - அதில்
எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன
எந்தன் வாழ்க்கையிலே
பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன
பாழும் மனதினிலே -
அதில்
ஓசையில்லாமல் ஓய்ந்தவை பற்பல
உலக வாழ்க்கையிலே
கொள்கையும் நேர்மையும் உண்மையும்
பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே – அதில்
கல்லால் அடித்த கனிபோல்
உதிர்ந்தவை
கணக்கில வாழ்க்கையிலே

சே குவேராவின் வாழ்வில் கவனம் பெறும் நிகழ்வுகள்

■1928
ஜூன்
14 - பிறப்பு

1945 - மருத்துவப்படிப்பை
மேற்கொள்ளுதல்

1950 - உந்துருளியில்

3000 மைல் தூரம் ஆர்ஜென்டீனா
முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்

1952 - தனது நண்பன்

அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு,

கொலம்பியா,

வெனிசூலா,

ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர்
குடியிருப்பில் பணிபுரிதல்

1953

ஜூன்
12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.■
ஜூலை
6 -
லத்தீன்
அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்


1955 ஜூலை -

ஃபிடல்
காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும்
குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர

முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.


ஆகஸ்ட்
18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில்ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.


1956

பெப்ரவரி
15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.■

ஜூன்
24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57நாட்கள் சிறையில் இருக்கிறார்.


1958 ஜூலை

- புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.


டிசம்பர்
28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.


1959


ஜனவரி
1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே
ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.



ஜனவரி
2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.


ஜனவரி
3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்


ஜனவரி
8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.

மே 17 -

உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.



ஜூன்
2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.


ஜூன்
12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட
பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா,

ஆபிரிக்கா,

மற்றும் ஆசிய

நாடுகளுக்கு செல்கிறார்.



அக்டோபர்
7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு
தலைவராக நியமிக்கப்படுகிறார்.


நவம்பர்
26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.


1960

அக்டோபர்

-

சோவியத்
கூட்டமைப்பு,
கிழக்கு
ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா,
சீனா,

வடகொரியா

ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்



நவம்பர்
24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.


1961


ஜனவரி
3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.


பெப்ரவரி
23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.


ஆகஸ்ட்
8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின்சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.


1962

மே 20 -

சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்


ஆகஸ்ட்
27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்


1963


ஜூன்
14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.


ஜூலை
3 - பிரான்சிடமிருந்து
அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு

பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.



1964


பெப்ரவரி
24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.


மார்ச்
14 - சே கியூபா திரும்புகிறார்.


அக்டோபர்
31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு
தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம்

எழுதுகிறார்.


டிசம்பர்

- காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி

வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.



1966

நவம்பர்
- சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.


1967


மார்ச்
23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை
சிதறடிகிறது.



ஏப்ரல்
16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட
முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற

சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.



ஆகஸ்ட்
4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை
நோக்கி முன்னேறுகிறான்.



செப்டெம்பர்
26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.


அக்டோபர்
8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள்
அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.


அக்டோபர்
9 - சே கொலைசெய்யப்படுகிறார்


1968
■ஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின்
பொலிவிய
நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.


1995 - கொலை செய்து

புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி
தொடங்குகிறது.

1997


ஜூன்
28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின்
சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.



ஜூலை
14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.


அக்டோபர்
13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.


அக்டோபர்
14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.







சேவைப் பற்றி திரு.மாதவராஜ் அவர்கள் எழுதிய நூலை

தன் வலையிலே பதிவிட்டிருக்கிறார். அதை இங்கே
சென்று படிக்கலாம்.



சேவின் பேச்சுகள், அரிதான புகைப்படங்கள், மேலும்

பல விதயங்கள் தெரிந்துக் கொள்ள இங்கே
அழுத்துங்கள்.










சேவின் பிரபலமான வசனங்கள்:




“I don't care if I fall as long as someone else picks up

my gun and keeps on shooting.”




“I know you are here to kill me. Shoot, coward, you are

only going to kill a man.”




”Why does the guerrilla fighter fight? We must come to

the inevitable conclusion that the guerrilla fighter is a social reformer, that

he takes up arms responding to the angry protest of the people against their

oppressors, and that he fights in order to change the social system that keeps

all his unarmed brothers in ignominy and
misery”



“Better to die standing, than to live on your

knees.”




“I


don't know if the Cuban revolution will survive or not. It's difficult to say.

But [if it doesn't] . . . don't come looking for me among the refugees in the

embassies. I've had that experience, and I'm not ever going to repeat it. I will

go out with a machine gun in my hand, to the barricades. . . I'll keep fighting
to the end.”

என் முதல் கவிதை ம்மா ம்மா ம்மா ம்மா

அம்மா உன்னைப்பற்றி கவிதையா



என்னால் முடியாது!





இயற்கையை ரசித்து



பொய் கலந்து எழுதுவேன்



நட்பை விவரித்து



கவிதைகளா எழுதுவேன்





கடவுளைப் பற்றி



கதை கதையாக எழுதுவேன்



அம்மா உன்னைப் பற்றி



என்ன எழுதுவேன்!





எதைஎதையோ படைத்த



இயற்கைக்கு



நன்றி!



உன்னையும் படைத்த தற்காக!





அம்மா!



நான் சொன்ன முதல் வார்த்தையே !



கவிதை தானே

வாழ்க்கை


எத்தனை கோடி மலர்கள் மலர்ந்தன




இதயச் சோலையிலே - இதில்




எத்தனை எத்தனை வாடி உதிர்ந்தன




எந்தன் வாழ்வினிலே




எத்தனை பாதைகள் எதிரே தெரிந்தன




எனது கண்களிலே - அதில்




எத்தனை எத்தனை இருண்டு மறைந்தன




எந்தன் வாழ்க்கையிலே




பாசமும் ஆசையும் பற்றிப் படர்ந்தன




பாழும் மனதினிலே -
அதில்



ஓசையில்லாமல் ஓய்ந்தவை பற்பல




உலக வாழ்க்கையிலே




கொள்கையும் நேர்மையும் உண்மையும்




பூத்துக் குலுங்கின நெஞ்சினிலே – அதில்




கல்லால் அடித்த கனிபோல்
உதிர்ந்தவை


கணக்கில வாழ்க்கையிலே
உனக்கொன்று தெரியுமா..?


நான் கவிதை எழுதுவது
என் நண்பர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!



இவரால்: Shan Naranderan
இதயத்தின் முதல் எதிரி
கண்கள் தான்........
ஏன் என்றால், இதயம்
மறைத்து வைக்கும் எல்லாவற்றையும்
கண்கள் கட்டி கொடுத்துவிடும் ....!
கண்ணீராக.......



இவரால்: Shan Naranderan
நான் சோகத்தில் வாடும் போது
உன் மடி சாயும்
அந்த ஒரு நொடி
என் சோகத்தை மறந்து
சொர்க்கத்தை நான் காண்பேன்!
ஈர விழிகளுடன்
இமைகள் மூடாமல்
இரவுகள் கனக்க
இதய கண்ணீரோடு
இறைமை இழந்தால்


இவரால்: Shan Naranderan

நேசம்


கண்ணீர் விடுகின்றேன் தினம் தினம்!
கண்ணீரை துடைக்க கரம் கிடக்கும் என்று !

உதவி செய்கின்றேன் தினம் தினம் !
ஒரு இதயமாது உதவி செய்ய வருமாம் என்று !

இறக்கம் படுக்கின்றேன் தினம் தினம்!
ஒரு இதயமாது இறக்க பட வருமாம் என்று

எம் தேசம்

தூக்கியெறியப்பட்ட கனவுகள்..!!
சிதைந்து போன உணர்வுகள்..!!

வர்ணமிழந்த கவிதைகள்,மீள முடியா என் வலிகள்என தனிமையாக்கப்பட்ட நினைவுகள் வழியேநடைபிணமாய் செல்கிறது .......!!!
தூக்கியெறியப்பட்ட கனவுகள்..!!!
சிதைந்து போன உணர்வுகள்..!!!
வர்ணமிழந்த கவிதைகள்..!!
மீள முடியா என் வலிகள்என தனிமையாக்கப்பட்ட நினைவுகள் வழியேநடைபிணமாய் செல்கிறது

.....!!!

எம் தேசமே !



இனி எங்கள்

கனவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்

கண்ணீருக்கு விலை கொடுங்கள்

எங்கள்

கண்ணீருக்கு விடை கொடுங்கள்
நிலவு கிடைக்கவில்லை என்று நீ ஏன்
தேயந்து போகிறாய்
உன் பார்வையை கூர்மையாக்கு
பின்பு
நீ காணபோகும் ஒவ்வொரு
நட்சத்திரமும்
நிலவுதான் !!!!!!!

அன்னையே!



உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது

சனி, 15 அக்டோபர், 2011

நானோர்இலங்கை குடிமகன்!






என்றைக்காவது சாப்பிடுவோம் என்ற

இறுமாப்பில் நிமிர்ந்துப் பார்க்கும்

என் நெஞ்செலும்புகள்.



என் முனகல் சத்தத்தை கேட்க முடியாமல்

தூங்கிப் போகும் இரவுகள்.



தோப்புகளாய் வளர்ந்திருக்கும் என்

மயிர்க் கால்களை விடுத்து ஓடிப் போகும்

என் மயிற்றுப் பேண்கள்.



என் எலும்புகளில் இரத்தத்தின் ருசி

தேடி ஏமாந்துப் போகும் என் குடி

நீர்ப் பானைக் கொசுக்கள்.



வறண்டுப் போயிருக்கும் என் தொண்டைக்

குழியை ஈரப் படுத்த என் குடிசைக்குள்

ஓடி வரும் மேல்தட்டு வர்க்கத்தின்

சாக்கடை நீர்.



இவ்வளவும் இருந்தும்...

குடிமகன் நான்...

இலங்கையில்

அப்பா என்றொரு அற்புதம்


விரல் கொடுத்து வழிநடத்தினாய்


விழும் போது தாங்கிகொண்டாய்

அழும் போது ஆறுதல் தந்தாய்

நான் ஆனந்தித்திருக்க வழிசெய்தாய்

வானத்து நிலவும்,வண்ண பூக்களும்

வாழ்வில் வர வகை செய்தாய்

அப்பா என் அப்பா

உன் மார்பில் எட்டி உதைத்தபோதும்

மீசை பற்றி இழுத்தபோதும்

அந்த ஆனந்த முகத்தில்

எத்தனை அமைதி

கடை வீதிகளில்

உன் கரம் பிடித்து நடந்தபோது

கர்வத்தில் உயர்ந்திருந்தேன்...

நட்பில் கோபம் கூட கவிதைதான்


என்மீது நீ கொண்ட அக்கறையாய்

உன் கோபம் வெளிபடுகையில்

ரசிக்கிறேன் அதையும் கவிதையாய்

வர்ணனை இன்றி எதுகை மோனை இன்றி

உன் கோபம் ஒரு கவிதையாய்

என் முதல் கவிதை ம்மா ம்மா ம்மா ம்மா

அம்மா உன்னைப்பற்றி கவிதையா

என்னால் முடியாது!
இயற்கையை ரசித்து
பொய் கலந்து எழுதுவேன்
நட்பை விவரித்து
கவிதைகளா எழுதுவேன்



கடவுளைப் பற்றி
கதை கதையாக எழுதுவேன்
அம்மா உன்னைப் பற்றி
என்ன எழுதுவேன்!

எதைஎதையோ படைத்த
இயற்கைக்கு
நன்றி!
உன்னையும் படைத்த தற்காக!

அம்மா!
நான் சொன்ன முதல் வார்த்தையே !
கவிதை தானே

வலிதீராத வாழ்க்கை

வலிதீராத வாழ்க்கை...

அழுகிறது மனம்


புரியாத வலியுடன்
துடிக்கிறது தேகம்
புரியாத உணர்வுடன்
கண்ணீர் வடிக்கிறது கண்கள்
புரியாத நிகழ்வுகளுடன்
எரிகிறது அங்கங்கள்
புரியாத வேதனைகளுடன்


பிறந்தபோது அழுதிருந்த
தாயின் கடன்...
வளர்ந்தபோது அழுதிருந்த
தந்தையின் கடன்....
பிரிந்தபோது அழுதிருந்த
துணையின் கடன்.....
விட்டகன்றபோது அழுதிருந்த
சேயின் கடன்.....


அத்தனையும் தீர்ந்திடாத
பரிமாற்றத்தின் வலிகளாய்....
வாழ்வோடு பிணைந்திட்ட
துயர்களின் தொடர்களோடு......

தாடியின் தத்துவம் தெரியுமா உனக்கு?


தாடியின் தத்துவம் தெரியுமா உனக்கு?
காதலிக்கும் போது, என் காதலி முகம் பார்க்க வேண்டுமென்பதற்காக
சவரம் செய்து எங்கள் முகத்தை சலவைக் கல்லாக வைத்திருக்கிறோம்!
பிரிவு நேர்ந்தால்,
அவள் முகம் பார்த்த கண்ணாடியில், வேறு யாரும்
முகம் பார்த்து விடக் கூடாது என்பதற்காக
ஒரு கருப்புத் திரை போட்டு வைத்திருக்கிறோம்
அதற்கு நீங்கள் தாடி என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்!!!!

வெள்ளி, 29 ஜூலை, 2011

சாதியும் சாமியும் ..ஒஸ்லோ முருகன்


உச்சி முதல் பாதம் வரை

ஊரு மெச்சும் அலங்காரம்

தங்கத்தால மேனியெல்லாம்

தகதகனு மின்னுதய்யா

தள்ளி நின்னு பார்க்கையிலே

மனச ஏதோ பண்ணுதய்யா

வான ஒசரம் தேருகட்டி

வகையாய் முருகனை அதுல வச்சு

வடம் பிடிச்சு இழுக்கையில

வந்ததையா வாய்ப்பேச்சு

வடக்கு வழி போனா ஒரு சாதி

கிழக்கு வழி போனா ஒரு சாதி

எந்த வழி போறதுனு ரெண்டும் மோதி

சாமிய மறந்துட்டான்

சாக்கடையில சாச்சு புட்டான்

தேரேரி வந்த முருகன்

தெருவோரம் கிடக்குதய்யா

காவல்காக்குற முருகனுக்கு

காக்கி சட்டை

காவலுக்கு நிக்குதய்யா